Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும்

நீ மலையில் நின்று கொண்டு அழுதாலும் கூட

உண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும்

நீ மழையில் நின்று கொண்டு அழுதாலும் கூட

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் என் கண்களில் வைக்க வில்லை

என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்

ஆனால் நீயோ, இதயத்தில் இருந்து கொண்டு கண்களில் கண்ணீரை வரவைக்கிராய்

ஏன்? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு சிரிப்பு வந்தா " ee " ன்னு சிரிப்பம். ஆனா " ee " க்கு சிரிப்பு வந்தா எப்பிடி சிரிக்கும்?

ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு கூட சொல்லலாம்

உக்காந்து யோசிங்க முடியலியா ரூம் போட்டு யோசிங்க but பதில மட்டும் சொல்லிடுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு பின்னாடி போகும் போது நீ சகித்துக்கொள்ள வேண்டியது

அவள் அடிக்கடி குனிந்து செருப்பை பார்க்கும் போது

Road ல போற ஆயா உன்னை பார்த்து காறி துப்பும் போது

பிச்சைக்காரன் இதை விட தண்ட பிழைப்பு மேல் எண்டு சொல்லும் போது

பஸ் ஓட்டுனர் நாயே சாகிறத்திக்கு இது தானா கிடைச்சிது எண்டு சொல்லும் போது

:( :(

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டு போகும்' என்கின்றனர். ஆனால், எத்தனை பேர் வாய்விட்டு சிரிக்கிறோம். வெறுமனே ஒரு புன்னகையோடு சிரிப்பை நிறுத்திவிடுகிறோம்.

எங்கே இதற்கு மேல் சிரித்தால் கையிலிருக்கும் காசு போய்விடுமோ? என்பது போல் சிரிக்கிறோம். ஜப்பான் நாட்டு மனோ தத்துவ பேராசிரியர் யோஜி, சிரிப்பை அளப்பதற்கு, "டிஜிட்டல்' கருவி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், வயிறு குலுங்க சிரித்தால் தான் அது இயல்பான சிரிப்பு. சிரிக்கும் போது பலமுறை, "ஹாஹ்... ஹாஹ்...' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்தச் சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி, சுரப்பிகள் இயங்கும் திறன் அதிக மாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்திற்கும், வயிற்றுக்கும் இடையேயுள்ள தசைகள் முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும் என்கிறார். குறிப்பிட்ட அளவு "ஹாஹ்... ஹாஹ்...' என்ற சத்தம் வெளிப்படும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை யோஜி கண்டுபிடித்துள்ள "டிஜிட்டல்' கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வுகள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. சிரித்தால் எத்தனை நன்மை கிடைக்கிறது. அதற்காக தனியாக மட்டும் சிரித்துவிடாதீர்கள். வேறு அர்த்தமாகிவிடும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள் நம்மை அதிகம் காயப்படுத்தும்

For example :

மலை மேல உக்காரலாம்

குண்டூசி மேல உக்கார முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள் நம்மை அதிகம் காயப்படுத்தும்

For example :

மலை மேல உக்காரலாம்

குண்டூசி மேல உக்கார முடியுமா?

கல்லைக்கண்டால் நாயை காணோம்.......நாயைக்கண்டால் கல்லைக்காணோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணா வாழனும் இல்லைனா ஒண்ணா சாகனும் இது தான் காதலுக்கு வேதம்

http://youtu.be/QhAS1xSBtpk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லைக்கண்டால் நாயை காணோம்.......நாயைக்கண்டால் கல்லைக்காணோம்.

வேணாம் தாத்ஸ் அப்புறம் கடிச்சிடுவன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேணாம் தாத்ஸ் அப்புறம் கடிச்சிடுவன் :D

தொப்புளை சுத்தி ஊசிபோட இனியும் ஏலாது...பிச்சை வேண்டாம் நாயைபிடி ராசா. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாயம் காலம் நேரத்தை பார்ப்பதும் யாழ் கள திண்ணையை பார்பத்துமாக இருந்தார்........,

திண்ணையில் ஒருவரும் இல்லாததை கண்டு கோபம் கொண்டவர் வேலை செய்து கொண்டிருந்த பையன் மீது தன்னுடைய கோபத்தை காட்டினார்

என்ன உன்ன வடிவா எல்லா மொப் பண்ண சொன்னான் என்ன பண்ணி இருக்கே? திரும்ப பண்ணு என்று பேசிவிட்டு மீண்டும் யாழ் களத்த்தின்னையில் சிரிப்பு மற்றும் சோகம் கலந்த முக குறிகளாக கலந்து கட்டி அடிக்க தொடங்கினார்.........

தமிழுக்கு சூரியிமானவரும் இசைக்கு செல்வமானவரும் வரவே திண்ணை சிரிப்பு முக குறிகளால் அதிர்ந்து கொண்டிருந்தது....... என்ன யாருமே ஒண்டும் பேசுறாங்க இல்லியே என்று நினைத்தவருக்கு இசைக்கு செல்வமானவிரின் மூனுக்கு என்ன மூண்டரை சனியாம் என்ற கேள்வி பார்வைக்கு வர எந்த மூதேவிக்கு எத்தினைல சனி இருந்தா என்ன எனக்கு ஏலறைல எல்லா ஆட்டிட்டு இருக்கு என்று மனதுக்குள் நினைத்தவர் சோக சிரிப்பு ஒன்றை தட்டி விட்டார்.......

இதற்கிடையில் யாழ் கள அரசியல் வித்தகரான அவர் வந்து யாழ் களத்தில யார் யார் எத்தினை Id என்னென்ன பேரில் வைத்திரிக்கினம் என்றது யாழ் கள நிழல் மயமானவருக்கு தெரியும் அவருக்கு எல்லாத்தையும் பாக்க கூடியதா இருக்கும் இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது என்று ஒரு குண்டை தூக்கிப்போட அதிர்ந்தவர்...... கடுப்பாகி நான் பாக்கிற கில்மா படமும் அவருக்கு தெரியுமா என்று கேட்க சற்றும் சளைக்கதா அரசியல் வித்தகர் நீங்கள் பாக்கிறதா விட பெட்டெர் ஆ அவர் பாபார் என்று கூறி இன்னும் கடுப்பெத்தினார் .........

நிலைமையை புரிந்து கொண்ட தமிழுக்கு சூரியனார் கில்மா எண்டால் என்ன என்ற கேள்வியுடன் வர

ஆ கில்மா எண்டா பால் மா என்று தடாலடியா பதில் கொடுத்தார் அரசியல் வித்தகர்.......

ஒரு மாதிரி திண்ணை மீண்டும் கலகலப்பாவதை கண்டவர் கடை பூட்டுகின்ற நேரம் வரவே திணையில் இருந்து விடைபெற்று வீடு போய் மடிக்கனணியுடன் சாப்பாட்டு மேசையில் வெறும் plate ஐ தூக்கி போட்டிட்டு திண்ணைக்குள் கண்ணை கொடுத்து பார்த்து அவர் பாட்டுக்கு சிரித்து கொண்டிருந்தார் இதை பார்த்த மனைவி கடுப்பாகி

டின்னெர் வேணுமா?

இவர்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு

இவர்: என்னென்ன?

மனைவி: வேணுமா வேண்டாமா?

மனைவி கோபமாக இருப்பத்தை உணர்ந்தவர் அவசர அவசரமா மடிக்கணணியை மூடி வைத்து விட்டு மனைவியை தாஜா பண்ண தொடங்கினார்

:D :D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாவும் நகைச்சுவைக்கே யாருடைய மனமாவது இதால் புண் படுமா இருந்தால் நீக்கி விடவும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் 

நான் பங்கெடுத்துகுவேn.

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்போம் ரசிப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரின் அவலத்தை தன் வைர வரிகளால் கூறும் இளமைக் கவி வாலி

http://video.ak.fbcdn.net/cfs-ak-ash4/v/440052/902/277394975680152_14869.mp4?oh=1f5ba6bd9923e328f0b9085656f13dce&oe=50A76D49&__gda__=1353151053_de2ff0e4778021d36169b1b29680aedb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காடையரை நோக்கி தலைக்கு மேல் கரங்களை தூக்கி வழிபட்டாள் வேண்டினாள் விடவில்லை கிழி பட்டாள் கிளிநொச்சித் தமிழச்சி..............

வெள்ளைக்கொடி விரித்தபடி சமர்க்களம் வந்த சமாதான புறாக்களை சமைத்து சாப்பிட்டன சிங்களர் படை

அங்கு புத்தனே நடத்துகின்றான் புரியாணிக்கடை

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கவிஞர் வாலி ஐயா இதை விடத்தெளிவாக அந்த அவலத்தை யாரும் சொல்லி இருக்க முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த வாலியின் கவி வரிகளில் இடம் பெற்ற அந்த எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டி தனிமடல் இட்ட உறவுக்கு நன்றி அதை திருத்தி உள்ளேன்

நன்றிகள் நண்பி :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறவி என்றால் மரணம் உண்டு. இது, எல்லா ஜீவன்களுக்கும் பொது. இதில், மரணத்தை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஒரு உபன்யாசகர் உபன்யாசம் செய்யும் போது, "மரணமில்லாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. நாளை இரவு 7:00 மணிக்கு உபன்யாசத்தின் போது, அது என்ன வழி என்பதை சொல்கிறேன்...' என்று சொல்லி, அன்றைய உபன்யாசத்தை முடித்து போய் விட்டார்.

மறுநாள் இரவு ஏழு மணிக்குள் கூட்டம் கூடி விட்டது. மரணம் இல்லாததற்கு வழி சொல்கிறேன் என்றால், யாருக்குத் தான் ஆசை இருக்காது. எத்தனை வயதானாலும், காது கேட்கவில்லை, கண் சரியாக தெரிவதில்லை. வாயில் ஒரு பல் கூட இல்லை. தடி இல்லாமல் நடக்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழவே ஆசைப் படுவர். ஏதோ, அந்த லேகியம், இந்த லேகியம் என்று சாப்பிடுவர். எப்படியாவது இன்னும் சில காலம் வாழவே ஆசைப்படுவர்.

"நான் வாழ்ந்தது போதும். சீக்கிரம் போனால் நல்லது...' என்று எத்தனை பேர் சொல்வர். உயிர் மேல் அவ்வளவு ஆசை. ஆனால், எமன் கணக்கு வேறு. அதன்படி தான் அவன் நடந்து கொள்வான். மரணமில்லாததற்கு வழி சொல்கிறேன் என்ற உபன்யாசகர், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள, அன்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. அவர் சொல்வதை எழுதிக் கொள்ள பேப்பரும், பேனாவும் சிலர் கொண்டு வந்தனர். சிலர், டேப் ரிக்கார்டர் கொண்டு வந்தனர். ஏழு மணி ஆயிற்று.

சகல ஆடம்பரத் துடன், சீடர்கள் சூழ வந்து, மேடையில் உட்கார்ந்தார் உபன் யாசகர். கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு பேச ஆரம்பித்தார்... "நேற்று உபன்யாசத்தில் மரணமில்லாமல் இருப்பது எப்படி என்பதை இன்று சொல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா! இதோ சொல்கிறேன்... கேட்டுக் கொள்ளுங்கள் அல்லது எழுதிக் கொள்ளுங்கள்... மரணமில்லா மல் இருக்க வேண்டுமானால், பிறக்காமல் இருக்க வேண்டும். இது தான் ஒரே வழி...' என்றார்.

கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ஏமாற்றம். ஐந்து நிமிஷத்தில் கூட்டம் கலைந்து விட்டது. உபன்யாசகரும், சீடர்களும் கடைசியாக எழுந்து போயினர். மரணத்தை தவிர்க்க எல்லாருக்கும் ஆசை தான். ஆனால், அவன் விட்டு விடுவானா? நிமிஷம், நொடி தவறாமல் வந்து விடுவான். இருக்கும்போதே பகவானை வழிபட வேண்டும்.

வைரம் ராஜகோபால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே

அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

ஹிட்லர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வண்ணங்கள் போல எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை....நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்

http://youtu.be/fJSkHCFoRvY

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

அது வேலை அல்ல.. வேளை.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே


http://youtu.be/agKRmmDxEyc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பாட்டில நேக்கு பல்லவிய மட்டும் தான் கேக்க முடிஞ்சிது நேக்கு அந்த சரணத்தையும் கேக்கணும் போல இருக்கு
http://youtu.be/s36BwY2Twz4

சுண்டல் புலவர் எந்தக கடையிலை சாப்பிடுகிறவர். எங்களின்ரை யாழ் கடைக்கு கூட்டி வாருங்கள். :D

flower-on-the-rocks-of-mount-roraima-in-venezuela-thumb9788940.jpg

stock-photo-yellow-flower-between-the-rock-44456344.jpg

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.