Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தாயகத்தின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலத்திலும் போராட்டங்கள்!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Featured Replies

இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழீழத் தாயக மக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையிலான போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழர்களின் விடுதலைச் செயற்பாடுகள் அமைவது முக்கியமானதாகவுள்ளது.

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டவும் மற்றும் அப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனநல்லிணக்கம் என்ற சொல்லாடல் ஊடாக தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், த.தே.கூட்டமைப்பு மற்றும் நா.த.அரசாங்கத்தினது இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இராணுவமயப்படுத்தப்பட்ட நெருக்கடியான சூழலுக்குள், இலங்கையில் தமிழர்கள் வாழ நேர்ந்துள்ள நிலையில், அந்த மக்களின் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்டுத்துகின்றவர்களாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர் என இலங்கைத்தீவுக்கு வெளியே வாழும் தமிழர்கள் கூறுகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிறிலங்கா அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், சிறிலங்காவின் சிறைகளில் உள்ள தமிழர் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் சமீபத்தில் இருவேறு சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதி பா.சிறிதரன் அவர்கள், இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்புவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அரசியல் இருப்பினை முன்னிறுத்தி, தாயகத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்கள் சமாந்திரமாக போராட்டங்களை முன்னெடுப்பதானது, இலங்கைத்தீனை நோக்கிய சர்வதேசத்தின் அவதானிப்பை கூர்மைப்படுத்த முடியுமென நா.த. அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈழத்தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டமானது, ஈழத்தமிழ் மக்களால் மட்டுமல்ல , தமிழகம் , மலேசியா என உலகத் தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக மாறிவிட்ட நிலையில், தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தே, போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

... தகவல் துறை அமைச்சின் நல்ல செய்தி!? :icon_idea:

... எப்போது? எங்கெல்லாம்? புலத்தில் போராட்டங்களை முன்னெடுக்கப் போகிறீர்கள்??? ... முன்னரே குறிப்பிட்டீர்களாயின் எமக்கும் விடுமுறைகளை முன்னமே அறிவிக்க/எடுக்கக்கூடியதாக இருக்கும்!!!

.. இத்தலைப்பை யாழ்களம் நிர்வாகம், ஊர்ப்புதினத்தில் இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் தலைப்பின் கீழ் இணைக்க வேண்டுகிறேன் ... எத்தனை போராட்டங்கள் இன்றிலிருந்து இந்த நாகதஅ செய்யப்போகிறதென்ற விபரங்களை ... என் போன்றவர்கள் அறியக்கூடியதாக இருக்கும்! ... :icon_idea:

... நன்றிகள் மீண்டும்!!?? ...

Edited by Nellaiyan

அன்பின் அகரன், ... நாகதஅ இன் தகவல் துறை அமைச்சுக்கு தனியான இணையத்தளம் உள்ளதா?????????? ... ஏனெனில் நீங்கள் யாழில் இணைக்கும் எந்தவொரு நாகதஅ இன் தகவல் துறை அமைச்சின் தகவல்கள் என்பவைகள், நாகதஅ இன் இணையத்ளத்தில் இருப்பதில்லை!!!!!!!! ...

http://www.tgte-us.org/newshead.asp

http://www.tgte-us.org/

... இல்லை நாகதஅ என்பதின் தகவல் துறை அமைச்சு அறிக்கைகள் என்று தாங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறீர்களா???? தகவல் துறை அமைச்சிற்கு தெரியாமல்? ... உங்கள் மீது பலத்த சந்தேகம் எழுகின்றது??????????

  • தொடங்கியவர்

நெல்லையன் அவர்களே

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது சேறுபூச முனையும் தங்களின் ஆர்வத்தினை புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமாக www.naathamnews.com உள்ளது.

மேலும் அறிக்கைக்கும் - செய்திக்குறிப்புக்கும் தங்களுக்கு வித்தியாசம் புரிந்தால் மேலுள்ள இணைப்பு எந்தவகை என்பது புரியும்.

தாங்கள் குறிப்பிட்ட இணையத்தளத்தில் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மட்டுமே வெளிவரும்.

மேலும் செய்திக்குறிப்புக்களுக்கு என நாதம்நியூஸ் இணையத்தளம் உள்ளது.

அதில் செய்திககுறிப்புக்களை தாங்கள் காணலாம்.

Edited by அகரன்

... அறிக்கைகள், செய்திக்குறிப்புக்கள் ... அருமையான விளக்கம் தந்தீர்கள்! ஆனால் உந்த இணையங்களில் உள்ள தலைப்புக்களை பார்க்கும்போது ... வித்தியாசம் புரியவில்லை ....

... நல்லது ... இத்தலைப்பை நானும் மாதமொருமுறையோ, இருமுறையோ தூசு தட்ட தீர்மானித்துள்ளேன்! ... அறிக்கையில் இல்லாது, செய்திக்குறிப்பில் குறிப்பிட்டது போல் போராட்டங்கள் ... எப்போது? ... எங்கெல்லாம்? .... எவ்வாறு? ... நடைபெறப்போகின்றன??? ... அதில் இயலுமானவரை நாமெல்லாம் பங்கு பற்ற ஆவலாக இருக்கின்றோம் (23 வருடங்களுக்கு மேலாக தவற விட்ட போராட்டங்கள் என்று ஒன்றும் இல்லை என நினைக்கிறேன், இதில் பலஸ்தீன/குர்திஸ் போராட்டங்களும் அடங்கும், இவைகளுக்கெல்லாம் போனவர்கள் நாகதஅ இனதுகளை தவற விடுவோமா?) .. அதற்காக அறிக்கையில் இல்லாது, செய்திக்குறிப்பில் குறிப்பிட்டது போல், எத்தனை போராட்டங்கள் செய்யப்போகிறீர்கள் என்பதை கணக்கெடுக்கவும் வேண்டியுள்ளது!

... இந்த போராட்டங்களில் ... மாவீரர் நாளை ... புலமெங்கும் புதிதாக தாந்தோன்றிய தலைமைச்செயலக வீராதி வீரர்களின் துணையுடன் .. குழப்பியடித்து கூத்தடிப்பதை சேர்க்க வேண்டாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.