Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளையோர் நடனத் திறமையை சர்வதேச தரத்தில் வெளிப்படுத்திய கனடியத் தாளம் போட்டி நிகழ்ச்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thalaam0-seithy270612.jpg

[size=4]இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழு நடாத்திய தாளம் 2012 நடனப் போட்டி ஞாயிறு, யூன்24 ரொரென்ரோவில் அமைந்துள்ள Metro Toronto Convention Centreஇன் John Bassett Theatre இல் சிறப்புற நடைபெற்றது. தாளம் 2012 இல் ஆறு பல்கலைக்கழகங்களில் இருந்து நடன அணிகள் கலந்து கொண்டனர்.[/size]

[size=4]மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து MacFlow Maruaders அணியும், கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் இருந்து Montreal Maniacs அணியும், ஒசாவா பல்கலைக்கழகத்தில் இருந்து Oshawa Titans அணியும், ரயர்சன் பல்கலைக்கழகத்தில் இருந்து Ryerson Royalty அணியும், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் இசுகாபுரோ வளாகத்தில் இருந்து UTSC Assassins அணியும், யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து York Seneca Huskies அணியும், போட்டியில் கலந்து கொண்டனர்.[/size]

[size=4]30 தொடக்கம் 40 நடனக் கலைஞரைக் கொண்ட இந்த ஆறு அணிகளும் கடந்த பல மாதங்களாக தாளம் 2012 போட்டிக்காகவே கடும்பயிற்சி மேற்கொண்டு வந்தனர். தாளம் 2012 பிற்பகல் 5:30 மணிக்கு கனடியத் தேசியக் கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து, அகவணக்கம் ஆகியவற்றுடன்ஆரம்பித்தது.[/size]

[size=4]தொடர்ந்து கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஜனனி இராசநாதன் வரவேற்பு உரையாற்றினார். வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தாளம் நடனப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பித்தன. Montreal Maniacs, MacFlow Maruaders , York Seneca Huskies, UTSC Assassins, Ryerson Royalty மற்றும் Oshawa கனடியத் தமிழ் Titans விறுவிறுப்பான நடனங்களை வரிசையாக வழங்கினர்.[/size]

[size=4]அனைத்து அணிகளும் நடனத்தோடு சேர்த்து நன்றாக அமைக்கப்பட்ட காட்சிகள்,பொருட்கள், உடைகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் திறமைகளைக் வெளிக்காட்டினர். ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்து, அக்கருத்தை திறம்பட அனைத்து அணிகளும் வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியிடும் அணிகளை ஊக்குவிக்கும் முகமாக 6 அணிகளுக்கும் 100 நபர்களைக் கொண்ட Cheer Squad என்றழைக்கபடும் ஒரு குழு தங்கள் குரல்களையும் கரகொலியையும் எழுப்பி அணிகளுக்கு ஆதரவு வழங்கினர்.[/size]

[size=4]இந்நிகழ்வில், கனடாவில் இருந்து தமிழீழ உதைப்பந்தாட்ட கழக அணியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களை மதிப்பளிக்கும் முகமாக விருதுகளும் வழங்கப்பட்டது. தாளம் 2012 க்கு ஆதரவு வழங்கி பல அனுசரணையாளர் , அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர். கனடிய அரசாங்கத்தின் சார்பாக ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மார்க் அட்லர் (MP Mark Adler - Conservative - York Center), ஸ்பாபுரோ அஜின்கோட் தொகுதி லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானிஸ் (MP Jim Karigiyanis - Liberal - Scarborugh Agincourt), லிபரல் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் கிளன் முறே (Glen Murray - MPP Toronto Centre), சான்தயாபரன் ஒன்டாரியோ கன்செர்வடிவ் கட்சித் தலைவர் ரிம் குடாக்கின் சார்பாகவும் ( Tim Hudark-Ontario Progressive conservative Leader), மார்க்கம் நகரசபை உறுபினர் லோகன்கணபதியும், OntarioNDPகட்சியின் தலைவர் நீதன் சானும், மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர் வனிற்றா நாதன் ஆகியோரும் நிகழ்வின் பொழுது தாளம் 2012 இற்கும் அதை வழங்கிய கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழுவிற்கும், போட்டியிட்ட அணிகளுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.[/size]

[size=4]தாளம் நடனப் போட்டியில் வரும் அனைத்து நிதியும் தமிழ் இளையோரிற்கான ஒரு சமூக நிலையம் உருவாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கி வைக்கப்படும் என கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை விளக்கி கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் சார்பாக தீபனா ஞானகிருஷ்ணன் உரையாற்றினார்.[/size]

[size=4]போட்டியின் முடிவுகள் அறிவிக்கபடும் முன் இசை நிகழ்வுகளும், உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் சார்பில் லண்டன், UK இல் இருந்து வருகை தந்த ஆடுகளம் சர்வதேச நடனப் போட்டியின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான பிருந்தா ஸ்கந்ததேவாவின் சிறப்பு உரையும் நடைபெற்றன. கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஆர்த்தி வேலுப்பிள்ளை வழங்கிய நன்றியுரையைத் தொடர்ந்து பரிசளிப்பு இடம்பெற்றது. பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள் பின்வருமாறு.[/size]

[size=4]Thaalam 2012 Champions - UTSC Assassins

Thaalam 2012 Runner-Up - Oshawa Titans

Thaalam 2012 2nd Runner-Up - York Seneca Huskies

Best Classical Dance Award - York Seneca Huskies

Best Gaana Award - York Seneca Huskies & UTSC Assassins

Best Tamil Heritage Dance Award - Oshawa Titans

Best Western Dance Award - UTSC Assassins

Best Choreography Award - York Seneca Huskies

Best Costume Award - Oshawa Titans

Best Portrayal of Theme - York Seneca Huskies

Best Tamil Heritage Award - MacFlow Marauders & Oshawa Titans

Best Showmanship Award - Oshawa Titans

Best Cheer Squad Award - Oshawa Titans

People's Choice Award - Montreal Maniacs[/size]

[size=4]தாளம் 2012 இல் வெற்றி பெறும் அணி அக்டோபர் திங்களில், UKஇல் இடம்பெறவுள்ள ஆடுகளம் சர்வதேச நடனப் போட்டியில் கனடா சார்பாக போட்டியிடும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஆடுகளம் போட்டியில் UTSC Assassins போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

  • [size=4]Thalaam1-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam2-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam3-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam4-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam5-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam6-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam7-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam8-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam9-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam10-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam11-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam12-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam13-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam14-seithy270612.jpg[/size]
  • [size=4]Thalaam15-seithy270612.jpg[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் இதையும் ந க அ செய்யவில்லை :(

டனநக் குழுக்களுக்கு சுப்பர் பெயர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.