Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற அரசே மஹிந்தவின் அரசு: அமைச்சர் றிசாட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]riz(5).jpg

[size=4]இலங்கை முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற ஓர் அரசாங்கமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு வாணிபத்துறை தொழில் வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் மாத்திரமே முதலமைச்சரை பெற முடியும். இதனை யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கிண்ணியா எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கிண்ணியா நகர சபை தலைவரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்றுப் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"தலைவர் ரவூப் ஹக்கிமிடம் கேட்டாலும் சரி, தலைவர் அதாவுல்லாவிடம் கேட்டாலும் சரி, பிள்ளையானிடம் கேட்டாலும் சரி அல்லது சம்பந்தன் ஐயாவிடம் கேட்டாலும் சரி இந்த அரசாங்கத்திடமே முதலமைச்சர் ஒருவரை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என கூறுவர். அதிகளவு வாக்குகளை பெறக்கூடிய ஒரு கட்டமைப்பு குறிப்பாக இந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டைப்புக்கு தான் உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என சிந்திக்கும் பலர் எங்களிடத்தில் இருக்கலாம்.

ஆனால் அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியை மாற்றுகின்ற ஒரு தேர்தல் இதுவல்ல. இந்த மாகாண சபை தேர்தல் இது ஒரு குட்டி தேர்தலாகும்.

ஆளும் கட்சியாக எந்தக் கட்சி உள்ளதோ அந்தக் கட்சிக்கே தான் இந்த சிறிய தேர்தல்களில் மக்கள் வாக்களித்து வருவதை நாம் காண்கின்றோம்.

இந்த அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகளில் முஸ்லிம்கள் சார்பாக எங்களுக்கு தனியான இடத்தை வைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இந்நாட்டு முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற ஓர் அரசாங்கமாகும்.

இந் நாட்டில் சில சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஒரு தேரர் தம்புள்ளையில் தலைமை தாங்கி பள்ளிவாசலொன்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அரசில் இருந்து கொண்டு இதற்காக நான் வாயை மூடிக்கொள்ளவில்லை. நான் இது தொடர்பாக ஜனாதிபதியுடனும், அமைச்சரவையிலும் தன்னந்தனியாக குரல் கொடுத்தேன்.

இந்த மாதியான அநியாயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என 52 அமைச்சர்கள் மத்தியிலும் நான் எடுத்து பேசியுள்ளேன். இதை பற்றி நாடாளுமன்றத்தில் யாரும் பேசவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை கீழ்த்தரமானவர்கள் செய்வதாக மிக வேதனையோடு சிங்கள உரிமை தலைவராக இருக்கின்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்னிடத்தில் தெரிவித்தார்.

அத்துடன், பாதுகாப்பு செயலாளரிடம் இது தொடர்பாக பலமுறை பேசும் போது தைரியமாக இருந்து செயல்படுமாறு குறிப்பிட்டார். இந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் சரியான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. துணிந்து செயல்பட தைரியமாக பேசுவதற்கு படைத்தவனுக்கு மட்டும் அஞ்சிப் பேசுவதற்கு ஒரு தலைமைத்துவம் தேவையாக உள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக், வேட்பாளர் ஏ.எல்.அப்துல் றஸ்ஸாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...5-15-49-46.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற அரசே மஹிந்தவின் அரசு: அமைச்சர் றிசாட்

http://www.youtube.com/watch?v=NV_mLS4a6jk

laughing-smiley.giflaughing-smiley.gif

இது போதாது இன்னும் கௌரவமா வாழச் செய்யோணும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.