Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம் : மகிந்த ராஜபக்விற்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலைவரம் ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

colonel-Ramesh0_seithy29061.jpg

[size=4]சிறிலங்கா இராணுவத்தினால் படுகொலைசெய்யபட்ட கேணல் ரமேஸ் தொடர்பில் , சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் , கேணல் ரமேஸ் அவர்களின் மனைவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இன ஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்ற விசாரணைக்கும், தடுப்புக்குமான விவகார அமைச்சகம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.[/size]

[size=4]முன்னாள் முற்போக்குச் சிந்தனையாளரும் , அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளின்ரனின் சட்ட ஆலோசகருமான Harold Koh அவர்கள் , தற்பொழுது சிறிலங்காவின் போர்க் குற்றவாளியைப் பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[/size]

[size=4]இது தொடர்பில் குறித்த அறிக்கையில் விரிவாக தெரிவிக்கபட்டுள்ளதாவது :

கேணல் ரமேஸ் என அழைக்கப்பட்ட துரைராஜசிங்கம் என்பவரின் மனையினால் சிறிலங்கா அதிபர் மகிந்த இராசபக்சாவிற்கு எதிராகவும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள முகவர்களுக்கு எதிராகவும் வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்[/size]

[size=4]இந்த வழக்கின்மூலம், அமெரிக்க நாட்டு சட்டங்களுக்கும் அனைத்துலக சட்டங்களுக்கும் முரணான வகையில் பிரதிவாதியினால் மனுதாரர் தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற தரக் குறைவான நடவடிக்கைகள் என்பனவற்றிற்காக பிரதிவாதியிடம் நீதி மன்ற ஆணை மூலமான, சட்ட முறையிலான நட்ட ஈட்டைக் கோருகின்றார். பிரதிவாதியான இராஜபக்சா நியூ யோர்க் மாநிலத்திலுள்ள நியூ யோர்க் நகரில் கடைசியாக தங்கியிருந்த காலத்தில் தான் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.[/size]

[size=4]சில நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கம் ஒரு அரச தலைவருக்கு உரிய விதிவிலக்குப் பாதுகாப்பு அடிப்படையில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளையில், இலங்கை அரச அதிபர் தனக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எவ்வகையிலும் மறுதலிக்கவில்லை.[/size]

[size=4]அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் திரு. ஹரோல்ட் கொங்கு கோவ் என்பவரின் வேண்டுகோளுக்கு அமைய நியூ யோர்க் மாநிலத்தின் தென் மாவட்டத்திற்குரிய அரசசட்டத்தரணி இராஜதந்திர விதிவிலக்கும் அடிப்படையில் வழக்கினை தள்ளுபடி செய்யும்படி வேண்டுகோள் ஒன்றை 2012 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 26 ஆம் நாளன்று நீதி மன்றில் முன் வைத்துள்ளார்.[/size]

[size=4]திரு. ஹரோல்ட் அவர்கள் தனது கோரிக்கையில் பதவியில் இருக்கும் தலைவர் என்ற ரீதியில் இராஜதந்திர விதிவிலக்கின் அடிப்படையில் இராஜபக்சாவிற்கு எதிராக வழக்கு தள்ளுபடி செய்யவேண்டுமென இராஜாங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]மனுதாரர் 'இராஜதந்திர விதிவிலக்கு வேண்டுகோள்' பற்றிய தனது எதிர்ப்பை 2012 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15 ஆம் திகதியிட்ட மனு ஒன்றின் மூலம் நீதி மன்றுக்குத் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்துக்கு 'இராஜரீக விதிவிலக்கு வேண்டு கோள்' என்பதை வழங்குவதற்கு சட்ட ரீதியான அடிப்படை எதுவும் இல்லை என தனது எதிர் மனுவில் மனுதாரர் வாதிட்டுள்ளார்.[/size]

[size=4]அத்துடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக எதுவித சட்ட ரீதியிலான அல்லது யாப்பு மூலமான விதிகள் எதனையும் தனது விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை எனவும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.[/size]

[size=4]அதுமட்டுமன்றி, இராசாங்கத் திணைக்கள சட்ட நிபுணர் திரு. ஹரோல்ட் கோவ் அவர்கள் முன்னர் யேல் சட்டக் கல்லூரியின் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் இருந்த காலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள கருத்தையும் மனுதாரர் இங்கு எடுத்துக் கூறியுள்ளார்.[/size]

[size=4]அதாவது, 'வெளிநாட்டு அரசாங்கங்களின் வணிக நடவடிக்கைகளை, பண்பமைதிக்குப் (comity) பங்கம் ஏற்படாதவாறு அமரிக்க நீதிமன்றங்கள் நீதியின் முன்னிறுத்தி ஆராய முடியுமென்றால், எதற்காக அரசுத் தலைவர்களை பொது வாழ்விலான தவறான நடவடிக்கைகளுக்கு ஏற்ப அவர்களை விசாரணை செய்யாது விலக்களிக்க வேண்டும்' என ஹரோல்ட் எழுதியுள்ளதை எடுத்துக் கூறி, மனுதாரார் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.[/size]

[size=4]மேலும், மனுதாரர் முன்னைய வழக்குத் தீர்ப்புக்களை, குறிப்பாக 'மாபறி எதிர் மடிசன்', 'பார்க்கே ஹபானா' என்பவற்றைச் சான்றாகக் காட்டி, சட்டம் எதைக் கூறுகின்றது என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு நீதி மன்றங்களுக்கே உண்டு என வாதிட்டுள்ளார். பேராசிரியர் ஹோ அவர்களின் கட்டுரையின் மற்றுமொரு பகுதியை மேற்கோள் காட்டி, அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கங்கள் வெளியிடும் கொள்கைகளின் அடிப்படையில் நீதி மன்றங்கள் தம் தீர்ப்பை வழங்கல் தகாது எனவும் மனுதாரர் வாதிடுகின்றார்.[/size]

[size=4]மேலும், மானிட வர்க்கம் கண்ட பாரிய யுத்தக் குற்றங்களைப் புரிந்த அரச தலைவர்களுக்கு இந்த விதிவிலக்களிப்பை வழங்கக் கூடாது எனக் கூறும் கருத்துக்களைக் கொண்ட அனைத்துலக மட்டத்திலான பட்டியல் ஒன்றையும் மனுதாரர் தனது வாதத்துக்குச் ஆதரவாக வழங்கியுள்ளார்.[/size]

[size=4]மனுதாரார் முதலில் 12 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் அரசுத் தலைவர்களைத் தண்டித்து வழங்கப்பட்ட தீர்ப்புக்களையும், 1919 ஆம் ஆண்டின் வேர்சையில்ஸ் உடன் படிக்கை, நியூறம்பேர்க் கோட்பாடுகள், இன அழிப்பு ஒப்பந்தம் என்பவற்றை எடுத்துக் கூறுகின்றார். தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவினால் முன்னின்று நிறை வேற்றப் பட்ட அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாய, முன்னைய யூகோஸ்லாவிய, உருவாண்டா, சியாராலியோன் ஆகிய நாடுகளுக்கான சிறப்புத் தீர்ப்பாய, அனைத்துலக குற்றவியல் நீதி மன்று ஆகியவற்றின் உருவாக்கல் சட்டங்களையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார்.[/size]

[size=4]அரசுத் தலைவருக்குரிய விதி விலக்களிப்பு எனும் பாதுகாப்பினை மறுப்பது என்பது விதிமுறைகளின் ('ஜாஸ் கோகன்ஸ்') படி வழக்கமானதும் என மனுதாரர் வாதிடுகின்றார்.[/size]

[size=4]மேலும், மனுதாரார் மற்றுமொரு முக்கிய அம்சத்தினையும் தனது வாதத்தில் முன் வைத்துள்ளார். அதாவது, குற்றவியல் வழக்குகளுக்குப் பொருந்தும் விதி முறைகள் குடிசார் வழக்குகளுக்கும் பொருந்தும் என்பதே அந்த வாதம் ஆகும். குற்றவியல் வழக்குகளும் குடிசார் வழக்குகளும் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கின்ற போதிலும், பாதிப்புக்குள்ளான ஒருவரால் கொண்டுவரப்படும் குடிசார் வழக்கு அவருக்கு செழுமையையும் திருப்தியையும் வழங்க வல்லது.[/size]

[size=4]அரசுத் தலைவர் இராஜபக்ச பதவியிலிருந்து விலகிய பின்னர், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்பதனை அமெரிக்க இராசாங்கத் திணைக் களம் தனது கடிதத்தில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டும் மனுதாரர், நீதி வழங்கும் செயற்பாடு பின்போடப்படும் பொழுது, நீதி மறுக்கப்படுகின்றது என்றே பொருள்படும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size]

[size=4]மனுதாராரின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் சட்ட வாதங்களை, தீர்ப்பின் முடிவைப் பாதிக்கக் கூடிய வாதங்களை, அரச சார்பற்ற அமைப்பான, மனித உரிமைக்கும் இயற்கைச் சூழலுக்குமான 'ஸ்பீக்' (SPEAK) எனும் அமைப்பு முன்வைத்துள்ளது. 'இராஜதந்திர விதிவிலக்கு' எனும் பாதுகாப்பை இராஜபக்சாவிற்கு வழங்க வேண்டுமா அல்லது வழங்கக் கூடாதா எனத் தீர்மானிக்கும் அதிகாரம், அதிகாரப் பிரிவீடு எனும் அடிப்படையில் நீதி மன்றத்திற்கே உள்ளது என்பதை இவர்கள் தமது வாதத்தில் முன் வைத்துள்ளார்கள்.[/size]

[size=4]அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆதார விதி முறைகளை மீறுகின்ற விடத்து, அனைத்துலக சட்டங்களின் கீழ் வழங்கப்படும் விதிவிலக்குகள் அற்றுப் போகின்றன எனவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.[/size]

[size=4]இராசாங்கத் திணைக்களமானது முன்னர் சீன அரசுத் தலைவருக்கு. 'இராஜதந்திர விதிவிலக்கு' எனும் பாதுகாப்பை வழங்கிய போது, சீன நாட்டினை ஒரு பெரும் நட்பு நாடாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், தற்பொழுது இராஜபக்சவின் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இராஜதந்திர விதிவிலக்கு வழங்கும் மனுவில் எவ்வித சிறப்புக் குறிப்புமின்றி, வெளிநாட்டுக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டே இராஜபகசவிற்கு விதி விலக்கு வழங்கப்படுகின்றது என்று மட்டுமே கூறப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.[/size]

[size=4]இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த வழங்கின் மனுதாரரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும் சட்டத்தரணியுமான விசுவநாதன் ருத்ரகுமாரனும் அவர்களும் மற்றும் மனித உரிமைக்கும் இயற்கைச் சூழலுக்குமான 'ஸ்பீக்' (SPEAK) எனும் அமைப்பை வழக்கறிஞர் திரு. அலி அபாத் பேய்டன் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[/size]

[size=4]இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதுபற்றிய மேலதிக விபரங்களை அறிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும் தடுப்புக்குமான விவகார அமைச்சர் டிலக்சன் மொறிஸ் அவர்களுடன் d.morris@tgte.org தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]

colonel-Ramesh_seithy290612.jpg[/size]

[size=4]நாதம் ஊடகசேவை[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=4]சட்ட விலக்கு அளிக்கக்கூடாது என மனுத்தாக்கல் செய்த நாடு கடந்த அரசுக்கு நன்றிகள். இந்த மனு வெற்றியளிக்கட்டும்.[/size]

[size=4]போர்குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படல் வேண்டும். அரச தலைவர் என்பதற்காக விட்டுவைப்பதன் காரணமாக கொலைகள், இனவழிப்புக்கள் தொடரவே செய்கின்றன.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தவகையிலும் குற்றவாளிகள் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்ககூடாது

அதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்ந்தும் போராடவேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.