Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு விரைவில் உடையும் – பிள்ளையான் ஆருடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]Pilayan-100x100.jpg[/size]

[size=3][size=4]மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறந்த பாடம் கற்பிற்பார்கள் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது என குறிப்பிட்டதுடன்,[/size][/size]

[size=3][size=4]சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா ஆகிய மூவரும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் உடையும். அவர்கள் ஐக்கியமாக இல்லை. நாங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று இனங்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 25 முதல் 27 ஆசனங்களை கைப்பற்றும் எனமுன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.[/size][/size]

[size=4]http://www.saritham.com/?p=64531[/size]

த.தே.கூ.வினருக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் - பிள்ளையான்..! பாசிஸ்ட்களின் அரசியலுக்கு ஒரு சான்று - ஈழதேசம் செய்தி..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்கு கிழக்கு மாகாண மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சாபம் விட்டுள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிள்ளையான் அவர்கள் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள தேர்தலில் கிழக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

ஏன் கிழக்கு மாகாண மக்கள் த.தே.கூ.வினருக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும்..? த.தே.கூ.வினர் சர்வாதிகார அரசியலை எப்பொழுது முன்னெடுத்தார்கள்..? சர்வாதிகார அரசியல் என்றால் என்ன..?

சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றனர். எனவே,தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பிளவுபடும் என்று சாபம் விட்டுள்ளார்.

என்ன மாதிரியான சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றனர் மேற்கண்ட மூவரும்..? மேற்கண்ட காரணங்களைக் கொண்டிருப்பதால் த.தே.கூ.அமைப்பு பிளவுபடுமா..? அல்லது பிளவுபடுத்தப்படுமா..?

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகல இன மக்களையும் ஒன்றிணைத்த தேர்தலில் போட்டியிடுவோம். இம்முறை தேர்தலில் 27 க்கு 25 ல் எங்களது கட்சி வெற்றிபெறும் என்றார் சந்திரகாந்தன் என்ற பிள்ளையான்.

27 க்கு 27 என்று ஏன் வெற்றி பெறக்கூடாது..? பாசிஸ்ட்கள் அரசியல் களம் இத்தகைய தன்மையை கொண்டிருக்கும் என்பதற்கு இந்த பிள்ளையானின் கூற்றே சான்று. அரசியல் உரிமை கேட்பவனின் நிலையும், அரசியல் உரிமை கொடுக்க முடியாது என்பவனின் நிலையும் ஒன்று என்று கூறுகிறார்களோ..?

சங்கிலிக்கருப்பு

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் அரசியல் சாணக்கியத்திற்கு முன்னால்

பிள்ளையான் தோல்வியடைவது உறுதி :(

கிழக்கு மண்ணில் உதித்து சுயலாபங்களுக்காக சிங்களப் பயங்கரவாதிகளுக்கு ஜால்ரா போடும் மனோபாவமுடைய இருவரிடையான போட்டி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.