Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் -பகுதி 1 - 3 (வருணகுலத்தான் பார்வையில்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

V.pirapakaran-203x300.jpg

[size=4]பகுதி 1[/size]

[size=4]1967ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட அரசியல் இலக்கின்றி சிங்கள காவற்படைகளையும் ஆயுதப்படைகளையும் தாக்கும் முயற்சியில் வெடிகுண்டுகளை செய்வது துப்பாக்கிகளை சேகரிப்பதுஈழத்தமிழரின் சுயஆட்சிக்கான சித்தாந்தங்களை அலசுவது என இரகசியஇராணுவ குழுவாக உருவாகிக்கொண்டிருந்த பெரியசோதி தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்த மாணவனான பிரபாகரனிற்கும் 1970மே 27இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அதனைத்தொடர்ந்து இலங்கையை சிங்களபௌத்த குடியரசாக மாற்றும் சிறிமாவோஅரசாங்கத்தின் முயற்சியும் பெரும் சீற்றத்தை உண்டாக்கி இருந்தது. இந்நிலையே கொள்கைரீதியான மாற்றங்களை இவர்களிடத்தே ஏற்படுத்தி புதியவழியில் சிந்திக்கதூண்டியது.[/size]

[size=4]V.pirapakaran.jpg[/size]

[size=4]வல்வெட்டித்துறையில் அப்பாவிப்பொதுமக்களை தேவையின்றி தாக்கும் சிங்களப்படைகளை திருப்பித்தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இவர்களின் இலக்கு தமிழ் என்னும் மொழிஉணர்வின் ஊடாக ஈழத்தமிழரின் இருப்பிற்கான அரசியல் அபிலாசைகளை நோக்கித்திரும்பியது. இதன் காரணமாக வல்வெட்டித்துறை என்ற சமூக வட்டத்தைவிட்டு ஈழத்தமிழரின் உரிமையை பெறுவதற்கு ஆயுதப்போராட்டமே ஒரேவழி என்பதை வெறுமனே கொள்கைரீதியாக அல்லாமல் நடைமுறைரீதியாக செயற்படுத்த முனைந்தனர்.[/size]

[size=4]இந்நிலையிலேயே 1971 மார்ச் 11 ந்திகதி யாழ்ப்பாணம் பிரதான வீதியின் ‘பிறிமியர் கபே’யின் டிஸ்கோ நடனஅரங்கை திறந்து வைக்கவந்த மேயர் துரையப்பா மீது நடந்த தாக்குதல் முயற்சியில் அவர் தப்பிக் கொண்டார். அவருடைய கார் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்த இத்தாக்கு தலை திரு.பொன்.சிவகுமாரன் திரு.பொன்.சத்தியசீலன் மற்றும் அவர்களது நண்பரான சத்தி என்பவர்களே திட்டமிட்டு நேரம்பார்த்து நடத்தியிருந்தனர்.[/size]

[size=4]இவர்களுடன் இணைந்திருந்த ஞானமூர்த்தி சோதிலிங்கம் எனப்பட்ட பெரியசோதி இத்தாக்குதலிற்கான வெடிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான பணத்தினை வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபல தொழிலதி பரான திரு.கா.வடிவேலிடம் பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பி டத்தக்கது. இத்தாக்குதலைத் தொடர்ந்து பொன்.சிவகுமாரனும் அரியரத்தினமும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.[/size]

[size=4]sivakuman-paddu.jpg[/size]

[size=4]1968 யூலையில் நடந்த சமூக விடுதலைப்போராட்டமான மாவிட்டபுரம் ஆலயப்பிரவேசகாலத்தில் வல்வெட்டித்துறைக்கு வந்து தம்முடன் இணைந்து கொண்டதுடன் சிங்களஆயுதப்படைகளிற்கு எதிரான புரட்சிகர இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்ட தமது அன்பிற்குரிய நண்பன் பொன்.சிவகுமாரனின் கைது நடேசுதாசன் குழுவினருக்கு கடும்சீற்றத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக பொன்.சிவகுமாரனை காட்டிக்கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட கோண்டாவிலைச் சேர்ந்த தாடித்தங்கராசா மீது இவர்களின் கவனம் திரும்பியது.[/size]

[size=4]1948இல் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே சிங்கள அரசியல்வாதிகளினால் தமிழினப்புறக்கணிப்பு திட்டமிட்டு பல்வேறு வடிவங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் இனரீதியான எதிர் தாக்கம் ஆயுதரீதியாக தமிழ்மக்களிடம் தோற்றம் பெறவில்லை என்றே கூறலாம். 1950 முதல் அரசபடைகளும் போர்க்குணமிக்க வல்வெட்டித்துறை மக்களும் தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருந்தனர். மட்டக்களப்பு பெரியநீலா வணையிலும் 1958 இல் அரசபடைகளுடன் மக்கள் ஒருமுறை மோதிக் கொண்டனர். எனினும் இவைகள் யாவும் திட்டமிட்டரீதியாகவன்றி உணர்ச்சி வசப்பட்ட மக்களின் உடனடியான கோபாவேசத் தாக்குதல்களாகவே அமைந்திருந்தன.[/size]

[size=4]V.Nadesuthasan-Sinnasothi.jpg[/size]

[size=4]1970 யூலை 13 ந்திகதி உரும்பிராயில் கலாச்சார உதவிஅமைச்சர் சோமவீர சந்திரசிறியின் காருக்கு அதிலும் குறிப்பாக கூறினால் கார்ரயரின் கீழே சாதாரண கையெறிகுண்டினை சாதுரியமாக வைத்து கார்நகரும் போது ஏற்படும் அழுத்தத்தினால் குண்டினை வெடிக்கச்செய்த பொன்.சிவகுமாரன் மற்றும் பட்டு எனும் ஞானமூர்த்தி ஆனந்தக்குமரேசன் என்பவர்களின் செயல் அன்றையநாளில் அசாதாரணமானதே.[/size]

[size=4]இதுபோலவே 1971 மார்ச்சில் முன்கூறிய பிறிமியர் கபேக்கு வெளியில் நடந்த குண்டுவெடிப்பிலும் கெற்புடன் இணைந்த டைனமெற்றினை திரியினூடாக பரவும் நெருப்பின் மூலம் சிலநிமிட இடைவெளியில் வெடிக்கச்செய்த நிபுணத்துவமும் கூட அரசியல் நோக்கம் கொண்டமுயற்சியே. எனினும் மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளிலும் ஆளில்லாத வெறுமையான கார்களிலேயே குண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டிருந்தன.[/size]

[size=4]ஆனால் தாடித்தங்கராசாவின் மீதானதாக்குதலில் நேரடியாகவே அவர் குறிவைக்கப்பட்டார். 1970யூலையில் உருவாக்கப்பட்ட இலங்கைக்குடியரசு அரசியலமைப்பு நிர்ணயசபையில் ஈழத்தமிழ்மக்களின் அனைத்துகட்சிகளின் சார்பில் தமிழர்கூட்டணியினரால் ஒருமுகமாக கொண்டுவரப்பட்ட ‘வல்வைத் தீர்மானங்கள்’ இன் நிராகரிப்பிற்கு காரணமாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவரும் ஈழத்தமிழர்களினால் துரோகி என வர்ணிக்கப்பட்டவருமான நல்லூர் பாராளுமன்ற உறுப்பினரான திரு.அருளம் பலத்தின் நெருங்கிய கையாளாகவே தாடித்தங்கராசா அன்று செயற்பட்டு வந்தார். அத்துடன் வாகனத்தரகர் என்ற போர்வையில் பல சமூகவிரோத செயல்களிலும் பொலிசாரின் உதவியுடன் இவர் ஈடுபட்டுவந்தார்.[/size]

[size=4]முதலாவது நேரடியான தாக்குதல் என்பதால் இலக்கினை தாக்குதல் என்பதைவிட தாக்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு தப்புதல் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவை போராளிகளிற்கு அன்று ஏற்பட்டிருந்தது. காரணம் வல்வெட்டித்துறையிலிருந்து கோண்டாவிலிற்கு சென்று பல நாட்க ளாக தாடியின் நடமாட்டங்களை அவதானித்தபோதும் அன்றைய நிலையில் கோண்டாவிலில் வைத்து தங்கராசாவை தாக்கிவிட்டு தப்பிவருவது கடின மான பணியென்பதைப் புரிந்துகொண்டனர். ஆயுதப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு அற்ற அக்காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து பிறிதொரு கிராமத்திற்கு சென்று அக்கிராமத்தவரையே தாக்கும்போது அல்லது தாக்கிவிட்டு தப்பும்போது ஏதுமறியா அப்பாவிப்பொதுமக்களுடன் ஏற்படும் தேவையற்ற மோதலைத் தவிர்க்க வேண்டியது முதன் நிலைக்காரணமானது.[/size]

[size=4]அதுபோலவே தமிழ்இன உரிமைகளை நிலை நிறுத்துவதற்காக இரகசிய ஆயுதக்குழுக்களுடன் தமிழ்மாணவர் பேரவை தொடர்புகளை கொண்டிருந்த போதும் வௌ;வேறு ஊர்களிலும் சமூகங்களிலும் உருவாகி இருந்த தீவிரவாத இளைஞர்களை சத்தியசீலன் மட்டுமே இணைத்து அவர்களின் ஒரேயொரு தொடர்பாளராக விளங்கினார். இந்நிலையில் சிவகுமாரனின் கைதுடன் யாழ்ப்பாணத்தை விட்டுவெளியேறிச் சென்றிருந்த சத்தியசீலனின் ஒத்துழைப்பையும் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது.[/size]

[size=4]இதனால் எந்தநிலையிலும் பொலிசாரின் உதவியை பெற்றுக்கொள்ளும் தங்கராசாவை அவரது கிராமத்திற்கு வெளியில்வைத்து தாக்குவதென முடிவாயிற்று. இந்நிலையிலேயே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் தாடித் தங்கராசா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்நிதி கோவிலிற்கு வருகின்றார் என்பதை அறிந்துகொண்டனர். மாணவர்பேரவையின் தீவிரஆதரவாளராக விளங்கிய CTB மணியம் என்பவர் கொடுத்ததகவலின் மூலம் இதனை இவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.[/size]

[size=4]valliamman-001.jpg[/size]

[size=4]இதனைத் தொடாந்து 1971 மார்ச் மாதத்தின் பின்னாட்களில் வந்த வெள்ளிக்கிழமை அன்று இரவும்பகலும் உரசிக்கொள்ளும் மாலை நேரத்தின் மெல்லிய இருட்டொளியில் தங்கராசாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கோவிலின் கிழக்குப்புறமாக சின்னச்சோதியும் ஜெயபாலும் மேற்க்குபுறமாக நடேசுதாசனும் மோகனும் குறிவைத்து காத்திருந்தனர். இவர்களின் எதிர்பார்பிற்கு ஏற்றார்ப்போல் கோவிலின் பின்வீதியில் குறித்த வளையத்தினுள் வைத்து நடேசுதாசனால் தாக்குதல் நடத்தப்பட்டது. இடது முழங்கைக்கு மேல் குண்டடிப்பட்ட காயத்துடன் ஓடிய தங்கராசா கோயில் வழிபாட்டிற்கு வந்த மக்களுடன் ஒன்றாக கலந்துவிடவே அத்துடன் தாக்குதல் நிறுத்தப்பட்டது.[/size]

[size=4]இந்த வரலாற்றுத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோடிகளான திரு.நடேசுதாசன் சின்னச்சோதி ஜெயபால் மற்றும் மோகன் என்போர் நேரடியாக கலந்து கொண்டனர். எனினும் அத்தாக்குதலின் முன்பும் பின்புமான பல செயற்பாடுகளில் குறிப்பாக இன்றைய இராணுவ வார்த்தைகளில் கூறினால் ஒரு தாக்குதலின் மிகஇன்றியமையாத செயற்பாடான பின்கள வேலைகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]நாற்பதுவருடங்கள் நீண்ட அவரது போராட்டப்பாதையில் தாக்குதலணியின் ஓர்அங்கமாக அவர் கலந்துகொண்ட முதலாவது சரித்திரப்பிரசித்தி பெற்ற தாக்குதல் இது வேயாகும். இத்தாக்குதலில் முன்னின்ற திரு.நடேசுதாசன் தாடித்தங்க ராசாவினால் அடையாளம் காணப்பட்டதனால் பொலிசாரின் கைதில் இருந்து தப்புவதற்காக தனது பகிரங்க நடமாட்டத்தை தவிர்த்து தனது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தார்.[/size]

[size=4]தொடரும்…[/size]

[size=4]http://tamil24news.com/news/?p=1531[/size]

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

Thalaiva520-300x234.jpg

[size=4]பகுதி 2[/size]

[size=4]பொலிஸ் உளவாளியாகவும் அன்று சிங்கள அரசின் அடிவருடியாகவும் காணப்பட்ட நல்லூர் பாரளுமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் ஏவலனாகவும் செயற்பட்ட தாடித்தங்கராசாவின் மீது மேற்க்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் தமிழின விடுதலைப்போராட்ட வரலாற்றில் இனத்துரோகிகள் மற்றும் காட்டிக்கோடுப்போர் மீதான முதலாவது நேரடித்தாக்குதலாக வரலாற்றில் தன்னைப்பதிவு செய்துகொண்டது. அத்துடன் எமதுசமூகத்தில் கட்டற்று உலவிய தாடித்தங்கராசா போன்ற ஏனைய சமூகவிரோதிகளை இத்தாக்குதல் உயிர்ப்பயத்தில் ஆழ்ந்திவிடவே வீறுகொண்ட போராளிகள் தமது அடுத்தகட்ட முயற்சியை ஆரம்பித்தனர்.[/size]

[size=4]* 1971இல் கோண்டாவிலுக்கு சென்று தாடித்தங்கராசாவை தாக்குவது கடினமென கருதப்பட்டபோதும் காலமாற்றத்தின் விரைவான வளர்சியினால் இறுதியாக 04.01.1978 கோண்டாவிலில் தாடித்தங்கராசா அவரது சொந்தவீட்டில் வைத்தே நடேசுதாசன் குட்டிமணி தங்கத்துரை என்போரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.[/size]

[size=4]அல்பிரட் துரையப்பா தாடித்தங்கராசா எனத்தொடர்ந்த போராளிகளின் தாக்குதல்கள் சிங்கள அரசபடைகளிற்கு எதிரான தாக்குதல்களாக மாற்றக்கூடிய உத்வேகத்தை கொடுக்கும் நிகழ்வுகள் தென்னிலங்கையிலும் 1971 மார்ச் ஏப்ரல் மாதங்களில் உருவாகியிருந்தன. 1971 மார்ச் 8 ந்திகதி கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜேவிபியினர் குண்டு வீசித்தாக்கினர். இதனால் ஆத்திரம்கொண்ட சிறிமாவோஅரசு ஜேவிபி யினரை தடைசெய்ததுடன் நாட்டில் அவசரகால நிலையினையும் பிரகடனப்படுத்தினர். அத்துடன் ஜேவிபி உடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் சிங்கள இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.[/size]

[size=4]பல்கலைக்கழக மாணவர்களும் கைதுசெய்யப்பட்ட நிலையில் பேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தில் பாரியகுண்டொன்று வெடித்து பெரும் சேதமும் ஏற்பட்டது. இதன் தொடராக தீவுமுழுவதும் பெரும்குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டன. இவ்விடைக்காலத்தில்தான் முன்கூறிய இரண்டு தாக்குதல் முயற்சிகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறின. முயற்சி என்னும்வகையில் இவைகள் வெற்றியான போதும் இரண்டு நிகழ்வுகளிலும் குறிப்பிட்ட இலக்குகளுக்கு ஆளானவர்கள் உயிருடன் தப்பியிருந்தனர். இந்நிலையில் எதையும் மிகநுணுக்கமாக சிந்திக்கும் தங்கத்துரை தமது அடுத்தகட்ட நகர்வினை காலத்துடன் இணைந்து செயற்படுத்த ஆரம்பித்தார்.[/size]

[size=4]Thangathurai-Kuddimani.jpg[/size]

[size=4]ஜேவிபியினரின் அமெரிக்கதூதரக தாக்குதல் முயற்சியின் சிலநாட்களின் பின் 1971 மார்ச் 12 ந்திகதி அம்பாறை மாவட்ட உகணை யில் அதன் தலைவர் ரோகணவிஜயவீரா கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவத் தினைத் தொடர்ந்து ஆத்திரம் கொண்ட ஜேவிபியினரால் தாக்குதல்கள் எக்கணமும் நிகழ்த்தப்படலாம் எனும் பரபரப்பான சூழ்நிலை எங்கும் காணப்பட்டது. இத்தகைய நேரத்திலேயே சிங்கள ஆயுதப்படைகளை தாக்குவது என்ற தனது நெடுநாளைய கனவை செயலாக்க தங்கத்துரை தீர்மானித்தார். எனினும் முழுமையான ஒருகாவல்நிலையத்தை உடனடியாக தாக்குவதற்கு வேண்டிய ஆட்பலமோ ஆயுதபலமோ அற்றநிலையில் வீதிரோந்து வரும் சிங்களப் படைகளை தாக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் எவ்வித நேரக்கட்டுப்பாடுமின்றி நினைத்தநேரத்தில் எல்லாம் திடீர்திடீர் என்று தமது காவல்நிலையங்களை விட்டு பொலிஸார் வெளியேறுவதால் திட்டமிட்டு நேரம்பார்த்து அவர்களைத் தாக்குவது கடினமானது எனப்புரிந்து கொண்டார். ஆனால் இராணுவமோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலாலி இராணுமுகாமிற்கும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமிற்கும் சென்றுவருவது அன்றாட நிகழ்சியாதலால் அத்தகைய நேரம் ஒன்றில் அவர்களின் ஜீப்பினைத் தாக்குவது என முடிவெடுத்தார்.[/size]

[size=4]1971 ஏப்ரல் மாதம் 05 ந்தாம் திகதி அதிகாலை 5மணிக்கு வெள்ளவாயா பொலிஸ்நிலையம் ஜேவிபியினரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடுமுழுக்க பதட்டநிலைமை அதிகரித்தது. காவல்நிலையங்கள் யாவும் உசார்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டன. ஏனைய பொலிஸ் நிலையங்களும் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என்னும் நிலையில் அன்று மாலை 6மணிக்கு நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என இலங்கை வானொலி மணிக்கொரு தடவை அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இவ்வாறு கொந்தளிப்பான நிலமையில் அன்று நண்பகல் 12 மணிக்கே முழுமையான ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்தது. எனினும் தென்னிலங்கை எங்கனும் பதட்டமும் பயப்பிராந்தியும் நிலவியநிலையில் மாலை 6 மணிக்கு பின்பு உசார்படுத்தப்பட்ட 94 பொலிஸ் நிலையங்கள் தொடற்சியாக தாக்கப்பட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் அன்று இரவு முற்றவெளி மைதானத்தில் பொலிசாரின் விசேடஅனுமதியுடன் திருமறைக் கலாமன்றத்தின் ‘திருப்பாடுகளின் காட்சி’ நாடக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வாணவேடிக்கைகளும் வெடிச்சத்தங்களும் கேட்டவண்ணமே யிருந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்த பொலிசார் அவ்வளவு நம்பிக்கை யோடிருந்தனர்.[/size]

[size=4]a_Rohana_Wijeweera_1.jpg[/size]

[size=4]ஜேவிபியினரின் இடதுசாரிக் கொள்கையானது சீனா மற்றும் வடகொரியா சார்பானதாக இருந்ததனால் அவர்கள் முதலாளித்துவ இந்தியாவை முழுமையான பகைநாடாகவே கருதினர். இதன்காரணமாக தமக்குமத்தியில் குறிப்பாக மலையகத்தில் வாழ்ந்த தோட்டத்தொழிலாளரான ‘இந்திய வம்சாவழித்தமிழரை அதே தேயிலைச்செடிகளிற்கு பசளையா க்குவோம்’ என இனவிரோத கருத்துக்களை ஆரம்பமுதலே கூறிவந்தனர். ரோகண விஜயவீரா உட்பட அன்றைய அதன்தலைவர்கள் பலரும் தமது கருத்தரங்குகளில் இதனைக்கூறி தமது புதியஉறுப்பினர்களான இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமும் இந்தியவிரோதத்தை வளர்த்துவந்தனர். இதன் காரணமாக ஜேவிபியினர்க்கு தெரிந்ததெல்லாம் தமிழ்பேசுவோர் எல்லாம் இந்தியர் என்பதேயாகும். இதன்காரணமாக எந்தத்தமிழரையும் அவர்கள் அன்று தம்முடன் இணைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையிலேயே முற்றுமுழுத் தமிழ்ப்பிரதேசமான யாழ்ப்பாணத்தில் நடந்த சமயசம்பந்தமான விழாவிற்கு அனுமதி வழங்குகின்ற அளவிற்கு அன்றைய வடமாகாண பொலிஸ் அதிபரான திரு.இரா.சுந்தரலிங்கம் நம்பிக்கையுடன் இருந்தார்.[/size]

[size=4]ஆனாலும் யாரும் எதிர்பாராதநிலையில் இரவு 11.30மணியளவில் யாழ்ப்பாணகோட்டை ஜேவிபியினரால் தாக்கப்பட்டது. நிமால்வசந் என்பவரின் தலைமையில் முன்வாசல் வழியாகவும் பேர்ட்டிரஞ்சித் என்பவரின் குழுவினர் பின்புறமாகவும் கோட்டையைத் தாக்கினர். அவர்கள் சிங்களத்தில் ‘விஜயவீரா நீ எங்கிருக்கின்றாய் நாங்கள் உன்னை மீட்க வந்திருக்கின் றோம்’எனச் சத்தமிட்டபடி கோட்டைக்கதவுகளிற்கு அண்மையில் தாக்கியபடி அக்கதவை உடைக்க முற்பட்டனர். ஆனாலும் வலிமைவாய்ந்த அக்கதவுகளை அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. இந்நிலையில் கோட்டையின் சிறைச்சாலை அதிகாரியாக கடமையாற்றிய தங்கராசா என்பவர் எக்காரணம் கொண்டும் சிறைச்சாலைக்கதவுகளை திறக்கக்கூ டாதென ஏனைய அதிகாரிகட்கும் ஊழியர்களிற்கும் உத்தரவிட்டதுடன் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கி உதவியைக் கோரினார். உடனேயே இன்ஸ்பெக்டர் செல்வராசா என்பவரின் தலைமையில் வந்த பொலிசார் இடம்வலம் தெரியாமல் தடுமாறிநின்ற பல ஜேவிபி யினரை சுட்டுக்கொன்று 20பேர்வரை கைதுசெய்தனர். அதேநேரம் யாழ் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலும் முறியடிக்கப்பட்டிருந்தது. தென்னிலங்கையில் ஏப்ரல் 5 — 23ந்திகதிவரை நீடித்த ஜேவிபியினரின் தாக்குதல்கள் வெறுமனே ஒரு மணிநேரத்திலேயே யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. (1.ஈழத்தமிழர்எழுச்சி பக்கம் 100—108 எஸ்.எம்.கார்மேகம் 2..ரோகணவிஜய வீராவும் சிறை அதிகாரி தங்கராசாவும். கட்டுரை வீரகேசரி வாரவெளியீடு 09.04.2006)[/size]

[size=4]virakagagali-001.jpg[/size]

[size=4]1971 ஏப்ரல் 05ந்திகதி இரவு 11.30 க்கு கேட்க ஆரம்பித்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுச்சத்தங்கள் அடுத்த ஒருமணி நேரத்தி லேயே அடக்கப்பட்டு விட்டன. எனினும் 06ந்திகதி காலையிலேயே யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இச்செய்தி பரவி பெரும்பரபரப்பிற்குள்ளா கியது. ‘யாழ்ப்பாணத்தில் சேகுவரா’ என்னும் செய்தியுடன் உண்மையும் பொய்யுமாய் வதந்திகள் உலவியவேளையில் தங்கத்துரையும் குட்டிமணியும் அச்செய்திக்கு புதியவடிவம் கொடுத்து செயலாற்ற ஆரம்பித்தனர். குண்டுகள் செய்வதற்கான இரசாயனப்பொருட்களை கொள்வனவு செய்யும் பெரியசோதி தியே அவைகளை பாதுகாத்தும் வைத்திருந்தார். இதன்காரணமாக 07ந் திகதி அதிகாலையிலேயே குட்டிமணி நெடியகாட்டில் இருந்த பெரிய சோதியிடம் சென்று அவைகளைப் பெற்றுக்கொண்டாh.[/size]

[size=4]வயதின் அடிப்படையில் பெரியசோதி ஏனையோரை விட மூத்தவராக காணப்பட்டதினால் இவரே இக்குழுவின் தலைவராகவும் விளங்கினார். எனினும் அன்றைய அவரது சீரற்றஉடல்நிலையால் குட்டி மணியிடம் வெடிபொருட்களை கையளித்துவிட்டு அவர் வீட்டிலேயே இருக்கநேர்ந்தது. மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் என்னும் குறியீட்டுப்பெயர் மூலம் இவர்களால் அழைக்கப்பட்ட இந்த இரசாயனப்பொருட்களை நடேசுதாசன் சின்னச்சோதி என்போர் நெல்லியடியில் அமைந்திருந்த ‘மகாத்மா’ திரையரங்கிற்கு அண்மையில் வீட்டுடன்கூடிய கடையொன்றி லேயே வழமையாக கொள்வனவு செய்வர். ஆனால் பெரியசோதி இவைகளை யாழ் குருநகரில் இருந்த கடையொன்றிலேயே கொள்வனவு செய்பவர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

Ganalingam-sad-santhiran.jpg[/size]

[size=4]பெரியசோதியிடம் பெற்றுக்கொண்ட வெடிபெருட்களை தொண்டைமானாறு வீரமாகாளியம்மன் கோயிலிற்கு அண்மையில் இருந்த தங்கத்துரை வீட்டில் வைத்துவிட்டு குண்டு தயாரிப்பதற்கான ஏனையவேலைகளை கவனித்தனர். மீண்டும் ஊரடங்குசட்டம் ஆரம்பிக்கும் மாலை 06மணிக்கு முன்பாகவே தங்கத்துரை வீட்டில்கூடிய தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி ஞான லிங்கம் மற்றும் இவர்கள் எல்லோரிலும் இளையவரும் பிரபாகரனின் வகுப்புத் தோழனுமான சரத்சந்திரன் என்போரும் ஊரடங்குச்சட்டம் அமுலாகிய பின்னர் தமது அடுத்தகட்ட நகர்வை ஆரம்பித்தனர்.[/size]

[size=4]Thalaiva520.jpg[/size]

[size=4]இரவு 06 மணிக்குப்பின் ஏற்பட்ட ஆள்அரவமற்ற நேரத்தின் பின்பும் இருட்டும்வரை காத்திருந்து தங்கத்துரை வீட்டின் அருகாமையில் அமைந்திருந்த தோட்டவெளிகளினூடாக நடந்து தொண்டைமானாறு வீரகத்தி ப்பிள்ளை மகாவித்தியாலயத்தை அடைந்தனர். சித்திரைமாதம் நீண்ட பகற்பொழுதை கொண்டிருப்பதால் இரவு என்பது மாலை ஆறுமணிக்கல்ல இதற்கும் பின்பாக 7.30 –8.00 ஆரம்பமாகி விடிகாலை 5.00 மணிக்கே வெளிச்சம் பரவிவிடும் மாதமாகும்.[/size]

[size=4]ஆள்நடமாற்றமற்று இருட்டான பொழுதிலும் ஏற்கெனவே அச்சூழுலுக்கு நன்கு பரிச்சயப்பட்ட இவர்கள் எவ்விதபதட்டமுமின்றி தாக்குதலுக்கான கைக்குண்டுகளை தயாரிக்க முற்பட்டனர். அதிபரின் அறைக்கு அருகாமையில் இருந்த சிறிய ஆய்வுகூடத்தினுள் குண்டு தயாரிக்கும் தமது முயற்சியினை ஆரம்பித்தனர்.[/size]

[size=4]Thondaimanaru-Veerakathi-mahavithiyalayam.jpg[/size]

[size=4]ஏற்கெனவே பலகுண்டுகளை தயாரித்து அனுபவப்பட்டவர்கள் என்பதனால் எந்தவித பதட்டமுமின்றி குண்டு தயாரிக்கும் வேலை ஆரம்பமானது. யார் எதைச்செய்வது என்ற கேள்விக்கு இடமின்றி தரையில் உட்கார்ந்து சின்னச்சோதி குண்டினை உருவாக்கினார்.ழூ1 ஏனையவர்கள் அவருக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியவாறு நின்றனர். சிறியஇரும்பு ஆணிகள் பீங்கான்ஓட்டுச் சிதறல்கள் மற்றும் வெடிக்கவைக்கும் இராசயனப்பொருட்கள் என்பவற்றை மிகநேர்த்தியாக ஒன்றுடன் ஒன்றிணை த்து அவர் குண்டினை தயாரித்த முடிக்கவும் அதுவரையில் அச்சிறிய அறையில் மிகநெருக்கமாக நின்ற தமது ஆசுவாசத்தை தீர்த்து நல்லகாற்று வாங்குவதற்காக ஒவ்வொருவராக வெளியே வரமுயன்றனர்.[/size]

[size=4]தொடரும்….[/size]

[/size]

[size=3]

[size=4]tamnail_thalavar.gif[/size][/size][size=3]

[size=4]பகுதி 3[/size][/size][size=3]

[size=4]ஆரம்பத்திலேயே வெளியேவந்த குட்டிமணியும் தங்கத்துரையும் தயாரிக்கப்பட்ட குண்டினை எடுத்துச்சென்று ரோந்துவரும் இராணுவஜீப்பினை தாக்குவது பற்றி உரையாடும் பொழுது அறைவாசலிற்கு ஞானலிங்கமும் வந்திருந்தார். வயதில் இளையவரான சரத்தும் அறையைவிட்டு முன்பே வெளியேறியிருந்தார். இவர்கள் அனைவரும் நின்றுகொண்டே தமது வேலை களைச்செய்ததினால் இலகுவாக வெளியேவர முடிந்தது. இந்நிலையில் தரையில் உட்கார்ந்து குண்டினை உருவாக்கிய சின்னச்சோதி அதனை அருகில் வைத்துவிட்டு எழுந்து வெளியே வரமுயன்றார். எற்கெனவே ஒரேஇடத்தில் இருந்து விறைத்துப்போன கால்களை நீட்டிநிமிர்த்தி இவர் எழுந்துகொள்ளவும் பக்கத்தில் வைத்திருந்த குண்டில் எதேச்சையாக அவரதுகால்பட்டுவிடவே யாரும் எதிர்பாராமல் படீர் என்ற சத்தத்துடன குண்டு வெடித்தது.[/size][/size]

[size=3]

[size=4]

sinnavar.gif[/size]

[/size]

[size=3]

[size=4]சின்னச்சோதி[/size]

[/size][size=3]

[size=4]வெளியில் வந்தவிட்ட குட்டிமணிக்கும் தங்கத்துரைக்கும் அதிர்ச்சி கலந்தஆச்சரியம். மிகவும் அவதானமாக செய்துமுடிக்கப்பட்ட குண்டு எப்படியோ வெடித்துவிட்டது. எப்படி?….. எப்படி?….. எதையும் உடனடியாக கிரகித்துக்கொள்ளும் நுண்ணறிவு கொண்ட தங்கத்துரை நிலமையைப் புரிந்துகொண்டார். நிலத்தில் இருந்து எழும்பும்போது குண்டு வெடித்து விட்டதால் ‘ஆ’ என்ற அலறலுடன் கீழேவிழுந்த சின்னச்சோதியின் வலதுகாலின் வெளிப்புறமாக மேலிருந்து கீழ்வரை முழுமையாக சல்லடையாக்கப்பட்டிருந்தது. சல்லடைக்கண்கள் யாவற்றிலும் இருந்து அதிகளவுpல் இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கவே அதன்காரணமாக சிறியமுனகலுடன் மயங்கி இருந்தார். வாசலில்நின்ற ஞானலிங்கத்திற்கு காலில் சிறியகாயமானாலும் அதன்ஆழம் காரணமாக அதிகளவு இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. கிடைத்த துணியைக்கொண்டு ஞானலிங்கத்தின் காயத்தைக்கட்டி இரத்தம் வழிவதை நிறுத்தமுயன்றனர். படுகாயமடைந்த சின்னச்சோதியை என்னசெய்வது என தடுமாற்றமடைந்தனர். ஏறத்தாள இரவு பத்துமணியாகி இருந்த அவ்வேளையில் ஊரடங்குசட்டம் காரணமாக எங்கும் நிசப்தமாக இருந்தது. இந்நிலையில் குண்டுவெடித்த சத்தத்தைக்கேட்டு எவ்வேளையிலும் சிங்களப்படைகளின் கவனம் பாடசாலையை நோக்கித் திரும்பலாம் என்னும் நிலையில் அனைவரும் அவ்விடத்தைவிட்டு விரைவாக வெளியேறமுற்பட்டனர்.[/size][/size][size=3]

[size=4]படுகாயமடைந்த சின்னச்சோதியை ஒருவாறு துக்கிக்கொண்டும் காலில் காயமடைந்திருந்த ஞானலிங்கத்தை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டும் வீரமாகாளியம்மன் கோவிலை மீண்டும் அடைந்தனர். குண்டு வெடிப்பு சத்தத்தின் காரணமாக வெளியேவந்த சிலஅயலவர்கள் குறிப்பாக அயலிலிருந்த வீடொன்றில் குழந்தையொன்றின் முப்பத்தியோராம் நாள் விழா நடைபெற்றிருந்தது. (இக்குறிப்பிட்ட தொட்டிலிடும் நாளை அடையாளம் கண்டே நாற்பதுவருடங்களிற்கு முந்தைய ஏப்ரல் 7ந்திகதியையும் அன்றையநாளான புதன்கிழமையையும் இன்றும் எம்மால் அடையாளம் காணமுடிகின்றது) மற்றும் தங்கத்துரையின் சகோதரி மைத்துனர் ஆகியோருடன் உதவியுடன் தெரிந்த முதலுதவிச்சிகிச்சை எல்லாம் அளித்தபின்பும் சின்னச்சோதியின் நிலமை பயமூட்டுவதாகவே காணப்பட்டது. அதிகஇரத்தம் வெளியேறியதால் அவரின் உடல் நீர்ப்பிடிப்பை இழந்து போகவே அவர் அம்மயக்கநிலையிலும் ‘தங்கத்துரை தண்ணீர் தண்ணீர்’ என கேட்டவாறிருந்தார். அவரை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதைத் தவிர வேறுவழியில்லை.[/size][/size][size=3]

[size=4]ஊரடங்குச்சட்டம் அதிலும் குறிப்பாக யாழப்பாணத்தில் எதிர் பாராதவிதமாக நடந்துவிட்ட சேகுவராத் தாக்குதலினால் எப்பொழுதும் உசார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதுடன் எந்நேரமும் வீதிரோந்துவரும் படையினரின் கண்ணில்படாமல் சின்னச்சோதியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதெப்படி?…..சிங்களப்படைகளை முதன்முதலில் திட்டமிட்டு தாக்கமுற்பட்ட போது ஏற்பட்டபாரிய பின்னடைவு அதனால் அவர்களை தாக்கமுடியாமற் போனது ஒருபுறம் கவலையளித்தது.அதனையும்விட தமதுநண்பனும் தமது இரகசிய இராணுவகுழுவில் ஒருவனுமாகிய சின்னச்சோதியின் உயிரை எப்படியும் காப்பாற்றவேண்டிய மிக இக் கட்டானநிலை.[/size][/size]

[size=3]

[size=4] எதிலும் சமயோசிதமாக முடிவெடுக்கும் தங்கத்துரை தமது குழுவின் இரகசியமா அல்லது நண்பனின் உயிரா எனத் தடுமாறியபோதும் அன்றைய நிலையின் இறுதியில் நண்பனின் உயிரைக்காக்கவும் அதன்முலம் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாரானார். முடிவாக காயமடைந்து அரைமயக்கநிலையில் தண்ணீர் தண்ணீர் என அரற்றியவா றிருந்த சின்னச்சோதியை சாக்குஒன்றில் படுக்கவைத்து குட்டிமணி தங்கத்துரை அவரதுதுமைத்துனர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தூக்கிச்சென்று வல்வெட்டித்துறை காங்கேசன்துறை வீதியில் அமைந்திருந்த தொண்டைமானாறு பிள்ளையார் கோவில்ச்சந்தியின் நடுவீதியில் வளர்த்தி (படுக்கவைத்து) விட்டு மறைந்துநின்று நிலமைகளை அவதானித்தனர். இவர்கள் எதிர்பார்த்தது போலவே பலாலிமுகாமிலிருந்து வந்த இராணு வத்தினர் நடுவிதீயில் குற்றுயிராக கிடந்த சின்னச்சோதியை கண்டு ஜீப்பினை நிறுத்தி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சின்னச்சோதியினையும் தம்முடன் எடுத்துச் சென்றனர். எந்த இராணுவஜீப்பினை தாக்கவென வெடி குண்டுகளை சின்னச்சோதி செய்தாரே அதே இராணுவ ஜீப் வண்டி யிலேயே சின்னச்சோதியினை சமயோசிதமாக இவர்கள் அனுப்பி வைத்திருந்தனர்.[/size][/size]

[size=3]

[size=4]

Thondaimanaru_pilaiyar-001.gif[/size]

[/size]

[size=3]

[size=4]காயமடைந்திருந்த சின்னச்சோதியினை எடுத்துச்சென்ற இராணுவத்தினர் அவரை நிச்சயமாக வைத்தியசாலையில் அனுமதிப்பர் என்னும் திடமான நம்பிக்கையுடன் வீரமாகாளியம்மன் கோவிலடிக்கு மீண்ட குட்டிமணி தங்கத்துரை என்போர் ஞானலிங்கத்தின் காயத்திற்கு மேலதிகமருந்திடும் பணியில் ஈடுபட்டனர்.[/size][/size]

[size=3]

[size=4] 1971 ஏப்ரல் 05ந்திகதி நண்பகல்முதல் நாடுதழுவிய ரீதியில் மூன்றுநாட்களும் தொடரான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததனால் பகிரங்கமான மக்கள் நடமாட்டம் வீதிகளில் இருக்கவில்லை. எனினும் வல்வெட்டித்துறை ஊறணி இந்திராணி வைத்தியசாலைக்கு இராணுவத்தால் எடுத்துவரப்பட்ட சின்னச்சோதியினை அங்கு கடமையிலிருந்த சின்னச் சோதியின் உறவினரான இந்தியத்துரை என அழைக்கப்பட்ட காமாட்சி சுந்தரத்தின் மனைவியான திருமதி அலஸ் என்னும் தாதி அடையாளம் கண்டுகொண்டார். இவரின் மூலமாக சின்னச்சோதியின் ஆபத்தான நிலமை யினை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அதே ஜீப்பிலேயே அவர் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியினையும் அறிந்து கொண்டனர்.[/size][/size]

[size=3]

[size=4]

Thondaimanaru-Veerakathi-mahavithiyalayam.gif[/size]

[/size]

[size=3]

[size=4]தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்[/size]

[/size]

[size=3]

[size=4]ஏப்ரல் 09ந்திகதி அதிகாலையில் யாழ் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் மூலம் சின்னச்சோதியின் சகோதரன் விசியன்மாஸ்டர் மற்றும் நண்பர்களான ஜெயபாலி சிவக்கிளி மற்றும் சிலநண்பர்களும் வைத்தியசாலைக்கு சென்றுபார்த்தனர். அப்பொழுதும் அரைமயக்க நிலை யிலேயே சின்னச்சோதி காணப்பட்டார். அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் ஊரில் இருந்து சென்ற அனைவரும் இரத்தம்கொடுக்க தயாராகினர். பரிசோதனையின் பின்பு ஜெயபாலி மற்றும் சிவக்கிளியின் இரத்தங்கள சின்னச்சோதிக்கு ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏறத்தாள இருவாரங்களிற்கு மேல் சின்னச்சோதி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று ஓரளவுகுணமடைந்து வந்தார்.[/size][/size]

[size=3]

[size=4] குண்டு வெடித்தகாயங்களுடன் அரைமயக்கநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சின்னச்சோதியினை விசாரித்து என்ன நடந்தது? எனப் புரிந்துகொண்ட பொலிஸார் தொடர்ந்து வந்தநாட்களிலும் இதனை நிதானமாகவே கையாளமுயன்றனர். காரணம் அன்றைய சேகுவராப்புரட்சியின் ஓர்அங்கமாக இக்குண்டுவெடிப்பு நிகழவில்லை என்பதுடன் அவர்கள் திருப்திப்பட்டுக்கொண்டனர் எனலாம்;. எனேனின் பின்வரும் நாட்களில் பெருவிருட்சமாக வளரப்போகும் தமிழ்ஈழவிடுலைப் போராட்டத்தின் வித்தாக இந்த குண்டுவெடிப்பு இருக்கலாம் என்றோ ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்தை மூன்று தசாப்தத்திற்கு மேலாக தலைமையேற்று நடத்தப்போகும் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ‘தமிழீழவிடுதலை’ இயக்கமான இக்குழுவின் ஓர்அங்கமாக வளருகின்றார் என்பதையோ வல்வெட்டித்துறைக்கு வெளியே யார்தான் அன்று கனவு கண்டிருக்கமுடியும்?[/size][/size]

[size=3]

[size=4] இவ்வாறு சின்னச்சோதி சிகிச்சை பெற்றுவரும் நாளொன்றில் அவருக்கான நெல்லிரசப்போத்தலொன்றுடன் தனது நண்பன் குமார தேவனுடன் இணைந்து வைத்தியசாலைக்கு வந்த பிரபாகரன் இராணுவத்தை தாக்கும் முயற்சியைப்பற்றி சின்னச்சோதியிடம் விளக்கமாக கேட்டதுடன் அம்முயற்சியில் தன்னையும் இணைத்துக் கொள்ளாமையை கூறி மிகவருத்த முற்றார்.[/size][/size]

[size=3]

[size=4]

Pirabakaran-sinnachsothi.gif[/size]

[/size]

[size=3]

[size=4]தேசியத்தலைவருடன் சின்னச்சோதி (1984)[/size]

[/size]

[size=3]

[size=4] தொடர்ந்து வந்தநாட்களில் சின்னச்சோதியின் காயங்கள் ஓரளவு குணமாகி சாதாரணநிலைக்கு வரவும் அவரைநாடிய பொலிசாரின் வரவு அதிகரித்தது. குண்டுவெடிப்பின் விபரத்தை பூரணமாகஅறியும் நோக்கத்துடன் விசாரணை என்றபெயரில் அவர்களின் வரவு தொடர்ந்து அதிகரித்துவந்தது. காயங்கள்மாறி சாதாரணநிலைக்கு வந்தவுடன் சின்னச்சோதியை கைது செய்து மேலதிகவிசாரணை நடைபெறலாம் எனும் அச்சநிலமை ஏற்பட்டது. இதனால் வைத்தியரின் அனுமதியின்றியே வைத்தியசாலையை விட்டு வெளியேறுவது தவிர்க்கமுடியாததாகியது. காரணம் இக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த சின்னத்துரை தாயுமானவர் என்பவர் மேற் குறிப்பிட்ட சேகுவராப்புரட்சிக்கு ஆதரவாககதைத்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருந்தார். நாட்டில் இடம்பெற்றிருந்த எந்தவிதகுழு வன்செயல் களிலும் சம்பந்தமில்லாத அப்பாவியான அவர் அதன்பின் சிலவருடங்கள் விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடக்கூடிய தொன்றாகும்.[/size][/size]

[size=3]

[size=4] அன்று கொக்குவில் பல்தொழில் நுட்பக்கல்லூரியில் நிலஅளவையியல் மாணவனான துரைரெத்தினராசா சோதிரெத்தினராசா எனப்பட்ட சின்னச்சோதி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தலைமறைவாகியதைத் தொடர்ந்து போராளிகள் எதிர்பார்த்தது போலவே அடுத்த சிலவாரங்களில் சின்னச்சோதி குட்டிமணி தங்கத்துரை ஞானலிங்கம் என்பவர்களிற்கு எதிரான குற்றவியல் வழக்குத்தாக்கல் பத்திரம் மேற்குறிப்பிட்டவர்களின் வீடுகளிற்கு அன்றைய வல்வெட்டித்துறை பொலிஸ்நிலைய அதிபரான சிறிவர்தனா என்பவரால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டது. குறிப்பிட்டதிகதியில் பருத்தித்துறை நீதிமன்றில் நேரடியாக சமூகமளிக்க கோரப்பட்டிருந்த இக்குற்றப்பத்திரத்தில்[/size][/size]

[size=3]

[size=4]1. ஊரடங்கு நேரத்தில் சட்டத்தை மீறீ ஒன்றுகூடியது

2. உயிராபத்தை விளைவிக்கும் நாசகார ஆயுதத்தை (வெடிகுண்டு) தயாரிக்க முற்பட்டமை என்பன இவர்கள் புரிந்த குற்றங்களாக குறிப்பிடப்பட்டிருந்தன.குறிப்பிட்ட திகதியில் குட்டிமணி தங்கத்துரை சின்னச்சோதி என்போர் பருத்தித்துறை நீமன்றில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டதுடன் அதற்கு எதிராகவும் வழக்காடமுயன்றனர். இவர்களின் சார்பில் அன்று வடமராட்சியில் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கியவரும் வல்வெட்டித்துறை மக்களின் உற்றநண்பனும் உறவினனுமான திரு.நமசிவாயம் நடராசா (கட்டைப் பிறக்கிராசி) ஆஜராகி இருந்தார்.[/size][/size]

[size=3]

[size=4]

Ganalingam.gif[/size]

[/size]

[size=3]

[size=4]ஞானலிங்கம்[/size]

[/size]

[size=3]

[size=4] குண்டுவெடிப்பில் காயமடைந்த மற்றொரு துடிப்புள்ள இளைஞனான சின்னரெத்தினம் ஞானலிங்கம் குற்றப்பத்திரிகையை ஏற்கமறுத்துதுடன் குறிப்பிட்டதிகதியில் நீதிமன்றம் வருவதையும் தவிர்த்துக்கோண்டார். இதன் காரணமாக நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸார் இவரை கைதுசெய்ய முயன்றனர். காட்டுவளவு இல்லத்திலிருந்து கைதுசெய்யப்பட்ட இவரை பொலிஸ்நிலையம் கொண்டுசெல்லும் வழியில் பொலிஸாரின் கண்களில் மண்ணை எறிந்துவிட்டு ஒருநாள் தப்பியோடினார். இதுபோலவே மீண்டும் 1972ஜூன் மாதத்தில் இன்ஸ்பெக்டர் திருச்சிற்றம்பலம் மற்றும் சார்ஜன்ட் இராஜாமுத்தையா என்பவர்களால் கைதுசெய்யப்பட்டு நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியில் வல்லைவெளியில் ஜீப்சாரதியை இவர்தாக்கவும் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் கவிழ்ந்துவிடவே ஞானலிங்கம் மீண்டும் தப்பியோடினார். இச்சம்பவத்தினை தொடர்ந்து அன்றைய பரபரப்பு பத்திரிகையான மித்திரன் ‘பாய்ச்சாமன்னன’; ஞானலிங்கம் என தலைப் பிட்டமையும் இவரது நண்பர்கள் மற்றும் ஊரவர்களினால் இவர் ‘ஜீப்பிரட்டி’ எனும் அடைமொழியினால் பெருமையாக அழைக்கப்பட்டமையும் இவ்விடத் தில் குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=3]

[size=4] குட்டிமணி தங்கத்துரை சின்னச்சோதி என்பவர்களும் தமக்கு எதிரான ஓரிருதவணைகளிற்கு நீதிமன்றில் சமூகம் அளித்தனர். சேகுவராப் புரட்சியின் பின் குற்றவியல்சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களினை அடுத்து தமக்கு எதிரான வழக்கின் பாரதூரத்தன்மையினால் தொடர்ந்து நீதிமன்றம் செல்வதினை யாவரும் தவிர்த்துக்கொண்டனர். இதன் காரணமாக 1971 இன் பிற்பகுதியில் நீதிமன்ற ஆணையின் பெயரில் பொலிஸாரினால் தேடப்படும் புரட்சிகரநபர்களாக இவர்கள்யாபேரும் மாறியிருந்தனர்;. வவுனியா மகா வித்தியாலயத்தில் 10தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த தலைவர் பிரபாகரனும் 1971 செப்டெம்பரிலேயே வீட்டைவிட்டு வெளியேறி முழுநேர போராளியாகியமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. நாற்பதுவருடங்கள் கடந்து விட்டநிலையில் வெலிக்கடை மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைச் சம்பவங்களில் இவர்களில் பலரும் வீரமரணமடைந்ததாக கூறப்பட்டபோதும் தகுந்தவர்களினால் அடையாளம் காட்டப்படாமலும் எவ்வித நீதிவிசார ணைகள் இன்றியும் இவர்களது உடல்கள் அழிக்கப்பட்டன. காலம்காலமாக ஈழத்தமிழ் இனத்தையும் எங்கள் நிலத்தையும் கபளீகரம் புரியும் சிங்கள இனவெறி அரசின் நாசகாரமுயற்சியினை நாற்பதுவருடங்கள் தடுத்து நிறுத்தியதுடன் அதற்காக நாலுதசாப்தங்களிற்கு முன்பாகவே ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் புரட்சிப்புயலினை ஈழத்துமண்ணில் விதைத்து யுகப்புரட்சியினை ஏற்படுத்திய வரலாற்றுநாயகர்கள் இவர்கள்தான். தமிழினத்திற்காக தலைமறைவு வாழ்கையை மேற்கொண்ட ஒழுங்கில் வல்வெட்டித்துறை மண்ணின்மைந்தர்களின் பெயர்களும் அவர்கள் தலை மறைவு வாழ்கையை ஆரம்பித்த காலங்களும் பின்வருமாறு……[/size][/size]

[size=3]

[size=4]வைத்திலிங்கம் நடேசுதாசன் (நடேஸ்) 1971 மார்ச்

சின்னரெத்தினம் ஞானலிங்கம் 1971 ஏப்ரல்

துரைரெத்தினராசாசோதிரெத்தினராசா(சின்னச்சோதி) 1971 செப்டெம்பர்

செல்வராசா யோகச்சந்திரன் (குட்டிமணி) 1971 செப்டெம்பர்

நடராசாதங்கவேல்(தங்கத்துரை 1971செப்டெம்பர் [/size][/size][size=3]

[size=4]ஞானமூர்த்தி சோதிலிங்கம் (பெரியசோதி) 1972 பெப்ரவரி 12

வேலுப்பிள்ளை பிரபாகரன் (தம்பி) 1973 மார்ச் 23[/size][/size][size=3]

[size=4] [/size][/size][size=3]

[size=4]பிற்குறிப்பு: 1. எமது போரியல் வரலாற்றில் பெரிதும் பேசப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொன்.சிவகுமாரன் பொன். சத்தியசீலன் என்போருக்கு குண்டு செய்யும்கலையை கற்றுக்கொடுத்த ஆசான் மட்டுமன்றி 1973 ஆம் ஆண்டிலேயே விடுதலைப்போராளிக்களுக்கான தளத்தை தமிழ்நாட்டின் திருச்சி வேதாரணியம் கோடம்பாக்கம் என உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் சின்னச்சோதியும் பெரியசோதியும் ஆவார்கள்;. 1983இன் பின் விடுலைப்புலிகளின் பயிற்சிப்பாசறைகளை தமிழகத்தில் உருவாக்குவதிலும் அதனை நிர்வகிப்பதிலும் சின்னச்சோதி பெரும்பங்காற்றினார். தலைவர் பிரபாகரனின் சுயசரிதை கூறும் ‘ஒரு தீப்பொறி’ தொடரில் அவரால் அண்ணா எனஅழைக்கப்படும் ‘போராட்டமுன்னோடிகள்’ இக்கட்டுரையில் குறிக்கப்படுபவர்களே.[/size][/size]

[size=3]

[size=4]பிற்குறிப்பு: 2. சாதாரணவெடிகுண்டுகள் மட்டுமல்ல பாரியகுண்டுகளை தயாரிப்போரும் மிகுந்த பாதுகாப்புடன் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் சில சமயங்களில் அவர்களையும்மீறி; எப்படியோ விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் 14.02.1987இல் நடந்த நாவற்குளி குண்டு வெடிப்பு மறக்கமுடியாததாகும். இக்குண்டுவெடிப்பில் பொன்னம்மான் வாசு கேடில்ஸ் என முன்னணிப் போராளிகள் 10பேரும் 60இற்குமேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டிருந்தமை இங்குநினைவூட்டத்தக்கது.[/size][/size][size=3]

[size=4]http://tamil24news.com/news/?p=5212[/size][/size]

சின்ன சோதி , பெரிய சோதி ஆகியோர் யாழ்ப்பாணத்து சாதிச் சண்டியர் எல்லொ? இல்லை நான் மாறிக் குழப்புறேனா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல தொடரின் ஆரம்பம்,தொடருங்கள் [/size]

[size=5]http://leo-malar.blogspot.no[/size]

[size="4"]தொடருங்கள் [/size]

[size="4"]தொடருங்கள் [/size]

[size="4"]தொடருங்கள் [/size]

:D :D :D :D :D

நன்றி, தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தொடருங்கள்!

தேவையான கட்டுரை

தொடருங்கள். நானும் இணைந்திருக்கிறேன். :)

தொடருங்கள் வாசிக்க ஆவலாக உள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.