Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று Australia ஆளும் கட்சியான லிபரல் கட்சியால் ஆட்சிக்கு வந்து முதல் வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படிருக்கு....... வெட்டோ வெட்டு என்று வெட்டித்தள்ளி வரிகளையும் போட்டு தாக்கோ தாக்கு என்று தாக்கி இருக்கின்றார்கள். .... ஏன்டா ஒட்டு போட்டோம் இவங்களுக்கு என்று ஆஸ்திரேலியர்கள் ஒருகணம் நினைத்து இருப்பார்கள்.......

அரசியல்வாதிகள் எந்த நாடா இருந்தாலும் ஆட்சிக்கு வர முதல் சொல்லுவது ஓன்று வந்தவுடன் செய்வது ஓன்று....

 

அது அவர்களின் தப்புக்கிடையாது சுண்டல்

வெளியில் இருக்கும் போது தமது நாட்டைப்பற்றிய  தற்பெருமையில் பேசுவார்கள்

உள்ளே  போனால் தானே தெரியும்

பானை  காலியாக  இருப்பது...... :icon_idea:

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முகப்புத்தகம் எல்லாம் வர்றத்துக்கு முன்னாடி புலம்பெயர் இளைஞர்களுடைய வேடம் தாங்களாக இருந்தது tamilchatworld , hi2world மற்றும் பாரிஸ் தமிழ் போன்ற இணையங்கள் தான்...... இதன் மூலம் சந்தித்த பல ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஓன்று சேர்ந்து இருக்கின்றார்கள் பலர் தேவதாஸ் ஆகி தாடியுடனும் திரிந்திருக்கின்றார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக இந்த உலகத்தில் ஒவொருவரும் வாழ நினைத்தது ஒருவருடன் அதைப்பற்றி கற்பனை எல்லாம் பண்ணி இருப்பாங்க..... ஆனால் வாழ்ந்து கொண்டு இருப்பது வேறு ஒருவருடனாக இருக்கும் ...... அனேகமாக எங்கள் தமிழ் சமுதாயத்தில் இது கூடவா இருக்கும்....

ஜாதி

மதம்

பணம்

அந்தஸ்த்து

படிப்பு

பிரதேசம்

கஷ்டம்

என்று எதோ ஓன்று பிரித்துவிடும்.....

அதை எல்லாம் தாண்டி இணைந்தவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் குறைவே......

  • கருத்துக்கள உறவுகள்

14-1400046120-10253942-1449942425244512-

 

கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெல்லும்னு போட்ருக்கு அதுக்குதான் இவ்ளோ அடிச்சுகுறாங்க...

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடநாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பும் ஜெ

எத்தின அமைச்சர்களின் தல உருளப்போகுதோ.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bye Bye Congress

தமிழின அழிப்புக்கு இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து பல்லாயிரக்கணக்கான ....தமிழர்களின் உயிர் போக காரணமாக இருந்த காங்கிரஸ் அரசுக்கும் அதன் பிரதமர் மண்ணு மோகன் அவர்களுக்கும் 2 kg மிக்சர் பக்கெட் கொடுத்து வழியனுப்பும் விழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு......அனைவரும் தவறாது ஒரு மிக்க்ஷர் பாக்கெட்டுடன் வந்து விழாவை சிறப்பித்து மண்ணு மோகன் அவர்களை குஷிப்படுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

Bye Bye Congress

தமிழின அழிப்புக்கு இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து பல்லாயிரக்கணக்கான ....தமிழர்களின் உயிர் போக காரணமாக இருந்த காங்கிரஸ் அரசுக்கும் அதன் பிரதமர் மண்ணு மோகன் அவர்களுக்கும் 2 kg மிக்சர் பக்கெட் கொடுத்து வழியனுப்பும் விழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு......அனைவரும் தவறாது ஒரு மிக்க்ஷர் பாக்கெட்டுடன் வந்து விழாவை சிறப்பித்து மண்ணு மோகன் அவர்களை குஷிப்படுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.....

 

அவர்

கதைத்து

சிரித்து

பார்த்தது கிடையாது

அழுவதையாவது பார்க்கணும்

நான் தயார்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் ஏன் அண்ணே அழ போகுது....சோனியா ராகுல் கிட்ட இருந்து விடுதலை கிடைச்சிடிச்சே என்று மேல மேல துள்ளி குதிக்க போறார்...பாத்து வருஷமா பதவியில் இருந்தவர் 10 தலைமுறைக்கு சேர்த்து வைச்சிருக்க மாட்டாரா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

15-1400132262-57copy.jpg

 

பாலைவனத்திலை... புல்லு முளைக்கும் என்று, எதிர்பார்க்கிறார் போலுள்ளது.
ஹ்ம்ம்... நம்பிக்கை தானே, வாழ்க்கை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மே 17, 18ஆம் திகதி களில் முள்ளிவாய்க்காலின் நந்தி கரையோரம் கொத்துக்கொத்தாக எமது போராளிகளும் தளபதிகளும் பொது மக்களும் கேட்பாரற்று கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நாள்........சுதந்திரத்துக்காக போராடிய ஒரு இனத்தின் வரலாறு....குழி தோண்டி புதைக்கப்பட்ட நாள்........சரணடைந்தவர்களையும் உலக நியதிகளுக்கு மாறாக பலி வாங்கிய நாள்.......

சிரித்து விளையாடிய குழந்தைங்களின் இதயங்களை பறித்து எறிந்த நாள்......

தமிழச்சிகளாக பிறந்த ஒரே காரணத்திற்க்காக ஈவிரக்கமற்ற எதிரிகளின் கைகளில் சிக்கி சீரழிந்த நாள்......

எம்மினத்தலைவன் வளர்த்துவிட்ட பல தளபதிகளும் போராளிகளும் மண்ணோடு மண் ஆன நாள்.........

தமிழனின் பன்னெடுங்கால வரலாற்றின் துயரம் மிக்க நாள்.......

முள்ளி வாய்க்காலின் முற்றத்தில் மீளா துயில் கொண்டு தமிழரின் விடுதலையின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அத்தனை போராளிகள் ,தளபதிகள்,பொதுமக்கள்.......அனைவருக்கும் வீர வணக்கங்கள்..........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் பன்னெடுங்கால வரலாற்றின் துயரம் மிக்க நாள்.......

முள்ளி வாய்க்காலின் முற்றத்தில் மீளா துயில் கொண்டு தமிழரின் விடுதலையின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அத்தனை போராளிகள் ,தளபதிகள்,பொதுமக்கள்.......அனைவருக்கும் வீர வணக்கங்கள்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் என்னிடம் கேட்டார்கள் மோடி வெற்றி பெற்றதனால் உங்களுக்கு என்ன ஆகிவிட போகின்றது ஏன் அதிகமாக சந்தோஷப்படுகின்றீர்கள் என்று.....

நான் சொன்னது இரண்டு காரணங்கள்.....

ஓன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.......

மற்றது...... இனியாவது இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மை இந்துக்கள் சற்று தலைநிர்ந்து வாழ சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தப்பட்டு இருப்பது......மற்றும் இந்து மதம் காப்பற்றப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிமுகவுக்கு 3.5% வாக்குகள் கிடைத்துள்ளன. பதிவான வாக்குகளில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகளை மதிமுக பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் என்னிடம் கேட்டார்கள் மோடி வெற்றி பெற்றதனால் உங்களுக்கு என்ன ஆகிவிட போகின்றது ஏன் அதிகமாக சந்தோஷப்படுகின்றீர்கள் என்று.....

நான் சொன்னது இரண்டு காரணங்கள்.....

ஓன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.......

மற்றது...... இனியாவது இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மை இந்துக்கள் சற்று தலைநிர்ந்து வாழ சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தப்பட்டு இருப்பது......மற்றும் இந்து மதம் காப்பற்றப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பது....

எதை வைத்து இந்து மதம் காப்பாற்ற படும் என்று நினைக்கிறீர்கள் ??
முஸ்லிம்களை கொலை செய்தால் ....... இந்துமதம் வளருமா ?? 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் ஜெயலலிதாவின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கி "அம்மா உணவகங்களும்" ஒரு காரணம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எங்களை எந்த இடத்தில் வைக்கிறார்களோ அங்கு இருந்து பணி செய்வேன் -வைகோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vaiko

13 நிமிடங்களுக்கு முன்பு

தேர்தலில் மட்டும் அல்ல, எடுத்த காரியம் எதிலும் தொட்டது அத்துனையும் பலித்து விடும் என்று நிலைமை இருந்து விடுவது இல்லை.. ஏமாற்றங்களும் இடையூறுகளும் எவருடைய பாதையிலும் ஓரோர் வேளை குறுக்கிட தான் செய்யும்.. தோல்விகளை சந்தித்திட வேண்டும்.. துணிவுடன் ஒரு பட்டியல் தருகிறேன்..

1831 - வணிகத்தில் தோல்வி

1832 - சட்டசபை தேர்தலில் தோல்வி

1833 - மீண்டும் வணிகத்தில் தோல்வி

1834 - சட்டசபையில் பதவி

1835 - காதலியின் மரணம்

1836 - நரம்புக்கோளாறு நோய்

1838 - சட்டசபை தலைவர் தேர்தலில் தோல்வி

1840 - எலெக்டர் தேர்தலில் தோல்வி

1843 - பெருமன்ற தேர்தலில் தோல்வி

1846 - பெருமன்ற தேர்தலில் தோல்வி

1848 - பெருமன்ற தேர்தலில் தோல்வி

1855 - செனட் தேர்தலில் தோல்வி

1856 - உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி

1858 - செனட் தேர்தலில் தோல்வி

1860 - ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வெற்றி வெற்றி

இந்த தோல்வி வெற்றி பட்டியல் எவருடையது தெரியுமா? இறவாப்புகழ் பெற்றுவிட்ட ஆபிரகாம் லிங்கனுடயது...

எத்தகைய உள்ள உரம்.. அந்த தோல்விகளை கண்டு மனம் உடைந்திடாமல், முயற்சியிலே மேலும் மும்முரம் காட்டி, அமெரிக்க குடியரசு தலைவர் ஆகி இறவாப்புகழ் பெற்று காட்டினார்..

அவரின் நண்பர்களே இவரின் தோல்விகளை கண்ட போது "இவ்வளவு தகுதி உள்ளவரைத் தேர்ந்து எடுக்காத இந்த மக்களை என்ன சொல்வது, இந்த மக்களை நம்பி யார் தான் எந்த நல்ல செயலைச் செய்ய முற்பட முடியும்" என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்..

ஆயினும், ஆபிரகாம் லிங்கன் இந்த தோல்விகளை கண்டு துயர் துளைக்கும் மனதினராகி விடவில்லை.. மக்களின் நல்லாதரவு கிடைக்கும் வரையில் அதற்காக பாடுபடுவது தமது கடமை என்ற உணர்வுடன் பணி ஆற்றினார்..

அண்ணா அவர்கள் தனது கழக கண்மணிகளுக்கு கூறியது இது.. எவ்வளவு பொருத்தமான கருத்துக்கள் நமக்கு - இந்த காலகட்டத்தில்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன்:போனில் "எங்க இருக்க??

மனைவி :வீட்ல தாங்க இருக்கேன்...

கணவன்:எங்க அந்த மிக்ஸிய ஆன் பண்ணு சத்தம் கேக்குதான்னு பாப்போம்.

மனைவி மிக்ஸிய ஆன் பண்ணினாள் சத்தம் கேட்டுச்சு கணவன் போன வச்சுட்டான்.!!

இன்னொருநாள் அதே மாதிரி போன் பன்னி மிக்ஸிய ஆன் பண்ண சொல்லி கன்பார்ம் பன்னிக்கிட்டான்.!!!

ஒரு வாரம் கழிச்சு மனைவி மேல நம்பிக்கை வந்து போன் பண்ணாமல் வீட்டுக்கு போனான்.!!!

பையன் மட்டும் தனிய இருந்தான்.!!!

அப்பா:அம்மா எங்கடா??!!

பையன்:எங்க போயிருக்காங்கன்னு தெரியாதுப்பா ஆனா போகும் போது கையோட மிக்ஸியையும் எடுத்துட்டு போனாங்க.!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களே...! யுவதிகளே ....!

இந்த மாதங்களை நீங்கள் காதலித்தால் ....!

நடக்கப் போவது இதுதான் ....!

தை மாதம் : தை பிறந்தால் "வலி" பிறக்கும் நீ

காதலிக்காவிட்டால் "வழி" பிறக்கும் ...!

மாசி மாதம் : தூசிமாதிரி தட்டிட்டு போயிடுவர் ..!

பங்குனி மாதம் : பணம் புடுங்கும் வரை காதல் தொடரும் ...!

சித்திரை மாதம் : நித்திரையை கெடுத்திடுவர்..!

வைகாசி மாதம் : வைத்தியாசாலைக்கு அனுப்பாமல் விடமாட்டார்கள் ...!

ஆனிமாதம் ; போ நீ என்று போயிடுவர்..!

ஆடி மாதம் : ஓடியே போயிடுவர் ...!

ஆவணி மாதம் : தாவணி கனவை தந்துகொண்டிருப்பர்...!

புரட்டாதி மாதம் : புரட்டி புரட்டி அடிப்பார்கள் ...!

ஐப்பசி மாதம் :ஐயோ..நான் பிசி என்று ஒடிடுவர்...! ..!

கார்த்திகை மாதம் : காத்திருக்க வைத்து கழுத்தறுப்பர் ...!

மார்கழி மாதம் ; நீ ஒரு மார்க்கமாக இருக்கிறாய் என்று ஓடிடுவர்...!

( அப்போ எப்பதான் காதலிப்பது..? -அடுத்த சோதிடத்தில் )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன் பின்னாடியே வரதக் கவனிச்சுச்சு ... வீட்டுக்குள்ள போயி மூஞ்சி கழுவி ட்ரஸ் மாத்திக்கிட்டு வந்து பாத்தா அவன்

அங்கேயே நின்னுக்கிட்டு செல்போன

நோண்டிக்கிட்டு இருக்கான்....

ஒருவாரம் ஆயிருச்சு.... தினமும்

அதே கதை தான்.

பொண்ணு யோசிச்சது " அம்மாப்பாட்டச்

சொல்லிறலாமா?" "இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பாப்போம்..." ஒரு மாசம் தாண்டிருச்சு... கதை ரிப்பீட்டு... ஒரு நண்பியக் கூட்டிக்கிட்டு வந்து அவனக் காமிச்சுக் கதை சொல்லிச்சு அந்தப் பெண்...

பிரெண்டு " மூணு மாசம் வரைக்கும் பாரு...

பையன் நல்லா இருக்கான்.... வீட்டுல சொல்லிக்

கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்"

ன்னு சொல்லிச்சு...

பெண்ணு மனசுக்குள்ள ஒரு கிளுகிளுப்பு ஓட ஆரம்பிச்சிருச்சு.... நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை, குடும்ப விபரம் எல்லாம்

கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம்

தாண்டிருச்சு....

அப்பாம்மாட்டச் சொல்லிருச்சு.... அவங்களும்

கலியாணம் பேசி முடிச்சிரலான்னு

சொல்லி ஊர்லேர்ந்து பெரியவங்களக்

கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப்

போக ரெடியானாங்க....

சந்தோசம் தாங்காமப் பொண்ணு அன்னைக்குச்

காலைல கோயில் போயிட்டு வரும்போது

அவன் கிட்டப் போயி "ஒரு வருஷத்துக்கு மேலா என்ன பாலோ பண்ணுறீங்க... சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க.... ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான விஷயமெல்லாம் பண்ணலை.... அதுனால நான் வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க... உங்க வீட்டுல எந்தத் தடையும் சொல்ல மாட்டாங்கன்னும் கண்டு பிடிச்சிட்டேன்.... ஐ லவ் யூ டா கண்ணா" ன்னுச்சு...

அவன் அதுக்கு "அடாடா... நான் உங்க

வீட்டுவாசல்ல உங்களுக்காகக் காத்து நிக்கலை...உங்க வீட்டு WI-FI ல நீங்க பாஸ் வேர்டு போடலை... அதுனால ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன்..." ன்னு சொல்லிட்டு எடுத்தான் பாருங்க ஓட்டம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகருக்கு கவலை பட்டால் இளவயது ...

சுகருக்கு கவலை பட்டால் நரைவயது ....

‪#‎அவ்வளவு‬ தான் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டோரை கைது செய்ய திட்டம்

சுண்டல்: இதுக்கான முழுப்பொறுப்பையும் உணர்வாளர்களை அடையாளம் காண ஏதுவாக படங்கள் எடுத்து போட்ட தமிழ் தேசிய ஊடகங்களே ஏற்றுக்கணும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 1030 மில்லியன் ரூபா செலவில் கலாசார மையம்

கொய்யாலே கலாச்சார மையம் அமைக்கிறத்துக்கு முன்னாடி இருக்கிற கலாச்சாரம் சீரழியாம பாத்துக்கோங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார கொள்கைகளை பொறுத்த வரை மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்கை என்பது ஒன்றாக தான் இருக்க போகின்றது........ காரணம் கொள்கைகளை அரசியவாதிகளை விட அதிகாரிகள் தான் தீர்மானிப்பார்கள்...... மற்றது எப்பொழுதுமே காலம் காலமாக சிங்கள ராஜதந்திரத்துக்கு முன்னாள் தமிழர் தரப்பு தோல்வி அடைந்தே வந்திருக்கின்றது...... உலக நாடுகளை எப்பிடி எந்த வழியில் யார்மூலமாக உள்ளே போட வேண்டும் என்று அது காலம் காலமாக அறிந்தே வந்திருக்கின்றது...... ஜெயலலிதா அம்மையார் போல சுயமாக முடிவு எடுக்க கூடிய ஒருவர் மத்தியில் அழுத்தம் கொடுக்க இருந்தாலொழிய இது மாறப்போவது இல்லை..... தமிழர்களுக்கு வெறும் வீடுகள் கட்டி கொடுத்தலும் கொசுமருந்து அடிக்க கூட அதிகாரமே இல்லாத வெறும் முதலமைச்சர் பதவி வாங்கி கொடுத்தலும் தான் தமிழர்களின் தாகம் என்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நினைக்கும் வரை இது தொடரத்தான் போகின்றது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல்களில் அரசாங்கம் தோல்வியடையும்: ஐ.தே.கவின் ஆரூடம்

ஹ்ம்ம் இளவு காத்த கிளிங்க.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.