Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துலைஞ்சுபோன கிணறு

Featured Replies

Traditional_Well-Kerala.JPG

நீச்சல் தெரியாதவரை எனக்கு கிணறுகளை எட்டிப் பார்த்தால் தலை சுற்றும், பிறகு தப்பித் தவறு நீச்சல் கற்றுக் கொண்டபிறகு எந்த பயமும் இன்றி மேலே வரும் வழி இருக்கும் கிணறுகளில் மேலே இருந்து குதித்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன், கிணறுகளின் காலம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானவை என்று குறிக்க நாம் திருகுறளின் தொட்டணைத் தூறும் மணற்கேணிக் குறளை எடுத்துக் கொள்ள முடியும், அணைக்கட்டு நீர்பாசனங்கள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக கிணறுகளைத் தான் தோண்டி பயன்படுத்தி வந்தனர், 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. பின்னர் அடிக் குழாய்கள் (அடி பைப் / அடி பம்ப்) வந்த பிறகு கிணறு தோண்டும் வழக்கம் படிப்படியாகக் குறைந்தது, காரணம் தோண்டுவதற்கும் அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளைவிட நல்ல தூயத் தண்ணீரை அடி பம்புகள் தந்துவிடுவதால் கிணறு தோண்டுவதற்கு ஒதுக்க வேண்டிய பணம் மற்றும் இட வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கிணறு தோண்டும் வழக்கம் முற்றிலுமாக குறைந்தது. கிணறுகள் ஓரளவு வசதிப்படைத்தவர்களின் வெளிப்படையான அடையாளமாகவும் இருந்தது, கிணறு உள்ள வீடுகள் வசதியானவர்களின் வீடுகளாக இருந்தன, பெரும்பாலும் விவசாயம் சார்ந்த, விற்பனைச் சார்ந்த தொழில் செய்பவர்களின் வீடுகளில், பார்பன குடியிருப்புகள் (அஹ்ரகாரம்) கிணறுகள் இருக்கும், மற்றபடி ஏழை எளியவர்களுக்கான பொதுக் கிணறுகள் அங்காங்கே இருந்தன. குளங்களைப் போன்று சாதிக் கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட கிணற்றில் தண்ணீர் எடுக்கும் சாதி உரிமை மற்றும் தீண்டாமைகளின் ஊற்றாகக் கூட கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. எந்த ஒரு இந்துக் கோவிலிலும் குளம் இல்லாவிட்டாலும் அங்கு ஒரு கிணறு இருக்கும், காரணம் அன்றாட பூசைகளுக்கு முன்பாக சிலைகளையும் சுற்றுகளையும் (பிரகாரம்) கழவ தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டுவருவதைவிட கோவிலினுள்ளேயே கிணறுகளை அமைத்திருந்தது வசதியாக இருந்தது.

கிணறுகளின் எண்ணிக்கைக் குறைந்து போக மக்களின் ஆர்வமின்மை என்பதைவிட நிலத் தடி நீர் எட்டாத அளவுக்கு கீழே சென்றதாலும் ஆண்டு முழுவதும் ஊறாத நிலையில் கிணறுகளைத் தோண்டுவதும் அதைப் பராமரிப்பதும் தேவையற்ற செலவுகளைத் தரும் என்பதால் கைவிட்டுவிட்டனர், முனிசிபல் தண்ணீர், குழாய் வழியாக கிடைக்கத் துவங்கியதும் புதிய கிணறுகளுக்கான தேவை என்பது கிட்டதட்ட இல்லாத நிலையில் அவை வாழ்க்கையின் இன்றியமையாத அன்றாடத் தேவைகளில் இருந்து விடுபட்டுவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 100 அடி தோண்டினால் தான் கிடைக்கும் என்ற நிலையில் அதுவும் ஆண்டு முழுவதும் கிடைக்காது என்ற நிலையில் கிணறுகள் தோண்டுவது முற்றிலும் நின்று போனது. பழந்தமிழ் கதைகளாக கிணறுகள் தொடர்புடைய கதைகள் நிறைய உண்டு, நல்லத் தங்காள் கதையில் குழந்தைகளுடன் பாழும் கிணற்றில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டுஇருக்கும். பராமரிக்காமல் இருக்கும் திறந்த கிணறுகளை பாழும் கிணறு என்பர், மக்களின் இடப் பெயர்ச்சி மற்றும் வெட்டப்பட்ட குளங்கள் இவற்றினால் கிணறுகள் பயன் குறையும் போது அவற்றைச் சுற்றிலும் புதர்கள் ஏற்பட தவளைகள், பாம்புகள் அவற்றின் இருப்பிடமாக ஒரு கிணறு மாறிய பிறகு அவற்றை பாழும் கிணறு என்ற நிலையை அடைந்து அச்சப்பட வைக்கும் ஒரு இடமாக மாறிவிடும், கிராமத்தினரின் கொலை தற்கொலைகளுக்கு இந்தப் பாழும் கிணறுகள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன.

kinaru.jpg

வீடுகட்டுவதற்கு பார்க்கப்படும் சோசியம், நேரம், நாள் நட்சத்திரம் கிணறுவெட்டவும் பார்க்கப்பட்டது, 'கிணறு வெட்ட உகந்த நாள்' போன்ற வாஸ்து சாத்திரங்களும் உண்டு. காரணம் கிணறுவெட்டுவது பெரும் பொருள் செலவு என்பதால் தேவையான தண்ணீர் ஊற்றாக அது இருக்குமா இருக்காதா ? என்பதையெல்லாம் சோசியம் பார்த்து தான் முடிவு செய்தனர். சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பு கலவையும் கிணறுகளின் உள் சுவர்களை அமைக்கப்பயன்படுத்தினர், அதனுள் படிக்கட்டுகள் அல்லது ஏறிவரும் வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தினர், பின்னர் சிமெண்ட் புழக்கத்திற்கு வந்த பிறகு சிமெண்ட் வட்டக் குழாய்களை மேலே இருந்து வட்டமாக தோண்டி வைக்க, அதன் பிறகு கிழே தோண்ட தோண்ட அந்த குழாய் கீழே இறங்கும், பின்னர் அதன் மீது மற்றொரு சிமெண்ட் குழாயை வைத்து முழு ஆளத்திற்கு சிமெண்ட் குழாய்கள் அமைக்கபட்டு இருக்கும், இரு குழாய்களுக்கு இடையேயான இடைவெளி மற்றும் துளைகள் கிணற்றின் புறத்தில் ஊறும் தண்ணீரை கிணற்றுக்குள் சேமிக்கும். நீர் இறைக்க சகடைகளாக உறுமி வடிவ மர சகடைகளும் பின்னர் இரும்பு வளையச் சகடைகளும் பயன்படுத்தப்படுகிறது.

தொலைகாட்சிகள், நெடும்தொடர்கள் இல்லாத காலங்களில் பெண்கள் கூடும் இடமாகத்தான் கிணற்றடிகள் இருந்தன, கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டே அக்கம் பக்கம் கதைகளைப் பேசி பொழுதுகளை ஓட்டுவர். குளிப்பது, துவைப்பது அனைத்தும் கிணற்றடிகள் தான் என்பதால் பயன்படுத்தப்படும் நீர் மறுபயனீடாக தரைவழியாக உறிஞ்சப்பட்டு கிணற்றுக்குள் சென்றுவிடும். கிணறுகளை அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்துவது போல் நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தினர், இது பற்றி சுவையான கதைகள் கூட உண்டு, தெனாலி இராமன் கதையில் திருடன் வந்திருப்பதை அறிந்த தெனாலி இராமன் பண மூட்டையை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருப்பதாக மனைவியிடம் சொல்ல. அதைக் கேட்டத் திருடன் விடிய விடிய கிணற்றை இறைத்து அதை தேடிவருவான், விடியும் முன்பே கிணற்றில் எதுவும் இல்லை என்று ஓடிவிடுவான், பயிர்களுக்கெல்லாம் போதிய நீர் பாய்ச்சப்பட்டு இருக்கும், தெனாலி இராமனின் அறிவுத் திறமைக்காக இந்தக் கதை எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டு இருக்கும்.

well_340.jpg

கிணறுவெட்ட பூதம் கிளம்பிய பழமொழி குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க கிணறு தோண்டும் போது விசவாயுவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை கனிசமாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது, இறப்பிற்கான காரணம் அறிவியல் ரீதியாக தெரியாத காலங்களில் காத்து கருப்பு அடித்துவிட்டது என்பதாக இந்த பூதம் கிணறு குறித்த பழமொழியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். பாதி கிணறு தாண்டுவது - கிணற்றைத் நீளக் கொம்பினால் தாண்டி இளைஞர்கள் பந்தயம் கட்டிய விளையாட்டுகள் இருந்திருக்க வேண்டும், அதன் தொடர்பில் தான் பாதி கிணறு தாண்டினாலும் தோல்வி தான் என்பதைக் குறிக்கும் பழமொழி வந்திருக்க வேண்டும், தாகம் ஏற்படுவதற்கு முன்பே கிணறு தோண்டிவிட வேண்டும். Dig a well before you feel thirsty. என்கிற சீனப் பழமொழி கூட கிணறு தொடர்பில் இருக்கிறதாம், மற்றபடி கிணத்து தவளை, கிணத்து நீரை ஆறு கொண்டு போய்விடுமா ? அதாவது உனக்கு என்று உடையதை யாரும் கவர்ந்துவிட மாட்டார்கள் என்ற பொருளிலும், ஒன்று குறித்த தகவல் அற்ற நிலையை 'கிணத்தில் போட்ட கல்லாக' என்ற பொருளிலும் சொல்லுவர்.

கிணற்றடிகளில் நான் பார்த்த வியப்பான ஒன்று ஆட்டுக்குட்டிகள் போடும் துள்ளாட்டம், ஆழம் குறித்த எந்த பயமும் இல்லாமல் புதிதாக பிறந்த ஆட்டுக்குட்டிகள் ஒரு மாத வளர்ச்சிக்குப் பின் போடும் துள்ளாட்டம், கிணற்றின் சுவர்களில் ஏறி நின்று துள்ளி துள்ளி குதிக்கும். தமிழ் திரையில் சலங்கை ஒலிப்படத்தில் வயதான கமலஹாசன் குடித்துவிட்டு கிணற்றின் மீது ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆட்டுக் குட்டிகளின் துள்ளாட்டம் நினைவில் வந்து போகும், படையப்பா படத்தில் பாழும் கிணறில் திருமணம் கை கூடாத நிலையில் தாலி உள்ளிட்ட பொருள்களைப் போடுவதாகக் காட்டுவார்கள், விஜய் படம் ஒன்றில் வடிவேலு நகைச்சுவையாக கிணற்றடி காட்சி ஒன்று நயந்தாராவின் கவர்ச்சி வெளிச்சமாக காட்டப்பட்டு இருக்கும்.

well.jpg

நல்ல வெயில் காலங்களில் வாளி வாளியாக கிணற்றடியில் நின்று நீர் இறைத்துக் குளிப்பதில் இருக்கும் இன்பம் அருவியில் குளித்த புத்துணர்ச்சியைத் தரும், கிணறுகள் பண்பாடுகள் மற்றும் நாகரீக ஊற்றாக பண்ணெடுங்காலமாக தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்தது. நாம் இழப்பு என்று உணராமல் இழந்ததில் கிணறுகளின் பயன்பாடும் ஒன்று. காரணம் மறு சுழற்சியாக நீர் பயன்பாடுகளாக, நீர் ஆதரங்களாக கிணறுகள் இருந்தன, இன்றைய காலத்தில் தூய தண்ணீர் கிடைத்தாலும் அது தொடர்ந்து கிடைப்பது அரிதாகிப் போனது மட்டுமின்றி தண்ணீர் உணவுப் பொருள் போன்று செலவீனங்களுள் ஒன்றாகவும் ஆகிவிட்டது.

எனக்கு தெரிந்து நாகை பேருந்து நிலையம் அருகே, மருத்துவமனைக்கு வலப்புறம் கடற்கரையை நோக்கிச் செல்லும் சிறிய சாலையில் 50 அடி விட்டத்திற்கு 100 மீட்டர் இடைவெளியில் மூன்று கிணறுகள் இருந்தன, தற்போது அவை இருந்ததன் அடையாளமே அங்கு இல்லை.

Copy_of_ava1.jpg

கேணி, கெணறு ஆகியவை கிணறு குறித்த மற்றச் சொற்கள், கிணறு என்கிற சொல் பிறப்பை ஆராய்கையில் கிண்ணகம் என்றச் சொல் ஊற்று என்ற பொருள் தரும் பயன்பாட்டில் இருந்திருக்கிரது, கிண்ணக நீரூற்று கிணறு என்று மருவி இருக்க வேண்டும், மற்றொரு சொல் மூலம் குறித்துப் பார்க்கையில் கிணம் என்ற சொல்லும் கிணறு குறித்தச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருகிறது கிணம் + ஊற்று > கிணறு என்ற திரிச் சொல்லாக மாறி இருக்க வேண்டும். கிண்ணம் என்ற சொல்லும் வட்டு அல்லது குழிந்த என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதால். கிணம் என்றச் சொல்லே கிணற்றின் வேர்ச் சொல் என்றே கருதுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்தே.

http://govikannan.blogspot.fr/2012/06/blog-post_06.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிணற்றுக்கு நன்றி கோமகன்.

  • தொடங்கியவர்

கிணற்றுக்கு நன்றி கோமகன்.

நான் ஊருக்கு போய் நின்ற பொழுது கிணறு துலாவைக் கண்டேபிடிக்கிறது பெரிய கஸரமாய் இருக்கு குமாரசாமியர் . எங்கடை காலத்துக்குப் பிறகு உதுகளை மியூசியத்திலைதான் போய் தேடவேணும் போலை கிடக்கு . நீங்களும் கிணத்தை எட்டிப் பாத்ததுக்கு நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.