Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு பொய்யான தகவல்களை வழங்குகின்றனர் – அசோக் மேத்தாவுக்கு கோத்தாபய பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gota2.jpg

[size=4]விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களும்,ஏனைய சிறிலங்கா எதிர்ப்பு சக்திகளும் பொய்யான தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்திய அமைதிப்படையில் முன்னர் பணியாற்றிய- ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, போருக்குப் பின்னர் வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் தொடர்பாக இந்தியாவுக்குக் கிடைத்துள்ள தகவல்களுக்கும், சிறிலங்கா அரசின் தகவல்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

வடக்கில் படைக்குறைப்புத் தொடர்பாக அளிக்கப்பட்ட தகவல்களில் குழப்பம் உளள்ளதாகவும், குறிப்பிட்ட அவர், இதுகுறித்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை விளக்கமளிக்கக் கோரினார்.

அத்துடன் சிறிலங்கா அரசினால் சட்டநவடிக்கை எடுப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 383 விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,

“ஆயுதப்படைகளின் முதன்மையான கடமை நாட்டைப் பாதுகாப்பதாகும். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகள் மீள ஒருங்கிணைவதை ஆயுதப்படைகள் தடுக்க வேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழர்களும் சிறிலங்கா எதிர்ப்பு சக்திகளும் தான் இந்தியாவுக்குத் தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

போருக்குப் பிந்திய சூழலில் சிறிலங்கா அரசாங்கம் பல சவால்களை சந்திக்கிறது. ஒரேஇரவில் எல்லாக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யமுடியாது.” என்று கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120809106763[/size]

[size=4]இந்தியா பெறும் தகவல்கள் வேறுபட்டு உள்ளன - மேத்தா [/size][size=1]

[size=4]ஆனால், சீனா பெறும் தகவல்கள் மட்டும் சரியாக உள்ளன - கோத்தா[/size][/size]

[size=1]

[size=4]ஆக புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் தகவல்கள் சரியாக உள்ளன :icon_idea:[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பாதுகாப்புக்கருத்தரங்கிலும்[/size]

[size=5]புலம் பெயர் தமிழர் பற்றி அழவேண்டிய தேவை பாதுகாப்புச்செயலாளருக்கும் வெளிவிவகார மந்திரிக்கும் வந்திருப்பதே புலம் பெயர் தமிழரின் பணிகள் தந்த அழுத்தங்களை பறை சாற்றுகின்றன.[/size]

[size=5]இவற்றை கவனத்தில் எடுத்து புலம்பெயர் தமிழர் மேலும் மேலும் ஒற்றுமையை வளர்த்தபடி உழைக்கவேண்டும்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள சிலர்தான் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை ஒற்றுமை இல்லை என்று சொல்லுகினம் ஆனால் சிங்களவன் புலம்பெயந்த தமிழர்களை பார்த்து பயங்கரமாக பயப்படுகினம்போல கிடக்கு ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.