Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா சிறையில் மோதல் கைதிகள் ஏழு பேர் படுகாயம்! அனுராதபுரம் சிறை அதிகாரியே சூத்திரதாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]jeil.jpg[/size]

[size=3][size=4]வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.[/size]

[size=4]நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.[/size]

[size=4]இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதமே மோதலாக மாறியுள்ளது என்றும் இதனால் கைதிகளில் எழுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.[/size]

[size=4]சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை உயரதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்டு வருவதாகவும் காயமடைந்த கைதிகளுக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் சிறையதிகாரிகள் மேலும் கூறினர்.[/size]

[size=4]இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு அனுராதபுரம் சிறைச்சாலை பொறுப்பதிகாரியின் சூட்சியே பிரதான காரணம் என்று கைதிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் ஆறு பேர் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனை எதிர்த்த குறித்த கைதிகள் தாம் வவுனியா சிறைச்சாலையில் இருந்து வெளியேறமாட்டோம் என்றும் மீறி தம்மை கட்டாயமாக பூசாவிற்கு மாற்ற முற்பட்டால் தமது வெற்றுடல்களையே கொண்டு செல்ல நேரிடும் என்று தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி திட்டமிட்டு மன்னாரைச் சேர்ந்த கைதி ஒருவரை வவுனியா சிறைச்சாலைக்குள் அனுப்பியிருக்கின்றார். மூழைச் சலவை செய்யப்பட்டு அனுப்பபட்ட குறித்த கைதி வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு இடையில் பிரிவினையைத் தூண்டி அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்படக் காரணமாக இருந்திருக்கின்றார் என்று வவுனியாச் சிறைச்சாலைக் கைதிகள் தெரிவித்திருக்கின்றனர்.[/size]

[size=4]http://www.saritham.com/?p=62540[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.