Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக்க வேண்டும் : முரளிதரன் (கருணா)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மத்தியில் தற்போதுள்ள சில அரசியல்வாதிகளின் ஊடுருவலை இல்லாமல் செய்ய வேண்டுமானால் அரசாங் கத்துடன் இணைந்து செயற் படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக தெரிவுசெய்ய வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 முஸ்லிம்கள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகளை விட நேரடிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு தமிழனை வெற்றிபெறச் செய்து முதலமைச் சராக்குவதன் மூலம் நாம் பாரிய அபிவிருத்திகளை அடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அதிகாரசபை பணிப்பாளர் கே. சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மகளிர் வேட்பாளர் திருமதி ருத்ரமலர் ஞானபாஸ்கரன், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன், எமது மாவட்டத்தில் தேசத்தின் மகுடம் திட்டத்தின்மூலம் ஐம்பதாயிரம் இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது. இதன் மூலம் கதிரவெளி தொடக்கம் துறைநீலாவணை வரை அபிவிருத்தி செய்யப்பட வுள்ளது. சித்தாண்டிப் பிரதேசத்திலிருந்து சந்தனமடு ஆற்றங்கரை வரை காப்பட் வீதி அமைப்பதற்காக நான்கு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை யார் கூடிய விருப்பு வாக்கு பெறுகிறாரோ அவர்தான் முதலமைச்சர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். வாக்களிக்கும் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வழமைபோல் எதிர்க் கட்சியினருக்கு வாக்களித்துவிட்டால் ஒரு முஸ்லிம் தான் முதலமைச்சராக வருவார் அதன் பின்பு வீதிகளில் குறைகூறி திரிவதில் எதுவித பயனும் இல்லை.

தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் அரசியல் ஆதிக்கத்தை குறைக்க வேண்டுமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக்க வேண்டும். வெற்றிலைக்கும் வாக்களித்து மூன்று விருப்பு வாக்குகளையும் அரசாங்கத்தின் நேரடிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தமிழனுக்கே வழங்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக காத்தான்குடியிலோ ஏறாவூரிலோ அல்லது ஓட்டமாவடியிலோ காவல் நிற்கும் நிலை ஏற்படும் என முரளிதரன் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81146/language/ta-IN/article.aspx

கக்கீமின் அரசுடன் இணைந்திருந்து கொண்டு அரசை எதிர்ப்பது மாதிரி நடித்து முஸ்லீம்களை அழிக்க போடும் சதித்திட்டங்கள் நாளுக்குநாள் பத்திரிககைகள் வாயிலாக வெளிவருவதால் பிரளீதரனுக்கு தெரிகிறது முஸ்லீம்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கிற சந்தர்ப்பம் கூடிக்கொண்டு போகின்றதென்பது. அதனாலேதான், தன்னையே, தான் ஆரம்பித கட்சியான த.ம.வி.கட்சியிலிருந்து ஓட்டிக்கலைத்த, தனது பரம எதிரியான பிள்ளையானை ஆதரித்து பேசுகிறார். தமிழ் - முஸ்லீம் ஒற்றுமையை முளையிலேயெ கிள்ளி கெடுக்கப்படவேண்டும் என்ற மேலிடத்து ஆணையையே இருவரும் நிறை வேற்றுகிறார்கள்.

கக்கீம் அரசுடன் இணைந்துகொண்டிருந்து அரசை எதிர்ப்பது மாதிரி நடிக்கிறார். இவர் இரவும் பகலும் சிங்கள சிறுக்கிகளோடு சிருங்கார சம்மேளனம் நடத்திவிட்டு வந்து தமிழனை முதலமைச்சராக வலிப்பெடுக்கிறார். அருமையான நாடகம் ஒன்றை மேடையில் நிர்வகிக்கும் திறமையான டைரக்கர் கதாநாயகனுக்கு ஏற்ற வில்லனை தெரிந்துவிடுவது போல் கக்கீமுக்கு கருணவை நியமித்திருக்கிறார் மகிந்தா.

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

அல்லகைக்கு ஞாபக படுத்த வேண்டிய பாடல் அப்பப்ப அவர் இதை நினைவில் கொள்வது நல்லது.. வரும் காலத்தில் இப்படித்தான் இருக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மீதிருந்த நம்பிக்கையே போச்சு இதுக்கும்மேல் செய்தி போட்டுக்கொண்டு :wub:

  • 2 weeks later...

“பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன” – கருணா எச்சரிக்கை [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 01:35 GMT ] [ தா.அருணாசலம் ]

pillayan.jpgதனது சகோதரியை கிழக்கு மாகாண முதல்வராக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சிறிலங்காவின் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரனுக்கும், கிழக்கு முதல்வர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பிரதி அமைச்சர் முரளிதரன்,

“தற்போதைய முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றால், கிழக்கின் அடுத்த முதல்வர் ருத்ரமலர் ஞானபாஸ்கரன் தான்.

தற்போதைய முதல்வர் பிள்ளையான் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல.

எனது சகோதரியை அடுத்த முதல்வராக்குவதற்காக அவர் கடும் பரப்புரை செய்ய வேண்டும்.

அவர் ஒருவர் மட்டும் தான் பெண் வேட்பாளர்.” என்று கூறியுள்ளார்

http://www.puthinappalakai.com/view.php?20120819106827

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.