Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ மாநாடு - ஏன்..? எதற்கு..? பின்னணி குறித்து ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

டெசோ மாநாடு - ஏன்..? எதற்கு..? பின்னணி குறித்து ஈழதேசம் பார்வையில்..!

போன தடவை டெசோ மாநாடு இந்திய அரசியலை பேசியது. இந்த தடவை டெசோ மாநாடு சர்வதேச அரசியலை பேசப் போகிறதா..? அதாவது 80 களின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட டெசோ மாநாடு, இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த பல்வேறு ஆயுத குழுக்களை முன்வைத்து, அவர்களின் கோரிக்கையான சுதந்திர ஈழம் என்ற கருத்தாக்கங்களுக்கு முதன்மை கொடுக்க வேண்டிய கால கட்டத்தில் தி.மு.க. நிர்பந்திக்கப்பட்டன அல்லது அதை நோக்கி தள்ளப்பட்டன.

அப்பொழுது தமிழக மக்களின் பொதுப் புத்தியில், இரண்டு கழக உடன்பிறப்புகளின் பொதுப் புத்தியில் எம்.ஜி.ஆர்.தமிழர்களின் வாழ்வுக்காக, அவர்களின் ஏழ்மையை போக்குவதற்காக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், மு.கருணாநிதியோ தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றே, என்று இருந்த காலத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகள்.,டெலோ, இ.பி.ஆர்.எல்.எப்.,பிளாட்.,ஈரோஸ் மற்றும் ஏனைய இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வழியே தமிழீழம் சரியானதே என்ற கொள்கைக்கு, போராட்டத்திற்கு கருணாநிதியால் துவக்கப்பட்டதே டெசோ மாநாடு என்று கருத வேண்டிய அவசியம் உண்டு என்றாலும்,அதையும் தாண்டி அந்த டெசோ மாநாடு மு.கருணாநிதிக்கு இந்திய அரசியலில் நுழையும் ஒரு வாய்ப்பாக அமைந்தன, அல்லது அமையுமாறு உருவாக்கப்பட்டன.

முதல் டெசோ மாநாட்டில் சகோதர சண்டையை உருவாக்கியவர் நம்ம மு.கருணாநிதி அவர்கள் தான். விடுதலைப் புலிகளை ஒதுக்கி டெலோ- வை ஆதரித்து இந்த சகோதர சண்டைக்கு அடிக்கோல் நாட்டினார். மறுபக்கம் எம்.ஜி.ஆர்.அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க, தமிழக தலைவர் சிறி சபாரத்தினத்தை ஆதரிக்க, சகோதர சண்டையை சென்னையில் துவக்கி வைத்தார் மு.க., அவர்கள். முதல் டெசோ மாநாடு நடக்கும் சமயத்தில் திரு.எம்.ஜி.ஆர். என்ற தி.மு.க.வின் மாற்று அரசியல் சக்தியாக இருந்திருக்காவிட்டால் அதாவது திரு.எம்.ஜி.ஆர்.உயிருடன் இல்லாமல் இருந்திருந்தால், மு.க.வின் இலங்கை அரசியல் என்னவாக இருந்திருக்கும்..? ஒன்று அணைத்து ஆயுதம் தாங்கி போராடிக் கொண்டிருக்கும் விடுதலை இயக்கங்களை இணைத்து, தற்போதைய கருணா,டக்லஸ் மற்றும் பிள்ளையான்கள் உருவாக விடாமல் செய்திருப்பார். ஒரு இருபது வருடங்கள் திரு.மு.கருணாநிதியின் இந்த ஆசையை,விருப்பத்தை நிறைவேற்றாமல் செய்தவர் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் அவர்கள்.

முதல் டெசோ மாநாட்டின் மூலம், இலங்கை தமிழர்களின் அரசியலை கையில் எடுத்த தி.மு.க.வின் தலைவர், தென்னிந்தியா மற்றும் வட இந்திய அரசியல் தலைவர்களின் நட்பை பெற்றார். காங்கிரஸ் அல்லாத ஏனைய மாநிலக் கட்சிகளின் இணக்கத்தை, தேசிய அரசியலுக்கு எதிரான மாநில உரிமைகளை முன்னெடுத்த வட இந்தியாவின் மாநில கட்சிகளின் உருவாக்கமும், அவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பும் என்று ஒன்று சேர, இந்த டெசோ மாநாட்டை பயன்படுத்திக் கொண்டார் மு.கருணாநிதியும் அவரின் வலக் கையான முரசொலி மாறனும். இந்த முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்தது. எண்பதுகளின் இறுதியில் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதியின் முக்கிய பங்கும் முடிவும் இருந்தன அமைந்தன.

இந்திய அரசியல் அரங்கில் புதிதாக நுழைந்த லாலு பிரசாத் யாதவ்,முலாயம் சிங், ஓம் பிரகாஷ் சௌதாலா என்ற ஜாட் தலைவர்கள்,பஞ்சாப் மாநிலத்தின் சிங்கு அரசியல் தலைவர்கள்,சந்திரபாபு நாயுடு, சரத் யாதவ்,ராம் விலாஸ் பஸ்வான், கன்னட கவுடாக்கள் என்று ஒரு புதிய கூட்டணி உருவாகி, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, பல சுகபோகங்களை அனுபவித்து, ஏனையவர்கள் எல்லாம் காணாமல் போக, எஞ்சிய ஒரு சில தலைவர்கள் சில ஆயிரம் கோடிகளில் வாழ்ந்து கொண்டிருக்க, தி.மு.க.வின் தலைவர் ஆசியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் ஆனார். இவையெல்லாம் நடந்தவை முதல் டெசோ மாநாட்டில் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அப்பொழுது திரு.மு.க.வின் தலைவர் வயது அறுபதுகளில். கிடக்கட்டும் இவைகள் அனைத்தும், இவைகள் நடந்து முடிந்தவைகள்.

தற்பொழுது, இரண்டாவது டெசோ மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் எவ்வாறேனும் நடந்து விடும் என்று தான் தோன்றுகிறது. டெசோ மாநாடு அறிவிப்பிற்கு முன், ஈழம் குறித்து வைக்கோவும், திரு சீமானும் முன்னணியில் இருந்தார்கள்.தமிழக முதல்வர் ஜெ.அம்மையார் சட்டசபையில் தீர்மானம் போடுமளவிற்கு புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் இலங்கை அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார். பிறகு தமிழகத்தில் போராடிவரும் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் இந்த டெசோ மாநாட்டு அறிவிப்பால் சற்று கவலை தோய்ந்த முகங்களோடு தான் உலா வருகின்றன.

டெசோ மாநாட்டில், தனி ஈழ கோரிக்கைகள் பற்றிய தீர்மானங்கள் இல்லை. ஆனால் தனி ஈழம் தீர்மானம் வேண்டுமா வேண்டாமா..? என்பது குறித்து பேசுவோம் என்கிறார் மு.க.அவர்கள். திரு.பழ.நெடுமாறன் அவர்களும் திரு.சீமான் அவர்களும் இந்த டெசோ மாநாடு ஒரு பெரும் மோசடி என்று கூறி, கருணாநிதியின் அரசியல் முதிர்ச்சிக்கு, அரசியல் சூழ்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த டெசோ மாநாட்டிற்குப் பிறகு வைக்கோ அவர்கள் அரசியல் செய்வது பெரும் சோதனையாக மாறிவிடும் என்ற நிலை உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எதற்கு இதற்கெல்லாம் கருத்து சொல்லிக் கொண்டு என்று கொட நாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ஜெ அம்மையார் ஒரு புறம் இருக்க,

திரு.வைக்கோ அவர்களுக்கு ஒரு செய்தியை திரு.மு.க., அவர்கள் குழுமத்தினர் கசிய விட்டுள்ளன.தற்போதைய கட்சி பதவியில் இருக்கும் பேரா.அன்பழகன் அவர்களின் பதவியை திரு வைக்கோ அவர்களுக்கு வழங்கி விட்டு, ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைத்து விடுவது என்று. திரு வைக்கோ அவர்களும் திரு பேரா.அன்பழகன் பதவியை வழங்கி விட்டால் வேண்டாம் என்றா சொல்லிவிடுவார்..? இவையெல்லாம் கசியவிடப்பட்ட செய்திகள் தான் என்றாலும் தற்போதைய வைக்கோ அவர்களின் எண்ண ஓட்டம், வரும் தேர்தலில் ப.ஜா.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது தான்.

நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டில் ஆப்பிரிக்கா ஆசிய,ஆஸ்திரேலிய, ஐரோப்பிய மனித உரிமை இயக்க தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். வட இந்திய தலைவர்கள் பரூக் அப்துல்லா தொடங்கி வலது சி.பி.ஐ. ன் தலைவர்கள் வரை கலந்து கொள்வார்கள். தீர்மானம் உண்டு என்றால் உங்கள் பின்னால் வருவோம் என்று தா.பாண்டியன் கூறியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கன்னட தலைவர்கள் தொடங்கி மலையாள அரசியல் தலைவர்கள் என்று ஒரு பெரும் கூட்டணிக்கான, அகில இந்திய அளவில் ஒரு மூன்றாவது இடது சாரி தன்மை கொண்ட, பிராந்திய அதாவது மாநில கோரிக்கைகளை,சுயாட்சிகளை முன் நிறுத்தும், திறந்த ஜனநாயக கூட்டணியாக, காங்கிரஸ் அல்லாத ப.ஜா.க.அல்லாத கூட்டணிக்கான அஸ்திவாரத்தை அமைக்க முற்படுகிறது கார்ப்பரேட் கட்சியான தி.மு.க. என்றால் மிகையில்லை.

ராம கிருஷ்ணர்கள் எப்பொழுதும் தடையாக இருக்கிறார்கள் என்று இடது கம்யூனிஸ்ட் கட்சியை பேச்சுவார்த்தைக்கு ஆசை வார்த்தை காட்டுகிறார் மு.கருணாநிதி அவர்கள்.ஆக, இந்த டெசோ மாநாட்டில் வீரபாகு கருணரத்னே முதல் பெரியவர் சம்மந்தன் என்று தொடங்கி விஸ்வலிங்கம் மற்றும் செல்வராஜா என்று தமிழ் தேசிய கூட்டணியினர் மேடைகளில் முழங்குவார்கள். ஈழ யுத்தம் குறித்தும், முள்வேலி முகாம்கள் குறித்தும், போர்க்குற்றம் குறித்தும், குறிப்பாக இலங்கையின் நேரடியான சாட்சியான பல்வேறு உண்மைகளும் இந்திய அரங்கில் டெசோ மாநாட்டில் பேசு பொருளாகும். காணாமல் போக இருந்த காங்கிரஸ் கட்சியை முட்டுக் கொடுத்து தூக்கிய அதே மு.கருணாநிதி அவர்கள், இந்த டெசோ மாநாட்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை சிதறடித்து விடுவாரா..? என்று மாநாட்டிற்கு பிறகு நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டின் மூலம் ஏனைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி உள்ளார் மு.கருணாநிதி என்றால் என்னே...அவரின் அரசியல் சாணக்கியத் தனம் அல்லது அரசியல் சித்தாந்தம் என்று கருதலாமா..? அனைவருக்கும் தெரியும். முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு மூல காரணம் மு.க.என்று. இந்த டெசோ மாநாடு தன் சுய அரசியல் லாபத்திற்கு என்று. 2 g வழக்கில் இருந்து முழுமையாக வெளிவருவதற்கு தி.மு.கழகம் தன்னால் ஆன அணைத்து வித பகீரித முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று. என்றாலும் இந்தியாவிற்கு வெளியே, இந்தியாவிற்கு உள்ளே மனித உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளன இலங்கையில் என்று கூறப் போகிறது தி.மு.கழகம் டெசோ மாநாட்டில்..? முள்ளு வேலிகளில் இருக்கும் ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறுவதின் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கப் போகிறார் மு.கருணாநிதி என்று கருதலாமா..?

முடிந்தால் மூன்றாவது கூட்டணி, இல்லையேல் தற்காப்பாக காங்கிரஸ் கூட்டணி தொடரும் வரும் தேர்தலில் என்ற நேற்றைய அறிவிப்பு. டெசோ மாநாடு வெறும் கண்துடைப்பு, பெரும் மோசடித்தனம், அரசியல் சுய லாபம் என்று எத்துனை விதமாக கூறினாலும், ஒரு பக்கம் வயிற்றுப் பசியுடன் எந்நேரமும் துடித்துக் கொண்டிருக்கும் முள்ளு வேலி முகாம் மக்களும் சிறையில் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற ஈழ மக்களுக்கு ஏதாவது ஒரு வழியை திறக்கும் என்றே நம்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்த சக்தி தி.மு.வின் மு.கருணாநிதிக்கு உண்டு என்று கொள்ளலாமா..?

இறுதியாக,டெசோ மாநாடு குறித்த எதிர்பார்ப்பு தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் கட்சியினரிடமும், உலகத் தமிழர்களிடமும், தமிழ் தேசிய உணர்வாளர்களிடமும், புலம் பெயர் ஈழத் தமிழர்களிடமும் நாடித் துடிப்பை, இதய துடிப்பை அதிகரித்த வண்ணம் உள்ளன என்றால் நம்ப முடியுமா..உங்களால்..?

சங்கிலிக்கருப்பு

[size=4]யாருமே கண்டுகொள்ளாத ஒரு மாநாட்டை ஏதோ ஒரு பெரிய மாநாடு போல சித்தரிக்கிறது கட்டுரை .[/size][size=1]

[size=4]அல்லது இந்த மாநாட்டிற்கு பரபரப்பை மற்றும் விளம்பரம் தேட இது போன்ற உத்திகள் கையாள படுகிறதோ என ஐயம் எழுகிறது.[/size][/size]

[size=1]

[size=4]௧. பழ நெடுமாறனும் சீமானும் அரசியல் சூழ்ச்சி தெரியாமல் பின்னுக்கு தள்ள படுகிறார்கள் . ஹா ஹா ஹா[/size][/size][size=1]

[size=4]எழ முடியாத அளவு மு க வை எப்போதோ இருவரும் சேர்ந்து பின்னுக்கு தள்ளி விட்டு விட்டனர். இனி அம்மாவாக பார்த்து ஆணவ ஆட்சி புரிந்தால் ஒழிய திமுக முன்னுக்கு வரவே முடியாது . [/size][/size]

[size=1]

[size=4]௨. வைகோவுக்கு அன்பழகன் பதவி . அவர் வேணாம்னா சொல்லுவார் . ஹா ஹா ஹா[/size][/size][size=1]

[size=4]பதவிக்கு ஆசை படுபவர் வைகோ என கட்டுரை கூறுகிறது .[/size][/size]

[size=1]

[size=4]௩. தமிழின உணர்வாளர்களின் தமிழ் மக்களின் இதய துடிப்பை இந்த மாநாடு எகிற வைத்துள்ளதாம் . இருக்கலாம் . கோபத்தாலே ஒழிய எதிர்பார்ப்பில் இல்லை .[/size][/size]

[size=1]

[size=4]௪. ஆமா இதெல்லாம் ஒரு கட்டுரை . இத படிச்சிட்டு வேல வெட்டிய விட்டுட்டு கருத்து வேற எழுதிகிட்டு இருக்கேன் . நான் ஒரு முட்டாள் பய . அது சரி நம்ம பேரு கூட பைத்தியம் தானே .[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தமிழ் பைத்தியத்தை கண்டத்தில் மகிழ்ச்சி அடிகடி இந்த பக்கம் வாங்கையா :D

[size=4]யாருமே கண்டுகொள்ளாத ஒரு மாநாட்டை ஏதோ ஒரு பெரிய மாநாடு போல சித்தரிக்கிறது கட்டுரை .[/size]

[size=1][size=4]அல்லது [/size][/size][size=1][size=4]இந்த மாநாட்டிற்கு பரபரப்பை மற்றும் விளம்பரம் தேட இது போன்ற உத்திகள் கையாள படுகிறதோ என ஐயம் எழுகிறது.[/size][/size]

[size=1][size=4]௧. பழ நெடுமாறனும் சீமானும் அரசியல் சூழ்ச்சி தெரியாமல் பின்னுக்கு தள்ள படுகிறார்கள் . ஹா ஹா ஹா[/size][/size]

[size=1][size=4]எழ முடியாத அளவு மு க வை எப்போதோ இருவரும் சேர்ந்து பின்னுக்கு தள்ளி விட்டு விட்டனர். இனி அம்மாவாக பார்த்து ஆணவ ஆட்சி புரிந்தால் ஒழிய திமுக முன்னுக்கு வரவே முடியாது . [/size][/size]

[size=1][size=4]௨. வைகோவுக்கு அன்பழகன் பதவி . அவர் வேணாம்னா சொல்லுவார் . ஹா ஹா ஹா[/size][/size]

[size=1][size=4]பதவிக்கு ஆசை படுபவர் வைகோ என கட்டுரை கூறுகிறது[/size][/size][size=1][size=4] .[/size][/size]

[size=1][size=4]௩. தமிழின உணர்வாளர்களின் தமிழ் மக்களின் இதய துடிப்பை இந்த மாநாடு எகிற வைத்துள்ளதாம் . இருக்கலாம் . கோபத்தாலே ஒழிய எதிர்பார்ப்பில் இல்லை .[/size][/size]

[size=1][size=4]௪. ஆமா இதெல்லாம் ஒரு கட்டுரை . இத படிச்சிட்டு வேல வெட்டிய விட்டுட்டு கருத்து வேற எழுதிகிட்டு இருக்கேன் . நான் ஒரு முட்டாள் பய . அது சரி [/size][/size][size=1][size=4]நம்ம பேரு கூட ("தமிழ்"-)பைத்தியம் தானே[/size][/size][size=1][size=4] .[/size][/size]

சந்தேகமே தேவை இல்லை தமிழ் பைத்தியம்.

மீண்டும் தமிழ் பைத்தியத்தை கண்டத்தில் மகிழ்ச்சி அடிகடி இந்த பக்கம் வாங்கையா :D

[size=4]உள் நுழைவு கிடையாதே தவிர தினமும் வந்து மேம்போக்கா வசிப்பேன் நண்பரே . இது போல எடக்கு மடக்கா யாராவது பதில் எழுதினா உள் நுழைவேன் . மற்றபடி என் மேலுள்ள அன்புக்கு நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சி நன்றி நண்பரே [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.