Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசாங்கத்தின் சுத்துமாத்து – பம்மாத்து ஆகாய விமானங்களையும் விட்டு வைக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அரசாங்கம் சர்வதேச தரத்திற்கு அமைய எரிபொளை பயன்படுத்தாமையால் சர்வதேச விமானங்கள் இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதல்ல என விமான நிறுவனங்கள் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்திடம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் எரிபொருள் தொடர்பாக அதிகாரங்களை முற்றாக அரசாங்க நிறுவனமே கையாண்டு வருகிறது. அரச நிறுவனத்தினால் இலங்கையில் தொடருந்துகளுக்கு விநியோகிக்கப்பட்ட தரம் குறைந்த எரிபொருள் காரணமாக 15 தொடருந்துகள் இடையில் நின்று போனது குறித்து விமான நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளன.

இலங்கை இவ்வாறு பொறுப்பற்ற வகையில், எரிபொருளை விநியோகித்து, விமானம் ஒன்று பயணம் செய்யும் போது, விமானம் ஆபத்தில் சிக்கினால், தமது நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பதால், விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அமைப்பான இண்டர்நேஷனல் எயார் ட்ரான்ஸ்போர்ட் எசோஷியேஷன், இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், சிங்கப்பூரின் பீ.பி நிறுவனம் இலங்கையில் தரம் குறைந்த விமான எரிபொருளை பெற்றுக்கொண்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

240 சர்வதேச விமான நிறுவனங்கள், இண்டர்நேஷனல் எயார் ட்ரான்ஸ்போர்ட் எசோஷியேஷன் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் உலகில் நடந்தப்பட்டு வரும் 85 வீதமான விமான சேவைகளை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனம் உலக விமான பயணங்களில் நிலைமை மற்றும் பாதுகாப்பு தொடர்பகா பாரிய பொறுப்புகளை கொண்டுள்ளது.

இதனிடையெ இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில் தரம் குறைந்த எரிபொருளை பயன்படுத்தியதன் மூலம் இரண்டு நாட்கள் செயற்படாமல் போன கப்பல் குறித்து சர்வதேச கப்பல் நிறுவனம் கவனம் செலுத்தி உள்ளது. இதனால் கப்பல்களுக்கான எரிபொருளை இலங்கை பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது பற்றி இந்த நிறுவனம் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81094/language/ta-IN/article.aspx

இதிலை என்னையா. நாங்கள் 65 வருடமா அதே டிசலைத்தான் அடிச்சுகிட்டு நம்ம அரசிலை ஓட்டொரோம். இவ்வளவு நாளும் நாம அதைப்பற்றி சொன்னால் அது இலங்கையின் பண்பாட்டின் சிகரமென்றோ அல்லது ராஜதந்திரமென்றோதானே வருணித்தீர்கள். இப்ப மட்டும் என்னன்ன ஏதோ விழாத பிளேன் ஒன்னைக்காட்டி கண்ணீர் விட்டு ஒப்பாரிவக்கிறீங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.