Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போர் விவகாரம்; மற்றுமொரு குழு அமைத்தார் மூன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

moon.jpg

இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்துக்குள் தனது அறிக்கையை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுயாதீன ஐ.நா. ஆலோசகர்களில் ஒருவரான சாள்ஸ் பெற்றி இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதேசமயம் ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகளான பென் மெட்ஜ் கொடும்னி, லினா சின்ஹா ஆகியோர் இதன் இதர உறுப்பினர்களாவர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் செயற்பட்ட ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் ஆக்கபூர்வமான முறையில் செயற் படவில்லையென சர்வதேச மட்டத்தில் பல்வேறு தரப்புக்களில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்தே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குப் பின்னர் இந்தக் குழுவானது, அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் முக்கியமான விவகாரம் ஒன்றை ஆராய்வதற்கான கால அவகாசம் இந்த குழுவிற்கு இல்லையென சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால், இந்த குழு தனது இலக்கை சரியான முறையில் அடையுமா என்பது குறித்தும் மேற்படி ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://www.saritham.com/?p=61173

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

இதில் பங்கெடுப்பவர்கள் பற்றி விபரமாக எவராவது எழுதினால் அறிந்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதன்பின்னர் என்றாலும் ஈழ தமிழருக்கு நியாயம் கிடைக்கட்டும் . :)

  • கருத்துக்கள உறவுகள்

பாங்கி மூன் சிங்களவனுக்கு போட்டி போல கிடக்கு.. அவன் தெரிவு குழு.. புரியாணி குழு என்று திரியறான்.. இவரு அமைக்கிற குழுக்கு பெயர் என்ன என்று சரியா தெரியல.. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாங்கி மூன் சிங்களவனுக்கு போட்டி போல கிடக்கு..

அவன் தெரிவு குழு.. புரியாணி குழு என்று திரியறான்..

இவரு அமைக்கிற குழுக்கு பெயர் என்ன என்று சரியா தெரியல.. :rolleyes: :rolleyes:

பச்சையை முடிச்சுப்போட்டனப்பா

பல முறை குத்தக்கிடைச்சால் போட்டுத்தள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.