Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

தமிழ்நாடு தமிழருக்கே_கொளத்தூர் மணி

  • Replies 165
  • Views 17.4k
  • Created
  • Last Reply

[media=]

தமிழ்நாடு தமிழருக்கே_கொளத்தூர் மணி

திராவிடருக்கு அல்ல

தமிழ் நாடு தமிழருக்கே என்பது தான் பெரியாரின் கோரிக்கை என்பதை பலதடவை எழுதியாகிவிட்டது.

ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டு இருக்க முடியாது.

யார் தமிழர் என்பதில் தான் பிரச்சினை இருக்கிறது.

வைகோ சுபவீ எல்லாரும் தமிழர் அல்ல என்றால் , தமிழ் நாட்டிலோ அல்லது ஈழத்திலோ ஒருவரும் தமிழ்ராக இருக்க முடியாது.

தமிழர் என்பதற்க்கு எதாவது இரத்தப் பரிசோதனை இருக்கிறாதா என்பதை ` நாம் தமிழரும் ` சீமானும்` இங்கு எழுதும் `இந்து மத` வெறியரும், மனு நீதியாளரும் தான் தெளிவு படுத்த வேண்டும்.

மேலே இணைதுள்ள காணொளிகள், எழுதிய கருத்துக்கள் என்பவற்றைக் கவனமாக கேட்டு,வாசித்த பின் கருதுக்களை எழுதவும்.

இல்லாவிட்டால் எல்லோருக்குமே நேரம் விரயமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என முயல்கின்றார். அதில் என்ன தவறு இருக்கமுடியும். திராவிடம் தமிழுக்கு எதிரியில்லை என்கின்றனர். நல்லது. ஆனால் நேரடியாகத் தமிழுக்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கும்போது ஏன் சீமான் மீது போர் தொடுக்கின்றீர்கள்.

பெரியாரைப் பின்னுக்கும் அவர் தள்ளியதாக இல்லை. அவர் சொன்ன இரண்டு விடயங்கள் தான் இவர்களுக்குப் பிரச்சனை. மேடைகளில் வள்ளுவனும்இ தேசியத் தலைவரின் படம் மட்டுமே தான் இருக்க வேண்டும் என்றது. இரண்டாவது தமிழ்த் தேசியவழியில் பயணிப்பது என்பது. இது எவ்வகையில் தவறாக முடியும்?

இவர்களுக்குத் தமிழ் மீதோ, தமிழ்த் தேசம் பற்றியோ கவலையில்லை. இவர்கள் காப்பாற்ற முயல்வது பெரியாரை மட்டும் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தமிழர் கட்சி - Naam Tamilar

தமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை

06.06.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் “சீமானுக்கு எதிராக திரளும் கருப்புச் சட்டைகள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில், என்னிடம் பேட்டி எடுத்து, நான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். அந்த செய்திக்... கட்டுரையை வெளியிட்ட கணேஷ் குமார் என்பவர் என்னிடம் எந்த ஒரு பேட்டியையும் எடுக்காமல், நான் கூறியதாக வெளியிட்டுள்ள தகவல்கள் பொறுப்பற்றவை, இதழியல் நெறிமுறைகளுக்கு புறம்பானவை.

நாம் தமிழர் கட்சி வெளியிட்ட ஆவணம் குறித்து தமிழக அரசியல் இதழில் இருந்து ஒருவரும் என்னோடு பேசவில்லை. அப்படியிருக்க, நான் சொல்லாததை சொன்னதாக அடைப்புக் குறிகள் போட்டு கூறியிருப்பது விசமத்தனமான செயலாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மைக்குப் புறம்பான இப்படியொரு செய்தியை வெளியிட்டுருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தந்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பை நாம் தமிழர் கட்சி பெருமையாக பரப்புரை செய்துவருகிறது. உண்மை இவ்வாறிக்க, தமிழின உரிமை இழப்பிற்கு பெரியாரே முதற்காரணம் என்று நான் கூறியதாக தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருப்பது மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியின் பெருமையை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயலாகும்.

எனது இந்த மறுப்பை தமிழக அரசியல் இதழில் வெளியிடுமாறு இதழாசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சியின் அறிக்கையில் இருக்கும் எவை எவை தவறானவை என்று ஏற்கனவே எழுதியாயிற்று.

மேலும் சீமான் தெளிவாக தனது நிலைப்பாட்டை பெரியார் தொடர்பாக எழுதி உள்ளார்.

இடையில் சிலர் வந்து சீமானும், நாம் தமிழரும் சொல்லாத விடயங்களை குறிப்பாக பெரியாரை அவதூறு செய்யும் விதத்தில் எழுதினார்கள்.

இங்கே இவர்கள் தான் சீமானையும், நாம் தமிழரையும் தமது வழக்கமான பெரியார் மீதான காழ்ப்புணர்விற்காக , அவதூறான வகையில் பயன் படுத்தி இருந்தார்கள்.

இப்போது திருப்பி வந்து வந்து வேறு எதோ உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் எழுதியவற்றை மீண்டும் படித்து விட்டு வருவது நல்லது.

// உண்மைக்குப் புறம்பான இப்படியொரு செய்தியை வெளியிட்டுருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது./ேண்

இதனைத் தான் நாம் சீமானுக்கும் நாம் தமிழருக்கும் சொல்லிக் கொண்டுள்ளோம்.

உங்களது சில பிழையான பார்வைகள், சிலரால் வேண்டுமென்றே , உட் பகையை வளர்க்கப் பயன் படுத்தப்படுகின்றன.

இதில் இந்து மத வாதா சக்திகள், திராவிட திர்ப்புச் சக்திகள், இந்திய தேசிய சக்திகள் என தமிழரின் விரோதமான சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதி நடவடிக்கையில் இறங்கி உள்ளன.இதற்க்கு ` நாம் தமிழரின்` அறிக்கை முரணான செய்திகளைச் சொல்லி களம் அமைத்து இருக்கிறது.

சீமான் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என முயல்கின்றார். அதில் என்ன தவறு இருக்கமுடியும். திராவிடம் தமிழுக்கு எதிரியில்லை என்கின்றனர். நல்லது. ஆனால் நேரடியாகத் தமிழுக்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கும்போது ஏன் சீமான் மீது போர் தொடுக்கின்றீர்கள்.

பெரியாரைப் பின்னுக்கும் அவர் தள்ளியதாக இல்லை. அவர் சொன்ன இரண்டு விடயங்கள் தான் இவர்களுக்குப் பிரச்சனை. மேடைகளில் வள்ளுவனும்இ தேசியத் தலைவரின் படம் மட்டுமே தான் இருக்க வேண்டும் என்றது. இரண்டாவது தமிழ்த் தேசியவழியில் பயணிப்பது என்பது. இது எவ்வகையில் தவறாக முடியும்?

இவர்களுக்குத் தமிழ் மீதோ, தமிழ்த் தேசம் பற்றியோ கவலையில்லை. இவர்கள் காப்பாற்ற முயல்வது பெரியாரை மட்டும் தான்

அதே தான், தூயவன் திராவிடம் என்பது தமிழ் நாட்டிலும் தற்போது ஈழத்திழும் தமிழனின் அடையாளத்தை அழிக்கப் பாவிக்கும் ஒரு கருவி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை திசை திருப்ப பாவிக்கப்படும் ஒரு நுட்பம், எந்த சந்தர்ப்பத்தில் ஆவது புலிக்ளோ அல்லது மற்றைய போராளி குழுக்களோ ராமசாமியையும், திராவிடத்தையும் முன்னிலைப்படுத்தியதில்லை இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழன் வராற்றிலேயே இது நடந்தது இல்லை. அப்படி இருக்கும் போது நாம் கேட்க வேண்டிய கேள்விகள்1. ஏன் எம்முடன் சம்பந்தம் இல்லாத ஒரு பைத்தியக்கார கொள்கை ஒன்று எம்மீது திணிக்கப்படுகிறது2.இதை பின்னனியில் நின்று ஊக்குவிப்பவர்கள் யார்?3.இவர்களது குறிக்கோள் என்ன ?4.தமிழன் சிங்களவனுக்கு எதிராக தமிழ் ஈழம் வேண்டும் என் போராடும் போது ஏன் இது திராவிடம் எதிர் ஆரியமாக்கப்பட்டு திராவிடம் தான் இறுதிக் குறிகோள் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது ?5.திராவிட்த்தை பின்பற்றினால் ஈழம் வரும் என்று யாராவது கூறினார்களா?

இதில் இந்து மத வாதா சக்திகள், திராவிட திர்ப்புச் சக்திகள், இந்திய தேசிய சக்திகள் என தமிழரின் விரோதமான சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதி நடவடிக்கையில் இறங்கி உள்ளன.இதற்க்கு ` நாம் தமிழரின்` அறிக்கை முரணான செய்திகளைச் சொல்லி களம் அமைத்து இருக்கிறது.

இந்து மதவாதமோ, உங்களுக்கு தமிழன் கிறிஸ்த்தவ மதம் பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, ஆனால் இந்து மதத்தை பின்பற்றினால் மட்டும் கோபம் பொத்திக் கொண்டு வந்து விடும், இந்து மதம் தமிழனுக்குச் சொந்தமானது இல்லையாம், அப்படி என்றால் கிறிஸ்த்தவமும், இஸ்லாமும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எப்பவாவது கேட்டது உண்டா, கோயிலுக்கு கல் எறிந்த பகுத்தறிவு வித்துவானகள் எப்பவ்வவது தேவலயத்துக்கோ அல்லது மசூதிகோ கல்லு எறிந்தது உண்டா?

திராவிடம் என்பதுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் எண்டு திராவிடர்கள் தெளிவு படுத்தினால் சந்தோசம்...

இவர்கள் திராவிடர்கள் எண்று குறிக்கும் எந்த மக்களின் மொழியில் இருந்து திராவிட் எனும் சொல்வந்தது எண்றாவது தெளிவுபடுத்தினால் கூட மகிழ்ச்சி...

இண்டைக்கு லண்டனுக்குள் வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஸ்ச திராவிடனா ஆரியனா...???

Edited by தயா

இந்து மதவாதமோ, உங்களுக்கு தமிழன் கிறிஸ்த்தவ மதம் பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, ஆனால் இந்து மதத்தை பின்பற்றினால் மட்டும் கோபம் பொத்திக் கொண்டு வந்து விடும், இந்து மதம் தமிழனுக்குச் சொந்தமானது இல்லையாம், அப்படி என்றால் கிறிஸ்த்தவமும், இஸ்லாமும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எப்பவாவது கேட்டது உண்டா, கோயிலுக்கு கல் எறிந்த பகுத்தறிவு வித்துவானகள் எப்பவ்வவது தேவலயத்துக்கோ அல்லது மசூதிகோ கல்லு எறிந்தது உண்டா?

மதங்கள் மனிதன் உருவாக்கியவை. இதில் இந்து மதம் ஆரியரினால் உருவாக்கப்பட்டது.ஆரியரே சாதிய கட்டுமானத்தை வகுத்தனர். கிரிதுவ மதமோ இசுலாமிய மதமோ வேறு எந்த மததிலோ சாதியக் கட்டுமானம் வகுக்கப்படவில்லை. அதனாலையே சாதியதைத் தாக்கினால் உங்களுக்கு இந்து மதத்தை தாக்குவதாக உணருகிறீர்கள். இந்தியாவிற்க்குள் வந்த இந்து மதம் கிரிதுவ மதம் இசுலாமிய மதம் எல்லாம் வெளியில் இருந்து வந்தவையே.இந்தியாவிற்க்குள் உருவாகிய சமண,பவுத்த , சைவ ,உலகாயித முதலிய அழிந்து போன மதங்களும் உண்டு.

கோவிலுகு யார் கல்லெறிந்தார்கள்? சிதம்பரத்தில் பார்ப்பனர் அல்லாத ஒதூவார் பாடுவதற்க்கும், சாதியில் குறைந்த மக்கள் கோவில் சென்று வழி படுவதற்க்கும் போராடியவர் பெரியார்.பெரியாரே கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தவர். ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது இல்லாது இருப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஒருவனை தாழ்த்தும் ஒரு மதத்தை ,பிறப்பால் தன்னை உயர்த்திக் கொள்ளும் கேவலத்தை மாற்ற வேண்டமா?

இவ்வாறு மத்தைச் சீர்படுதினால் தானே மத மாற்றங்களைத் தடுக்க முடியும்?

அதைக் கூடச் செய்யாமல் , அசுததை சுத்தப்படுத்தாமல் , வெறுமனே பெரியாரை கிழ்மைப் படுத்துவதால் எதனையுமே நீங்கள் சாதிக்கப் போவதில்லை.

மேலே இருக்கும் காணொளிகளில் திராவிடம் என்றால் என்ன என்பதையும் ,திராவிட் என்ற சொல்லின் தோற்றம் பற்றியும், அது ஏன் பாவிக்கப்படுகிறது என்பது பற்றியும் குளத்தூர் மணி அவர்கள் விளக்கி உள்ளார் அதனைக் கேட்டு விட்டு , அதில் எதாவது சந்தேகங்கள் விளக்கங்கள் தேவை என்றால் கேட்கலாம்.

இங்கே எவர் மீதும் எதுவும் திணைக்கப்படவில்லை. சிலர் தமது தெளிவின்மையாலும், தமது அறிவிலித் தனத்தாலும், எழுதப்படும் கருதுக்களை வாசித்து உள்வாங்காமலும், மேலுள்ள காணொளியைப் பார்க்காமலும் எழுதினால் , அ ஆவென்ன என சொல்வதற்கோ எழுதுவதற்கோ எனக்கு நேரமில்லை.

மேலும் பதில் சொன்னவற்றிகு திருபித் திருப்பி பதில் சொல்லிக் கொண்டும் இருக்க முடியாது.

நியாயமான கேள்விகளுகும் சந்தேகங்களுக்கும் மட்டுமே பதில் தரப்படும்.

அவதூறுகளை எழுதுபவர்கள் தமக்குள் இருக்கும் அழுக்குகளைக் கொட்டி விட்டுப் போங்கள்.உங்களால் கருத்தியல் ரீதியாக எதனையும் சொல்ல முடியாது என்னும் இயலாமையைக் காட்டி விட்டுச் செல்லுங்கள்.

இதை நான் ஆமோதிக்கின்றேன். பார்ப்பனியம் என்பதுபோன்று திராவிடம் ஒரு சித்தாந்தமாக எனக்குப் பட்டதில்லை. திராவிடத்தை ஆதிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதரவாகப் பாவிக்கமுயன்றால், திராவிடக் கட்சித் தலைமைகளின் மேட்டுக்குடித்தனத்திற்கு எதிராகத்தான் முதலில் பாவிக்கவேண்டும்!

நிச்சயமாக திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு இயங்கும் வியாபாரிகளுக்கு எதிராகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் முரண்பாடு இல்லை.இதனைத் தான் நாங்கள் வலியுறுதுகின்றோம்.

205353_422180901149007_928982478_n.jpg

நாம் தமிழர் கட்சி இணையத் தள பாசறை சார்பாக வெளியிடப்படும் அறிவிப்பு.

இணையத்தளம் என்கிற மாபெரும் கட்டற்ற வெளி சமீப காலத்தில் மாபெரும் விவாத களமாக திகழ்கிறது. எவ்வித கட்டுப்பாடும், ஒழுங்கமைவும் இல்லாமல் வெளியிடப்படுகின்ற பல்வேறு விதமான தவறான கருத்துக்களின் காரணமாக தேவையில்லாத கருத்துக் குழப்பங்களும், திரிப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன.மேலும் பல்வேறு புனைப்பெயர்களில் தமிழினத்திற்கும் நம் அமைப்பிற்கும்... எதிராக இருப்பவர்களும் ,இயங்குபவர்களும் பல விவாதங்களில் ஊடுருவி நம் அமைப்பிற்கு ஆதரவாக எழுதுவது போல எழுதி தங்களுடைய தவறான கருத்துக்களை நம் அமைப்புத் தோழர்களின் கருத்துக்கள் போல வெளியிடுகிறார்கள் என அறிகிறோம். இதனால் தவறான புரிதல்கள் பல ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பாக திராவிடம் – தமிழ்த்தேசியம் கருத்தியல் முரண் குறித்து எழும் விவாதங்களில் தவறான நபர்கள் சிலரால் தந்தை பெரியார் குறித்து வெளியிடப்படும் சில கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவனாக இருக்கின்றன. அவைகளுக்கும் எம் அமைப்பினை சார்ந்தவர்களுக்கும், எம் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இதன் மூலம் அறிவிக்கிறோம். இது போன்ற சதிச்செயல்கள் குறித்து நம் அமைப்பினை சார்ந்தவர்கள் கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அறிவுலக ஆசான் தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சி தனது வழிகாட்டியாக அறிவித்து இருக்கிறது. சமூகத்தளத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை கட்சி தன் ஆன்மாவில் ஏந்தி களத்தில் நிற்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். எனவே இணையத்தளங்களில் இயங்கும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தனது உண்மையான விவரங்களுடன் இயங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் போலிப் பெயர்களில் இயங்கும் போலிகள் குறித்து மிக கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நம் கட்சியின் சார்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்கள் தவிர மற்றவர்களால் வெளியிடப்படும் கருத்துக்கள் எவையும் கட்சியின் கருத்துக்கள் அல்ல என்பதையும், அவைகளுக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் இதன் மூலம் அறிவிக்கிறோம்.

மணி செந்தில்,

சே.பாக்கியராசன்,

பொறுப்பாளர்கள்.

நாம் தமிழர் கட்சி

இணையத்தள பாசறை.

முக நூலில் இருந்து.

இதில் இந்து மதம் ஆரியரினால் உருவாக்கப்பட்டது.ஆரியரே சாதிய கட்டுமானத்தை வகுத்தனர். கிரிதுவ மதமோ இசுலாமிய மதமோ வேறு எந்த மததிலோ சாதியக் கட்டுமானம் வகுக்கப்படவில்லை. அதனாலையே சாதியதைத் தாக்கினால் உங்களுக்கு இந்து மதத்தை தாக்குவதாக உணருகிறீர்கள். இந்தியாவிற்க்குள் வந்த இந்து மதம் கிரிதுவ மதம் இசுலாமிய மதம் எல்லாம் வெளியில் இருந்து வந்தவையே.இந்தியாவிற்க்குள் உருவாகிய சமண,பவுத்த , சைவ ,உலகாயித முதலிய அழிந்து போன மதங்களும் உண்டு.

இது போன்ற முற்றிலும் தவறான கருத்தின் மூலம் போலித் திராவிடம் இயங்குகிறது!

தமிழ் கலாச்சாரம், பண்பாடுகள், வரலாறுகள் அழிக்கப்படுகின்றன!

போலித் திராவிட இயக்கங்களுக்கான பாரிய நிதியுதவி நீண்டகாலமாக இந்து (சைவ) அல்லாத மத அமைப்புக்களினால், இந்து (சைவ) மதத்தத்தை இழிவுபடுத்தும் வேலைகளுக்காக வழங்கப்பட்டது.

மதவாதத்தை எதிர்க்கும் போலித் திராவிடர்கள் தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் சென்னை தூதரகத்தின் முன்னர் உடனடியாகவே ஆர்ப்பாட்டம் நடாத்தினர் என்பது தெரியாது என யாரும் நடிக்க முடியாது. செய்வதை செய்துவிட்டு ஒரு அறிக்கையை விட்டு ஏமாற்ற முயற்சிப்பதற்கு ஈழத் தமிழர் இரையாகக் கூடாது. ஆனால் இவர்கள் உருத்திரபுரம், கேதீஸ்வரம் கோவில்களில் சிங்களப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை கண்டுகொள்வதில்லை.

நாம் தமிழர் கட்சியின் உள்ளே இசுலாமிய பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமானால் - மீண்டுமொருமுறை ஈழத் தமிழர் பாரிய பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம்.

ஈழத் தமிழர் சார்பான நிலையை வைத்து தமிழகத்தில் இசுலாமிய இயக்கங்கள் தம்மை வளர்த்துக்கொள்ள முனைவதாக தகவல்கள் உள்ளன.

நாம் தமிழர் கட்சி ஈழத்தில் தமிழின விரோத இஸ்லாமிய வெறியர்களான மௌலவிகளை, ஹக்கீம், ரிஷாத் போன்ற தமிழின விரோதிகளை, சிங்கள போர்குற்றவாளிகளுக்கு ஆதரவாக - தமிழினப் படுகொலைகள் இல்லையென ஆர்ப்பாட்டங்கள் செய்த இஸ்லாமிய வெறியர் கும்பலுக்கு எதிராக, சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்ற பாகிஸ்தான் முதலான இஸ்லாமிய நாடுகளுக்கெதிராக தொடர் (நீண்டகால) போராட்டங்களை நடாத்தட்டும் (ஓரிரு அறிக்கைகள் அல்ல). அப்போது அவர்களின் இஸ்லாம் சாராத, திராவிட முகமூடி அணியாத தன்மை புலப்படும்.

திராவிட முகமூடி அணிந்த கொலைஞர் கருநாய்நிதி கும்பல் ஈழத்தமிழர்களை நீண்டகாலம் ஏமாற்றியது, திராவிட முகமூடி அணிந்த ஜெயலலிதாவும் ஒருகாலத்தில் ஈழத்தமிழர்களை ஏமாற்றியவரே (தற்போது பிராயச்சித்தமாக சில வேலைகளை செய்கிறார் - வரும் காலம் தான் உண்மைநிலையை உணர்த்தும்), திராவிட முகமூடி அணிந்த வீரமணியும் பலவருடங்கள் தடம் மாறினார்.

கொளத்தூர் மணி உட்பட இன்னும் பலரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் - இங்கு அது அவசியமில்லை.

பெரும்பாலான திராவிட இயக்க முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரே கோவிலுக்குச் செல்பவர்கள், சமயச் சடங்குகளைச் செய்பவர்கள் (இது அவரவர் தனிப்பட்ட உரிமை - எனவே இதை ஒரு குறை என கூறமுடியாது).

திராவிட முகமூடி அணிந்த நெடுமாறன் ஈழத்தமிழரின் மேல் உண்மையான பாசம் வைத்துள்ளவர், நேர்மையானவர். இதை மறுக்க முடியாது. ஆனால் ஈழத்தமிழர் ஆதரவு மேடையில் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற போர்வையில் இந்து மதத்தை இழிவுபடுத்தவும் அவர் ஒரு போதும் தயங்கியதில்லை இதனால் அவர் செய்த நன்மைகளை விட ஏற்படுத்திய பாதகங்கள் பல பல மடங்கு (நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அயல் நாட்டில், தமிழ் நாட்டில் இந்து சமய நம்பிக்கை உடையவர்களே 80 % ஆனவர்கள்). அவர் இரண்டையும் ஒரே மேடையில் செய்யாது விட்டிருந்தால் ஈழத் தமிழருக்கு உளப்பூர்வமான ஆதரவை திரட்டியிருப்பார்.

வைகோ ஒருவரே ஈழத் தமிழர் பிரச்சினையில் முடிந்தவரை வேறெதுவையும் கலக்காமல், அவதானமாக, நிதானமாக - இன்றுவரை ஈழத்தமிழர் பிரச்சினையை கையாண்டு வருகிறார். அதானால் தான் அவரை டெல்லியிலும் மதிக்கிறார்கள். இன்னுமொரு மதிப்புக்குரியவர் கோவை ராமகிருஷ்ணன்.

எனவே திராவிடம் பேசுபவர்கள் - தமது போலி முகங்களை அகற்றி - எந்த மதவாதமும் (ஈசுலாமிய, கிறிஸ்தவ, இந்து ...) கலக்காமல் பேசட்டும். சாதியை, ஏற்றத்தாழ்வுகளை இல்லாது ஒழிக்கட்டும். சகல மதங்களும் இதையே போதிக்கின்றன. ஆனால் எல்லா மதத்தவரிடமும் சாதி, ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்ற உண்மையை மறைத்து ஈனப் பிழைப்பு நடாத்த முனைபவர்களை நாம் அடையாளம் காண வேண்டும்.

ஈழத்தமிழர் ஆதரவு விடயத்தில் - நெடுமாறன், சீமான் உட்பட பலரும் வைகோ, ராமகிருஷ்ணன் போன்றவர்களிடம் நிறையக் கற்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.