Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சி-அம்பலமாகும் உண்மைகள்...

Featured Replies

ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும்.

முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர்.

அம்பலமாகும் உண்மைகள்....

நன்றி நிதர்சனம்.கொம்

புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01

ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு.

ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள்,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது. அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு இப்படித்தான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.

ரஜீவ்காந்தி இலங்கைக்கு வந்த போது ஒரு சிங்கள சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது. வடக்கில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து உயிர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவை எதிர்த்து மேற்கே பாகிஸ்தானை எதிர்த்து தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா போராளிகளின் எதிர்ப்பு தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது. இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள். இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு பிரதமரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா? ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டர்h என அவர்கள் கறுவிக் கொண்டார்கள். புலிகளையும் ஜே.வி.pபயையும் அடக்குவதோடு ஜே.ஆர்க்கும் அவரைப்போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.

றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது. காஸ்மீரையும், சிக்கின்மையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர். ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும். அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை. அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர். அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர். றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயும் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாமியத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது. எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் கயோமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஸ்ரமான விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும். வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விடயம் இன்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக்கூடியவர்களாகவும

  • தொடங்கியவர்

புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 02

ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ விமலேஸ்வரன் ஸ

உமாமகேஸ்வரன் றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்த நேரத்தில் இலங்கையில் கோழி இறைச்சி ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர் அவரை வந்து சந்தித்தார். அவர் தன்னுடைய பெயர் அப்துல்லா (புனைபெயர்) என்றும் தான் மாலைதீவு பிரஜை என்று அறிமுகம் செய்து கொண்டார். உமாமகேஸ்வரன் முதலில் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளவில்லை. தான் ஒரு கோழிப்பண்ணை முதலாளி என்ற தொனியிலேதான் அவருடன் பேசினார். ஆனால் அவர் எனக்கு உங்களைத் தெரியும் நீங்கள் தான் உமாமகேஸ்வரன் என்ற போது உண்மையில் உமாமகேஸ்வரன் அதிர்ந்து விட்டார். தன்னைக் கொலை செய்ய அல்லது கடத்திச் செல்ல எதிரிகளால் அனுப்பப்பட்ட ஆளாக அவர் இருப்பார் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டு அவரது முகம் கறுத்துப்போனது. அதை அவதானித்த அப்துல்லா நண்பரே பயப்பட வேண்டாம் உங்களைச் சென்று சந்திக்கும்படி றோதான் என்னை அனுப்பியது என்று சொல்லி றோவுக்கும் அவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையைப் பற்றியும் சொன்னார். அதன்பின் உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை வந்தது. அப்துல்லா மாலைதீவு நிலைமைகளைப் பற்றியும் மாலைதீவில் ஆட்சி நடத்தும் கயும் ஒழுக்கமில்லாதவர் என்றும் மதுபானம் அருந்துவது உட்பட இஸ்லாத்துக்கு விரோதமான காரியங்களை செய்பவர் என்றும், அங்குள்ள மக்களுக்குச் சுதந்திரமில்லை. அங்கே ஜனநாயக ஆட்சி ஒன்றை அமைக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் உமாமகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டார். உமாமகேஸ்வரனுக்கு முதலில் ஆச்சரியமாகப் போய்விட்டது. உங்கள் நாட்டில் ஆட்சியமைக்க நான் எப்படி உதவி செய்ய முடியும் என்று அவர் கேட்க றோ உங்களுக்கு விசயத்தைச் சொல்லிவ்லலையா, உங்களிடம் பேசியிருப்பதாக என்னிடம் சொன்னார்களே. என்று அப்துல்லா திருப்பிச் சொன்னார். அப்போதுதான் உமாமகேஸ்வரனுக்கும் றோ சொன்ன தாக்குதல் திட்டம் அது தான் என்றும் புரிந்தது. கூடவே பயமும் வந்துவிட்டது. ஆயுதப் பயிற்சி விவகாரத்தில் தன்னைப் புறக்கணித்தது பரந்தன் ராஜன் தன்னுடைய அமைப்பை இரண்டாக உடைத்தது, தான் இறக்கிய ஆயுதங்களை முடக்கியது. என்று பலமுறை தன்னுடைய முதுகிலேயே குத்திய றோ எங்கு தன்னை பெரிய சிக்கலில் மாட்டிவிடுமோ என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். அப்துல்லா உங்களிடம் றோ அதிகாரிகள் மேற்கொண்டு பேசுவார்கள். உங்கள் சந்தேகங்களை அவர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். எங்களுடைய சந்திப்பின் ஞாபகர்த்தமாக எனது இந்தச் சிறிய பரிசை நீங்கள் மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு புத்தம் புதிய 'மெஸ்டா' காரை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார். இது நடந்த ஒரு வாரகாலத்தின்பின் றோ அதிகாரி ஒருவர் கொழும்பு வந்து உமாமகேஸ்வரனைச் சந்தித்து அடுத்த சந்திப்பு கேரளாவின் துறைமுக நகரமான கொச்சினில் நடைபெறும் என்றும் இந்த விபரம் வேறு ஒருவருக்கும் தெரிய வேணடாம் என்றும் குறிப்பாக றோவுக்கும், புளொட்டுக்கும் இடையிலான வழமையான தொடர்பாளரான பாரபுத்தருக்குக்கூட இது தெரியக்கூடாது என கேட்டுக்கொண்டார். பாலபுத்தர் நெருக்கமானவர் என்றாலும் ENDLF, EPRLF, TELO, TULF காரர்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது. இதனால் அவர் மூலம் இரகசியம் வெளியில் போகக்கூடும் என்று றோ அஞ்சியது.

அடுத்த சந்திப்புக்காக இம்முறை உமாமகேஸ்வரன் இந்திய இராணுவ விமானத்தில் செல்லவில்லை. சாதாரண இந்தியன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விhமன நிலையத்திற்கூடாகவே திருவானந்தபுரம் சென்றார். ஆனால் சொந்தப் பெயரில் அல்ல.

திருவானந்தபுரம் விமான நிலையத்தில் உமாமகேஸ்வரனை வரவேற்ற றோ அதிகாரிகள் தங்களது காரில் கொச்சினுக்கு அழைத்துச் சென்றார்கள். கொச்சின் துறைமுகத்தில் தரித்து நின்ற சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் 1987 ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி அந்த முக்கியமான சந்திப்பு நடந்தது. தாடிக்கார அப்துல்லா உமாமகேஸ்வரனுக்கு முன்பே அங்கு வந்திருந்தார். கூடவே சிங்கப்பூரிலிருந்து மற்றைய இரு மாலதீவுக்காரர்கள், இரண்டு றோ அதிகாரிகள் ஆகியோர் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முதலில் றோ அதிகாரியிடம் தனியாக சந்தித்த உமாமகேஸ்வரன் தனது அதிருப்தியை வெளிக்காட்டி தனக்கு அந்த விடயத்தில் அக்கறை இல்லாதது போல் காட்டிக் கொண்டார். உண்மையில் மகேஸ்வரனுக்கு இதில் ஈடுபட விருப்பம். ஆனால் விலை வைத்து றோவிடம் காரியத்தை சாதிக்க வேண்டும் என விரும்பினார். றோ அதிகாரிகள் முன்பு போல் இனி நடக்காது, நாங்கள் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்கின்றோம். இந்தக் காரியத்தை நீங்கள் நடத்தி முடிந்தால் மாலைதீவில் உள்ள முக்கிய தீவுகளில் இரண்டு தீவுகளே நீங்கள் தங்கியிருக்கவும், தளம் அமைத்து பயிற்சி எடுக்கவும் உங்களிற்கு ஏற்பாடு செய்து தருகின்றோம். அந்தத் தீவுகளில் வரும் வருமானத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளலாம் என்று உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை ஊட்ட முயன்றனர்.

எதற்காக நீங்கள் மாலைதீவு விகாரத்தில் இவ்வளவு அக்கறை எடுக்கின்றீர்கள் என்று உமாமகேஸ்வரன் அவர்களை திருப்பிக் கேட்டார்.

இந்தியா எவ்வளவு பெரிய நாடு, ராஜீவ்காந்தி எவ்வளவு பெரிய தலைவர், இது உங்களுடைய ஜே.ஆருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. அவைக்கு அதை புரிய வைக்க எங்களுக்கு ஒரு தளம் வேண்டும். தமிழ் நாட்டை முன்புபோல பயன்படுத்த முடியாது. அங்கே புலிகள் எல்லா இடத்திலேயும் ஊடுருவிவிட்டார்கள். ஜே.ஆர், ஜே.வி.பி, புலிகள் எல்லோருக்கும் பாடம் படிப்பிக்க வேண்டும். நாங்கள் சலி திட்டங்கள் வைத்திருக்கின்றோம். நீங்கள் மட்டும் இந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்தால் இன்றைக்கும் எங்களின் நம்பிக்கைக்குரிய நண்பராக உங்களை நினைத்து உங்களுக்கு வேண்டியதை நாங்கள் செய்து தருவோம். என்று தமது திட்டத்தை விளக்கினார்கள் றோ அதிகாரி.

உமாமகேஸ்வரன் றோவுடன் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே புளொட் நுவரெலியா மாவட்டத்தை எதிர்த்து ஜே.வி.பிக்கு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தது. மன்னார் மாவட்டம், செட்டிகுளம், முள்ளிக்குளம் பகுதியில் ஜே.வி.பியை எதிர்த்துப் போராட விஜயகுமாரதுங்காவின் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆயுதப்பயிற்சி அளித்து வந்ததும் றோவுக்குத் தெரியாது. ஏறத்தாள மூன்றுமணிநேரம் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில் மாலைதீவின் அப்துல் கயூமின் ஆட்சியை இராணுவ அதிரடி மூலம் கவிழ்ப்பது என்று இறுதி முடிவாகியது. உமாமகேஸ்வரன தன்னிடம் ஜோர்ச் கபாஸ் தலைமையிலான பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் (PKLP) பயிற்சி பெற்ற வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் மூலம் இந்தக்காரியத்தை திறம்பட செய்து முடிக்க முடியும் என்றும் தனக்குத் தேவை ஆயுதமும், பணமும், போக்குவரத்து வசதியும் தான் என்று கேட்டுக் கொண்டார். அது ஒன்றும் பிரச்சினை இல்லை எல்லா ஒழுங்குகளையும் நாங்கள் செய்து தருவோம். கொழும்பில் உங்களுக்கு நண்பர் அப்துல்லா ஒரு கோடி ரூபா இலங்கைக் காசு தருவார். காரியம் முடிந்ததும் 10 கோடி ரூபா இலங்கைக் காசு தருவோம். அடுத்த வாரம் ஆயுதங்கள் உங்கள் கைக்கு கிடைக்க ஏற்பாடு செய்கின்றோம். என்று சொன்ன றோ அதிகாரிகளுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. நாங்கள் தரும் ஆயுதங்களை நீங்கள் தமிழ் நாட்டில் வைத்திருக்கப் போகின்றீர்களா அல்லது உங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லப் போகின்றீர்களா? என்று அவர்கள் கேட்டனர்.

தமிழ் நாட்டில் வைத்திருந்து என்ன செய்வது, எங்களது பயிற்சி முகாம்கள் எல்லாம் இலங்கையில் தான் இருக்கின்றது. அதனால் அங்கு கொண்டு போவது தான் நல்லது என்று உமாமகேஸ்வரன் சொன்னார்.

அங்கே கொண்டு போவது ஆபத்தில்லையா. புலிகள் அவற்றை உங்களிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வீர்கள் என்று திருப்பிக் கேட்டனர் றோ அதிகாரிகள். அப்படி ஒருநாளும் நடக்காது மன்னார் மாவட்டம், முள்ளிக்குளம், செட்டிகுளம், முருங்கன் பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அங்கே நாங்கள் வடிவான பாதுகாப்பு முகாம்களை அமைத்திருக்கின்றோம். புலிகள் வந்து எம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு பதிலளித்தார் உமாமகேஸ்வரன். புலிகள் ஒருபோதும் உங்கள் பகுதிக்கு வந்ததில்லையோ. முருங்கன் பகுதியில் புலிகளுக்கும் உங்களுக்கும் மோதல் நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோமே என்று மீண்டும் றோ அதிகாரி ஒருவர் கேட்க அது ஒரு சிறிய சம்பவம் அடிக்கடி இப்படி நடப்பதில்லை. எப்போதாவது இப்படி வந்து எதிர்பாராத விதமாக சந்திக்கும் போது நடக்கும் மற்றப்படி அது எங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதி என்றார் உமாமகேஸ்வரன். அவரது பதிலைக் கேட்டு சிறிது நேரம் யோசித்த றோ அதிகாரிகள் புலிகள் உங்கள் பகுதிக்குள் வராமல் தடுக்க நாங்களும் ஒரு காரியம் செய்யலாம். அதாவது IPKF இன்னமும் உங்கள் பகுதிக்கு வரவில்லை. நாங்கள் உங்கள் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்படி அவர்களுக்குச் சொல்கின்றோம். அதன்மூலம் புலிகளின் சிறிய ஊடுருவலை தடுக்கலாம். அவர்களது இந்த யோசனை உமாமகேஸ்வரனுக்குப் பிடிக்கவில்லை. IPKF எங்கட பகுதிக்கு வருவது தேவையில்லை என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் வரும் போது எங்களுடன் கூட இருக்கும் ENDLF, EPRLF, TELO ஆட்களும் வருவார்கள். பிறகு காரியம் நடக்காது எல்லாம் குழம்பிப் போகும் என்றார். அதைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம். மிஸ்டர் உமாமகேஸ்வரன் 'IPKF' உங்களுடைய பகுதிக்கு வராவிட்டால் ஏதோ உங்களுக்கும் இந்தியாவிற்கும் சம்மந்தம் இருப்பதாக மற்றவர்களுக்குச் சந்தேகம் வரும். அதுதான் ஆபத்து LTTE யை மட்டுமல்ல மற்ற எந்தக் குழுக்களையும் உங்களுடைய பகுதிக்கு வரவிடாமல் செய்வது எங்கள் கருத்து என்று றோ அவருக்கு உறுதி தந்தது சரி IPKF வரட்டும். ஆனால் புளொட் முகாம்களுக்கோ உறுப்பினர்களுக்கோ எந்தப்பாதிப்பும் இல்லாதவிதத்தில் அவை நடந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர்களின் யோசனையை அவர் ஏற்றுக் கொண்டார். எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் IPKF யையும் இந்தியாவையும் எதிர்க்கின்ற மாதிரி நடந்து கொள்கின்றார்கள் என்று அவருக்கு ஆலோசனை கூறியது றோ.

நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் செய்த முதல் வேலை புலிகள் மீது தொடர்ந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடாத்தினால் புளொட் இந்திய இராணுவத்தை எதிர்த்துக் களத்தில் இறங்கும் என்று அறிக்கைவிட்டதுதான்.

தொடரும்...........

http://www.nitharsanam.com/?art=16503

  • தொடங்கியவர்

புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 03

ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ ஜயாசச்சி ஸ

கொச்சின் சந்திப்பு முடிந்து ஒரு சில நாட்களுக்குள் முள்ளிக்குளம், செட்டிகுளம், முருங்கன் பகுதியில் அதாவது புளொட் முகாம்கள் இருந்த பகுதிகள் இந்திய முற்றுகைக்குள் உள்ளாகின. அப்பகுதிகளை இணைக்கும் பிரதான பகுதிகளில் இந்திய இராணுவத் தடை அரண்கள் உருவாக்கப்பட்டன. இலங்கையில் இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டின் கரையோர நகரமான மண்டபத்துக்கு அருகே உள்ள தீவில் வைத்து றோ புளொட்டுக்கு ஆயுதம் வழங்கியது. ஏ.கே 47 ரக இந்தியத் தயாரிப்புத் தானியங்கித் துப்பாக்கிகள் 240, எல்.எம்.ஜி. ரக இயந்திரத் துப்பாக்கிகள் 24, எம்.எம்.ஜி. இயந்திரத் தப்பாக்கிகள் 04, 30 கலிபர் ரக துப்பாக்கிகள் 06, 50 கலிபர் ரக துப்பாக்கிகள் 04, ஐசுPபு7 என்கிற சிறுரக குறுகிய தூர ஏவுகணை 28, மோட்டார்கள் 04 உட்பட பெருந்தொகையான ரவைகள், குண்டுகள், செல்கள், கைக்குண்டுகள், வாக்கிரோக்கிகள் திசையறி கருவிகள் என்பனவும் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட அதிவேக விசைப்படகுகள் 03 என்பனவும் றோவால் புளொட்டிற்கு வழங்கப்பட்டது.

றோவின் ஆலோசனையின் பெயரில் இந்த ஆயுதங்களின் அரைவாசியை அந்தத் தீவில் பாதுகாப்பாக புதைத்து வைத்துவிட்டு மிகுதியை புளொட் இலங்கைக்கு எடுத்துச் சென்றது.

ஆயுதம் வந்த கையோடு உமாமகேஸ்வரன் செயலில் இறங்கினார். லெபனான் பயிற்சி பெற்ற நான்கு பேரின் தலைமையில் நான்கு தாக்குதல் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இத்தாக்குதல் குழுக்களுக்கு பயிற்சியளிப்பதற்காக வில்பத்து மற்றும் கற்பிட்டிப்பகுதிகளில் அமைந்திருந்த சிறு இராணுவ முகாம்களும், காவல் நிலைகளும் தாக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு புளொட் நடத்திய இந்தத் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் செய்ததாகவே சிறிலங்கா அரசு நினைத்துக் கொண்டது. (புளொட் குழு ஒரு புறத்தில் இந்தியாவை எதிர்பார்ப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை எதிர்த்துப் போராடுவதாக சொல்லிக் கொண்டது. ஆனால் லலித் அத்துலத் முதலியுடன் அது இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டது. ஜே.வி.பிக்கு எதிராகப் போராட விஜயகுமாரணதுங்காவின் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செட்டிகுளத்தில் இராணுவ பயிற்சி கொடுத்தது. அதேநேரம் ஜே.வி.பிக்கும் நுவரெலியாவில் வைத்து இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவை வாசகர்களின் குழப்பத்தைத் தவிர்க்க இங்கே குறிப்பிடப்படுகின்றது).

சிறிலங்கா இராணுவத்தின் மீதான தாக்குதல் நடத்திய நான்கு குழுக்களில் மிகத் திறம்பட செயற்பட்ட 3 குழுக்கள் மாலைதீவு இராணுவ நடவடிக்கைக்கு தெரிவு செய்யப்பட்டன. முதலில் இந்தக்குழு தலைவர்களிடமோ அல்லது அந்தக்குழுக்களின் இணைத் தலைவர்களிடமோ இந்த விடயம் சொல்லப்படவில்லை. முக்கியமான தாக்குதல் ஒன்றை நடாத்த பயிற்சி எடுப்பது என்றே சொல்லப்பட்டது.

றோவினால் ஆயுதம் வழங்கப்பட்ட இடமான மண்டபத்திற்கு அருகில் உள்ள தீவே பயிற்சிக்குரிய தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 3 குழுக்கள் அந்தத்தளத்தில் பாதுகாப்பாக நிலைகொண்டிருக்க மூன்றாவது குழு கடல்வழியாக வந்து தீவின் பிரதேசத்தில் தாக்குதல் நடாத்தி தீவைக் கைப்பற்றுவது போல் சுழற்சிமுறையில் பயிற்சியளிக்கப்பட்டது. உமாமகேஸ்வரனின் நேரடி மேற்பார்வையில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட இந்தப் பயிற்சியை றோ அதிகாரிகளும் அடிக்கடி வந்து பார்வையிட்டனர்.

அந்தத்தளத்தில் பயிற்சி எடுத்தவர்கள் சிறிலங்கா அரசின் காரைநகர் கடற்படைத் தளத்தையோ, அல்லது அதையொத்த வேறு தளத்தையோ தான் தாக்கப் போவதாக நினைத்துக் கொண்டார்கள். ஒரு மாத பயிற்சியின் பின்பே கழது;துஐலுவுர்;குளு; இரவுரகு;கும் தொலைத்தொடர்புக்குப் பொறுப்பான ஒருவருக்கும் விசயம் சொல்லப்பட்டது. அவர்கள் மூவரும் மாலைதீவு சென்று நிலமைகளை அவதானித்து ரெக்கி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்டுநாதயக்கா விமான நிலையத்தினூடாக அவர்கள் அடிக்கடி மாலைதீவு செல்லும் போது சிறிலங்கா அதிகாரிகளுக்கு சந்தேகம் வரலாம் என்ற காரணத்தினால் திருவானந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இந்தியக்கடவுச்சீட்டிலேயே அவர்கள் சென்றுவர ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

ஏற்கனவே இந்திய இராணுவத்துடனும், றோவுடனும் ஒட்டிக்கொண்டிருந்த அவர்களின் செல்லப்பிள்ளையான ENDLF இன் தலைவர்களை அழைத்து றோ அதிகாரிகள் பேசினார்கள்.

எல்.ரி.ரி.யும், புளொட்டும் ஒன்று சேர்ந்துவிடும் போலிருக்கிறது. இந்தியாவையும், இந்திய இராணுவத்தையும் எதிர்த்து உமாமகேஸ்வரன் விடும் அறிக்கைகள் புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றது. ஆவர்கள் இருவரும் சேர்ந்தால் உங்களுக்கு ஆபத்து. அதற்கு முன் எமாமகேஸ்வரனை கொலை செய்துவிட்டால் அவரின் விசுவாசிகள் தவிர மிச்சப்பேரை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தானே, எதற்காகப் பிரிந்திருக்க வேண்டும் என்று ENDLF தலைவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது. றோவின் உபதேசத்தில் மயங்கிய அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டனர். நீங்கள் இப்போதிலிருந்து அதற்கான முயற்சியில் இறங்குங்கள். ஆனால் நாங்கள் சொல்லும்வரை காரியத்தைச் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது.

உமாமகேஸ்வரனை ஒழிக்கும் முயற்சியில் ENDLF, புளொட்டில் இருந்த "வசந்தன்" என்பவரை அணுகியது. நூங்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும், நாங்கள் ஒன்று சேர்வதற்கும் புளொட்டில் உள்ளவர்கள் கஸ்ரட் அனுபவிப்பதற்கும் உமாமகேஸ்வரனே காரணம், அவரைத் தட்டிவிட்டால் நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இயங்கலாம் என்று வசந்தனுக்குச் சொல்லப்பட்டது.

புலிகள், புளொட்டின் முள்ளிக்குளம் முகாமை தாக்கிய போது பலியாகிப்போன இந்த வசந்தன் என்ற நபர், வெளியில் உமாமகேஸ்வரனது விசுவாசியாகக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் அவர் தீவிரமான "உமா" எதிர்ப்பாளர், புளொட் இரண்டாக உடைந்து சிதறிய போது ENDLF இலும் புளொட்டிலும் சேராமல் தமிழகத்தில் சிதறிப்போய் வாழ்ந்த உமாமகேஸ்வரன் எதிர்ப்பாளர் பலருக்கு புளொட்டின் சார்பில் தான் தமிழகத்தில் செய்த வாகனக்கடத்தல் வழிபற்றி நடவடிக்கைகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு இரகசியமாக ஆதரவழித்து வந்தார். இவருக்கு வயதும் அனுபவமும் குறைவு என்பதால் நிறைய பொறுப்பற்ற தனங்களும் இருந்தன.

இவர் ENDLF தன்னிடம் தெரிவித்த தகவலை வவுனியாவில் தங்கியிருந்த சகாவான சந்திரன் என்பவருக்குத் தெரிவிக்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இப்படிப்பட்ட விடயத்தை கடிதம் மூலம் தெரிவிப்பது எவ்வளவு ஆபத்தான விடயம் என்பது அவரது அறிவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதுவும் எழுதிய அந்தக் கடிதத்தை கோவை மாவட்டம் திருப்பூர் நகரத்தில் இருந்த உமாமகேஸ்வரன் ஆதரவாளர் ஒருவர் வீட்டில் தனது உடமைகளோடு தவறுதலாக வைத்துவிட்டுப் போய்விட்டார்.

தற்செயலாக ஒரு புத்தகமொன்றில் இருந்த அந்தக் கடிதத்தை கண்டெடுத்துப் படித்த அந்த திருப்பூர்காரர் அதிலிருந்த விடயத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அதை உடனடியாக உமாமகேஸ்வரனிடமும் சேர்ப்பித்தும் விட்டார்.

கடிதத்தைப் படித்த உமாமகேஸ்வரனுக்கு தலைகொள்ள முடியாத ஆத்திரம் வந்தது. உடனடியாக வசந்தனைப்பிடித்து தட்டிவிடலாம் என்று நினைத்தார். ஆனால் அப்படிச் செய்தால் இயக்கத்துக்குள் குழப்பம் வந்துவிடும்.ஆதனால் மாலைதீவு விவகாரம் கெட்டுவிடும் என்று அவருக்குத் தோன்றுகிறது.

ஆனால் வசந்தன் செயலில் முந்துவதற்குமுன் அவரது வெளித் தொடர்புகளை கட்டுப்படுத்தி அவரை முடக்குவதற்கு வெளிவேலைகளில் ஈடுபட்டிருந்த அவரை உடனடியாக முள்ளிக்குளம் முகாமுக்கு போகும்படி பணித்தார் உமாமகேஸ்வரன். அடுத்த நடவடிக்கையாக நுவரெலியாவில் ஜே.வி.பி இயக்கத்திற்கு பயிற்சி கொடுப்பதற்கான ஆயத்த வேலைகில் ஈடுபட்டிருந்த சங்கிலி என்ற கந்தசாமியை உடனே கொழும்பிற்கு வரும்படி உத்தரவிட்டார்.

சங்கிலியிடம் விசயத்தைச் சொன்னால் அவர் தனது பழைய பாணியில் நடந்து தலைமை விசுவாசத்தைக் காட்ட முற்பட்டால் அது இன்னமும் பெரிய பிரச்சினையாகி மாலைதீவு விவகாரத்தை கெடுத்துவிடும் என்பதால் நுவரெலியாவில் இருப்பது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று மட்டுமே சொல்லப்பட்டது.

உமாமகேஸ்வரனின் நோக்கம் சங்கிலியிடம் விசயத்தைச் சொல்லாமலே அவரை மள்ளிக்குளம் முகாமுக்கு அனுப்பி வைத்தாலே அவர் இருக்கிற பயத்தில் வசந்தன் அடங்கிவிடுவார் என்பதாகும்.

ஏற்கனவே முள்ளிக்குளத்துக்குப் போன வசந்தன் சங்கிலி அங்கு வரப்போவதை அறியாது உமாமகேஸ்வரன் சங்கிலியை வைத்து கொலைகாரப் படை ஒன்றை நுவரெலியாவில் உருவாக்குவதாக அங்கிருந்தவர்களிடம் இரகசியமாக பிரசாரம் செய்து வந்தார்.

இந்தச் சூழ்நிலையில் சங்கிலி அங்கெ போனபோது அங்கிருந்தவர்களுக்கு கிலி பிடிக்காத குறைதான். ஏல்லோரும் சங்கிலியை தங்களைத் தட்ட வந்த கொலைகாரனாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

தொடரும்........................

http://www.nitharsanam.com/?art=16504

  • தொடங்கியவர்

புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 04

ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ ஜயாசச்சி ஸ

உமாமகேஸ்வரன் கொலை செய்யப்படுவதற்கு பின்னணியில் நின்று தூபமிடுகின்ற சக்தி றோ என்பது வசந்தனுக்குத் தெரியாது. ஆதனால் உமாமகேஸ்வரனும் அதை அறியவில்லை. ENDLF ராஜனின் சதி வேலை என்றுதான் அவர் அதை நினைத்துக் கொண்டார்.

எனவே மாலைதீவுக்கான வேலைகள் எந்தவித தடங்களுமின்றி மும்முரமாக நடந்தன. தூக்குதல் குழுவினர் செல்வதற்கும், ஆயுதங்கள், தளபாடங்கள் கொண்டு செல்வதற்கும் வேண்டிய கப்பல் ஒன்று சிங்கப்பூரிலிருந்து வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தரித்து நின்றது. இன்னொரு கப்பல் இலங்கைக்கு மேற்கே சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் என்றும் அதிலேயே தாக்குதல் குழுவினர் தரை இறங்குவதற்கான படகுகள் இருக்குமென்றும் சொல்லப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து ஆயுதங்களுடன் புறப்படும் கப்பல் இந்தக் கப்பலுடன் இணையும் பொது படகுகளில் ஆயுதங்கள் பொருத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே தாக்குதல் குழுவில் ஒரு பகுதியினர் மண்டபத்திற்கு அண்மையிலிருந்த தீவில் தங்கியிருந்தனர். மறுபகுதியினர் முள்ளிக்குளம் பகுதியிலிருந்த PLOTE முகாமுக்கு அருகிலிருந்த சிறப்பு முகாமில் தங்கியிருந்தனர். விரைவில் அவர்களும் ஆயுதங்களுடன் மண்டபம் தீவுக்கு அனுப்பப்ட்டனர். 72 பேர் கொண்ட தாக்குதல் குழு புறப்படும் திகதியை எதிர்பார்த்து உமாமகேஸ்வரனின் தாக்குதலுக்காக காத்திருந்தது. உமாமகேஸ்வரன் றோவின் சமிக்ஞைக்காக காத்திருந்தார். நீண்டநாள் தாக்குதல் குழுவை மண்டபம் தீவில் தங்கவைப்பது இரகசியம் வெளியாக வழிவகுத்துவிடும் என்பது அவரது அச்சம். றோ தாக்குதல் முடிந்த கையோடு உமாமகேஸ்வரனை கொலை செய்ய ENDLF இன் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

இவ்வாறாக ஒரு வாரம் இழுத்தடிக்கப்பட்டதால் சலிப்படைந்த உமாமகேஸ்வரன் நுவரெலியாவிற்குச் சென்று ஜே.வி.பி தலைவர் றோகன விஜயவீராவையும் செயலாளர் உபதிஸ்ஸ சடநாயக்காவையும் சந்தித்துப் பேசினார். றோ தன்னை ஏமாற்றினால் ஜே.வி.பியின் உதவியோடு அவர்களுக்குப் பாடம் படிப்பிக்கலாம் என்று அவர் எண்ணினார். 6 மணிநேரம் ஜே.வி.பி தலைவர்களுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான சிறிலங்கா அரசியல்வாதிகள் அவர்கள் பின்னால் நிற்கும் காடையர்கள் ஆகியோரை இருபகுதியினரும் இணைந்து கொலை செய்வது உட்பட பல்வேறு முக்கியமான விடயங்கள் பேசப்பட்டு உடன்பாட்டுக்கு வரப்பட்டன. சங்கிலியை முள்ளிக்குளத்திற்கு அனுப்பியதால் தடைப்பட்டுப் போயிருந்த பயிற்சி விவகாரம் உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கையான வேறு ஒருவர் மூலம் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு உமாமகேஸ்வரன் நுவரெலியாவில் ஜே.வி.பியினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி பயிற்சிமுகாம் அமைப்பதற்கான காட்டுப் பிரதேசங்களையும் (உமாமகேஸ்வரன் ஏற்கனவே அப்பிரதேசத்தில் நில அளவையாளராக கடமையாற்றியவர்) பார்வையிட்டுக் கொண்டிருந்த பொது அவரின் கொழும்புத் தொலை தொடர்பாளர் - றோ அவசரமாக தங்களுடன் தொடர்பு கொள்ளச் சொன்னதாகத் தகவல் கொண்டு வந்திருந்தார்.

ஊடனடியாக கொழும்பு திரும்பிய அவர் றோவுடன் தொடர்பு கொண்ட போது மாலைதீவிற்குப் புறப்படுவதற்கான சமிக்ஞை கிடைத்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் இரண்டு மூன்று தடவையாக மண்டபம் தீவிலிருந்து ஆயுதங்களும் ஆட்களும் கொஞ்சம் கொஞ்சமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்த கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இரவு 11 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அல் அகமத் என்று போலிப் பெயர் எழுதப்பட்ட அந்தக் கப்பல் 72 பேரையும் ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அந்தக்கப்பல் இலங்கை இந்திய கடல் எல்லைகளைத் தாண்டி சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் வரை சிறிலங்கா கடற்படையினரின் இடையுறுக்கு அல்லது சோதனைக்கு உட்பட விடாமல் தடுப்பதற்கு றோவின் ஏற்பாட்டின் பெயரில் இந்தியக் கடற்படைக்கப்பல்கள் ரோந்து புரிந்தன.

சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்த மற்றக்கப்பலுக்கு ஆயுதங்களும், போராளிகளும் மாற்றப்பட்டனர். ஆந்தக் கப்பலில் இருந்த அதிவேக விசைப்படகுகளில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. இது இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட கப்பல் தனது கடமையை முடித்துக் கொண்டு தனது பெயரை மாற்றுவதற்காக மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பியது.

மற்றைய கப்பல் திட்டப்படி தனது பயணத்தைத் தொடர்ந்தது. மாலைதீவுக்கு 50 கிலோ மீற்றர் தூரத்தில் தாக்குதல்காரர்களையும், படகுகளையும் இறக்கிவிட்டு தானும் வழியை மாற்றிக் கொண்டு வேறிடம் சென்றுவிட்டது.

அந்தக் கப்பல் தாக்குதல்காரர்களை இறக்கிவிடும் போது அதிகாலை 1 மணி. ஆவர்கள் முதல் நாள் இரவு 11 மணியிலிருந்து தொடர்ந்து கடல் பிரயாணம் செய்ததில் களைப்புற்றிருந்தார்கள். நல்ல மழையும் காற்றும் வேறு அடித்துக் கொண்டிருந்தது.

அதிகாலை 2.30 மணி அல்லது 3 மணிக்குள் மாலைதீவிற்குள் பிரவேசித்தது. பெயருக்கிருந்த காவல்நிலைகளை வீழ்த்தி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, அவரை கைது செய்வது என்பது திட்டம்.

250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட 5 படகுகளையும் அவர்கள் அதிகபட்ச வேகத்துடன் இயக்கினார்கள். மணி 4 ஆகியும் மாலைதீவு வரவில்லை. காற்றிலும், மழையிலும் திசைமாறி மாலைதீவிலிருந்து 10 மணிநேரம் கூட ஓடிவிட்டார்கள். பின்பு தவறை உணர்ந்து திரும்பி வரும் போது காலை 5 மணியாகிவிட்டது. நிலம் வேறு வெளுத்துவிட்டது.

50 கலிபர் துப்பாக்கி பொருத்திய காவலரணிலிருந்த மாலைதீவு காவல் வீரர் தற்செயலாக கடற்கரையைப் பார்த்த போது திடு திடுப்பென ஆயுதங்களுடன் குழுவொன்று ஓடிவருவதைப் பாhத்ததும் திடுக்கிட்டுப் போய்விட்டார். நிலைமையின் பயங்கரத்தை உணர்ந்த அவர் கண் இமைக்கும் நேரத்தில் தனது துப்பாக்கியை அவர்களை நோக்கி இயக்க தாக்குதல் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தொலைத்தொடர்புக்கு பொறுப்பானவருமான 'வசந்தி' என்பவர் ஸ்தலத்திலேயே மூளை சிதறி பலியாகிவிட்டார்.

தக்குதல் குழுவினர் அதிர்ந்து போய் விட்டாலும் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டு முன்னேறி காவல்நிலைகளை வீழ்த்தி ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றிக்கொண்டனர். ஆனால் ஜனாதிபதி அங்கில்லை. அவரின் நல்ல காலம் அன்று அவர் அங்கு தங்காமல் அருகிலுள்ள வேறு ஒரு தீவுக்குச் சென்றிருந்தார். அடுத்து என்ன செய்வதென்று தாக்குதல் குழுவினருக்குத் தெரியவில்லை. அவர்களைவந்து சந்தித்து தாக்குதலின் போது இணைந்து கொள்வதாகச் சொன்ன மாலைதீவுக்காரர்கள் காலை 4 மணிவரை பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

கொழும்பிலிருந்த உமாமகேஸ்வரனுடன் வானொலித் தொடர்பு கொண்டு அவரின் ஆலோசனையைக் கேட்பதற்குக் கூட அவர்கள் கொண்டு வந்த வானொலி தொடர்புச் சாதனம் வேறு மழை, காற்று காரணமாக ஒழுங்காக இயங்கவில்லை.

எதைச் செய்வது எதைச் செய்யக்கூடாது என்ற வாய்த் தர்க்கத்தில் தாக்குதல் குழுவுக்குள்ளேயே இரண்டு பிரிவு உருவாகிவிட்டது.

தொலைத் தொடர்புக் கோபுரத்தைத் தகர்க்க வேண்டும் அல்லது அதனூடு செய்திகள் தெளிவாக வெளியேவராமல் தடுக்கும் இடையூறு அலைகளை ஒலிபரப்ப வேண்டும் என்றது ஒரு குழு. அதெல்லாம் தேவையில்லை மாலைதீவு முழுவதற்கும் மின்வழங்கும் பிரதான மின் வழங்கு நிலையத்தை தகர்த்தாலே போதும் என்றது மற்றைய குழு. இவர்கள் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மாலைதீவு ஜனாதிபதி தான் தங்கியிருந்த தீவிலிருந்து சர்வதேச உதவி கோரி வானெலியில் செய்தி அனுப்பிவிட்டார். சர்வதேச செய்தி நிறுவன செய்மதிகளுக்கு எட்டிய இந்தச் செய்தியை அவர்கள் உலகெங்கும் பரப்பினர்.

நல்ல முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்த றோவிற்கு தலையில் இடி விழுந்தால் போல் ஆகிவிட்டது. ராஜீவ்காந்தி பொறுக்க முடியாத ஆத்திரத்தில் றோ அதிகாரிகளை வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார். மாலைதீவின் நட்பு நாடான பாகிஸ்தானோ அல்லது சீனாவோ, அமெரிக்காவோ, வேறெந்த நாடோ படைகளை அனுப்பிவிட்டால் உண்மை வெளியாகி இந்திய பயங்கரவாதத்தைத்தூண்டும் நாடு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவதோடு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக மோசமான அவமானத்தைத் தான் சந்திக்க நேரும் என்றும் ராஜீவ்காந்தி மிகவும் பயந்தார்.

அதனால் மற்றவர்கள் முந்துவதற்கு முன் தான் முந்திக் கொண்டு இந்திய விமானப் படைப்பிரிவு ஒன்றையும், கடற்படைப் பிரிவு ஒன்றையும் அங்கே அனுப்பி வைத்தார். இதிலே வேடிக்கை என்னவென்றால் தாக்குதல் குழுவினரை பாதுகாப்பாக மாலைதீவிற்கு அனுப்பி வைக்க காவல்புரிந்த இந்தியக் கடற்படைக் கப்பல்களே அவர்களைக் கைது செய்ய அங்கே சென்றது.

இந்திய இராணுவம் உதவிக்கு வரும் செய்தி அறிந்ததும் தாக்குதல் குழுவினர் மாலைதீவு மந்திரிகள், அதிகாரிகள் என்று சிலரையும் பணயமாகப் பிடித்துக் கொண்டு மாலைதீவு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கினார்கள். இந்திய விமானப்படை விமானங்கள் கப்பலுக்கு சேதமேற்படுத்தி கடலில் மூழ்கவைத்து தாக்குதல்காரர்களை கைது செய்து பயணக்காரர்களை மீட்டனர். சதிப்புரட்சிக்கு முன் உமாமகேஸ்வரனால் இரகசியமாக மாலைதீவிற்கு அனுப்பி அங்கு தங்கவைக்கப்பட்ட 'ரமேஸ்' என்பவர் றோ அதிகாரிகள் மாலைதீவிற்கு நேரில் வந்து தங்களுடன் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு இந்திய இராணுவத்தைக் கொண்டு கொலை செய்துவிட்டு விடயம் தெரியாதவர்களையே கைது செய்ததாகவும் முக்கிய ஆயுதங்களையும் அவர்கள் கடலில் மூழ்கடித்துவிட்டதாகவும் தகவல் அனுப்பினார்.

உமாமகேஸ்வரனுக்கு இதை வைத்து தன்னை அழித்துவிடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த றோவுக்கும், ராஜீவ் காந்திக்கும் தகுந்த பாடம் புகட்டி தனது இயக்க உறுப்பினர்களை மீட்க அவர் எண்ணினார்.

ஆதற்காக இரண்டு காரியங்களை செய்ய அவர் உத்தேசித்தார். முதலாவது ராஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பயணம் வைப்பது. இரண்டாவது கொழும்பு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஒரு குழுவாக ஒரு பஸ்சுடன் சேர்த்து பணயம் வைப்பது.

தொடரும்.............................

http://www.nitharsanam.com/?art=16505

  • தொடங்கியவர்

புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 05

ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ ஜயாசச்சி ஸ

மாலைதீவிலிருந்து தப்பிவரும் தனது இயக்க உறுப்பினர்களை அவர்கள் வரும் கப்பலிருந்து பாதுகாப்பாக கரைசேர்ப்பதற்கு உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்டது. அதுவும் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் வருவதற்கு முன் அதைச் செய்ய வேண்டிய அவசரமும் ஏற்பட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து மிகுந்ததாகவே இருந்தது.

கப்பல் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்துவிட்டால் நிச்சயமாக இந்தியக்கடற்படையும், இலங்கைக்கடற்படையும் கூட்டுச் சேர்ந்து கப்பலையும் அதில் இருப்பவர்களையும் கைப்பற்றிவிடுவார்கள். றோ கதையை மாற்றி உமாமகேஸ்வரன் தான் குற்றவாளி என்று அடித்துச் சொல்லிவிடும் உன்ற பயம் உமாவுக்கு ஏற்பட்டது. முதலில் அவர் நினைத்தபடி ராஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைப்பது என்பது உடனடியாகச் சாத்தியப்படக்கூடிய விடயமாகத் தென்படவில்லை. ஆதனால் கொழும்பிலிருந்து கண்டிக்கோ, கிக்கடுவைக்கோ, அனுராதபுரத்திற்கோ செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை அவர்கள் செல்லும் பஸ்சுடன் சேர்த்துக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை முள்ளிக்குளம் பகுதிக்குக் கொண்டு சேர்க்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

அவ்வாறு அவர்கள் முள்ளிக்குளத்தில் கரை சேர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், இந்திய அமைதிப்படைக்கும் போக்குக் காட்டிவிட்டு அவர்களை இரகசியமாக நுவரெலியாவுக்குக் கொண்டு சென்று ஜே.வி.பி.யினருடன் தங்கவைக்கலாம் என்று அவர் எண்ணினார்..

எனவே உடனடியாக அவசர அவசரமாக கொழும்பில் வைத்து உல்லாசப் பயணிகளை கடத்துவதற்கு கடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டு திட்டம், ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கடத்தல் குழுவின் தலைவர்களாக மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மூவரில் ஒருவர் ஆயுதம் தரித்த 4 சகாக்களுடன் பஸ்சைக்கடத்தி நீர்கொழும்பிற்கு கொண்டு செல்வது மற்றவர் வேறு இரண்டு சகாக்களுடன் கடத்தல் நாடகம் முடிந்ததும் நீர்கொழும்பிலிருந்து சிலாபத்திற்கு கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தப்பிச் செல்வதற்கு 250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட இயந்திரப் படகுடன் காத்திருப்பது சிலாபத்தில் கரையேறும் குழுவை விரைந்து புத்தளத்திற்குக் கொண்டு சேர்க்க மூன்றாமவர் வாகனமொன்றுடன் அங்கு காத்திருப்பதென்றும் திட்டம் தீட்டப்பட்டது. கொழும்பிலிருந்து புளொட் வசிப்பிடங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பணய நாடகம் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனும், மாலைதீவு கப்பலுடனும் தொடர்பு கொள்வதற்குத் தொலைத் தொடர்பு சாதனமும், தொலைத் தொடர்பாளரும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பணய நாடகத்தின் போது பேச வேண்டிய பேச்சுக்கள், வைக்க வேண்டிய கோரிக்கைகள், எதிர்த்தரப்புப் பேச்சுக்களுக்கும், கேள்விகளுக்கும் பிடிகொடுக்காமல் அளிக்க வேண்டிய பதில்கள் என்பனவும் தயாரிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன.

உமாமகேஸ்வரன் இவ்வாறு பரபரப்பாகக் கொழும்பில் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவர் கொழும்பில் தங்கியிருக்க உதவி செய்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவருடமன் தொடர்பு கொண்டு மாலைதீவு தாக்குதலை புளொட்தான் செய்ததென்று தனக்குத் தெரியும் என்றும் சதிப்புரட்சியாளர்கள் வரும் கப்பலை இலங்கைக்கடல் எல்லைக்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் கொழும்பில் இருந்து கொண்டு அவர்களை மீட்க எந்தக் காரியமும் செய்யக்கூடாதென்றும் அப்படிச் செய்தால் அது தங்களைப் பெரிய இக்கட்டில் மாட்டிவிடும் என்றும் அதனால் அவரை கைது செய்ய வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

உமாமகேஸ்வரனது நிலை ஆப்பிழுத்த குரங்கின் கதியாகிவிட்டது. அத்துலத்முதலி இப்படிச் செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் இதை கண்டும் காணாமல் இருந்துவிடுவார். அதாவது பெயருக்கு மற்றவர்களின் பார்வைக்காக எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று தான் உமா நினைத்திருந்தார். ஏனென்றால் அடுத்த ஜனாதிபதியாக தான் வருவதற்காக லலித் உமாவைக் கொண்டு திரை மறைவில் சில காரியங்களைச் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்காக உமாவுடன் கலந்து பேசியுமிருந்தார்.

தோல்விக்குமேல் தோல்வி ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம் அடுத்து என்ன செய்வது திட்டமிட்டபடி பயண நாடகத்தை அரசாங்கம் எதிர்த்தாலும் துணிந்து நடத்தி மாலைதீவு சகாக்களை மீட்பதா? அல்லது அரசாங்கத்திற்கு சங்கடமோ பாதிப்போ ஏற்படாத வகையில் வேறு ஏதாவது செய்வதா என்று உமாமகேஸ்வரன் ஊசலாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மாலைதீவு கடல் எல்லைக்குள் வைத்தே தமது விமானப்படையையும், கடற் படையையும் கொண்டு கப்பலைத் தாக்கி நீரில் மூழ்கும் நிலையை உருவாக்கி தான் அனுப்பிய சதிபுரட்சியாளர்களை தானே கைது செய்து தன்னை ஜனநாயக காவலனாக காட்டிக்கொண்டது.

இது ஒரு வகையில் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பெரும் நெருக்கடியை தணித்தது. உடனடியாக அவசரப்பட்டு காரியம் எதையும் செய்து மூக்குடைபட்டுப் போகாமல் நன்கு ஆற அமரத்திட்டமிட்டு அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மீட்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை என்று வரும் பொது தன்னை முதல் குற்றவாளியாக்கிவிட்டால் என்ன செய்வதென்றும் அவருக்குப் பயம் வந்தது. தன்னைக் குற்றவாளியாக்கினால் தன் மூலம் உண்மையான சூத்திரதாரிகள் தாங்கள்தான் என்பதும் வெளிவந்துவிடும் என்பதால் இந்தியா அப்படிச் செய்யாது என்றும் அவர் நம்பினார்.

எதற்கும் தன்னுடைய வதிவிடத்தை இலங்கைக்கு வெளியே வேறு ஒரு நாட்டிற்கு மாற்றி யாருக்கும் தெரியாமல் அங்கே தங்கியிருந்து கொண்டு செயல்படுவது என்று நல்லது என்று அவருக்குத் தோன்றியது. சிங்கப்பூர், பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டில் இருப்பதாக மற்றவர்கள் நம்பும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டம்.

இதன் முதல் கட்டமாக தனது பலஸ்தீன நண்பர்களடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நான் தங்கியிருக்க ஏற்பாடு செய்து தருமாறும் அங்கு தான் இஸ்லாமிய வர்த்தகர் போல் ஏதாவது தொழில்துறையில் முதலீடு செய்து கொண்டு தங்கியிருந்து தனது அடுத்த நடவடிக்கையை தொடரப் போவதாகவும் இந்தியாவின் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரஜீவின் பிள்ளைகளை கடத்த அதை அவர் அவருக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பாகிஸ்தானிலிருந்து உதவக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவரையும் தனக்கு அறிமுகம் செய்யுமாறு கோரியிருந்தார். அவர்களும் மிக விரைவிலேயே செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தனர்.

தான் கராச்சிக்கு தனது வதிவிடத்தை மாற்றப் போகும் விடயத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காகத் தான் சிங்கப்பூருக்குப் போய் தங்கியிருக்கப் போவதாக ஒரு வதந்தியை வெளியில் பரவவிட்டார். அவரது மிக நெருங்கிய நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களாக இருந்த சக்திவேல், ராபின் (சமீபத்தில் சுவிஸில் கொலை செய்யப்பட்டவர்.) ஆகிய இருவருக்கு மட்டும் தான் அவர் கராச்சி செல்லும் விடயம் தெரியும்.

மற்ற அனைவரும் உமா சிங்கப்பூருக்குப் போவதாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் பலஸ்தீன தொடர்பாளியிடமிருந்து இருந்து கராச்சியில் அவர் தங்கியிருக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதென்றும் அங்கே தங்களுடைய நண்பரான பாருக் தாதாவை தொடர்பு கொள்ளும்படியும் அவர் உமாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்றும் உடனடியாக அவரை தொடர்பு கொள்ளுமாறும் தகவல் வந்தது. உமாமகேஸ்வரன் காலம்கடத்தாது விரைந்து கராச்சிக்குச் செல்ல போலிப் பாஸ்போட் விசாவுக்கும், விமானடிக்கற்றுக்கும் ஒழுங்கு செய்தார். ரஜீவ்காந்திக்கும், றோவுக்கும் விரைவில் பாடம் படிப்பிக்கின்றேன் என்று அவர் கறுவிக் கொண்டார். ஆனால் பாவம் அவர் கராச்சியில் சென்று சந்திக்கப் போகின்ற பாருக் தாதா றோவினுடைய ஆளென்பது அவருக்குத் தெரியாது.

மாறுவேடத்தில் பாகிஸ்தான் நோக்கி உமாவின் பயணம்

தொடரும்………….

முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர்.

http://www.nitharsanam.com/?art=16506

இப்பத்தான் எல்லாம் சந்தைக்கு வருகுது.

தொடரட்டும.; தொடரட்டும்.

அறிந்து கொள்வோம்.

:roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யப்பாஆஆ...இப்படியெல்லாம் நடந்ததா....

சரியான ஆதாரங்கள் இருக்குமானால் மாலைதீவு அரசாங்கம் 'றோ'வினை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்து வரலாம்.

தாயக விடிவுக்காய் போராட களம் இறங்கிய தமிழ் இளைஞர்கள் தூரநோக்கற்ற உமா போன்ற தலைவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டது வேதனையளிக்கிறது.

போராட்டம் என்று வரும்போது அரசியல் செய்யத்தான் வேண்டும், அதற்காக இப்படியா- JVPக்கு பயிற்சி அளிப்பது, லலித்தோடு கூட்டுவைப்பது.

கற்பனை செய்து பார்க்கிறேன் - அன்று மாலைதீவு கைப்பற்றப்பட்டிருந்தால்.........

  • கருத்துக்கள உறவுகள்

"றோ"வின் சதி என்பது மிகப் பயங்கரமானது. உதவி செய்பவர்களையே முதில் நின்று குத்தி கொல்லும் பயங்கரமானது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக புறப்பட்ட இளைஞர்களை தூரநோக்கற்ற, பணத்திற்காக அலையும் ஆட்களை தலைவர்களாக்கி இளைஞர்களின் உயிரைக் காவு பண்ணியது.

இந்த வலைக்குள் சிக்காதவர் எம் தலைவர் தாம். இவர்களின் சதிகளை புரிந்தபடியால் தான் அக்காலத்திலேயே எதிர்நடவடிக்கைள் மூலம் தமிழரின் கைகளைப் பலப்படுத்தி எம் விடுதலைக்கு நாம் போராட வேண்டும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்.

இப்படியான வெளிக்கொண்டுவரும் ஆக்கங்கள் மாற்று இயக்கங்கள் ஏன் தடை செய்யப்பட்டன என்பது முதல் பல சூழ்ச்சிகளை எப்படி தலைவர் அடையாளம் கண உதவியது என்பதை வெளிப்படுத்தும்

இப்போது கூட ஏதும் சதிகள் தீட்டப்படலாம். அவற்றை முறியடிக்க வேண்டுமெனில் புத்திசாதூரியத்துடன் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

றோ நாய்களினால் எமது தாயகப்போராட்டத்தில் குழப்பம் ஏற்படவைத்து பல இளைஞர்களின் வாழ்க்கைகளினைத் திசைமாறச் செய்தது. பல எட்டப்பர்களினை இந்த நாய் நிறுவனம் தான் உருவாக்கியது. அகிம்சை அகிம்சை என்று சொல்லும் இந்த நாட்டினைச் சேர்ந்தவர்களினால் தான் வயதுபோன கிழவிகளும், குழந்தைகளும் ஈழத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பதற்கு ஏற்ப மே மாதம் 91ல் பலர் இறப்புக்குக்காரணமானவனுக்கு உரிய தண்டனை கிடைத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்,

இங்குப் போடும்போது, எழுத்துக்களைக் கவனிக்கவும். ஆங்கிலத்தில் வரவேண்டியவற்றை மாற்றியிடவும்.

தங்கள் சேவைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

6,7,8ம் பாகத்தினை இங்கே பார்க்கவும்.

http://www.nitharsanam.com/?art=16601

http://www.nitharsanam.com/?art=16602

http://www.nitharsanam.com/?art=16603

  • கருத்துக்கள உறவுகள்

'உலகத்திலே அதிகளவு அகிம்சையைப்பற்றிப்பேசுபவர்

அதுதானே நம் முன்னோர்கள் சொன்னார்கள் வயித்துவலிய நம்பினாலும்........... நம்பாதை எண்டு கந்தப்பண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

9,10ம் பாகத்தினை இங்கே பார்க்கவும்.

http://www.nitharsanam.com/?art=16853

http://www.nitharsanam.com/?art=16854

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.