Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் (பாகம் 1-2)

Featured Replies

விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 01

மார்கழிப் பனிக்குளிரின் சில்லிட்ட இளங்காலைத் தென்றல் உடலைத் தழுவிய போதும், ஜெயந்தாவின் மனதைப் போலவே அவளின் உடலும் உஷ்ணமாகவே இருந்தது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயந்தா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினாள்.

உடல் தன்போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடி இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. காலைத் தாமரை மலர் போல எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் ஜெயந்தாவின் முகம் மாலைத் தாமரையாய் வெம்பி வாடி இருந்தது. இவள் கண்களிலும், இதழ்களிலும் எப்போதும் விளையாடும் குறும்புச் சிரிப்பு சென்ற இடம் தெரியவில்லை.

அந்த வாட்டத்திலும் அவள் பேரழகு கண்ணைப் பறித்தது. சுற்றுப் புறத்தை மறந்து உதட்டை அரிசிப் பற்களால் அழுத்தியபடி கொடி இடை அசைய அவள் வேகமாக நடந்து செல்வதை நின்று பார்த்துச் சென்றவர் பலபேர். எதிர்ப்பட்ட சிலர் நின்று தன்னை விசித்திரமாகப் பார்ப்பதைக் கண்டு முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள். முகத்தைச் சுலபமாக மாற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் மனதை… அது மதயானை போல் தறிகெட்டு செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் செக்குமாடு சுற்றுவதைப் போல், அவள் நினைவு அவளது அப்பாவையே சுற்றிச் சுற்றி வந்தது.

வியாபரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், கடன் தொல்லை ஏற்படுத்திய பணநெருக்கடி காரணமாகவும் ஜெயந்தாவின் நீண்ட நாள் ஆசையில், இடி விழுந்தது. அவளின் உயர்கல்வியைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு இன்று அலுவலகம் ஒன்றில் நேர்முகப் பரீட்சையை நேர் கொள்வதற்காக அவளை இன்று அனுப்புகின்றார் சிவநேசச்செல்வன்.

“கிரீச்…”

சற்று நேரம் ஜெயந்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை மூளைக்குள் மின்னல் வெட்டியது காது “நொய்” என்றது.

படகு போன்ற நீளமான கார் ஒன்று திடீரென பிரேக் போட்டு அவளை உராய்ந்து கொண்டு நின்றது.

“முட்டாள்”… என்று அவளுக்கு அர்ச்சனை செய்தபடி காரில் இருந்து இறங்கி வந்தான் ஓர் உயரமான இளைஞன். அவன் முகத்தையே பார்த்தபடி பிரமை பிடித்தாற்போல நின்றாள் ஜெயந்தா.

மாநிறம்;;, கறுத்து அடர்ந்த கிராப் முடி, அகன்ற நெற்றி, கூரான நாசியும், பார்வையும், அழுத்தமான உதடுகள், உறுதியான முகவாய், ஆறடி உயரம் விநாடிக்குள் கண்கள் வழியாக ஜெயந்தாவின் உள்ளம் அவனை அளவெடுத்தது.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தாவின் பேரழகு அவனைக் கூட ஒரு நிமிடம் தடுமாற வைத்தது. “ஸாரி சார் அவசரமாக பஸ் பிடித்து போக வேண்டிய கட்டாய நிலையை அப்பா ஏற்படுத்தி விட்டார். அந்தக் கோபத்துடனேயே புறப்பட்டேனா, உங்கள் காரைக் கவனிக்காமல் ரோட்டைக் கடக்கப் பார்த்தேனா இப்படியாயிற்று” என்று மிகவும் பணிவாக மன்னிப்புக் கோரினாள். உதடுகளின் அசைவுடன் சேர்ந்து, அவளது கண்களும் கதை பேசின.

அவளை ஒரு முறை கூர்ந்து பார்த்தான் அந்தப் புதியவன். பிறகு பதிலெதுவும் கூறாமல் காரில் ஏறி அமர்ந்தான். தலையை மட்டும் வெளியே நீட்டி சொன்னான் “பிரமாதம்” என்று. “என்ன?” என்று ஜெயந்தா கேட்பதற்குள் கார் அவளைக் கடந்து கொண்டு பறந்துவிட்டது.

ஜெயந்தா பஸ் பிடித்து நேர்முகப் பரீட்சை நடைபெறும் அலுவலகம் போய்ச் சேர பத்து மணி ஆகிவிட்டது. அரை மணி நேரம் முன்னாடியே வந்து விட்டாள். ரிசப்ஷன் முன்னாடி இருந்த பெண்ணிடம் தன் வரவைத் தெரிவித்து விட்டு அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் ஜெயந்தா.

தன்னைப் போல் பலபேர் நேர்முகப் பரீட்சைக்கு வந்திருப்பார்கள் என்று எண்ணி வந்திருந்த ஜெயந்தாவிற்கு படு ஏமாற்றம். அவளைத் தவிர வேறு யாரும் அந்த நேர்முகப் பரீட்சைக்கு வந்ததாகத் தெரியவில்லை.

ரிசப்ஷனில் இருந்த பெண்ணைத் தவிர யாருமே அவள் கண்ணில் படவில்லை. அவளது பார்வையைக் கவனித்த ரிசப்ஷன் பெண் சிநேகமாகப் புன்னகைத்தாள். அதற்குள் அலுவலகப் பையன் வந்து ஜெயந்தாவை டைரக்டரின் அறையைக் காட்டி, டைரக்டர் அழைப்பதாகத் தெரிவித்தான். படபடக்கும் இதயத்தை, டைரக்டரின்; அறைக் கதவின் முன் நின்று இழுத்து விட்டுக்கொண்டாள் ஜெயந்தா. குனிந்த தலை நிமிராமல் புதுப் பெண் போல டைரக்டரின் அறைக்குள் நுழைந்தாள். “குட் மோர்ணிங் ” என்ற குரலைக் கேட்ட ஜெயந்தா பளிச்சென்று தலை நிமிர்ந்து பார்த்தாள். வியப்போடு வாயைப் பிளந்தாள்!.....

மலரும்…………

-சுப்ரா

http://tamilleader.c...4576-vkp01.html

Edited by ஊர்பூராயம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=4]விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 02

ஜெயந்தாவின் வியப்புக்குக் காரணம் அங்கு அவளை நேர்முகத்தேர்வு செய்யத் தயாராயிருந்த ரகுராமனே. ரகுராமன் வேறு யாருமல்ல! அவளின் ஆருயிர்த் தோழி சுகர்ணாவின் அண்ணனே! “ ரகு அண்ணா நீங்களா? என்று தன்னையறியாமல் கூவியவள், சடாரென தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “குட்மோர்ணிங் ‘சார்” என்றாள். “சாட்சாத் ரகுராமன் நானே தான்” என்று புன்னகையுடன் கூறியவாறே அவளை இருக்கையில் அமருமாறு சாடையில் பணித்தான்.

நேர்முகப் பரீட்சைக்குத் தயாராய் வந்திருந்த ஜெயந்தா, தனது சான்றிதழ்கள் அடங்கிய பைலை அவனிடம் நீட்டினாள். அதை ஜாடையினாலேயே மறுத்த ரகு, டைப் பண்ணித் தயாராய் வைத்திருந்த வேலையில் சேர்வதற்கான ஆடரை எடுத்து நீட்டினான். வியப்புடன் விழியுயர்த்திப் பார்த்த ஜெயந்தாவைப் பார்த்து புன்னகைத்தான் ரகுராமன். மேலும் தொடர்ந்து தனது செயலுக்கான விளக்கத்தைக் கொடுத்ததும், ஜெயந்தாவிற்கு என்ன சொல்லதென்றே தெரியவில்லை.

அவளது வேலைக்கான விண்ணப்பத்தைப் பார்த்தவுடனேயே ரகுவிற்குத் தெரிந்து விட்டதாம். அது ஜெயந்தாவின் விண்ணப்பம் என்று. அதனால் தான் அவன் நேர்முகத்தேர்வுக்கு அவளை தவிர யாரையும் அழைக்கவில்லையாம். அவளையே தனக்கு ஆபிஸில் P.A (Personal Assistant) வாக நியமித்து விட்டானாம். அதற்குரிய பயிற்சியை அவள் இருவார காலத்திற்கு ஆபிஸில் இருக்கும் ஒருவரிடம் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டுமாம். அதுமட்டுமல்லாது அவளது உயர்கல்வியைத் தொடர்ந்து கற்பதற்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும், வாரத்தில் இரு நாட்கள் அவள் பல்கலைக்கழகம் சென்று பகுதிநேரக் (Part time) கல்வியாக உயர்கல்வியை முடித்துக் கொள்ளலாம் என்றும் அதற்குரிய செலவையும் அலுவலகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் தொடர்ந்து கூறினான். இவற்றையெல்லாம் கேட்ட ஜெயந்தாவிற்கு வந்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள்.

அவளது நீண்ட நாள் ஆசையைப் பற்றி சுகர்ணா தன்னிடம் கூறியிருப்பதாகவும், அவளது தந்தையின் தொழில் நிலையின் சரிவு தான் அவளை இந்த விண்ணப்பத்தை அனுப்பத் தூண்டியிருக்குமென எண்ணியதாகவும், அதனால் தான் இந்த ஏற்பாடு என்று கூறினான். “உனக்கு இதில் சம்மதம் தானே?” என்று ரகு வினவியதும், “கரும்பு தின்னக் கூலி கேட்பேனா ரகு அண்ணா! ஏன்று கூறி தொடர்ந்து தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். புதனன்று வந்து வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு ரகு வேண்டுகோள் விடுத்த பிற்பாடு விடை பெற்றுக் கொண்டாள் ஜெயந்தா.

சிறுவயதிலிருந்தே ஆருயிர்த் தோழியான சுகர்ணா சமீபத்தில் தான் கல்யாணமாகி அமெரிக்கா போயிருந்தாள். அவளது வீட்டுக்கு சிறுவயதிலிருந்தே போய்வரும் ஜெயந்தா சுகர்ணாவைப் போலவே, ரகுவை அண்ணா என்றே அழைப்பாள். சமீப காலமாகத் தான் அவள் அங்கு போய் வருவது குறைந்திருந்தது. காரணம் சுகர்ணாவிற்கு கல்யாணமாகி அவள் அமெரிக்கா போய்விட்டிருந்ததே. சுகர்ணாவின் அண்ணி கூட ஜெயந்தாவுடன் மிகவும் பிரியமாகவே இருப்பார்.

புதனன்று வந்து வேலையில் சேர்ந்து கொண்ட ஜெயந்தாவுக்கு மற்றுமொரு ஆச்சிரியம் காத்திருந்தது. டைரக்டரின் அறையை நெருங்கிய ஜெயந்தா கதவைத் தட்டி “ உள்ளே வரலாமா” என அனுமதி கேட்டாள். “யெஸ் கம் இன்” என்ற கம்பீரமான குரல் உள்ளே இருந்து வரவும் உள்ளே சென்றாள் ஜெயந்தா. “இவர் வினோத்” உனக்கு தொழிற் பயிற்சியை இவர் தான் உனக்குக் கற்றுத் தரப்போகிறார் என்றதும் தான் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த வினோத்தைக் கவனித்தாள் ஜெயந்தா. உடனேயே “ஹாய் வினோத்” கௌ ஆர் யூ? என்று கேட்கவும், “ஓ! இருவருமே பரிச்சயமானவர்களா? அப்போ எனக்கு உங்கள் இருவரையும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று கூறிச் சிரித்தான் ரகுராமன். இருவரும் கல்லூரி நண்பர்கள் என்பதைத் தெரிவித்து ரகுவிடம் விடைபெற்று இருவரும் வினோத்தின் கபினை அடைந்தார்கள். வினோத் விளக்கிய தொழில் பற்றிய விடயங்களை ஜெயந்தாவினால் இலகுவாகவே விளங்கிக் கொள்ளமுடிந்தது.

ஒரு வார தொழிற்பயிற்சி எப்படி கடந்து போனதென்றே தெரியவில்லை ஜெயந்தாவிற்கு. சிநேகமாக வினோத் விளக்கிய தொழில் விடயங்களை இரு வாரங்களுக்கு பதிலாக ஒரு வாரத்திலேயே கற்றுத் தேர்ச்சி பெற்று விட்டாள் ஜெயந்தா. அன்றைய மதியவேளையின் போது கணனியில் இருந்து எழுந்த ஜெயந்தா, கைப்பையை எடுத்துக் கொண்டு canteen ஐ நோக்கி விரைந்தாள் அவசர அவசரமாக தலை குனிந்து நடந்த அவள் திடீரென எதிர்பாராத விதமாக எதிலோ மோதிக் கொண்டு விழப் பார்த்தாள். ஆவளைத் தாங்கிக் கொண்ட வலிய கரங்கள் இரண்டு அவளைப் பிடித்து உலுக்கி “வழி” பார்த்து நடக்கத் தெரியாதா உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்தது” என்று அடித் தொண்டையில் கத்தினான். விழியுயர்த்திப் பார்த்த ஜெயந்தா அவசரமாக அவனது இரும்புப் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். உக்கிரமான பார்வையுடன் அகன்ற தோளும் உயரமுமாக ஒரு கிரேக்கச் சிலை போல் நின்றிருந்த அவனை மலைப்புடன் பார்த்தாள் ஜெயந்தா.

மலரும்…………

-சுப்ரா

http://tamilleader.c...4654-vkp02.html[/size]

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.