Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்றால் என்ன?

தட்டுல இருக்கும் இட்லி தமிழன் உணவே அல்ல ஆரிய உணவுன்னு சொல்லிட்டு இட்லிய சட்டியோடு களவான்ட்டு ஓடுவது

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்ட்சிக் கட்டமைப்புக்களிற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இத் தேர்தலில் ரொறன்ரோவிலும் அதனையண்டிய பகுதிகளும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.////////

கனடாவில் பெருமளவில் வாழும் ஈழத்தமிழர்கள் சிந்தாமல் சிதறாமல் தங்கள் வாக்குகளை ஒருங்கிணைத்து பல தமிழர்களை வெற்றி பெற வைத்தால் அரசியல் ரீதியாக பல விடையங்களில் செல்வாக்கு செலுத்த முடியும் கனடாவில் ஏற்கனவே நமது தமிழர்கள் தொழில் துறை , மருத்துவம், பொறியியல்,சட்டம் என்று சாதனை தமிழர்களாக கொடிகட்டி பறக்கும் இந்த நேரம் அரசியலிலும் பெருமளவில் ஈடுபட்டு தாங்கள் வாழும் மண்ணுக்கும் மக்களுக்கும் மட்டுமல்லாமல் தாயக மக்களுக்கும் சேவையாற்ற முடியும் போட்டியிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நாங்கள் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளையும் சித்தார்ந்தங்களையும் கழுவி ஊத்தினாலும் இந்த காலத்துக்கு அது சரிவராது என்று சொன்னாலும் சீனா போன்ற நாடுகளின் அசுர வளர்ச்சி என்பது அதனால் தான் சாத்தியப்பட்டது......

நினைத்து பாருங்கள் சீனா என்ற மிகப்பெரிய தேசம் இவ்வளவு மக்கள் தொகையுடன் முழுக்க முழுக்க ஜனநாயக நாடாக இருந்திந்தால் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியுமா?

லஞ்சம் வாங்குவதில் இருந்து அனைத்து மக்கள் விரோத நவடிக்கைகளுக்கும் கடுமையான தண்டனைகள் மற்றும் சர்வாதிகாரம் என்பன இருந்ததால் தானே இவ்வளவு தூரம் அதனால் வளர முடிந்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு ஒரு அனுபவத்தை சம்பாதிக்கவும், ஒரு பாடத்தை பயிலவும் வருகிறார்கள். ஒவ்வொரு பிறப்பிலும் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது என்று நீ தான் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். சில நேரங்களில் ஒருவர் போராடவும் வேண்டும் என நான் கற்றுக் கொண்டேன். தள்ளு வண்டி ஓட்டுபவர் தன்னை ஒருவன் அடிப்பதை தடுத்தார் என்றும், ஆனாலும் அடித்தவன் தள்ளு வண்டி ஓட்டுபவரின் முகத்திலும் தலையிலும் தொடர்ந்து அடித்ததால் அவர் இறந்ததையும் கூறினாய். இறந்து போவோமென்றாலும் ஒரு விழுமியத்தை உருவாக்க தொடர்ந்து போராட வேண்டும் என்று நீ சொல்லியிருக்கிறாய்.

பள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் சண்டைகளோ, புகார்களோ எழுந்தால் அதை கௌரவமாக கையாள வேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நீ எவ்வளவு அழுத்தம் கொடுப்பாய் என நினைவிருக்கிறதா? உன்னுடைய அனுபவம் தவறானது. நான் கற்றுக் கொண்டவை எவையும், இந்த நிகழ்வின் போது எனக்கு கை கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் ஒரு கருணையற்ற கொலைகாரியாகவும், மனசாட்சியற்ற குற்றவாளியாகவும் தான் நான் தெரிந்தேன். நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை. சட்டத்தை நம்பியதால் நான் அழுது புலம்பவில்லை.

ஈரானில் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக போலீஸ் அதிகாரியை தாக்கி கொலை செய்ததற்காக சில நாட்களுக்கு முன் தூக்கிலடப்பட்ட அந்த பெண் தனது தாயாருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், குற்றம் புரிந்தவளானாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல காட்சியளித்ததாக என் மீது குற்றம் சுமத்த பட்டது. நான் கொசுவைக் கூட கொன்றது கிடையாது. கரப்பான்பூச்சிகளை அதன் உணர்நீட்சிகளை பிடித்து வெளியில் தூக்கியெறிவேன் என்பது உனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் திட்டமிட்டு கொலை புரிந்தவள். நான் மற்ற உயிரினங்களிடம் காட்டிய பரிவு கூட ஒரு பையனைப் போல நான் நடந்து கொண்டதற்கான அடையாளமாக மாறிப்போனது. சம்பவம் நடந்த போது நான் நீளமான விரல் நகங்கள் கொண்டிருந்ததைக் கூடநீதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.

நீதிபதிகளிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தான் எத்தனை நன்நம்பிக்கை. என்னுடைய கைகள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் கைகளை போன்றோ, குத்துச் சண்டை வீராங்கனையின் கைகளைப் போன்றோ இறுக்கமாக இல்லை என்பதைப் பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எந்த நாட்டின் மீதான அன்பை நீ என்னுள் விதைத்தாயோ அந்த நாடு நான் தேவையென்று நினைக்கவில்லை. விசாரிப்பவர்களின் சித்திரவதைக்கு நான் அலறியபோதும், தகாத வார்த்தைகளை நான் செவியுற்ற போதும் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என் அழகின் கடைசி கூறையும் நான் உதிர்த்த போது, என் தலைமுடியை மொட்டையடித்த போது, எனக்கு 11 நாட்கள் தனிச்சிறை வாசம் என்ற பரிசு கிடைத்தது.

அன்புள்ள ஷோலே, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது திருமணமாகாத விசாரணை அதிகாரி ஒருவர் கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை.

என் அன்பு அம்மாவே, என் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. அதற்கு நீ பொறுப்பில்லை. என் வார்த்தைகள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். உனக்குத் தெரியாமல், நீ அருகில் இல்லாமல் நான் கொல்லப்பட்ட பிறகு இவ்வார்த்தைகள் உன்னை வந்து சேரும். என் நினைவாக நிறைய கையெழுத்து பிரதிகளையும் உனக்காக விட்டுச் சென்றுள்ளேன்.

என்றாலும், என் இறப்புக்கு முன்னால் உன்னிடம் இருந்து எனக்கு உதவி தேவைப்படுகிறது. உன் முழு முயற்சியையும் போட்டு, இயன்ற எல்லா வழிகளையும் பின்பற்றி எனக்கு நீ இதை செய்து தர வேண்டும். சொல்லப்போனால் உன்னிடமிருந்தும், இந்த நாட்டிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் நான் கேட்பது இது மட்டும் தான். இதைச் செய்து முடிக்க உனக்கு நேரம் தேவைபப்டும் என்பதை நான் அறிவேன். அதனால் தான் என் உயிலின் ஒரு பாதியை உனக்கு முன்னமே சொல்கிறேன். தயவு செய்து அழாமல் கேள். என் சார்பாக நீதிமன்றத்தில் நீ இதைச் சொல்ல வேண்டும். சிறைச்சாலைக்குள்ளிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி அதற்கு சம்மதம் பெற முடியாது. தலைமைக் காவல் அதிகாரி இதற்கு ஒப்புதலும் தர மாட்டார். அதனால், என்னை முன்னிட்டு நீ இன்னொரு முறை சிரமப்பட வேண்டும். என்னைத் தூக்கிலிருந்து காப்பாற்ற நீ யாரிடமும் கெஞ்சக் கூடாது என்று நான் சொல்லியிருந்தாலும் நான் கேட்கப்போகும் இந்த விஷயத்திற்காக நீ யாரிடம் சென்று கெஞ்சினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.

இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை. என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம், கண், எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியாக எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப் போகச் சொல்.

இந்த உலகம் நம்மை விரும்பவில்லை. என் விதியை அது விரும்பவில்லை. அதற்கு அடிபணிந்து இன்று நான் மரணத்தை தழுவுகிறேன். ஏனென்றால் கடவுளின் முன்னிலயில் நான் இந்த காவல்துறை கண்காளிப்பாளர்களின் மீது குற்றம் சுமத்துவேன். கண்காணிப்பாளர் ஷாம்லூ மீது குற்றம் சுமத்துவேன். நீதிபதியின் மீது குற்றம் சுமத்துவேன். நான் விழித்திருந்த போதே என்னை அடித்துத் துன்புறுத்திய, என் மீது கொடுமைகளை கட்டவிழ்த்த இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துவேன். நம்மை படைத்தவனின் முன்னிலையில் நான் டாக்டர் ஃபார்வந்தியின் மீது குற்றம் சுமத்துவேன். காசீம் ஷபானி உட்பட, தங்கள் அறியாமையாலும், பொய்களாலும் எனக்கு தவறிழைத்த என் உரிமைகளை நசுக்கிய, உண்மை சில நேரங்களில் மாறுபடும் என்பதை கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவேன்.

மென்மையான இதயத்தைக் கொண்ட அன்பு ஷோலே, அந்த உலகத்தில் நாம் தான் குற்றம் சுமத்துபவர்கள். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று பார்ப்போம். நான் சாகும் நொடி வரை உன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன்னை அதிகம் விரும்புகிறேன்.

கண்ணீரை வரவழைக்கும் பதிவு சுண்டல்.

சாகும்போதும் அந்த பெண்ணின் வீரத்தையும் நெஞ்சுரத்தையும் தியாகத்தையும் நான் மதிக்கிறேன்.

இன்னொரு பிறப்பிருந்தால் இந்த பெண்ணை நான் நேரில் காண ஆசை.

நான் எனது பக்கத்துடன் நிற்பதில்லை..விரும்பி பார்க்கும் பக்கம் எல்லாம் வந்து போறனான்..அந்த வகையில் உங்கள் பக்கமும் வாறனான்..இதைப் படிக்கும் போது மனதை என்னமோ செய்வது போல் இருக்கிறது..சிலர் ஒரு ஈ,எறும்புக்கு கூட தீங்கிளைத்திருக்க மாட்டார்கள்.வாழ்வில் மிகுந்த கடினமான காலங்களை கடப்பார்கள்..கடினமான வார்த்தைகளை காதால் கேட்டிருப்பார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வானில் தோன்றும் கோலம்...அதை யார் போட்டதோ?

பனி வாடை வீசும் காற்றில் ...சுகம் யார் சேர்த்தோ?

வயதில் தோன்றிடும்...நினைவின் ஆனந்தம்...

வளர்ந்தாடுது...இசைபாடுது...

வழிந்தோடுது...சுவை கூடுது...

புத்தம் புது காலை..."

இப்படி ஆகாய பெருவெளியில்,வண்ண சிறகுகளைப் பரிசளித்து பறக்க செய்த பாடல்.ராஜாவின் இசை,ஜானகியின் குரல் என்பதை எல்லாம் தாண்டி இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பம்சம் இருந்தது.அது என்னவென்றால்,இது படப்பிடிக்கப் படாமக் இருந்தது தான்.காட்சிகள் தேடி நம் கற்பனை குதிரைகளை சுண்டி விட்டுக்கொண்டு பரவிக்கிடந்த பாடல்.ஒவ்வொரு காலையும்,ஒவ்வொரு மழை துளியும்,வயதையும் மனதையும் பொருது,இந்த பாடலின் பின்னணியில் நம்மை நாயகர்கள் ,நாயகிகள் ஆக்கிகொண்டிருந்தது.இந்த பாடலுக்கு சம்மந்தமே இல்லாமல் காட்சிகள் அமைத்து,இவை அனைத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர்களை என் மனதில் ஆழத்தில் இருந்து வெறுக்கிறேன்.இப்ப இதை படம் பிடிக்லைன்னு யார் அழுத?சொந்தமா பாட்டு எழுத முடியலனா எதுக்குயா படம் எடுக்குறீங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வெளிநாடு ஒன்றில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம். பலநாட்டுத் தமிழர்கள் ஒருங்கு கூடியிருந்த நிகழ்ச்சி. இரவில் தூங்கி விடிகாலையில் எழுந்து சிறிது நேரம் சென்றபின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்த பொழுது, தமிழகத்திலிருந்து அங்கே வந்திருந்த ஓரன்பர் வெளிநாட்டுத் தமிழர்களிடம் கேட்ட கேள்வி

"என்னங்க பிரேக்பாஸ்ட் முடிஞ்சுதா' என்பதுதான்.

பக்கத்திலேயே மலேசிய நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் தமிழக அன்பர்களிடம் முன்வைத்த வினா:

"ஏனுங்க பசியாறிட்டீங்களா?'

இரவில் உறங்கி, காலையில் எழுந்து, கடமைகள் முடிக்கப்பட்ட சூழலில் மனிதர்கட்குப் பசி ஏற்படும். காலையுணவு உண்டபின் பசி நீங்கும். அதனை அழகு தமிழில் "பசியாறிட்டீங்களா' என வினவும் அயலகத் தமிழர்களால்தான் தமிழ் வாழ்கிறது."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று புதிய தலைமுறையில் தி மு க பொருளாளர் ஸ்டான்லின் அவர்களுடைய பேட்டியை பார்க்க முடிந்தது மனுஷர் நல்ல தெளிவா கேட்கின்ற கேள்விகளுக்கு அசராமல் பதில் அளிக்கின்றார்.... ஆனால் என்னமோ தெரியா தேர்தல் பிரச்சார மேடைகளில் மட்டும் சொதப்புகின்றார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்த பாஜக முன்வர வேண்டும்: கேஜ்ரிவால்/////////

பா ஜ க விற்கு வெட்கம் இருக்கிறதா என்பதை கேட்க முதல்.....டெல்லியில் நீங்க எந்த ஆட்சிக்கு எதிராக எந்த கட்சிக்கு எதிராக பேசினீர்களோ கடைசியில் அதே கட்சியுடன் கூட்டு வைத்து ஆட்சியில் அமர்ந்த உங்களுக்கு வெட்கம் இருந்ததா என்ன?

வரலாறு முக்கியம் கேஜ்ரிவால்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நேஷனல் பார்ட்டி"யில் இருந்துட்டு இந்தியை எதிர்க்கலாமா?.... தமிழக பாஜகவுக்கு சாமி கேள்வி///////

ஓ நீங்க மட்டும் தமிழனா இருந்துகிட்டு....தமிழையும்....தமிழர்களையும் எதிர்க்கலாமா?

தமிழக மக்கள் கேள்வி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமது கட்சி மலையுச்சிக்கு செல்வதற்கு இன்னும் சில தூரமே உள்ளது......

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில்......////////

பாத்துங்க மலையுச்சிக்கு கொண்டு போய் எவனாச்சும் தள்ளிவிட்டிட போறான்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குத் துரோமிழைக்காதீர்கள்! அனந்தியிடம் தேசிய சுதந்திர முன்னணி வேண்டுகோள்//////

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும்....அநீதிகளுக்கும்.....நீங்கள் உள்நாட்டிலையே......நீதியான நேர்மையான தீர்வு தருவீர்களாக இருந்தால் எதற்கு அவர்கள் வெளிநாடுகளின் முன் மண்டியிட்டு நீதி வேண்டி நிற்க போகின்றார்கள்......நீங்கள் உங்கள் சொந்த நாட்டின் குடிமக்களை கொத்து கொத்தாக கொலை செய்தது துரோகம் இல்லை ஆனால் அதற்காக நீதி வேண்டி ஐக்கியநாடுகளின் கதவை தட்டுவது துரோகமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A australia பிரஜைகளின் பாதுகாப்பு கருதி எந்தவிதமான மனித வளமும் அரசின் சார்பில் Ebola நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அந்த நோயை கட்டுப்படுத்த அனுப்ப படமாட்டார்கள் என்றும் அப்பிடி அவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை Australia நாட்டிற்கு மீண்டும் கொண்டுவர 31 மணிநேரம் ஆகும் என்பதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து என்பதால் நிதியுதவி மட்டுமே செய்யமுடியும் என்றும் ஆஸ்திரேலியா அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்தா பார் சூரனின் தலையை வெட்டாமல் விடமாட்டேன் என்று Sydney முருகன் கையில் வாளோடு புறப்பட தயாராகும் நிலையில் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக முருகன் ஆஸ்திரேலியா போலீசால் கைது செய்யப்படுவாரா? என்ற பர பரப்பு ஒரு புறம் இருக்க.....சூரன் ஒளிந்து வருகின்ற மாமரத்தின் கிளைகளில் தொங்குகின்ற மாங்காய்களை பொறுக்க ஆஸ்திரேலியா தமிழர்கள் ஆவலுடன் தயாராகி வருகின்றார்கள்.......

சூரனின் தலை வெட்டப்பட்டதா

பக்த கோடிகள் அனைவருக்கும் மாங்காய் கிடைத்ததா....என்பது கிளைமாக்ஸ்.....

#அப்போ நான் வட்டா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோயில் சூரன் போரை

நேரடியாக கண்டு மகிழ

http://m.ustream.tv/channel/sooran-samharam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கௌதம் மேனன் ஒரு மலையாளியாக இருந்தாலும் தமிழ்ப்பட இயக்குனர்களை விட அவர் தனது படங்களுக்கு வைக்கும் பெயர்கள் அழகிய தமிழில் இருக்கும்

வேட்டையாடி விளையாடு

விண்ணைத்தாண்டி வருவாயா

மின்னலே

நடுநிசி நாய்கள்

பச்சைக்கிளி முத்துச்சரம்

வாரணம் ஆயிரம்

ஆகிய வரிசையில் இப்பொழுது அவர் அஜித்குமாரை வைத்து இயக்கி இருக்கும் புதியபடத்தின் தலைப்பு

"என்னை அறிந்தால்".....

கௌதம் மேனன் ஒரு திறமையான இயக்குனர் இடையில் அவர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொழுது விஜய் சூரியா என்று அவரை நம்ப வைத்து காயபடுத்திய பொழுதும் உதவ முன்வந்தது அஜித்தின் பெருந்தன்மை

இந்தப்படம் முழு வெற்றியடைந்து ஒரு திறமையான இயக்குனரை தமிழ் திரையுலகம் இழக்காமல் இருக்க என் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனத்தை சுவீடன் மூன்றாவது நாடாக அங்கீகரித்து இருக்கின்றது.... சுவீடன் ஒன்றும் சாதாரண நாடு கிடையாது....பணக்கார அபிவிருத்தி அடைந்த நாடாகும்.... அதுவே பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது இஸ்ரேலை பொருத்தவரை கடும் அதிர்ச்சிக்குரிய செய்தி..... பாலஸ்தீனியர்களின் இத்தனை நாள் காத்திருப்பு சொல்ல முடியாத இழப்பு தாங்க முடியாத வேதனை என்று அனுபவித்து வந்த அவர்களின் வாழ்வில் , சுதந்திர தேசம் என்ற கனவில் சிறு வெளிச்சம் தெரிய தொடங்கி இருக்கின்றது..... பாலஸ்தீனர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டிய தீர்வை இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் பல நாடுகள் அதிருப்தி அடைய தொடங்கி விட்டன... சுவீடன் வெளிவிவகார அமைச்சரும் அதையே சுட்டிக்காட்டி இருந்தார்.....

இலங்கைக்கும் இது ஒரு நல்ல பாடம்... தமிழர்களுக்கு வழங்க வேண்டிய தீர்வை உரிய முறையில் உரிய நேரத்தில் வழங்க மறுத்து இழுத்தடிக்கும் பட்சத்தில் தமிழீழமும் ஒரு நாள் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படலாம் .... சில நேரம் அது எங்கள் தலைமுறையில் நடக்காமல் போகலாம்.... ஆனால் தமிழர்கள் சிந்திய குருதிக்கும் செய்த தியாகங்களுக்கும் ஒருநாள் நிட்சயம் பலன் கிடைக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் தந்த அழிவுகளுக்குள்ளும் 1000 கணக்கான மக்களின் இழப்புகளுக்குள்ளும் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட ஈழதமிழர்களுக்கு மரணம் என்பதும் ...... வேறு இடங்களில் நடைபெறும் யுத்தங்கள் மற்றும் இயற்க்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளும் வெறும் செய்திகளாகவே போய்விட்டன ..... அதெல்லாம் ஒரு காலம் ஈழத்தமிழர்கள் மற்றவர்களை பார்த்து பதறியடித்து அனுதாபப்பட்டது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் 60 வயசுக்கு மேல ஆகியும் இன்னும் இளவரசராகவே இருக்காரு

ஸ்டான்லினும் 60 வயசாகியும் இன்னும் இளைஞரணி தலைவராகவே இருக்காரு......

ராணியும் இப்போதைக்கு பதவிய விட்டு இறங்கிறதா தெரியல்ல....

தலைரும் ஸ்டான்லின கட்சி தலைவரா அறிவிக்கிறதாவும் தெரியல்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மத்தியில் காங்கிரஸ் வந்தால் இந்த ஒட்டு மொத்த வாசன் கூடாரமும் காங்கிரசில் போய் ஐக்கியமாகிடும்...... காங்கிரஸ் தமிழகத்தில் எந்த வேஷம் எடுத்து வந்தாலும் அது தமிழகத்தை விட்டு அகற்றப்பட வேண்டிய கட்சியே.....

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையால் வாசனுக்கு குடுக்கபட்டிருக்கும் பணி தான் தனிக்கட்சி ஆரம்பிப்பது.......

ஆக மொத்தம் வாசன் நடிப்பது மட்டும் தான்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாமே

காங்கிரஸ் தலைமை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் 60 வயசுக்கு மேல ஆகியும் இன்னும் இளவரசராகவே இருக்காரு

ஸ்டான்லினும் 60 வயசாகியும் இன்னும் இளைஞரணி தலைவராகவே இருக்காரு......

ராணியும் இப்போதைக்கு பதவிய விட்டு இறங்கிறதா தெரியல்ல....

தலைரும் ஸ்டான்லின கட்சி தலைவரா அறிவிக்கிறதாவும் தெரியல்ல.....

ஆனால் யாழ்களத்திலை 40 வயதுக்கு குறைஞ்சவையையும் தாத்தா எண்டுதான் கூப்பிடுவினம்..... :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையை நகைச்சுவையாக எடுக்கணும் என்றதுக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நல்ல உதாரணம் சிலவாரங்களுக்கு முதல் அவருடைய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு பகுதியில் ஒட்டு ஓட்டுன்னு ஓட்டினாங்க.....போனவாரம் அதே நிகழ்ச்சியில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு போட்டியாளராக......

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் யாழ்களத்திலை 40 வயதுக்கு குறைஞ்சவையையும் தாத்தா எண்டுதான் கூப்பிடுவினம்..... :D  :lol:

ஆண்டவா நாட்டில எத்தனை விதமான பிரச்சனை இருக்க அவுசின்ட இளைஞர் அணித் தலைவருக்கு ஒரு கவலை,குசா தாத்தாக்கு ஒரு  கவலை என்ன கொடுமை தாத்தா....................... :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.