Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் நீதிமன்றில் நடந்தது என்ன? உண்மையை விளக்கி சட்டத்தரணிகள் அறிக்கை

Featured Replies

[size=5]மன்னார் நீதிமன்றில் நடந்தது என்ன? [/size]

[size=5]உண்மையை விளக்கி சட்டத்தரணிகள் அறிக்கை[/size]

[size=4]

நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்;

மன்னார் நகரசபையில் கண்டனம்[/size]

[size=4]மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு மன்னார் நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size]

[size=4]மன்னார் நகரசபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 19 ஆம் திகதி அதன் தலைவரான எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது. அதன் போது நகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினரான ரட்ணசிங்கம் குமரேஷ் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.[/size]

[size=4]அங்கு அவர் உரையாற்றும் போது, அமைதி வழியெனக் கூறித்தொடங்கிய போராட்டம் வன்முறையில் முடிந்ததற்குச் சில அரசியல் வாதிகளின் சூழ்ச்சியே காரணமாகும்.[/size]

[size=4]இரண்டு மீனவ சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட இந்தப் பிணக்கு தொடர்பாக பேசித்தீர்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தீர்க்கக் கூடியவர்களை அணுகித் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.[/size]

[size=4]மேலும் நீதிமன்றத்தின் கட்டளைகளை இரு சமூகத்தினரும் கடைப்பிடித்திருக்க வேண்டும். இதனை ஏற்க விருப்பமில்லாது விட்டால் இது தொடர்பாக மேன்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் எதையுமே கடைப்பிடிக்காது நீதியையும், நீதிமன்றத்தையும், நீதிவானையும் அவமதிக்கும் விதத்தில் அமைந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்தையே தாக்கும் அளவுக்கு எல்லை மீறியுள்ளது.[/size]

[size=4]எனவே மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். என்று தெரிவித்தார். [/size]

[size=4]இலங்கையின் நீதித்துறையையே உலுக்கிவரும் மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் குறித்து உண்மையை விளக்கும் அறிக்கை ஒன்றை மன்னார் மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. [/size]

[size=4]40 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் கையொப்பம் இட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை நேற்றுமுன்தினம் மாலை வெளியானது.[/size]

[size=4]அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:[/size]

[size=5]18-07-2012 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு சாரார் கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த தகவலின்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் உப்புக்குளத்தைச் சேர்ந்த முஸ்ஸிம் மக்கள் என்றும் அவர்கள் ஜோசப்வாஸ் நகர் மக்களோடு ஏற்பட்ட பிணக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிந்தோம்.

சக சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றத்துக்கு வெளியில் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தி அவர்களை கலைக்குமாறு பொலிஸாரிடம் கோரியிருந்தனர். பல நிமிடங்கள் கழிந்தும்கூட பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இரு சட்டத்தரணிகள் மன்றுக்கு வெளியில் சென்று அவதானித்த வேளையில் கனம் நீதிபதி அவர்களை தனிப்பட்ட முறையில் நிந்தனை செய்யும் தூசண வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டு நீதிபதியை அநாகரிகமாக சித்தரிக்கும் வகையில் பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்கார்கள் ஏந்திக்கொண்டிருந்ததைக் கண்டனர்.

உடனடியாக நீதிபதியின் கவனத்துக்கு அதனைக் கொண்டு சென்றனர். இதனால் நீதிபதி மன்றின் நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொண்டார். இவை நடைபெறும் பொழுது காலை 11 மணியிருக்கும்.

இதன் பிற்பாடு நீதிபதி தமது உத்தியோகபூர்வ அறைக்குச் சென்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் இருவரையும் அழைத்து கூட்டத்தினைக் கட்டுப்படுத்தி அவர்களைக் கலைக்கும்படி கட்டளையை வழங்கினார்.

15 நிமிடங்கள் கழிந்த நிலையிலும்கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்படவில்லை. எனவே நீதிபதி இரண்டாவது முறையாகவும் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து மீண்டும் தனது கட்டளையைச் செயற்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கூட்டத்தினர் கலைந்து பின்வாங்கிச் சென்றனர். பிற்பாடு வன்செயலில் ஈடுபட்டு முதலில் பொலிஸாருக்கும் பின்னர் நீதிமன்றக் கட்டடத்துக்கும் கற்களை வீசித் தாக்கத்தொடங்கினர்.

இதனால் சில பொலிஸார் காயமுற்றும் மேல் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றக் கட்டட ஜன்னல் கண்ணாடிகளும் நொருக்கப்பட்டன. நீதிமன்றப் பெயர்ப்பலகைகளும் உடைக்கப்பட்டன.

இந்த வேளையில் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி கல்லெறிக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க தனது அறையை விட்டு வெளியேறி மாவட்ட நீதிபதியின் உத்தியோகபூர்வ அறைக்குள் பிரவேசித்தார்.

நிலைமை மோசமடைந்து போய்க்கொண்டிருப்பதால் அதனைக் கட்டுப்படுத்த கலகக்காரர்களைச் சுட்டாவது கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமடைந்தமையினாலும் கலகக்காரர்கள் நீதிமன்றுக்கு உள்ளே வந்து தாக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டமையாலும் நீதிபதி நீதிமன்ற பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வந்து, கலகம் விளைவிப்பவர்களை முழங்காலுக்குக் கீழ் சுட்டாவது கைது செய்யும்படி ஓர் உத்தரவை பொலிஸாருக்குப் பிறப்பித்தார்.

நீதிபதியின் அந்த உத்தரவைப் பொலிஸார் நடைமுறைப்படுத்தாது நீதிபதி அவர்களை உத்தியோகபூர்வ அறைக்குச் செல்லும்படியும் தாம் கும்பலைக் கைது செய்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்காததன் காரணத்தாலேயே நீதிபதி மன்னார் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்தார். இராணுவத்தினர் சுமார் 12.50 மணியளவில் வந்துசேர்ந்து கலகக்காரர்களை விரட்டியடித்தனர்.

கூட்டம் கலையத் தொடங்கியதன் பிற்பாடு, ஏற்பட்ட சேதங்களை சுமார் ஒருமணியளவில் நீதிபதியும், சட்டத்தரணிகளும் பார்வையிட்டனர். அந்த வேளையில் நீதிமன்ற அலுவலகத்துக்கு முன்பாக இருக்கின்ற வேப்பமரத்தடியில் நின்றிருந்த நீதிபதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதற்குப் பதில் அளித்த நீதிபதி, "அமைச்சரே! உங்களுக்கு நான் ஏற்கனவே சொன்னேன்தானே வழக்குத் தொடர்பாக என்னுடன் கதைக்க வேண்டாம் என்று. இனி இவ்வாறு தொலைபேசி எடுப்பீர்களேயானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக்கூறி தொலைபேசித் தொடர்பை துண்டித்ததை அங்கிருந்த நாம் கண்டோம்.

இதன் பின்னர் சட்டத்தரணிகளாகிய நாங்கள் நீதிபதியிடம் யார் தொலைபேசியில் உரையாடியது எனக் கேட்டோம். அமைச்சர் ரிஷாத் பதியுதீன்தான் அழைப்பை எடுத்தார் என்றும், அவர் இதே போன்று அதற்கு முந்தைய தினமும் தனக்கு அழைப்பை எடுத்து "நீர் வழங்கிய தீர்ப்பினால் மன்னார் நகரம் பற்றி எரியப்போகின்றது'' எனக்கூறியிருந்தார் எனவும் தெரிவித்தார்.

அன்றைய தினம் எடுத்த அழைப்பில் தான் ஏற்கனவே சொன்னது மாதிரியே மன்னார் நகரம் பற்றி எரிவதைப் பார்த்தீரா என்று தன்னிடம் அமைச்சர் வினவினார் என்றும் நீதிபதி தெரிவித்தார். [/size]

[size=4]நடந்த விடயங்கள் இவ்வாறிருக்க சில ஊடகங்கள் உண்மையான சம்பவங்களை திரிவுபடுத்தி, கூட்டம் ஆரம்பத்தில் வீதியை மறித்து வீதியில் அமர்ந்திருக்கும் படங்களை எடுத்தும், இடையில் நடந்த விடயங்களை முற்றுமுழுதாக மறைத்து விட்டு, நீதிபதி பெண்களை நோக்கி கையைக்காட்டி அவர்களைச் சுட்டுப் பிடிக்கும்படி உத்தரவிடும்படியான கட்டளையை வழங்குவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.[/size]

[size=4]உண்மையிலேயே ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இடம்பெற்ற சம்பவங்களை சட்டத்தரணிகளாகிய நாங்கள் நேரடியாகவே கண்டிருக்கின்றோம். அப்படியிருக்க உண்மைக்கு புறம்பாக ஒரு சில ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்திகள் வெளியிடுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். [/size]

[size=4]இனிமேலும் இவ்வாறான திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று அந்த ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது. [/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?id=690731260425634378[/size]

  • தொடங்கியவர்

[size=4]சமாதான காலத்திலும் உண்மைக்கும் பொய்யுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.[/size]

[size=4]இதே நாட்களில் 1983 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இன்றும் கொல்லப்படுகின்றனர். அன்றும் நீதி செத்தது. இன்று நீதிபதிகளும் நீதிமன்றங்களும் செத்துக்கொண்டு இருக்கின்றன.[/size]

[size=4]அன்று உலகநாடுகளில் தமிழர்கள் பெரிதாக [/size][size=4]இருக்கவில்லை. உண்மைகள் உலக அர்னகில் சம்பந்தப்படவ்ர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இன்று உலகெங்கும் பரந்து உள்ளோம். உண்மைகளை தெரியப்படுத்தவேண்டியது எமது கடமைகளில் ஒன்று.[/size]

Edited by akootha

இத்தகைய தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ய வேண்டும்!

நாம் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான பெரும்பாலான தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது வழக்கம்!!!

அவை உரிய நேரத்தில் ஆதாரமாக உதவும்!

அதுபோல நாம் இருக்கும் சூழலில் சிங்கள பயங்கரவாதிகளின் அத்து மீறல்களை, நாசூக்காக கைத் தொலைபேசி மூலம் வீடியோ எடுத்து அவற்றை பொருத்தமான தமிழ் தரப்பினரிடம் கொடுக்கும் பழக்கத்தையும் தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும்!

பொறுப்புள்ள, மூளையுள்ள சட்டத்தரணிகள் நீதிமன்ற தாக்குதல்களை வெறுமனே வேடிக்கை பார்க்காமல் கைத்தொலைபேசிகளில் பதிவு செய்திருக்கலாம்!

  • தொடங்கியவர்

இத்தகைய தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ய வேண்டும்!

நாம் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான பெரும்பாலான தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது வழக்கம்!!!

அவை உரிய நேரத்தில் ஆதாரமாக உதவும்!

அதுபோல நாம் இருக்கும் சூழலில் சிங்கள பயங்கரவாதிகளின் அத்து மீறல்களை, நாசூக்காக கைத் தொலைபேசி மூலம் வீடியோ எடுத்து அவற்றை பொருத்தமான தமிழ் தரப்பினரிடம் கொடுக்கும் பழக்கத்தையும் தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும்!

பொறுப்புள்ள, மூளையுள்ள சட்டத்தரணிகள் நீதிமன்ற தாக்குதல்களை வெறுமனே வேடிக்கை பார்க்காமல் கைத்தொலைபேசிகளில் பதிவு செய்திருக்கலாம்!

[size=4]உண்மை. புலம்பெயர் மேற்குலக நாடுகளில் கைத்தொலைபேசியை கையில் கொண்ட சாதாரண குடிமகனும் ஒரு ஊடகவியலாளன், ஒரு நடமாடும் சாட்சி. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகுமாறு பதியுதீனுக்கு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் முகமாகவே அவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மன்னார் மஜிஸ்திரேட் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டும் வழக்கு ஒன்றை 7 மூத்த சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளதாக கூறப்படுகிறது.

அதேவேளை இந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணிகளின் குடும்பத்தினருக்கு எந்த விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு ஏதாவது முறைப்பாடு கிடைத்தால் வழக்கு முடிவடையும் வரை அமைசர் விளக்கமறியலில் இருக்க நேரும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்படுள்ளதாக அந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

[size=4]அன்றும் நீதி செத்தது. இன்று நீதிபதிகளும் நீதிமன்றங்களும் செத்துக்கொண்டு இருக்கின்றன.[/size]

இத்தகைய தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ய வேண்டும்!

நாம் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான பெரும்பாலான தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது வழக்கம்!!!

அவை உரிய நேரத்தில் ஆதாரமாக உதவும்!

அதுபோல நாம் இருக்கும் சூழலில் சிங்கள பயங்கரவாதிகளின் அத்து மீறல்களை, நாசூக்காக கைத் தொலைபேசி மூலம் வீடியோ எடுத்து அவற்றை பொருத்தமான தமிழ் தரப்பினரிடம் கொடுக்கும் பழக்கத்தையும் தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும்!

பொறுப்புள்ள, மூளையுள்ள சட்டத்தரணிகள் நீதிமன்ற தாக்குதல்களை வெறுமனே வேடிக்கை பார்க்காமல் கைத்தொலைபேசிகளில் பதிவு செய்திருக்கலாம்!

தமிழ் மக்கள் தற்கால தொழில்நுட்ப வசதிகளை புத்தி சாதுரியத்துடன் பயன்படுத்தினால் பௌத்த சிங்கள அரச மற்றும் பிக்குப் பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பை சிறப்பாக ஆவணபடுத்தலாம்.

தேவையில்லாத விளம்பரம் வில்லங்கத்தை கொண்டுவரும் என்பதை புரிந்து காதோடு காதாக இவற்றை செய்தால் எதிரிகள் முடக்கப்படுவார்கள். பதிவுசெய்யும் போது தேவையில்லாத விடயங்கள் (முகங்கள்) சிக்காது தூர நோக்குடன் செய்யவேண்டும். இவ்வாறு சேகரிக்கும் ஆதாரங்களை பயன்படுத்துபவர்களும் தமக்கு கிடைக்கும் மூலங்களை காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்து செயல்பட்டால் எதிர்காலத்தில் சகல மக்களும் எதிரியின் அட்டகாசத்தை அடக்க பெருமளவு மக்களின் ஆதரவு கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.