Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருபத்தி நாலு பில்லியன் குறோணர்…

Featured Replies

[size=2][size=4]ரயில் வண்டி கோப்பன்கேகன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது..[/size][/size]

[size=2][size=4]ஐ.சி 4 வண்டி… பிரேக்கட்டையில் பழுதிருப்பதோ, நடு வழியில் எகிறிவிடுமென்றோ அந்த இருவருக்கும் தெரியாது… குடித்திருப்பார்கள் போலிருந்தது..[/size][/size]

[size=2][size=4]” நாட்டின் பிரதமர் பெயர் தெரியுமோ உனக்கு..? ”[/size][/size]

[size=2][size=4]” அவ்வளவுக்கு நான் முட்டாள் இல்லை கெல தொனிங் சிமித்..”[/size][/size]

[size=2][size=4]” இப்ப அவ எங்கே…? ”[/size][/size]

[size=2][size=4]” கோடை விடுமுறை… உல்லாசப் பயணத்தில இருக்கலாம்..”[/size][/size]

[size=2][size=4]” வருசத்தில எத்தினை தடவை உல்லாசப் பயணம் போறா.. நாலு தடவைகள்..? ”[/size][/size]

[size=2][size=4]” இருக்கலாம்..”[/size][/size]

[size=2][size=4]” றடிகல வென்ஸ்ர தலைவி… வில்லி சுவிண்டேல்…? ”[/size][/size]

[size=2][size=4]” அட நீ ஒண்டு… பாராளுமன்றமே நாலு மாதம் கோடை விடுமுறை எல்லாரும் கூண்டோடை பறந்திருப்பார்கள்… வேறை ஏதாவது இருந்தால் கேள்..”[/size][/size]

[size=2][size=4]” இந்த முறை எத்தினை லெச்சம் சனம் கோடை விடுமுறைக்கு வெளிநாடு போயிருக்கு..? ”[/size][/size]

[size=2][size=4]” கடைசியா அறிஞ்சனான் ரெண்டிலை இருந்து மூண்டு லெச்சமெண்டு..”[/size][/size]

[size=2][size=4]” ஒரு குடும்பம் கோடை விடுமுறைக்காக சன்னலுக்கு வெளியாலை வீசுற காசு எவ்வளவு தெரியுமோ..? ”[/size][/size]

[size=2][size=4]” சராசரி 30.000 குறோணர்..”[/size][/size]

[size=2][size=4]” எல்லாத்தையும் கூட்டினா என்ன வரும்…”[/size][/size]

[size=2][size=4]” 24 பில்லியன் குறோணர் வருது…”[/size][/size]

[size=2][size=4]” டென்மார்க்கின் பொருளாதார பிரச்சனையை வெல்ல எவ்வளவு பணம் பற்றாக்குறையா இருக்குது செல்லு பாப்பம்…? ”[/size][/size]

[size=2][size=4]” 24 பில்லியன் குறோணர்..”[/size][/size]

[size=2][size=4]” அப்பிடியெண்டால்… ஒரு வருஷம் கோடை விடுமுறையை எல்லாரும் நிறுத்தினால் நாட்டின் பொருளாதார பிரச்சனை முடிஞ்சுதே..”[/size][/size]

[size=2][size=4]” அடடே… சபாஷ்..! எல்லாரும் ஒரேவித தியாகம் செய்தால் அதன் பெயர் சொலிடாரிட்டி… இது வென்ஸ்ர கட்சி கொள்கையல்லோ…? ”[/size][/size]

[size=2][size=4]” சிவப்பு அரசாங்கமும் இப்ப வென்ஸ்ர பக்கம்தானே நிக்குது..? ”[/size][/size]

[size=2][size=4]” சொலிடாரிட்டி பேசுற ஆக்கள் ஏன் அப்பிடி நடக்கினமில்லை..? ”[/size][/size]

[size=2][size=4]” கடைசியா நீ என்ன சொல்ல வாறாய்…? ”[/size][/size]

[size=2][size=4]அவன் கேள்விகளை அடுக்கினான்…[/size][/size]

[size=2][size=4]” எதுக்கு 12 நிமிஷம் அதிகம் வேலை செய்ய வேணும்…? ”[/size][/size]

” எதுக்கு ஏழை பேதையளை வேலையாலை நிப்பாட்ட வேணும்..? ”

” எதுக்கு டவ் பெங்க காலத்தை ரெண்டு வருஷமாக குறைக்க வேணும்..? ”

[size=2][size=4]” ஒரேயொரு வருஷம் கோடை விடுமுறைக்கு கொட்டுற காசை கொட்டாமல் விடுங்கோ.. பொருளாதார நெருக்கடி தானா தீரும்…”[/size][/size]

[size=2][size=4]மற்றவன் எழுந்து நின்று கைகளை தட்டி விசிலடித்தான்..[/size][/size]

[size=2][size=4]ஏய் சத்தம் போட்டு விசிலடிக்காதை ஆராவது அரசியல்வாதி கேட்டால் தங்கட கட்சி யோசனையா எடுத்து முழக்கியிடுவான்.. மண்டையில சரக்கில்லாத பயலுகள்… ஜாக்கிரதை..[/size][/size]

[size=2][size=4]” கான்ட்ஸ் அப்… பொலிற்றி..”[/size][/size]

[size=2][size=4]இருவரும் கைகளை உயர்த்துகிறார்கள்…[/size][/size]

[size=2][size=4]பைத்தியக்கார ஆஸ்ப்பத்திரியில் இருந்து தப்பியவர்கள் என்று யாரோ சலசலப்பது மெல்லியதாகக் கேட்டது…[/size][/size]

[size=2][size=4]பின்புற இருக்கையில்…..[/size][/size]

[size=2][size=4]கந்தையா அண்ணை நடத்தும் ஏலச் சீட்டெடுத்துக் கொண்டு, சிறீலங்கா புறப்பட்டிருக்கும் பென்சனிஸ்ற் சிங்கார வேலுவுக்கு அந்த ரெண்டு பேரும் கதைச்ச டேனிஸ் விளங்காவிட்டாலும் அது ரெண்டும் பைத்தியங்கள் என்பது விளங்கியதால் கிலீரிட்டு சிரித்தார்…[/size][/size]

[size=2][size=4]ரயில் நின்று மறுபடியும் ஊ..வென்று ஊளையிட்டு நகர்ந்தது…[/size][/size]

[size=2][size=4]-----------------------------------------------------[/size][/size]

[size=2][size=4]கி.செ.துரை 21.07.2012 சனி மாலை[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=110393[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=2][size=4]பின்புற இருக்கையில்…..[/size][/size]

[size=2][size=4]கந்தையா அண்ணை நடத்தும் ஏலச் சீட்டெடுத்துக் கொண்டு, சிறீலங்கா புறப்பட்டிருக்கும் பென்சனிஸ்ற் சிங்கார வேலுவுக்கு அந்த ரெண்டு பேரும் கதைச்ச டேனிஸ் விளங்காவிட்டாலும் அது ரெண்டும் பைத்தியங்கள் என்பது விளங்கியதால் கிலீரிட்டு சிரித்தார்…[/size][/size]

[size=2][size=4]ரயில் நின்று மறுபடியும் ஊ..வென்று ஊளையிட்டு நகர்ந்தது…[/size][/size]

[size=2][size=4]-----------------------------------------------------[/size][/size]

[size=2][size=4]கி.செ.துரை 21.07.2012 சனி மாலை[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=110393 [/size]

[size=4]இன்று கோடைகால விடுமுறையை கழிக்க சிறிலங்கா செல்லும் அன்பர்களை பற்றி கூறியுள்ளார் கதை எழுத்தாளர். [/size]

[size=4]ஐரோப்பாவில் இருக்கும் இன்றைய பொருளாதார நிதிநிலைமையை வைத்து எழுதப்பட்ட இந்தக்கதை ஒரு முக்கிய விடயத்தை எம்மவர்களுக்கு கூறுகின்றது. [/size]

எழுத்தாளர் விடுமுறையை விட்டுவிட சொல்கிறார் போலிருக்கிறது. இதனால் பலரின் தொழில் பாதிக்கப்படும். நாட்டின் சேமிப்பு முதலீடுகளுக்கு தேவையானதுமட்டுமாக இருக்க வேண்டும். மக்கள் செலவளிக்க மறுத்தால் பொருளாதார பின்னடைதலுக்கு(recession) வழி வகுக்கும்.

  • தொடங்கியவர்

எழுத்தாளர் விடுமுறையை விட்டுவிட சொல்கிறார் போலிருக்கிறது. இதனால் பலரின் தொழில் பாதிக்கப்படும். நாட்டின் சேமிப்பு முதலீடுகளுக்கு தேவையானதுமட்டுமாக இருக்க வேண்டும். மக்கள் செலவளிக்க மறுத்தால் பொருளாதார பின்னடைதலுக்கு(recession) வழி வகுக்கும்.

[size=4]அமெரிக்காவும் பல நாடுகளும் செலவழித்தும் பொருளாதாரம் முன்னேறவில்லை. ஏன் என்ற கேள்வி உள்ளது. அதற்கு மக்களினதும் நாட்டினதும் பாரிய கடனே காரணம் எனக்கூறப்படுகின்றது. [/size]

[size=4]இந்தக்கதை எனக்கு விளங்கியது எவ்வாறு எனில் டெனிஸ் நாட்டு மக்கள் எவ்வாறு தமது கடனை இல்லாமல் செய்யலாம் எனப்பார்க்கின்றனர். ஒருவழி எல்லோரும் விடுமுறையை தவிர்த்தால் அந்தப்பணம் கடனை மீள செலுத்த காணும். பொருளாதார அணுகுமுறையில் அது சாத்தியமல்ல. ஆனால் இங்கே அங்கு வாழும் எம்மவர்கள் அதைப்பற்றி தெரிந்தோ தெரியாமலோ தமது வழமையான பயணங்களை செய்கின்றனர். பாதிப்பு வரும்பொழுது அதில் எம்மவர்களும் கூட அதிகம் பாதிக்கப்படலாம், ஆனால் அதற்குரிய தயார்படுத்தல் இல்லை என்பதே கதை. [/size]

Edited by akootha

[size=4]அமெரிக்காவும் பல நாடுகளும் செலவழித்தும் பொருளாதாரம் முன்னேறவில்லை. ஏன் என்ற கேள்வி உள்ளது. அதற்கு மக்களினதும் நாட்டினதும் பாரிய கடனே காரணம் எனக்கூறப்படுகின்றது. [/size]

இதை நாம் "ஒரு பேச்சுக்காக" மட்டும்தான் கூறுகிறோம். ஆனால் பொருளாதர வளர்ச்சியில் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொது(கனடா தவிர) அமெரிக்கா நல்ல முன்னேற்றம் காட்டியிருக்கு. கடந்த ஆண்டில் யப்பானும் கனடாவும் மட்டும் தான் முன்னேறிய நாடுகளில் அமெரிக்காவை விட நல்ல வளர்ச்சி கண்டிருக்கின்றன. கனடா மட்டும்தான் கடந்த உலக பொருளாதார வீழ்சியில் சிக்குப்படாத நாடு. அதை கணக்கில் எடுப்பது தவறு. யப்பான் 20 ஆண்களுக்கு மேல் எந்த முன்னேற்றமும் காட்டமுடியாமல் தவித்தநாடு. அதன் கடந்த வருடத்தின் பிரதான வளர்ச்சி, சுனாமி, வெள்ளம் போன்றவற்றால் அடைந்த பின்னடைவை மீளப்பெற்றமையே. அமெரிக்காதான் விழுந்த பின் விரைவில் திரும்பி எழும்பத்தொடங்கியநாடு. உண்மையாக இந்தியாவும் சீனாவும் இன்னும் தொடர்ந்து வீழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வழமையில் 2.0% -3.0%கிட்ட இருக்கும் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரவளர்ச்சி மெல்லிய வீழ்ச்சியில் 0% கீயே செல்கின்றன. 13% சில ஆண்டுகளில் காட்டிய சீனாவின் பொருளாதரம் 5% கிட்ட விழுந்த பின்னும் 0% மேலே நிற்கின்றது.

சில விடையங்களை தேர்தல் காலத்தில் மக்களுக்கு விளங்க வைப்பது கஷ்டம். GM, Chrysler போன்றவையும், விழுந்த வங்கிகளும், AIG(முழுவதாக இல்லை) யும் அரச கடனால் பயன்பெற்று மீள வந்துவிட்டன. இவைகள் ஓபாமாவின் முதல் இரண்டு வருடங்களில் செய்த அரச உதவிகள். ஆனால் காங்கிரசு முதலிரண்டு வருடங்களுக்குள் கை மாறிவிட்டதால் ஒபாமாவின் FDR போன்ற திட்டங்கள். நிலத்தை விட்டு எழும்பவில்லை. ஒபாமா கேட்டபடி எந்த புதிய அடிப்படை கட்டுமாணத்திற்கும் காங்கிரஸ் பணம் கொடுக்கவில்லை. செய்திகளில் ஓபாமா செலவழித்துவிட்டதாக கூறி தேர்தலை கொண்டு போகிறார்கள். ஒபாமா, சீனா 40 புதிய அதிவேக புகையிரதப்பாதைகளை கட்டுவதாயும் அது அமெரிக்காவை விட சீனா மிக கூடியளவு மேல் கொண்டு சென்றுவிடும் என்று கூறி அமெரிக்காவில் 3 மட்டும் போட பணம் கேட்டவர். அது கூட நடை பேறவில்லை.

அமெரிக்காவின் கடன், ஒபாமா காலத்தில் கூடியிருப்பதாக கூறும் குற்றச்சாட்டுதல் தேர்தலுக்கு மட்டுக்கும்தான் உபயோகப்படும். அமெரிக்காவின் கடன் இரண்டாம் உலகப்போரிலிருந்து தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது. இது எல்லா எல்லா அதிபர்களின் காலங்களிலும் நடை பெற்றது. ஆனால் ஒபாமா இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய "கிறேட் டிபிறேசனுக்கு" அடுத்த பெரிய பொருளாதார விழுச்சி நிலையில் நாட்டை ஏற்றவர். ஆனால் கிறேட் டிபிறேசனிலிருந்து மீள FDR போட்ட திட்டங்கள் மாதிரி எதையும் போட காங்கிரஸ் இடமளிக்கவில்லை.

காசை செலவளிக்கும் போது பொருளாதாரம் மேலும் விழுகின்றதென்பது குடியரசுக்கட்சியின் வாதம். ஆனால் 2008 லிருந்து பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருக்கிறது. மேலும் அவர்கள் ஒபாமா காசையும் செலவளித்தார் என்கிறார்கள். அப்போது குடியரசுக்கட்சியின் வாதம் பிழை என்பதும், காசை செலவளிக்கும்போது பொருளாதாரம் வளர்கிறதென்பதுதான் பெறப்படும் முடிவுகள். ஒபாமா காசை செலவளித்ததால் பொருளாதாரம் விழுமாயின் இன்று பொருளாதாரம் 2008க்கும் கீழே சென்றிருந்திருக்க வேண்டும். மேலும் புஸ்சின் பணக்காரருக்கான விசேட வரிவிலக்குகள் இருந்த காலத்தில்தான் அமெரிக்க பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லத்தொடங்கியது.(நாடு கடனில் இருக்கும் போது கொடுக்கப்படும் பணககாரருக்கான வரிவிலக்குகள் மேலதிக கடன்களாகத்தான் கணிக்கப்பட வேண்டும்). பணதை செலவளிக்க தேவை இல்லாத செல்வந்தர்கள் மீது வரிவிதித்து பணத்தை அடிப்படைக் கட்டுமாணங்களில் செலவிடுவது பணம்படைத்த முதலீட்டாளர்களுக்குத்தான், பொருளாதார வளர்ச்சி மூலம், அதிக லாபம் ஈட்டிக்கொடுக்கிறது.

மேலும் முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் புள்ளிவிபரங்கள் மிகவும் நம்பத்தகுந்தவை என்பதால், மத்தியவங்கிகளுக்கு இதுவரையில் பணவீக்கத்தை கட்டுபடுத்த பெரிய சிரமங்கள் இருப்பதாக தெரியவில்லை. ரூஷ்சியா சோவியத் வீழ்சிக்கு பிறகும், ஜேர்மனி சண்டைக்குப் பிறகும் நல்ல பொருளாதார திட்டங்களால் அரசுகளால் கட்டுப்படுத்த வலுவில்லாத காலங்களில் எழுந்த பணவீக்கங்களை மிக சாதகமாக மாற்றி நாடுகளை முன்னேற்றியுமிருக்கிறார்கள்.

கடனை, liquidity ratio, Times Interest Earned Ratio (= (net income + interest) / interest.) ,Debt To Income Ratio, Loan-to-Value Ratio வைத்துதான் தீர்மானிக்கவேண்டும். இலங்கை அரசுமாதிரி பொறுப்பில்லாமல் படும் கடன்களாக இந்த முதலீடுகளை நாம் கருத முடியாது. அதாவது இன்று ஒருஅரசு முதலிடும் பணம் 2% வட்டியும் 5% லாபமும் கொண்டிருக்காக இருந்தால் அந்த அரசு முன்சென்று அந்த முதலீட்டை செய்ய வேண்டும். இதை பழையகடன்கள் 5% வட்டியுடனும் 4% லாபத்துடனும் இருப்பதால் இனிமேல் கடன் படக்கூடாது என்று சொல்லி தள்ளி வைக்க கூடாது.

அமெரிக்கா பணம் செலவளித்தும் முன்னேறமுடியாமல் இருப்பதாக சொல்வது குடியரசுக்கட்சியின் தேர்தல் புரளி. புஸ்சின் பின்னர் பொருளாதாரம் அதளபாதாளத்தில் இருந்தது. அந்த மீட்சிக்கு எவ்வளவு பணம் செலவளித்தார்களோ அதற்கேற்ற வேகத்துடன் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. "அஞ்சு பணத்து குதிரை ஆறு கடக்க பாயாது". பிரச்சனை, வாயைகட்டி வயத்தை கட்டி பழக்கமில்லாத அமெரிக்கர் தேர்தல்களில் ஒரு போதும் விளக்கங்களை கேட்க ஆயத்தமாக இல்லை. நல்ல உதாரணம், கனேடிய மக்கள் மல்றோனி கொண்டுவந்த GSTயை விளங்கிக்கொள்ளாமல் அவரை தோற்கடித்தார்கள். அதுவும் அதன் பின் கனடா காட்டும் தொடர் வளர்சிக்கு ஒரு காரணமாக காட்டப்படுகிறது. அதே மாதிரி கடந்த தேர்தலில் பழமை பேண் கட்சி வந்ததிற்கு காரணம் பொருளாதாரம் என்பதிலும் பார்க்க, இரண்டு பிரதான கட்சிகளையும் மக்கள் வெறுத்து புதிய ஜனநாயக கட்சிக்கு அதி தீவிரமாக வாக்களித்தால் ஆகும். அதாவது உண்மையில் அரசியலில் மக்கள் நினைக்கும் அவதியில் ஒரு நாட்டு பொருளாதாரம் மாறமாட்டாது. அவர்களுக்கு அதை விளங்க வைக்க முயலாமல் கட்சிகள் குறுக்குப் பாதைகளை தேடி தேர்தலை வெல்கின்றன என்பதுதான் உண்மை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4] மல்லையூரான்,[/size]

[size=4]ஒபாமா காலத்தில் காங்கிரசின் உதவியுடன் கடன் உச்ச எல்லையை பலதடவைகள் கூட்டியுள்ளார். இதுதான் பொருளாதார வளர்ச்சிக்கும் மந்தநிலைக்கும் காரணம் என்பது எனது வாதம்.[/size]

[size=4]பணத்தை செலவழித்து, அது த்ரிளியன்களில், உருவாக்கப்பட்ட வேலைகள் மிகவும் செலவு கூடியவை. அதேவேளை கடனோ பல பல த்ரிளியன்களில். பொருளாதாரம் வளர்ந்தாலும் அதனைவிட கடனின் வளர்ச்சி அதிகம். [/size]

[size=4]இந்தக்கடனை யார் எவ்வளவு காலத்தில் கட்ட முடியும்? இதனால் ஒரு சந்ததியே வளர்ச்சியற்று போய்விடும். [/size]

[size=4]அமெரிக்கா ஐரோப்பாவை விட நல்ல நிலையில் உள்ளது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அமெரிக்காவே உலக பார்வையில் இருக்கும். அமெரிக்கா பலம் கொண்ட நாடு. இந்த சவால்களை தாண்ட முடியும். ஆனால், இந்த முறை கடினமானதாக இருக்கும். [/size]

[size=4]மல்லையூரான்,[/size]

[size=4]ஒபாமா காலத்தில் காங்கிரசின் உதவியுடன் கடன் உச்ச எல்லையை பலதடவைகள் கூட்டியுள்ளார். [/size]

இது காங்கிரசின் அரசியல் நடவடிக்கை. இதில் முழுக்க முழுக்க பொருளாதார நிபுணத்துவம் பாவிக்க படுவதில்லை. இருந்தும் குடியரசுக்கட்சியின் காங்கிரஸ்த்தான் உயர்த்தி முடிக்கிறது.)

[size=4]இதுதான் பொருளாதார வளர்ச்சிக்கும் மந்தநிலைக்கும் காரணம் என்பது எனது வாதம். [/size]

பல கடன்கள் போர் செலவிற்கு பட்டவை. அவை வருமானம் தரமட்டா. அதற்காக இப்போது முதலீடுகளுக்கு வேண்டிய கடனை தடுத்துவைக்க முடியாது. இது வருமானம் தரும் கடன்.

[size=4]பணத்தை செலவழித்து, அது த்ரிளியன்களில், உருவாக்கப்பட்ட வேலைகள் மிகவும் செலவு கூடியவை. அதேவேளை கடனோ பல பல த்ரிளியன்களில். பொருளாதாரம் வளர்ந்தாலும் அதனைவிட கடனின் வளர்ச்சி அதிகம். [/size]

இது கணக்கியலில் காணப்படவேண்டிய விடை. காங்கிரசின் முன் வைக்கும் புதிய திட்டம் வட்டிகழிய ஆதாயம் காட்டுகிறதா இல்லை என்பதில் தான் தங்கியிருக்கிறது. (கணக்கியலின் படி நட்டம் காட்டும் முதலீட்டு வரவுசெலவு திட்டத்தை காங்கிரசின் முன் வைக்கமாட்டர்கள் என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்)

[size=4]இந்தக்கடனை யார் எவ்வளவு காலத்தில் கட்ட முடியும்? இதனால் ஒரு சந்ததியே வளர்ச்சியற்று போய்விடும். [/size]

[size=4]கிறீஸ் போன்ற நாடுகள் பொது நல கொடுப்பனவுகளுக்கு கடன் பட்டு கொடுத்து வந்தார்கள். ஆனால் ஒபாமாவின் கடன்கள் முதலீடுகள். அதாவது ஆமை முயலை ஓடி முந்தாது (பொதுநல கொடுப்பனவுகளுக்கு படும் கடன்). ஆனால் ஆமை 1மைல் முன்னின்றால் என்ன 10மை முன்னின்றால் என்ன முயல் ஒருநாள் ஒடி ஆமையை முந்தும்(முதலீட்டுக்கடன்கள்) எனவே அவற்றை தடுத்து வைக்க கூடாது.[/size]

[size=4]அமெரிக்கா ஐரோப்பாவை விட நல்ல நிலையில் உள்ளது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அமெரிக்காவே உலக பார்வையில் இருக்கும். அமெரிக்கா பலம் கொண்ட நாடு. இந்த சவால்களை தாண்ட முடியும். ஆனால், இந்த முறை கடினமானதாக இருக்கும். [/size]

[size=4]ந்தமுறை ஏற்கனவெ அது தெரிகிறது. அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி மேலே வரவில்லை. இது தேர்தலுக்கு பெரிய பிரச்சனையாகவே இருக்கப் போகிறது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.