Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கும் எலிசபெத் அரசியாரை எதிர்த்து கனடிய தமிழர்கள் முற்றுகை!!

Featured Replies

பிரிட்டிஷ் அரசியாரின் வைர விழா கொண்டாட்டத்தில் இலங்கை அதிபர் கலந்துகொண்டதனைத் தொடர்ந்து கனடிய மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம், தொரொண்டோ பிரிட்டிஷ் பொது தூதரகத்தின் முன் நடந்துள்ளது. இங்கிலாந்து அரசியான அவர், நாட்டின் தலைவர் மட்டுமல்லாது கனடாவின் அரசியாரும் ஆவார்.

ராஜபக்சே போர் குற்றவாளி என எழுதப்பட்ட எதிர்ப்பு பலகைகளை ஏந்திய தமிழ்மக்கள், தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்தும் போராட்டத்தின்போது முழங்கியுள்ளனர். மேலும், பொதுநலவாய நாடுகளில் இலங்கையின் அங்கத்துவத்தை எதிர்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர் கனடிய தமிழ்மக்கள்.

canadian-tamils.jpgவரலாற்று சிறப்புவாய்ந்த அத்தகைய கொண்டாட்டத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பது போர்குற்றங்கள்; மனித உரிமை மீறல்; மனித இனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மேன்மேலும் இலங்கைக்கு எதிர்வினைகளையே உண்டாக்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இதன் தொடர்பாக மேலும் கருத்துரைத்த ஒருவர், பொதுநலவாய நாடுகளின் பொருளாதார மன்ற கூட்டத்தில் மேடையேர இருந்த ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டதுபோல் அரசியாருடனான மதிய உணவு விருந்துபசரிப்பிலும் ராஜபக்சே கலந்துகொள்வதை பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஷ் ஷர்மா தடை செய்திருக்க வேண்டும் என்றுரைத்துள்ளார்.

இதனிடையே, இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவம், ஜெனிவாவில் எடுக்கப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள்; மனித உரிமை மீறல்கள் தொடர்பான UNHRC-இன் தீர்மானங்களின் போலி பின்னனியையே குறிப்பதாக தமிழ்மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகலவிளான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பொதுநலவாய நாடுகளில் ஒன்றான கனடாவில் நடந்த இம்முற்றுகை போராட்டம், லண்டனில் வசிக்கும் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை விரிவாக்கும் செயலாக கருதுவதாக போராட்ட ஒருங்கினைப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்குமரன் தமிழரசி

http://thaaitamil.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.