Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்; அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு

Featured Replies

[size=4]மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதவானை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் யாழ். நீதிமன்றின் முன்னால் ஒன்று கூடிய சட்டத்தரணிகள், அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

"வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்", "நீதிமன்றம் என்ன உனக்கு அமைச்சரவை வீடா?", "கிரிமினல் ரிஷாத்", "தூண்டாதே தூண்டாதே இனக் கலவரத்தைத் தூண்டாதே", "நீதித்துறையில் தலையிட நீ யார்?", "கைது செய் கைது செய் ரிஷாத்தை கைது செய்" உள்ளிட்ட கோஷங்களை அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக எழுப்பியும்,

நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை மாவட்ட நீதிவான் சிறிநிதி நந்தசேகரனின் வீடு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில், "எறியாதே எறியாதே கற்களை எறியாதே", "வீசாதே வீசாதே கோம்பைகளை வீசாதே", "ஊற்றாதே ஊற்றாதே கழிவு ஒயிலை ஊற்றாதே" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

மன்னார் நீதவானை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் மன்னார் நீதிமன்றமும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் சட்டத்தரணிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாமும் இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்க செயலாளர் கனகரட்ணம் கேசவன் தெரிவித்தார்.

மன்னார் நீதிமன்றத்தினை தாக்கிய குற்றவாளிகள் மீதும், நீதிவானை அச்சுறுத்திய அமைச்சர் ரிஷாட் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப் போராட்டத்தை தாம் முற்கொண்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இப் போராட்டம் நிறைவு பெறாது எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.[/size]

  • தொடங்கியவர்

[size=5]றிசாட்டை கைது செய்யக் கோரி கிளிநொச்சியில் திரண்ட சட்டத்தரணிகள்[/size]

[size=4]கைது செய் கைது செய் றிசாட்டை கைது செய் என்ற கோசத்துடன் கிளிநொச்சியில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதி மன்ற பணியாளர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.[/size][size=2]

[size=4]இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி நீதிமன்ற வளவிலுள்ள ஒன்று கூடிய சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் றிசாட்டுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பிரதான வீதிக்கு வருகை தந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால் சற்று நேரம் போக்குவதத்து தடைப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கோளையே நீதிக்கு அசிங்கம் செய்யாதே,மானிட எதிரி றிசாட்டே மதவெறிப் பொறியை மன்னாரில் வைக்காதே,மானிட நீதியை அரசியல் ஆக்காதே,றிசாட்டே உன் காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்து, நீதிக்கே சவாலா?, இன்று மன்னார் நாளை? போன்ற பதாததைகளை தாங்யிருந்ததோடு கோசங்களை முழங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்ப்பாணம, மன்னார் உள்ளிட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=2]

2(2).jpg

[/size]

[size=2]

[/size]

  • தொடங்கியவர்

[size=5]மன்னார் பிரச்சனைக்கு அமைச்சர் ஒருவரே காரணம்; ஜோன் அமரதுங்க குற்றச்சாட்டு[/size]

[size=4]மன்னாரில் நிலவும் பிரச்சினைக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவரே காரணம் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினஜோன் அமரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கடல் மாசமடைதல் தடுப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,[/size]

[size=4]மன்னார் நீதவானை மேற்படி அமைச்சர் அச்சுறுத்தியதாகவும் அப்பகுதி மீனவர்கள் தொடர்பான வழக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் எனக் கூறியதாகவும் இவ்வழக்கை நீதவான் முன்னெடுத்து தீர்ப்பு வழங்கினால் அப்பகுதியில் பிரச்சினை ஏற்படும் என நீதவானை தொலைபேசி மூலம் மேற்படி அமைச்சர் எச்சரித்ததாக அவர் தெரிவித்தார்.

இறுதியில் மக்கள் நீதிமன்றத்தை சூழ்ந்து அதை தீவைத்தனர். பின்னர் நீதவானை அவ்வமைச்சர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனது எச்சரிக்கையை புறக்கணித்தமைக்காக எனக் கூறினார்.

இதனால் சட்டத்தரணிகள் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் முடங்கியுள்ளது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூறிய கருத்தினால் அரசாங்கம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று மக்கள் நீதிமன்றங்களை எரிக்கிறார்கள். அரசாங்கம் முதலில் தரையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் அதன்பின் கடல் மாசமடைதல் தடுப்புச் சட்டத்தை பேண வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=532031245420722823

  • தொடங்கியவர்

[size=5]மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்டமைக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் கண்டனம்[/size]

[size=2]

[size=4]மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையிலும் நீதி அமைச்சர் என்ற வகையிலும் குறித்த சம்பவத்தினை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.[/size][/size]

[size=2]

[size=4]சம்பவம் தொடர்பில் சட்டத்திரணிகள் சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தினேன். அத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடன் நேரடியாக மன்னாருக்கு சென்று சட்டத்தரணிகளுடன் பேச்சு நடத்தவிருந்தேன் எனினும் சட்டத்திரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு செல்ல முடியாமலுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]இந்தச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி, சுமுகமான நிலையிலை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=244701244920738140[/size]

  • தொடங்கியவர்

[size=4]ஒரு தமிழ் நீதிபதிக்கே இந்த நிலைமை. நீதிபதிகளே வீதியில் இறங்கி தமது உரிமைகளுக்காக போராடும் நிலைமை. [/size]

[size=1]

[size=4]சாதாரண தமிழனின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் ![/size][/size]

கக்கீம் சும்மா பகிடி விடுகிறார். இதையெல்லாம் அரசு திட்டமிட்டு செய்கிறது என்பது தெரியாதவர் என்பதால அரசுடன் இணந்திருக்கிறார்.

மத உணர்வுகளை தூண்டி மத கலவர வன்முறைகளை ஆரம்பித்துவைக்கவென்று முஸ்லீம் பள்ளிவாசல் அடித்து நொறுக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க எதுவும் செய்யாத நீதியில்லா அமைச்சர் கக்கீம் தமிழ் பகுதி நீதிமன்றம் தாக்கப்பட்டதற்கு அங்கே போகமுடியவில்லை அதனால் எதுவும் செய்யமுடியவில்லை என்று அறிக்கைவிட்டு மழுப்புவது இன்றைய நூற்றாண்டின் மிகபெரிய பகிடி. வழக்கறிஞ்ஞர்களை ஏமாற்றி அவர்களின் பகிஸ்பரிப்பு போராட்டங்களை தடுத்து நிறுத்தி இது வெளி உலகிற்கு போகாதவாறு செய்யமுயலும் அரசின் சதிதான் கக்கீமின் இந்த பயணக்கதை. 6 மாதகாலத்திற்கு மேலாக பதியுதீன் மான்னார் ஆயரை மிரட்டி வருகிறார். நீதி அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் விசாரணைகள் என்ற பெயரரால் ஆயரை துன்புறுத்தி பதியுதீனுக்கு ஆதரவு வழங்கி வருவது கக்கீமுக்கு தெரியாததால கக்கீம் இது வரையில் ஆயரை போய்சந்திக்கவில்லை.

கக்கீமும் பதியுதீனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒரே கட்சியை இரண்டு பெயரில் வைத்திருப்பவர்கள். பதியுதீன்னும் கக்கீமும் ஒரே கொள்கையில்த்தான் நம்பிக்கை வைத்திருப்பவர்கள். பதியுதீன் தீவிரவாதி. கக்கீம் மிதவாதி. பதியுதீன் நேரத்திற்கே பயங்கரவாத அரசில் இணந்துவிட்டார். கக்கீம் சற்று பின்தான் இணைந்தார்.

கக்கீமுக்கும் பதுயுதீனுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லாதிருக்கும் போது இதில் கக்கீம் நடிக்கும் நடிப்பை யார் நம்ப வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்.

  • தொடங்கியவர்

[size=4]நீதித்துறையைக் காப்பாற்றுவது அனைவரதும் தலையாய கடமை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-20 11:23:41| யாழ்ப்பாணம்][/size][/size]

மன்னாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றங்களை தாக்கி சேதப்படுத்தியதான செயல் தாளா வேதனை தருவதாகும்.

இலங்கையின் வரலாற்றில் நீதிமன்றத்தை தாக்கும் அநாகரிகச் செயல்கள் முன்னர் நடந்த தான பதிவுகள் அருந்தலாக இருக்கின்றபோது, மன்னாரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் நீதி மன்றத்தை தாக்கியிருப்பது இந்த நாட்டில் நீதித் துறைக்கு இருக்கக் கூடிய ஆபத்தின் வெளிப்பாடு எனலாம். அரசு முதல் சாதாரண பிரஜைகள்வரை தமக் கான நீதியை-உரிமையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரேஒரு இடமாக நீதிமன்றங்களையே நம்பியிருக்கின்றனர். இந்நிலையில் நீதித்துறைக்கு எச்சரிக்கை செய்யும் வகையில், மன்னாரில் நீதிமன்றம் தாக்கப்பட்ட செயல் எக்காரணம் கொண்டும் ஜீர ணிக்கக் கூடியதோ அன்றி சமாளிக்கக் கூடி யதோ அல்ல.

உண்மையில் மன்னாரில் நீதிமன்றங்களைத் தாக்கி சேதப்படுத்தியவர்களே படுபயங்கரவாதிகள் ஆவர்.

எத்தனையோ நாடுகளில் உரிமைப் போராட் டங்களும் அது தொடர்பான கிளர்ச்சிகளும் நடந்துள்ளன-நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் நீதிமன்றங்கள் தாக்கப்பட்டதான பதிவுகள் மிகவும் குறைவு. ஆனால் மன்னாரில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி நீதிமன்றத்தை தாக்கியுள்ளனரெனில், அவர்களிடம் இருக்கக் கூடிய பின்புல சக்தி எத்துணை பலமானதென்பதை புரிந்துகொள்வதில் இடர்பாடுகள் இருக்க முடியாது.

நீதிமன்றத்தையே தாக்குகின்றவர்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் இருக்கக்கூடிய ஏனைய இன மக்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு ஏற் படக் கூடிய ஆபத்துக் குறித்தும் கவனம் கொள்ளா திருப்பது மிகவும் பயங்கரமான விளைவுகள் ஏற்பட வழிவகுத்துவிடும். எனவே மன்னாரில் நீதிமன்றங்களைத் தாக்கிய செயலை மிக உச்சமான பயங்கரவாதச் செயலாக இலங்கை அரசு கருதி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர நீதித்துறையை பாதுகாக்க இந்த நாட்டின் அனைத்துப் பொதுமக்கள் உட்பட சட் டத்துறை சார்ந்தவர்கள் அனைவரும் கடுமை யாகப் பாடுபட வேண்டும். இது விடயத்தில் சட்டத்தரணிகள் ஒற்றுமை யோடு செயற்படத்தவறினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.

http://www.valampuri...ws.php?ID=29498

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ் நீதவான் தாக்கப்பட்டுள்ளதுக்கு தனிய அகூதாவும், மல்லையூரானும் தான் குரல் கொடுக்க வேண்டியுருக்கு.

இதுவே... ஒரு, முஸ்லீம் தாக்கப்பட்டால்... ரோட்டிலை போற,நாய் எல்லாம் குரல் கொடுத்திருக்கும்.

... சில வாரங்களுக்கு முன், இங்கிருந்து மன்னார் சென்று வந்த ஓர் குடும்பத்திடம், அங்கிருக்கும் பாதிரியார் ஒருவர் சொன்னாராம் ...

... "84/85 களில் கிழக்கு மாகாணத்தில் (மூதூர் தொடக்கம் அம்பாறை வரை) எவ்வாறு தமிழ்-முஸ்லீம் கலவரங்களை மிகத்திட்டமிட்டு ஜேஆரின் ஆதரவுடன் அஸ்ரப் நடாத்தி பல தமிழ்க்கிராமங்களையே இல்லாமல் செய்தானோ, அதே நிலையை இன்று மன்னாரில் சிங்கள படைகளின் ஆதரவுடன் ரிசாத் பதியுதீன் செய்ய முற்படுகிறான்" ...

... கண்கூடாக தெரிகிறது இந்த கசாப்புகடைக்காரின் செயற்பாடுகள் ... எதை அடைய முற்படுகிறான் என்று!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஒரு முஸ்லீம் தாக்கப்பட்டிருந்தால்.. இங்க.. புலம்பெயர் நாடுகளில்.. எல்லாம்.. தீபம்.. ஆளாளா குந்த வைச்சு கருத்துக் கேட்டிருக்கும். ஏன் நம்ம யாழிலும்..கருத்துச் சொல்லி இருப்பினம். புலிய வசைபாடிட்டு தண்ணிய மென்று விழுங்கிட்டு எழும்பிப் போயும் இருப்பினம்..! :icon_idea::(

Edited by nedukkalapoovan

Minister Bathiudeen managed the “Mannar Operation” from the Thalladi Camp

Friday, 20 July 2012 06:45

Lanka News Web

Minister Rishard Bathiudeen has personally managed the operation to throw stones at the Mannar Magistrate’s Court and shout in filth at the Mannar Magistrate. He has worked from the Thalladi Army camp.

Bathiudeen’s supporters who were arrested on the 16th for allegedly throwing stones at the houses of Tamil fishermen in the Vedithalathivu fishing village in Mannar were presented before court on the 17th. The attack on the house was over a dispute on the ownership of part of the Vedithalathivu fishing village.

Sources said that Bathiudeen had arrived at the army camp on a helicopter received on the order of the Defence Secretary. The minister has sought permission to travel to Mannar by helicopter saying he would intervene in the matter. About 1,000 Muslim fishermen had been outside the Mannar Magistrate’s Court protesting. Attempts by the Mannar Police to set up a barricade to prevent the protestors from reaching the Magistrate’s Court had been thwarted by Bathiudeen. Sources from Mannar say that the protestors had received the opportunity to protest outside the courthouse afterwards.

The police had not attempted to stop the protestors from throwing stones at the Mannar Magistrate’s Court on a directive by HQI Thushara Daluwatte from the Mannar Police.

Sources said that the HQI was engaged in the business of selling fish to Kandy together with Bathiudeen’s supporters.

Bathiudeen’s supporters have started to pelt stones at the courthouse and some of the stones had hit police personnel as well. HQI Daluwatte had also been injured by a stone that had been thrown by the protestors. According to sources, the police had then fired tear gas to disperse the protestors.

The source who gave us the information said that both police and army personnel in the Mannar area were engaged in the fisheries business and even collected monies from lorries transporting fish at checkpoints.

வடமாகாண தேர்தல் வந்தால் கூட்டமைப்பை தோற்கவைக்க நீண்ட சதி. இதற்குள் "நெடுந்தீவு சிங்கபூர், யாழ்ப்பாணச்சந்தை சிங்கபூர்.. "கதையள் வேறை.

  • தொடங்கியவர்

[size=4]என்று பிரதம நீதியரசர்கள் சரத் சில்வா மற்றும் மொகான் பீரிஸ் [/size]ஆகியோர் இனவாதம் கொண்டவர்காளாக நீதியை கையில் எடுத்தனரோ அன்றே இலங்கையில் நீதி செய்த்துவிட்டது.

[size=1]

[size=4]ஒரு சட்டத்தரணியாக இல்லை ஒரு நீதி அமைச்சராக இல்லை ஒரு சிறுபான்மை இனத்தவராக ஹக்கீம் இருந்தும் சிங்கள இனவாதத்தை முதுகில் சுமப்பது இன்றையா நீதிக்கு கிடைத்த இறுதி சாவுமணி. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]அட்டன் நீதவான் நீதிமன்று முன் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்[/size]

[size=4]மன்னார் நீதிமன்றத்துக்கும் அதன் நீதிபதிக்கும் எதிராக நடைபெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று அட்டன் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் தமது கடமையில் இருந்து விலகி இருந்தனர். [/size]

[size=4]இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்; எந்த உயர்பதவியில் இருந்தாலும் அதைக் கவனத்தில் கொள்ளாது உடனடியாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அட்டன் நீதவான் நீதிமன்றின் முன் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். [/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39543

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.