Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல்களில் அரசாங்கம் தோல்வியடையும்: ஐ.தே.கவின் ஆரூடம்

ஹ்ம்ம் இளவு காத்த கிளிங்க.....

 

 

இப்படிச்சொல்லக்கூடாது ராசா

இன்னும் புலிகள் இருக்கிறார்கள்

தமிழர்கள் இருக்கிறார்கள்

 

உதாரணமாக

புலத்திலுள்ளவர்களை  அழித்தால்

அடுதத தேர்தலில் இவர்களுக்குத்தானே  சிங்களம் வாக்குப்போடும்

கவனமாக இருங்கள் சுண்டல்

ஐ.தே. க அவுசில் ஆரம்பிக்கலாம்....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய தாயக உறவுகளுக்காக குரல் கொடுக்கும் புலம் பெயர் தமிழர்களை புலி என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கி அவர்களது நடவடிக்கைகளை ஒடுக்கி விடலாம் என்று சிங்களம் நினைக்கின்றது..... அதனால் தான் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஆனாலும் வெளிநாடுகள் எதுவும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சிங்களத்துக்கு விழுந்த மிகப்பெரிய அடி...... எத்தனை நாளைக்கு இவர்களது பொய்களும் புரட்டுக்களும் வெளிநாடுகள் மத்தியில் எடுபட போகின்றது....? தமிழர்கள் தங்கள் நீதிக்காக தங்கள் விடுதலைக்காக தங்கள் சுய நிர்ணைய உரிமைக்காக குரல் கொடுத்தால் அதற்க்கு பயங்கரவாதம் என்ற போர்வை போர்த்தி அடக்கலாம் என்று சிங்களம் கருதுகின்றது..... ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பதனை அது மறந்து விட்டது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆவரேஜான பிகருக்கு லவ்வரா இருக்குறதும்.. அம்மா ஆட்சியில அமைச்சரா இருக்குறதும் ஒன்னு... ‪#‎எடயிலகழட்டி‬ விட்டுறுவாங்க,...........!

:D:(:D

  • கருத்துக்கள உறவுகள்

22-1400742284-funny-images7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

23-1400821353-10153217-239815422885001-7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ என்ற ஒரு நல்ல அரசியல்வாதியில் மிகப்பெரிய எதிரி அவருடைய முன்கோபம்..... அரசியலில் அவரால் ஒரு நல்ல இடத்துக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கும் அது தான் காரணம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா கட்சியில இருக்கிறதும் ஒரு பொண்ணுக்கு காதலனா இருக்கிறதும் ஒண்டு தாங்க..... எப்ப எப்பிடி எப்போ கழட்டி விடுவாங்கன்னு யாருக்கும் தெரியா ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு கிராமத்தில் நின்று போராடிக் கொண்டிருந்தபோது ஒரு தாயிடம் சென்று சோறு கேட்டோம்...முதல் நாள் மறுத்தார்... இரண்டாம் நாளும் மறுத்தார்... என்னுடைய ஒரே பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போய் சண்டையில் சாகடித்துவிட்டீர்களே என்பதுதான் அவர் சோகம்...அந்த சோகம் தந்த கோபத்தில் எங்களுக்கு சோறு போட மறுத்தார்..

மூன்றாவது நாள் எங்களை அழைத்து அவரே சோறு தந்தார்... - போராளி ஒருவனின் குறிப்பில் இருந்து...

## இந்த தாய்மார்களே ஈழமெங்கும் நிறைந்திருக்கிறார்கள்... அடித்தாலும் பிடித்தாலும் அவர்கள் நாங்களாக இருந்தார்கள்....நாங்கள் அவர்களாக இருப்போம்... இடையில் விமர்சனம் எனும் பெயரில் உண்மையான மன உணர்வுடன் இல்லாது உங்கள் தனிப்பட்ட வன்மங்களை தீர்ப்பதற்காக விமர்சனம் என்னும் பெயரில் விடுதலைப்புலிகளை வெறுமனே கொன்றார்கள் கொன்றார்கள் என்று மட்டுமே சொல்லிக்கொண்டு திரிபவர்களே... :-

விமர்சனம் வேறு காழ்ப்புணர்ச்சி வேறு.. நீங்கள் செய்வது காழ்ப்புணர்வுடன் ஒருவர்மேல் துப்புவது... ஒருவர்மேல் கரிசனை கொண்டு விமர்சனம் செய்தால் அந்த விமர்சனம் விமர்சிக்கப்படுபவரை இன்னமும் பலமுள்ளவராக்குவதாக இருக்கும்.; ஆனால் நீங்கள் செய்வது விமர்சனம் என்னும் போர்வையில் நடந்த சம்பவங்களின் பின்னால் உள்ள நியாயங்களை,கதைகளை,வரலாறுகளை மறைத்து வெறுமனே கொன்றான் கொன்றான் என்று போராளிகளை கசாப்புக்கடைக்காறன் போல் காட்ட போடும் வெற்றுக்கூச்சலே அன்றி இதற்கு பெயர் விமர்சனம் அல்ல.. புலிகள் கொன்றனர் என்று சொல்லப்படும் கதைகளின் பின்னால் உள்ள கொல்லப்பட்டவர்களினால் கொல்லப்பட்டவர்களின் கதைகளை மட்டும் இவர்கள் எப்போதும் சொல்லாமல் சாதுரியமாக மறைத்துவிடுவார்கள்... சொற்களில் விளையாடும் மோசமான மாயக்காறர்கள் இவர்கள்.. இவர்களின் வார்த்தைகளில் நீதி இருக்காது..ஆனால் நீதிபோல் இருக்கும் மயக்கமே இவர்களின் அநீதியின் வெற்றி..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சுண்டல்

(பச்சை  இருப்பில் இல்லை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது காலமும் கணக்கில் கொள்ளப்படுவதை உணர்த்திவிட்டே செல்கிறது ஒவ்வொருவரின் மரணமும்.

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

பிகருக்கு கவலை பட்டால் இளவயது ...

சுகருக்கு கவலை பட்டால் நரைவயது ....

‪#‎அவ்வளவு‬ தான் ....

 

சுண்டல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகரும் ஈழத்தமிழர் விடுதலை விரோதியுமான "சோ" வைத்தியசாலையில் அனுமதியாம்.......

சீக்கிரமா நல்ல செய்தி வரணும்

.

.

.

.

.

.

.

... அட சீக்கிரமா குணமாகி வரணும் எண்டு சொன்னேன்பா.... எப்ப பாரு தப்பா நினைக்கிறது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமான பேருந்தில், ஆண்கள் இடித்தால் அலர்ஜியாகவும், பெண்கள் இடித்தால் எனர்ஜியாகவும் இருக்கிறது.:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோஜாவுக்கும் செம்பருத்திக்கும் என்ன வித்தியாசம்?

ரோஜாவுல செம்பருத்தி நடிக்கல., செம்பருத்தியில ரோஜா நடிச்சுருக்காங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெவ்வேறு மொழிகள் பேசும் உலகின் எல்லா உதடுகளுக்கும் ஒரே ஒரு பொது மொழி.. ‪#‎முத்தம்‬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் மகன்...

அண்ணனின் இரகசியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அப்பாவிடம் சொல்லிவிடாத தங்கை...

தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை, அவளைக் காக்கும் மதுரை வீரனாய் அண்ணன்...

தன் வரவுச் செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே ஒளித்துவிட்டு, எப்போதும் சிரித்த முகத்துடனே வரும் அம்மா...

உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும், பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும் புத்துணர்ச்சி அடையும் அப்பா...

சேலை முந்தானையில் முடிஞ்ச சில்லரைகளாலே பேரனின் பொருளாதார தேவைகளை தீர்த்துவைக்கும் பாட்டி...

நாங்கலாம் அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா...

இன்றைக்கும் இப்படியான நடுத்தரக் குடும்பங்கள் இருக்கின்றன. சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதற்கு, நாடு முழுவதும் வீசிய மோடி அலையே காரணம் என, கூறப்பட்டாலும், இதுவரை இல்லாத வகையில், பா.ஜ., 282 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சி அமைப்பதில், அமித் ஷாவின் பங்கு அளப்பரியது. வசதி படைத்த தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த அமித் ஷா, சிறு வயது முதலே, எளிமையை மிகவும் விரும்பினார். அதை கடைபிடிக்கவும் செய்பவர். இளம் வயதில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இவர், பலமுறை சிறை சென்றுள்ளார். கடந்த 2002ல், குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த போது, அமித் ஷா, மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதப்பட்டார். மாநில உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அயராத கட்சிப் பணியாற்றிய ஷா, 2010ல், குஜராத்தில் நடந்த சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டார். அதன்பின் நடந்த, இஷாரத் ஜகான், 'என்கவுன்டர்' வழக்கிலும், இவருக்கு தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில், அமித் ஷா குஜராத்தில் இருந்து வெளியேற வேண்டும் என, ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தர பிரதேசம் சென்ற ஷா, அம்மாநில பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். வாரணாசி தொகுதியில் மோடியை களம் இறக்கினால், மாநிலம் முழுவதும் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என, திட்டம் தீட்டினார். அவரது கணிப்பின் படி, மோடியும் களம் இறக்கப்பட்டதால், ஷா மற்றும் அவரது ஆதரவாளர்களின் அயராத உழைப்பால், பா.ஜ., உ.பி.,யில் மொத்த முள்ள, 80ல், 71 இடங்களை கைப்பற்றியது.

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக அத்வானி களமிறக்கப் பட்டிருந்தால்... பா.ஜ.க. இந்த வெற்றியை பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.
பா.ஜ.க. விலிருந்து அத்வானியை பிரதமர் கனவிலிருந்து ஒதுக்கி வைக்க... அக்கட்சியினர் நிறைய பாடுபட வேண்டி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதற்கு, நாடு முழுவதும் வீசிய மோடி அலையே காரணம் என, கூறப்பட்டாலும், இதுவரை இல்லாத வகையில், பா.ஜ., 282 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சி அமைப்பதில், அமித் ஷாவின் பங்கு அளப்பரியது.

 

மோடி அமைச்சரவையில் அமிஷ் ஷாவுக்கு இடமில்லை.

-தற்ஸ் தமிழ் பிரேக்கிங் நியூஸ்- :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அவருக்கு உத்தர பிரதேச அபிவிருத்தி பொறுப்புகள் தலைக்கு மேல் இருப்பதால் மோடி பாரத்தை விரும்பவில்லை ....போலும்....வாரணாசி தொகுதி இவரின் பொறுப்பில் மோடி விட்டு இருக்கின்றார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசாம கட்சியை எங்க கூட சேர்த்திருங்களேன்.. விஜயகாந்த்துக்கு யோசனை சொல்லும் பாஜக!

அப்புறம் பொன்னாரும்.....கணேசனும் அடிக்கடி கன்னத்தில வாங்கிக்கணும் பாருவால்லியா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நஷ்டத்தை தவிர்க்க கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர்!

சில தினங்களுக்கு முன் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் விபத்தில் சிக்கியபோது, கமல்ஹாசன் உடன் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்தார் நாசர். காலை ஏழு மணிக்கு அவர் மேக்கப்போட்டுக் கொண்டிருந்தபோது தொலைபேசியில் தகவல் வர, பதறியடித்துக் கொண்டு விரைந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட கமல் உடனடியாய் மாமல்லபுரம் காவல்துறை உயர் அதிகாரியை தானே தொடர்பு கொண்டு நாசருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அது மட்டுமல்ல, படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாசரின் மகன் ஃபைசல் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர்களிடம் ஆலோசனை செய்து, நாசருக்கு ஆறுதல் சொல்லி தேற்றியதோடு, அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஃபைசலின் உடல்நிலை பற்றி விசாரித்தவண்ணம் இருந்தார். இதை எல்லாம் தாண்டி நாசர் செய்த விஷயம்தான் திரையுலகில் அவரை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.

உத்தமவில்லன் படத்தில் நாசர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக செட் போடப்பட்டிருந்தது. மகனுக்கு ஏற்பட்ட விபத்தினால் துயரத்தில் இருக்கும் நாசரால் இப்போதைக்கு நடிக்க முடியாது என்பதால் செட்டை பிரிக்கச் சொல்லிவிட்டாராம் கமல். அதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டமாகும். இதைக் கேள்விப்பட்ட நாசர், செட்டை பிரிக்க வேண்டாம்.. ஹாஸ்பிடலிலேயே இருப்பது எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. நான் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்க்ஷேவை இந்தியாவில் அனுமதிப்பது தவறு -- திருமாவளவன்..

ஆமா ஆனா நீ மட்டும் இலங்கைக்கு போய் சந்திக்கலாம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா புறக்கணிப்பிற்கு முக்கிய காரணமே......வைக்கோ...ராமதாஸ்,விஜயகாந்த் போன்றவர்களை மத்திய அரசுடன் ஒட்டாமல் இருக்க செய்யவேண்டும்.......அது தான் இந்த காய் நகர்த்தல்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுஷ்மா என்றில்லை யாரு வந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் கொள்கை என்பது மாறபோவதே இல்லை........ஒரே வழி இந்தியாவை தாண்டி ஒரு பலமான ஷக்த்தியுடன் ஈழத்தமிழர் தரப்பு உறவை முன்னெடுப்பதே.... அதற்க்கு பல விட்டுக்கொடுப்புகளை தமிழர்தரப்பு செய்யவேண்டி இருக்கும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.