Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வரவிருப்பது இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சி

Featured Replies

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பிலான அதிருப்தி வலுத்துவரும் தற்போதைய சூழ்நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் க்வாங்லீ அடுத்தவாரம் கொழும்பு வரவிருப்பது இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்தவாரம் இலங்கைக்கு வரும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட்ட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், நாட்டின் முக்கியமான பல இடங்களுக்கும் அவர் விஜயம் செல்லவுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்பாடல்களை மேம்படுத்துதல், பரஸ்பர படைப்பயிற்சி ஒத்துழைப்புகள் உட்பட்ட பல விடயங்கள் குறித்து சீனப் பாதுகாப்பு அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது பேச்சுகளை நடத்தவுள்ளார்.

சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்த இலங்கை விஜயம் இந்தியாவை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் சீனாவின் தலையீடு குறித்து அதிருப்தியடைந்து அதுதொடர்பில் இராஜதந்திர ரீதியில் எதிர்ப்புகளை வெளிக்காட்டிவரும் இந்திய அரசு, தற்போது சீனப் பாதுகாப்பு அமைச்சரின் வருகையால் கடும் சினமடைந்திருப்பதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பான அதிருப்தியை எதிர்வரும் காலங்களில் இந்தியா இராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்துமென இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து மேலும் அறியமுடிகின்றது.

  • தொடங்கியவர்

[size=4]சீனாவின் நெருக்கம் ஊடாகவே எமது மக்களின் 'நியாயங்கள்' இந்திய கொள்கை வகுப்பாளர்களின் 'கவனத்திற்கு' வரலாம். அப்படி வரும்பொழுது முழுமையாக டெல்லியை வைத்தே சிங்களத்திற்கு எதிரான நடவடிக்களை செய்விக்கவேண்டும். மொத்தத்தில் கொழும்பையும் டெல்லியையும் கொழுவிட்டு விட்டு நாம் வேடிக்கை பார்க்கவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாத்துப்பா றொம்ப அதிர்ச்சி அடியாதிங்க இப்ப தான் மகிந்த கவுன்ட் டவுன் ஆரம்பமாகி இருக்கு.... இது ஜஸ்ட் ஸ்டார்டிங் கண்ணா போக போக இன்னும் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் நண்பர்கள் எனும் அமைப்பை வடக்குக் கிழக்கில் உருவாக்கினால் தமிழர் விரோததேசம் இந்தியா இன்னமும் காண்டாகுவான். இப்போதைய ராஜதந்திர நகர்வு அதுவே. கூடியவிரைவில் வடக்குக் கிழக்கில் உதயமாகிறது "சீனாவின் தமிழ் நண்பர்கள்" நிறுவனம். இப்பிடிப் போனால்தான் தமிழர் விரோததேசம் இந்தியக் கொள்கைவகுப்பாளர்களை தெருவில் கலைத்துக் கலைத்துச் செருப்பால் அடிப்பார்கள். அப்போதுதான் முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கப்பட்டவர்க்குக் குளிர்த்தி.

  • தொடங்கியவர்

[size=4]ஒலிம்பிற்கு போகாத மகிந்தர்; வரவிருக்கும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்; வர திட்டம் போட்ட பாகிஸ்தான் வெளிவிகார அமைச்சர்; திருகோணமலையில் அமையவிருக்கும் அணு ஆலை, கச்சதீவிற்கு அருகில் அமைக்க உள்ள புதிய தளம்; டெல்லிக்கு செல்லவிருக்கும் பசில் தலைமயிலான குழு; வரவிருக்கும் ஐ.நா. தொடர்; மீண்டும் உதிக்கும் சொல்ஹாய்ம்; .... என முடிச்சுக்கள்!![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டின் நலத்தை அநாதை ஆக்கி ஊழலின் நலத்தை எப்படி கருணாநிதி ஆட்சி எப்படிப் பாதுகாத்ததோ அப்படியேதான் மத்தியின் ஆட்சியும்; நாட்டின் நலத்தை விட ஊழலின் நலத்தைப் பாதுகாப்பதே அவர்களது பிரதான குறிக்கோள்களாகும்!

சொந்த நாட்டிலேயே தம் மக்களின் இரத்தம் குடிக்கும் ஓநாய்களுக்கு நகங்களாக இருக்கும் இவர்களா அயல் நாட்டு ஓநாய்களிடம் இருந்து மக்களைப் பாதுகாப்பது?

[size=4]சீனாவின் நெருக்கம் ஊடாகவே எமது மக்களின் 'நியாயங்கள்' இந்திய கொள்கை வகுப்பாளர்களின் 'கவனத்திற்கு' வரலாம். அப்படி வரும்பொழுது முழுமையாக டெல்லியை வைத்தே சிங்களத்திற்கு எதிரான நடவடிக்களை செய்விக்கவேண்டும். மொத்தத்தில் கொழும்பையும் டெல்லியையும் கொழுவிட்டு விட்டு நாம் வேடிக்கை பார்க்கவேண்டும். [/size]

இதைச் சாதிப்பதற்கு எம்மவர்களும் சீன அரசுடன் ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்! அங்கும் போய் எமது பிரச்சனைகளை சொல்லவேண்டும்! சீன அரசின் தமிழ் வானொலி உண்டு. அதையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்!

இன்றைய நிலையில் தமிழினப் படுகொலைக்கு தேவையான அனைத்தையும் (இராணுவம் 25,000 பேர், கவச, பீரங்கி வாகனங்கள் 126, உலங்கு வானூர்திகள் 22, பெருந்தொகை குண்டுகள் - ஏவுகணைகள், செய்மதி தரவுகள், ......) இலவசமாக கொடுத்த இந்தியக் காட்டுமிராண்டி அரசை விட கடனடிப்படையில் ஆயுதங்களைக் கொடுத்துதவிய சீனா தமிழர் மேல் கூடிய அக்கறை கொண்ருந்தது என்று அடித்துச் சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான தமிழர் பிரதிநிதிகள் இந்தியக் காட்டுமிராண்டிகளின் மீதே நீண்டகாலம் மூடத்தனமான நம்பிக்கை வைத்திருந்தனர் - சீனாவை திரும்பியும் பார்த்ததில்லை - இந்தப் ராஜதந்திர தவறை நீண்டகாலம் செய்திருந்தாலும் - சீனா தன்னுடன் நெருக்கமாக நட்பைப் பேணும் சிங்களப் பயங்கரவாதிகளுக்கு பெரும்பாலும் எதையும் இலவசமாக கொடுக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.