Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா: ஸ்கோர்புரோவில் துப்பாக்கி சூட். குழந்தை உள்பட 19 பேர் படுகாயம், இருவர் மரணம்.

Featured Replies

[size=4]கனடாவின் ஸ்கார்புரோ நகரத்தில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும். டொரண்டோ காவல்துறை அதிகாரி பில் பிளேர் (Bill Blair) ஒரு அறிக்கையில் கூறியபோது இதுவரை தான் பார்த்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் இது என்று கூறியுள்ளார்.

19 வயது இளம்பெண் ஒருவரும் 20 வயது இளைஞர் ஒருவரும் இந்த துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் காவல்துறை இவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Morningside Avenue and Lawrence Avenue East area. என்ற இடத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு இரவு 10.30 மணிக்கு நடந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஒரு திறந்தவெளி விருந்து ஒன்றில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களே இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்க வேண்டும். இதில் ஒரு பச்சிளங்குழந்தை உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தையின் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 16 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டொரண்டோ மேயர் ராப் போர்டு இந்த சம்பவம் பற்றி கூறுகையில் இது ஒரு வேதனையான சம்பவம் என்று குறிப்பிட்டார். இந்த சம்பவம் குறித்து ஏதாவது விபரம் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO SEE THE PICTURE OF THIS NEWS[/size]

[size=4]உலகிலேயே அதி கூடிய வெள்ளையர் அல்லாத மேற்குலக நகரில் ஒரு வெள்ளையரல்லாத காவல்துறை தலைவரும் அந்த மக்களின் விகிதாசாரப்படி பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும்.[/size]

[size=4]அதுவரை வெள்ளையர்கள் சுடப்பட்டால் மட்டுமே இந்தக்காவல்துறை தனது கடமையை செய்யும். [/size]

  • தொடங்கியவர்

காவல்துறையில் வெள்ளையர்,வெள்ளையரல்லாதோர் என்ற பாகுபாடு கனடாவில் இருக்கிறதா ?

[size=4]நேற்று இங்குள்ள பிரபல ஆங்கில வானொலியான இல் அதன் காலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் கூறினார் : 'சுடப்பட்டது இரண்டு வெள்ளை நிற Bay St. இல் (பங்கு ச்சந்தை அமைந்துள்ள வீதி) வேலை செய்யும் இவர்கள் என்றால் பிரதி நடவடிக்கைகள் வேறுவிதமாக இருந்திருக்கும். [/size]

[size=1]

[size=4]பொதுவாக காவல்துறையினர், இதில் பெரும்பாலோனோர் வெள்ளையர்கள், கருவல்கள் கருவல்களை சுடும் நிகழ்வுகளுக்கு 'எல்லாம் முடிந்த பின்னரே வருவார்கள்' என கறுவல் தாய் ஒருவர் கூறினார். [/size][/size]

[size=1]

[size=4]இன்னொருவர் காவல்துறை இந்த குழுச்சண்டைகளுக்கு தீனி போடும் போதை வியாபாரத்தை காவல்துறை கட்டுப்படுத்துவது இல்லை என்றார். [/size][/size]

[size=1]

[size=4]ஒரு பல்கலைக்கழக ஆய்வாளர் ' தகப்பன் இல்லாமல் வளரும் ஆண்களே' இந்தப்பிரச்சனைக்கு காரணம் என்றார். [/size][/size]

காவல்துறையில் வெள்ளையர்,வெள்ளையரல்லாதோர் என்ற பாகுபாடு கனடாவில் இருக்கிறதா ?

[size=4]நிச்சயம் இருக்கின்றது.[/size]

[size=1]

[size=4]இன்று சுடப்பட்டு இரண்டு நாளாகிவிட்டது - கைது இல்லை. ஆனால், நகரின் மத்தியில் மற்றும் இத்தாலியர்கள் அதிகமாக வாழும்பகுதியில் கொலைகள் நடந்தபொழுது ... கைதுகள் உடனடியாக நடந்தன. [/size][/size]

[size=1]

[size=4]கொலைகள் நடந்த இடத்தில் இன்று நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஒரு வெள்ளை நிற வதிவிடவாசி கூறினார் : ' வழக்கமாக கண்காணிப்பில் ஈடுபடும் காவல்துறையினர் எம்முடன் கதைப்பதில்லை'. ஒரு கருப்பு நிற இளையவர் கூறினார், ' எனக்கு காவல்துறையுடன் கதைக்க விருப்பம் இல்லை'. [/size][/size]

அகூதா, தவறான பார்வை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை எப்படியான வலை விரித்துள்ளது என்று பார்த்தால் இப்படிக்கூறமாட்டீர்கள். இவ்விடயத்தில் காவல்துறை பாகுபாடு காட்டுவதாக நான் நினைக்கவில்லை. குற்றவாளிகள் விரைவில் நிச்சயம் பிடிபடுவார்கள்.

அகூதா, தவறான பார்வை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை எப்படியான வலை விரித்துள்ளது என்று பார்த்தால் இப்படிக்கூறமாட்டீர்கள். இவ்விடயத்தில் காவல்துறை பாகுபாடு காட்டுவதாக நான் நினைக்கவில்லை. குற்றவாளிகள் விரைவில் நிச்சயம் பிடிபடுவார்கள்.

[size=4]இந்த வருடம் இந்த மாநகரப்பகுதியில் எத்தனை கொலைகள், எத்தனை சூட்டுச்சம்பவங்கள் நடந்துள்ளன? அதில் எத்தனை (வீதம்) கறுவல் இனத்தவர்களுக்கு இடையே நடந்துள்ளது? அதில் எத்தனை வீதம் காவல்துறையால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்? [/size]

[size=1]

[size=4]இந்த புள்ளிவிபரங்கள் சொல்லும் செய்தி ஒன்றுதான் - "கறுவல் இனத்தவர்களே!, உங்களுக்குள் மோதிக்கொள்ளுங்கள், நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், வெள்ளை இனத்தவரையோ இல்லை வெள்ளை இனத்தவர்கள் வாழும் பகுதியிலோ சண்டை பிடிக்க வேண்டாம்." [/size][/size]

[size=4]பத்தொன்பது வயாதான ஒருவரை, அவர் இந்த சுடுபாட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் உள்ளவர், காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால்,இவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்படவில்லை. [/size]

[size=1]

[size=4]இந்த சுடுபாட்டிற்கு பின்னர் இநண்டு நாளில் இரு கறுவல் இனத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். [/size][/size]

[size=1]

[size=4]இந்த ஆண்டில்:[/size][/size][size=1]

[size=4]145 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் [/size][/size][size=1]

[size=4]20 கொலைகள் [/size][/size][size=1]

[size=4]33 வீத அதிகரிப்பு [/size][/size]

[size=1]

[size=4]ஒரு முக்கிய காரணம் : காவல்துறை. [/size][/size]

  • தொடங்கியவர்

நீங்கள் என்னதான் கூறினாலும் காவல்துறை கருப்பர்,வெள்ளையர் என இனப்பாகுபாடு காட்டுவதாக கூறுவதை நம்ப இயலவில்லை. ஒருவேளை இது உண்மையென்றால் அது காவல்துறைக்கு எதிராக மிக விரைவில் திரும்பும் அபாயம் உள்ளது என்பதை காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் என்னதான் கூறினாலும் காவல்துறை கருப்பர்,வெள்ளையர் என இனப்பாகுபாடு காட்டுவதாக கூறுவதை நம்ப இயலவில்லை. ஒருவேளை இது உண்மையென்றால் அது காவல்துறைக்கு எதிராக மிக விரைவில் திரும்பும் அபாயம் உள்ளது என்பதை காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

[size=5]கருப்பினத்தவர்கள் விலையான வாகனத்தை ஓட்டிச்செல்லும்போழுது அவர்களை இலக்கு வைக்கும் காவல்துறை: [/size]

Police target black drivers:

http://www.thestar.c...t-black-drivers

[size=5]இனப்பாகுபாடு காட்டப்படுகின்றது: [/size]

[size=5]Racial profiling a troubling ‘rite of passage’ for many black men: [/size]

http://www.thestar.c...-many-black-men

Edited by akootha

[size=1][size=4]இன்று சுடப்பட்டு இரண்டு நாளாகிவிட்டது - கைது இல்லை. ஆனால், நகரின் மத்தியில் மற்றும் இத்தாலியர்கள் அதிகமாக வாழும்பகுதியில் கொலைகள் நடந்தபொழுது ... கைதுகள் உடனடியாக நடந்தன. [/size][/size]

இரண்டு நாட்களில் இல்லாவிட்டாலும் நான்கு நாட்களில் காவல்துறையினர் குற்றவாளியைப்பிடித்துவிட்டார்கள். அடுத்தென்ன முறைப்பாடு வைத்துள்ளீர்கள்?

இன்னோர் திரியில் சுண்டல் கூறியதுபோல் மற்றவர்களைக்காட்டிக்காட்டி இப்போது நாம்தான் இனவாதிகளாக மாறிக்கொண்டு வருகின்றோமோ என எண்ணத்தோன்றுகின்றது.

இரண்டு நாட்களில் இல்லாவிட்டாலும் நான்கு நாட்களில் காவல்துறையினர் குற்றவாளியைப்பிடித்துவிட்டார்கள். அடுத்தென்ன முறைப்பாடு வைத்துள்ளீர்கள்?

இன்னோர் திரியில் சுண்டல் கூறியதுபோல் மற்றவர்களைக்காட்டிக்காட்டி இப்போது நாம்தான் இனவாதிகளாக மாறிக்கொண்டு வருகின்றோமோ என எண்ணத்தோன்றுகின்றது.

[size=4]இப்படி கூறுவது உங்களை ஏமாற்றுவதே. [/size]

[size=4]நூற்றுக்கணக்கில் மக்கள் இருந்திருக்கின்றார்கள், ஆனால் காயம் பட்ட ஒருவர் மட்டுமே கைது செய்யபட்டுள்ளார். ஏன்?[/size][size=1]

[size=4]அவரும் அந்த துப்பாக்கி நிகழ்வில் காயம்பட்டவர். இவர் மூலம் ஏன் வேறு ஒருவரும் கைது செய்யப்படவில்லை? [/size][/size][size=1]

[size=4]அந்தக்கைது செய்யப்பட்டவரும் கூட கொல்லப்பட்ட இருவர் மீதான கொலைகுற்றம் சாட்டப்படவில்லை. அப்படியானால் யார் கொலை செய்தது?? [/size][/size]

இரண்டு நாட்களில் இல்லாவிட்டாலும் நான்கு நாட்களில் காவல்துறையினர் குற்றவாளியைப்பிடித்துவிட்டார்கள். அடுத்தென்ன முறைப்பாடு வைத்துள்ளீர்கள்?

இன்னோர் திரியில் சுண்டல் கூறியதுபோல் மற்றவர்களைக்காட்டிக்காட்டி இப்போது நாம்தான் இனவாதிகளாக மாறிக்கொண்டு வருகின்றோமோ என எண்ணத்தோன்றுகின்றது.

[size=4]இதை நான் சொல்லவில்லை, கறுப்பின மக்களே சொல்லுகிறார்கள், நான் அல்ல நண்பரே! [/size]

எம்மை விட மிக கூடுதல் காலமாக தலைமுறையாக இங்கே உள்ளார்கள் அவர்கள். அவர்கள் சொல்வதையே இங்கே எழுதுகிறேன்.

[size=5]Toronto shootings -- Racism, growing social injustices[/size]

[size=5]It's within this context that Monday night's shooting occurred. The racists and Harper and the "tough-on-crime crowd" have their perspective, but we need to focus the discussion on the systemic reasons for this tragedy. As Scarborough begins to heal from Monday's trauma, we owe it to the victims and their families to fight for real solutions to gun violence.[/size]

http://www.agoracosmopolitan.com/news/media_spin/2012/07/21/4245.html

[size=4]கரும்பு,[/size][size=1]

[size=4]இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர், டொராண்டோ நகரபிதா ரொப் போர்ட் கூறிய இரண்டு கருத்துக்களை பார்போம்:[/size][/size][size=1]

[size=4]- குழுச்சண்டையில் ஈடுபடுபவர்களை இந்த நகரத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் [/size][/size][size=1]

[size=4]- குழுச்சண்டையில் ஈடுபடுபவர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் [/size][/size]

[size=1]

[size=4]டொராண்டோ காவல்துறைக்கு பொறுப்பான நகரபிதாவின் கூற்றில் இனவாதம் உள்ளதா இல்லையா?? [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.