Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதமும், மதவாதமும் பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது: றிசாத் பதியுதீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rishad-bathiudeen-150seithy.jpg

இனவாதமும், மதவாதமும் பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது,மாறாக விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என வன்னி மாவட்டஅபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலைக்கான பாடசாலை கட்டிடம், அதிபர் விடுதி, கணணி பிரிவு என்பனவற்றை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொ்ண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர்.அருட் சகோதரர் சீ.எஸ்.விஜயதாசன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் மேலும் கூறியதாவது:

இனங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வை சீர் குலைக்க சில சக்திகள் முற்படுகின்றன. அவற்றுக்கு இடம் கொடுக்க முடியாது. எமது மண்ணில் நாம் சகலரும் சமமானவர்கள், இதில் சாதி பாகுபாடுகளோ, மத ரீதியான பிளவுகளே ஏற்பட இடம்கொடுக்க முடியாது. இந்த விடயங்களை நாம் பாடசாலைகளில மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

தற்போதைய இப்பாடசாலையின் அதிபராக இருக்கின்ற அருட் சகோதரர் விஜயதாசன் அவர்கள் நல்ல மனிதர். இதற்கு முன்னர் அவர் வங்காலை பாடசாலையில் அதிபராக கடமையாற்றிவர் சிறந்த நிர்வாகி, தன்னலம் பாராது பிற நலத்ததை முதன்மை படுத்தி செற்படுபவர்,இவர் இப்பாடசாலையின் அதிபராக வந்தமை இந்த மாணவர்கள் செய்த பாக்கியமாக பாரக்கின்றேன்.

ஏனெனில் கற்கும் மாணவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுப்பது கல்வியை தான், அது தான் அந்த பிள்ளையின் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து செல்லும் .கற்றலின் முக்கியத்துவம், மாணவ சமூகத்தின் எதிர்கால இலக்குகளை இனம் கண்டு அதனை செயற்படுத்தும் ஆற்றல் கொண்டவர் அருட் சகோதரர் விஜயதாசன் என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹ-னைஸ் பாருக், மடு வலயக் கல்வி பணிப்பாளர் குரூஸ், மற்றும் பிரதேச செயலாளர் என்டன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

http://www.seithy.co...&language=tamil

மிக மோசாமான சாத்தான்கள் வேதமோதுகிறது!

இந்தமனுசனையும் டாக்குத்தர் மேர்வின் சில்வாவுடன் செர்த்துவிடள்ளமேன்று என்னுடைய அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல....................யார் எத சொல்லுறது என்ற விவஸ்தை இல்லாமல் போய் விட்டது வர வர சிறிலங்கா அரசியல் இந்திய அரசியல் மாதிரி போய் விட்டது!

ஐயையோ................[ இந்தத்திரியை நான் வாசிக்கவில்லை] :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே 180 பாகை திரும்பி ஒரு கண்ணாடிக்கு முன்னால் நின்று சொல்லு! :D

இனவாதம் - மதவாதம் இனங்களுக்கிடையே உறவை ஏற்படுத்தாது - பதியுதீன்..?! யாரிடம் சொல்கிறார்..? யாருக்கோ...வா..? ஈழதேசம் செய்தி..!

eeladhesam%20seythi%20aaivu.jpgஇலங்கையில் மகிந்தா அரசின் அமைச்சர்கள் அனைவரும், தங்களால் ஒருபோதும் செயற்படுத்த முடியாத பல கருத்துக்களை முறை வைத்து சொல்லிக்கொண்டே இருப்பது என்ற ஒரு நடைமுறையை வைத்துள்ளார்கள் போலும். அதிலும் இந்த ரிசாத் பதியுதீன் கைப்புள்ள ரேஞ்சுக்கு ஏற்கனவே பல ஆயிரம் முறை சொன்ன இந்த கருத்துக்களை, ஏதோ தான் தான் நேற்று புதிதாய் கண்டுபிடித்தது போல கூறியுள்ளார்.

இனவாதமும் மதவாதமும் மற்றும் பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது. மாறாக விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என்கிறார் ரிசாத் பதியுதீன். இனங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வை சீர் குலைக்க சில சக்திகள் முற்படுகின்றன. அவற்றுக்கு இடம் கொடுக்க முடியாது. எமது மண்ணில் நாம் சகலரும் சமமானவர்கள். இதில் சாதிப் பாகுபாடுகளோ, மத ரீதியான பிளவுகளோ ஏற்பட இடம் கொடுக்க முடியாது. இந்த விடயங்களை நாம் பாடசாலைகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் கற்கும் மாணவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுப்பது கல்வியைத் தான், அது தான் அந்த பிள்ளைகளின் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து செல்லும் என்கிறார்.

ஒருவேளை, மகிந்தா மற்றும் கோத்தபாய கும்பலுக்கு எதிராக சொல்லுகிறாரோ..? இனவாதமும் மதவாதமும் ஒரு போதும் இனங்களுக்கு இடையே உறவை ஏற்படுத்தாது என்கிறார். சிங்கள இனத்திற்கும் முஸ்லிம் மதத்திற்கும் நல்ல உறவை ஏற்படுத்தாது என்கிறாரோ..? ஏனென்றால், மகிந்தா கும்பல் இப்பொழுது தான் மசூதி இடிப்புகளை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. மசூதி சொத்துக்களை கைப்பற்றி இருக்கிறது. தமிழர்கள் தமிழர்கள் என்று இனி சொல்ல முடியாது, தமிழர்கள் அனைவரையும் இழப்பதற்கு ஏதுமில்லாமல் செய்தாயிற்று, எஞ்சியிருக்கும் உயிர்களை பறிப்பதற்கும் திட்டம் தீட்டி அனைவரையும் முள்வேலி தொழுவங்களில் அடைத்தாயிற்று.

பிறகு எஞ்சியிருப்பது இந்த முஸ்லிம் கூட்டம் தான். எனவே இவர்களையும் அடித்து துவைத்து இலங்கையை விட்டு விரட்டி விட்டால், பிறகு தானாகவே கிறிஸ்துவ கூட்டம் இடம் அல்ல நாடு பெயர்ந்து சென்று விடுவார்கள், நூறு சதவீத சிங்கள இனம் மட்டும் உடைய ஒற்றை பிரதேசமாக அமைத்து விடலாம் என்று இருக்கையில், இந்த திட்டத்தை அறிந்து கொண்டதினால் தானோ என்னமோ, ரிசாத் பதியுதீன் மறைமுகமாக எச்சரிக்கை ஒன்றை, மகிந்தா அரசுக்கு எதிராக விட்டுக் கொண்டிருக்கிறாரோ..? என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.