Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாயவை ஏமாற்றியது யார்? இதோ குற்றச் செயல்களின் பட்டியல்!

Featured Replies

நாட்டில் குற்றச்செயல் அலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்தில் எந்தவிதமான உண்மையுமில்லையென்றும் பொலிஸ் மாஅதிபரிடம் பெற்றுக் கொண்டுள்ள தரவுகளின்படி இதுவொரு சாதாரண நிலைமையென்றும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குற்றச்செயல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஊடக நிலைய அதிகாரிகள், செய்தி ஆசிரியர்கள், மற்றும் அமைச்சுக்களின் ஊடக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபரிடம் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையில் நோக்கும் போது நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எது எவ்வாறாக இருப்பினும் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளுக்கமைய கடந்த 11 வருடங்களில் இடம்பெற்ற பெண்கள் துஷ்பிரயோக தரவுகள் பின்வருமாறு

வருடம் துஷ்பிரயோகங்கள்

2001 1080

2002 1047

2003 1162

2004 1292

2005 1253 பொலிஸ் தரவுகளுக்கமைய 1540

2006 1152 பொலிஸ் தரவுகளுக்கமைய 1463

2007 1151 பொலிஸ் தரவுகளுக்கமைய 1397

2008 1217 பொலிஸ் தரவுகளுக்கமைய 1582

2009 1201 பொலிஸ் தரவுகளுக்கமைய 1624

2010 1324 பொலிஸ் தரவுகளுக்கமைய 1854

2011 1450 பொலிஸ் தரவுகளுக்கமைய 3 மாதங்களுக்கு 471

இந்தத் தகவல்களுக்மு அமைய ஒரு நாளைக்குக் குறைந்தது 14 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை மாத்திரமல்லாது இக்காலப் பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய 2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் வருமாறு,

ஆண்டு சிறுவர் துஷ்பிரயோக எண்ணிக்கை

2000 1557

2001 1370

2002 1436

2003 1762

2004 2796

2005 2824

2006 2355

2007 2724

2008 3196

2009 2054

2010 4029

மேற்கூறப்பட்டுள்ள தகவல்களுக்கமைய 2011ம் ஆண்டில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் வழங்கப்படவில்லை.தரவுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் இருந்த போதிலும் வெளியிடப்படாமைக்கு காரணம் 5000 க்கும் மேற்பட்ட துஷ்பிரயோகங்கள் பதியப்பட்டுள்ளமையாகும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இவ்வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தொலை பேசியினூடாக சுமார் 20,000 முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையக தகவல்களின்படி 2011 ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் 720 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றுள் 22 சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களாகும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக பார்த்தோமானால் இலங்கையில் ஒவ்வொரு 13 மணித்தியாலங்களுக்கொரு தடவையும் ஒரு கொலைச் சம்பவம் இடம்பெறுகிறது

8 மணித்தியாலத்துக்கொரு தடவை பெண்கள் துஷ்பிரயோகத்துக்குள்ளாகின்ற அதே நேரம் 8 மணித்தியாலங்களுக்கொரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் தலைமைமையகத் தரவுகளுக்கமைய 2010 ஆம் ஆண்டில் இலங்கையில் பதியப்பட்டுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை 57,560 ஆகும். அதாவது ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கொரு தடவையும் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. யுத்தம் நிலவிய 2009 ஆம் ஆண்டில் பதியப்படவுள்ள குற்றச்செயல்களின் எண்ணிக்கை 57,340 ஆகும்.

இந்த தகவல்களுக்கமைய இந்நாட்டில் பிரச்சினைகள் குறைந்துள்ளதா கூடியுள்ளதா என்பது கடுகளவு புத்தியுள்ளவருக்கும் விளங்கும். எனினும் நாட்டில் குற்ற அலை காணப்படவில்லையென்று காட்டுவதற்காக கோட்டாபயவுக்கு பொய்யான தரவுகளை வழங்கி அவரை பொலிஸ்மாஅதிபர் ஏமாற்றியுள்ளமை தெளிவாக தெரிகிறது. அப்படியில்லாவிட்டால் பொலிஸ்மா அதிபரையும் யாரோ ஏமாற்றியுள்ளார். அப்படியும் இல்லாவிட்டால் இவர்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

[size=4]இங்கே தொடர்ந்தும் ஏமாறுவது தமிழினமாக இருக்கக்கூடாது.[/size]

பயங்கரவாதி கோத்தபாயவை யாரும் ஏமாற்றவில்லை!

இந்தியக் காட்டுமிராண்டிகளின் துணையுடன் பயங்கரவாதி கோத்தபாய தான் சர்வதேசத்தை ஏமாற்ற முயலுகிறான்!

அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்தியக் காட்டுமிராண்டிகளை நம்பும் வரை ஏமாந்து கொண்டே இருப்பார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.