Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எச்சரிக்கை கிழக்கு மாகாண தேர்தல் ஆபத்தை நோக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே

எல்லோருக்கும் தெரியும் தற்போது கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சூடு பிடிக்கிறது என்று

ஆனால் இங்கே கல்முனைப்பகுதியில் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தை உங்கள் முன் கொண்டுவர விரும்புகிறேன்.

இங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் தொடர்பான ஆதார பூர்வ தகவல் இது.

கல்முனை வேட்பாளர்களில் இருவர் இந்த தேர்தலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள்

(இவர்கள் பெயரை குறிப்பிடவில்லை )

தேவைப்படின் தரமுடியும்

ஒருவர் (BAR) முதலாளி நானறிந்த காலத்திலிருந்து இவருக்கு இது தான் தொழில் . படிப்பறிவு சற்றும் இல்லை .

மற்றவர் (road contractor) முதலாமவரோ இவரோடு ஒப்பிடும் பொது பரவாயில்லை அப்படி வடி கட்டிய முட்டாள் (ஆனால் பேராசிரியர் பட்டம் வைத்திருக்கிறார் அதனை எப்படி பெற்றார் என்பது ஊரறிந்த ரகசியம்,மற்றும் தனக்கு எந்த துறையில் பட்டம் தந்துள்ளார்கள் என்று அவருக்கே தெரியாது )

படிப்பு வாசனையே இல்லை.

சரி இவர்களால் என்னவாகப்போகிறது ..?

ஒன்றுமே தெரியாத இந்த மாக்கனுகளால் ஒன்றுமே ஆகப்போவதில்லை

இது தமிழர் வாக்கை பிரிக்கும் சதியோ தெரியாது

சில நாட்களுக்கு முன் ஊர் வட்டாரத்தில் ஒரு நோட்டம் விட்டதில் பெரிய அதிர்ச்சியடைந்தேன்

ஆம் கல்முனை படித்த சமூகம் யாருக்கு வாக்களிப்பது என்று மிரண்டு போய் நிற்கிறது

அனால் கல்முனை குடிமக்கள்(!) மட்டும் முதலாமவருக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்கலாம்

அவரும் போய் மாகாணசபையில் எப்படி BAR அமைப்பது என்று சிந்திப்பார் போல

தகவல் அறிந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் பறந்தனவாம் மாவைக்கு

அந்த மாவை "நான் என்ன செய்ய கல்வி கற்ற எவரும் தேர்தலுக்கு வருகிறார்கள் இல்லை" என்று

பதிலளித்துள்ளார் .எவ்வளவு முக்கியமான தேர்தலில் அவரின் பதிலை பாருங்கள்.

முஸ்லிம் சமூகத்தில் Lawyers,BA(hons),Bsc என படிப்பாளிகள் பரந்துபட்டு வாக்கு கேட்க

நம் சமூகம் .....?

அடுத்த ஆப்பு கிழக்கு மாகாண மக்கள் தற்போது ஏதாவது கட்சியில் யாராவது படித்த தமிழ் தலை தெரிகிறதா என்று தேடுகிறார்கள்.

நண்பர்களே தயவுசெய்து இதனை எல்லா நண்பர்களுக்கும் அறிவித்து தமிழரசுக்கட்சிக்கு

pressure ஏற்படுத்துங்கள்.

இந்த இருவரும் வாக்கு கேட்பதை விட கேட்காமல் இருப்பது சிறந்தது

அது மற்றயவர்களின் வாக்கு சிதறலை தடுக்கும் .தீயாக வேலை செய்யுங்கள்

இன்னுமோர் வரலாற்று தவறை தடுங்கள்

தயவு செய்து இதனை அவர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளாதீர்கள்

இவர்கள் மேல சேறு பூச வேண்டிய அவசியமே எனக்கு இல்லை

மீண்டும் தயவு செய்து நமது அடையாளத்தை காப்பாற்றுங்கள்

Edited by Atonk

"நான் என்ன செய்ய கல்வி கற்ற எவரும் தேர்தலுக்கு வருகிறார்கள் இல்லை" என்று பதிலளித்துள்ளார் .

பதில் கிடைத்து விட்டது. மனத்திற்கு திருப்தி இல்லை. அப்போ என்ன விடுமுறை கழிக்க தாயகம் பயணிக்கும் புலம் பெயர் தமிழர்கள் யாரையாவது நிறுத்தலாம் என்பதா கருத்து. ஏன் கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர்கள் விலகினார்கள் என்பதை தெரியாத?

நண்பர்களே தயவுசெய்து இதனை எல்லா நண்பர்களுக்கும் அறிவித்து தமிழரசுக்கட்சிக்கு pressure ஏற்படுத்துங்கள்.

இந்த அற்ப விசையத்திலேயே வைத்து கூட்டமைப்பை உடைத்துவிடலாம் என்று கனவுகாணாமல் அடுத்தமுறை கூட்டமைப்பு என்று எழுதவும்.

முஸ்லிம் சமூகத்தில் Lawyers,BA(hons),Bsc என படிப்பாளிகள் பரந்துபட்டு வாக்கு கேட்க நம் சமூகம் .....?

தெரியாமல் கேட்பவர்களுக்கு .......கக்கீமும், அஸ்வரும்........ என்னென்ன படித்தார்கள் என்று பட்டியல் போட்டுவிட முடியுமா?

அடிமட்ட வக்கீல்களான சம்பந்தன், சுமந்திரன், மற்றும் மாவை போன்றோர், அரசு தெரிந்தெடுக்கும் பிள்ளையான், கருணா, பதியுதின் போன்ற கீரைக்கடைகளுக்கும் எதிர்க்கடைகள் போடலாம் என்று தெரிந்து வைத்திருப்பதை கண்டு மகிழ்சியே. இப்போது கூட்டமைப்பு மீது சற்று நம்பிக்கையாகவும், தென்பாகவும் இருக்கிறது.

கூட்டமைப்பு யாரையும் மாகாண சபைக்கு நியமிக்க முடியாது. தேர்தல் களத்தில் நிற்பாட்டத்தான் முடியும். பொருத்தமில்லாதவர்களை மக்கள் நிராகரிப்பார்கள். அதிலிருந்து கூட்டமைப்பு படிக்க முடியாவிட்டால் ஆட்சி கூட்டமைப்புக்கு வராமல் அரசுக்கு போய்ச்சேரும். அதற்காக புலம் பெயர் தமிழர் தம்மிடம் மாகாண சபைக்கு பிரதிநிதிகளை நியமிக்கும் பொறுப்பை தரும்படி கேட்க முடியாது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லையூரான்

முதலில் தமிழரசு என்ற சொற்பதத்தை பாவித்தமைக்கு வருந்துகிறேன்

நான் நினைகிறேன் முஸ்லிம்களிட்குல்லே படித்தவர்கள் என்றால் உங்களுக்கு கக்கீமும்,அஸ்வரும் மட்டும்தான் தெரிகிறார் போல்

என்ன செய்ய நீங்கள் நாட்டை விட்டு போகும்போது அவர்கள் தான் படித்திருந்தார்கள் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் A/L பரீட்சையின் பின் SET ஆக 25/30 என்று medicine,Engineering என்று செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் எல்லாம் எந்த கணக்கில் செற்கிரீர்களோ தெரியாது.

நிச்சயமாக

உங்கள் புலம் பெயர் தமிழரின் சுயரூபத்தை காட்டி விட்டீர்கள் . யாரும் பூனைக்கு மணிகட்ட தயாரில்லை

"நாங்கள் எங்கள் குடும்பம் safe, ஊரிற்கு vacation இற்கு போவோம் அங்கே வாயே திறக்க மாட்டோம் , இங்கே வருவோம்

net இல சும்மா பின்னி பெடல எடுப்போம்"

அன்ன இத உங்களுக்கு கட்சியை பிரிப்பதற்காக சொல்ல எனக்கு என்ன லூசா..?

இங்கே எங்களால எதுவும் செய்ய முடியாது. பேசாமல் கையை கட்டிக்கொண்டு பார்க்க தான் முடியும்

ஆனால் தலைவர் சொன்னது போல புலம் பெயர் மக்களான நீங்கள் தான் இனி போராட்டத்தை நடத்த போகிறீர்கள் என்பதால்

தான் உங்களுக்கு சொன்னேன்

என்னிடம் இருப்பது ஒரு வாக்கு தான் அதை ஒருவருக்கு தான் அளிக்கமுடியும் .

அது சரி இப்படி ஆட்சி அரசுக்கு போய் சேரட்டும் என்று இருக்கும் புலம் பெயர்ந்தோர் பின்ன ஏன்

ஒவொரு website இலையும் கிழக்கு மாகாண மக்கள் யாரெண்டு காட்டுவார்கள்,கிழக்கு மாகாண மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்று மாய்ந்தது மாய்ந்து கத்துகிறீர்கள்.

உங்களிடம் அதிகாரத்தை வாங்க சொல்லவில்லை, அவர்களுக்கு அறிவுரை கூற சொல்லுகிறேன்

அன்ன உங்கள் அலட்ச்சியமிக்க எழுத்துகளில் பிரதேச வாதம் இழயோடுவதாக தெரிகிறது இல்லாவிடின் மன்னிக்கவும்

தேர்தல் முடிந்த பின் கூட்டமைப்பு வென்றால் கிழக்கு மாகாணம் யாரென்று காட்டிவிட்டார்கள்

தோற்றால் மீண்டுமொருமுறை துரோகிகள்

ஆனால் ஒன்று இதை சொல்ல உங்களில் எவருக்கும் அருகதை இல்லை

[size=5]பச்சை[/size][size=5],[/size][size=5]மஞ்சள்[/size][size=5],[/size][size=5]சிவப்பு[/size][size=5] தமிழன்டா[/size]

[size=4]முதலில் [/size][size=4]தமிழரசு[/size][size=4] என்ற சொற்பதத்தை பாவித்தமைக்கு வருந்துகிறேன்[/size]

யாராவது தான் தமிழரசுக்கட்சி சின்னங்களுடன் வந்திறங்கி எழுதத்தொடங்கும் போது அதற்காக மன்னிப்பு கேட்டவேண்டிய நாள் வரலாம் என்பதை எதிர்பார்க்கிறார்களா?

[size=4]அன்ன உங்கள் அலட்ச்சியமிக்க எழுத்துகளில் பிரதேச வாதம் இழயோடுவதாக தெரிகிறது [/size]

[size=4]தோற்றால் மீண்டுமொருமுறை துரோகிகள்[/size]

[size=4]ஆனால் ஒன்று இதை சொல்ல உங்களில் எவருக்கும் அருகதை இல்லை [/size]

காடையல், கடைப்புலிகளை எல்லாவற்றையும் எழுத அனுப்பாமல் கொஞ்சம் படிச்ச சனத்திலை அனுப்பியிருக்கலாம். இப்பதான் நிறைய படிச்சவையும் இருக்கினமே. இப்பிடி கூழாங்குப்பைகள் எல்லாவற்றையும் தெருவெல்லாம் கொட்ட மாட்டினம்.

இவர்கள் யாழில் இணைந்த காலங்களில் கூட்டமைப்பு உடையலாம் போலத்தான் இருந்தது. அப்போது தமிழரசுக்கட்சி சின்னங்கள், சங்குகள், சேமக்கலங்கள் என்று கொண்டு வந்திறங்கியிருந்தால் கருத்திருந்திருக்கும். இனி கூட்டமைப்பு உடையும் சந்தர்ப்பம் இல்லை. இவர்கள் யாழில் ஒரு அவதாரை மினக்கெடுத்தி ஒட்டிகொண்டிருப்பதால் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால்த்தான் குப்பையை கொட்ட வேண்டிக்கிடக்கிறது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லையூரான்

நாங்கள் குப்பயாகவே இருக்கோம்.

நீங்க குண்டுமனியாக இருங்கய்யா..

அத்திவாரத்தை தொட்டவுடன் சும்மா அதிருது போல ...பொங்கிட்டாறு நம்ம அண்ணன்

ஐயோ மறந்து போய் தமிழரசு எண்டு டைப் பண்ணிவிட்டேன் ----விடுராரே இல்ல

யாழில் நாங்க சிறு நரியாகவே இருக்கம்

நீங்க சிங்கமாகவே இருங்கய்யா

வீம்புக்கு சண்டை பிடிப்பதை விட்டு வெளியே வாங்கோ

நாட்டில் இருந்து நாறுவது நாங்கள் மட்டும் தான் - உள்ளே கத்தி ஒரு பிரயோசனமும் இல்ல எண்டு தான்

வெளிய கத்துறோம். இந்த முறை எங்களிடம் நல்லா மாட்டிவிட்டார்கள் கதிரை காப்பாத்தும் கண்ணியவான்கள்

கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டமைக்கு நான் ஆயிரம் நன்றி சொல்வேன். ஆனால் தேர்வு செய்த வேட்பாளர்கள் தான்

விழலுக்கு இறைத்த நீர் ,ஏற்கனவே பொடியப்பு பியசேன செய்தது காணாதா என்ன

(இவர் யாரென்று தெரியாவிட்டால் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் )

அவர் படித்தவனாக இருந்தால் ஒழுங்காக இருந்திருப்பார் . கண்ட காடயலையும் கடப்புலியளையும் வோட்டுகேட்க வைப்பது

நாங்க இல்ல சாரே..!

6 கோடி + prado கதையும் எங்கட கதையில்ல சாரே ..!

இன்னும் நான் வெளியே விட்டால் நாத்தம் குடலை புரட்டும்.

நான் எல்லோரையும் அப்படி கூறவில்லை (சிறீதரன் என் மதிப்பு மிக்க ஒரு கனவான்,அரசியல்வாதி ,படிப்பாளி

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு உண்மை தமிழன் ) இவர்களை போல் ஏன் வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை

இதை தான் கேட்கிறேன்.

அதுசரி நீங்க எல்லாம் இருந்து தமிழினத்திற்கு என்னத்த கிளிக்கீங்கோ எண்டு பாப்பம்

ஏற்கனவே பார்த்து கொண்டு தானே இருக்கம்..!

தமிழ்மக்கள் தங்கள் விருப்பத்தை கடந்த தேர்தலில் வாக்களிப்பு மூலம் காட்டிவிட்டர்கள். பல்வகையான ஆதாரங்கள் தேவைக்கு மேலாக வெளியிடப்பட்டுவிட்டன.சர்வதேசம் முன் வந்து இனவழிப்பு, போர்குற்ற விசாரணைகளை நடத்த இனியும் என்ன தாமதம்?

அன்ன யாரிடம் இந்த கேள்விய கேட்குறீங்க ...? :icon_idea:

புலத்து /புலம்பெயர் தமிழர்கிட்டயா........? இல்ல சர்வதேசத்திடமா.......?

பாவம் அவரே குழம்பிட்டாறு போல ......! :lol: :lol: :lol:

Edited by Atonk

வணக்கம் மல்லையூரான்

நாங்கள் குப்பயாகவே இருக்கோம். நீங்க குண்டுமனியாக இருங்கய்யா..

அத்திவாரத்தை தொட்டவுடன் சும்மா அதிருது போல ...பொங்கிட்டாறு நம்ம அண்ணன்

ஐயோ மறந்து போய் தமிழரசு எண்டு டைப் பண்ணிவிட்டேன் ----விடுராரே இல்ல -

யாழில் நாங்க சிறு நரியாகவே இருக்கம். நீங்க சிங்கமாகவே இருங்கய்யா

வீம்புக்கு சண்டை பிடிப்பதை விட்டு வெளியே வாங்கோ.

நாட்டில் இருந்து நாறுவது நாங்கள் மட்டும் தான் - உள்ளே கத்தி ஒரு பிரயோசனமும் இல்ல எண்டு தான்வெளிய கத்துறோம். இந்த முறை எங்களிடம் நல்லா மாட்டிவிட்டார்கள் கதிரை காப்பாத்தும் கண்ணியவான்கள் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டமைக்கு நான் ஆயிரம் நன்றி சொல்வேன்.

ஆனால் தேர்வு செய்த வேட்பாளர்கள் தான் விழலுக்கு இறைத்த நீர் ,ஏற்கனவே பொடியப்பு பியசேன செய்தது காணாதா என்ன(இவர் யாரென்று தெரியாவிட்டால் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் )

அவர் படித்தவனாக இருந்தால் ஒழுங்காக இருந்திருப்பார் . கண்ட காடயலையும் கடப்புலியளையும் வோட்டுகேட்க வைப்பது நாங்க இல்ல சாரே..!

6 கோடி + prado கதையும் எங்கட கதையில்ல சாரே ..!

இன்னும் நான் வெளியே விட்டால் நாத்தம் குடலை புரட்டும்.

அதுசரி நீங்க எல்லாம் இருந்து தமிழினத்திற்கு என்னத்த கிளிக்கீங்கோ எண்டு பாப்பம்

ஏற்கனவே பார்த்து கொண்டு தானே இருக்கம்..!

அன்ன யாரிடம் இந்த கேள்விய கேட்குறீங்க ...? :icon_idea:

புலத்து /புலம்பெயர் தமிழர்கிட்டயா........? இல்ல சர்வதேசத்திடமா.......?

பாவம் அவரே குழம்பிட்டாறு போல ......! :lol: :lol: :lol:

அரசியல் எழுதாமல் ஏன் ஐயா மாரடிச்சு ஒப்பாரி பாடுகிறிங்க? வாங்கின பணத்திற்கு ஏதாவது பண்ணாட்டி நிம்மதியாய் இருக்கவிடுறாங்க இல்லையா? தப்பியோட முடியாமல் யார் என்ன பண்ணுறாங்கள் என்று பகிரங்கமாக சொல்லிவிடுகிறதுதானே?

நீங்கதானோ பிரதேசவாதம் பேசுவோரை கண்டிப்பது?

பொதுவிலை உங்க கவிதை நல்லா இருக்கு! நல்ல கற்பனை வளமும் இருக்குமாப்பாபோலிருக்கு.

எனக்கு அரசியல், விளையாட்டு, ..... மாதிரி தலைப்புகளுக்குத்தான் கருத்தெழுத வரும். எதற்கும் இதை ஒருக்கா அந்த பக்கமும் இணைச்சுபாருங்கோ. யாராவது கவிதைகளுக்கு கொமெண்ட் எழுதறவங்க ஏதாவது போட்டு கொடுக்கிறாங்களா பார்க்கலாம்.

Edited by மல்லையூரான்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே

நீண்டகாலம் கழித்து எழுதுகிறேன்

காரணம் மல்லயூரானுக்கு பயந்து என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.

அவருடன் வீண் விதண்டாவாதம் ஏன் என நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன். அத்துடன் என் கூற்றை நிரூபிக்க சில காலமும்

தேவைப்பட்டது உண்மை தான்.

அத்துடன் எங்கள் விவாதம் ஆரோக்கியமானதாகவும் காணப்படவில்லை

இப்போது இலங்கை நேரம் 11.28 PM இந்த கருத்தை நீங்கள் படிக்கும்போது சில வேளை நாளைய தேர்தலும் முடிந்திருக்கலாம்

இன்று நான் தேர்தலுக்காக கிழக்கு மாகாணம் திரும்பியிருக்கிறேன்

கொழும்பிலிருந்து , அத்துடன் சில முக்கிய ஆவணங்களும் எனக்கு கிடைத்தன

அவற்றை இணைத்தும் இருக்கிறேன்

இதில் ஒரு ஆவணத்தில் மாவையை நோக்கி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன

அதற்கு மல்லையூரான் அவர் சார்பாக விடையளிப்பார் என எதிர்பார்க்கிறேன்

ஒரு சில வேளை மல்லையூரானுக்கே தெரியாத விபரங்களும் இருக்கலாம்

ஒருவேளை இதனை படித்துவிட்டு மல்லையூரன் மீண்டும் முருங்கை மரமும் ஏறலாம்

அவருக்கு ஒன்று சொல்கிறேன் அன்ன நீங்க நினைப்பது மட்டும் எப்போதும் சரியாக இருக்காது அப்படி இருக்கவும் முடியாது

இப்படி விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையை விட்டு நிலவரத்தை பாருங்கள்

இப்படியான ஒரு மனநிலையை கொண்டிருந்ததனாலேயே சகலமும் படைத்திருந்த

விடுதலை புலிகள் துடைத்தெறியப்பட நேர்ந்தது

அவர்கள் மற்றவர்களின் கருத்துகளையும் மதித்திருந்தால் இப்போது எமக்கு இந்நிலைமை இல்லை

இன்று அவர்கள் இல்லையென்றாலும் எங்கள் மனங்களில் வாழ்கிறார்கள்

நாளை நாங்கள் அவர்கள் கடைசியாக கை நீட்டிய கூட்டமைப்பிட்கே வாக்களிக்கப்போகிறோம்/போகிறேன்)

கூட்டமைப்பிற்கு மட்டுமே அன்றி அவர்கள் தெரிவு செய்த கையாலாகா கபோதிகளுக்கல்ல

மல்லையூரான் உங்கள் ஆரோக்கியமான கருத்துகளையே எதிர்பார்க்கிறேன் அன்றி (போட்டுகுடுக்கும்/பிச்சைஎடுக்கும்) கருத்துகளை அல்ல

இன்னும் தமிழன் இங்கே பிச்சைஎடுக்கும் நிலைக்கு தாழ்ந்து விடவில்லை அப்பனே ...!

16k46qo.jpg

21b2au8.jpg

208wcxd.jpg

k4tnoz.jpg

Edited by Atonk

காரணம் மல்லயூரானுக்கு பயந்து என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.
அது மட்டும் உண்மை ஆனால் அதற்கு பின்னால் இருப்பவை உண்மை அல்ல. எழுத முடியாமல் போனதன் காரணம், கிழக்குக்கு எஜமான்கள் தேர்தல் பிரச்சார வேலைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அங்கே வேலை கடுமை, பொழுது போக்க வலையில் இறங்கும் கணனிகள் கிடைப்பது அரிது. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நேற்றுடன் தேர்தல் பிரசாரங்களுக்கு தடை வந்துவிட்டது. இன்று பெட்டி படுக்கைகளை கட்டிகொண்டு மூட்டை முடிச்சுகளோடை கொழும்பு திரும்பியாச்சு.

இன்று நான் தேர்தலுக்காக கிழக்கு மாகாணம் திரும்பியிருக்கிறேன் கொழும்பிலிருந்து ,
கிழக்கில் பிள்ளையானையும் கிஸ்புல்லாவயும் பார்த்தீர்களா ? பிள்ளையான் எப்படி நலமாக இருக்கிறானா? சிலசமயம் தேர்தலால் சற்று களைப்படைந்திருப்பான் போல்? ருத்திரமலர் அவனுடன் தன்மையாக நடந்து கொள்கிறாவா?

இப்படியான ஒரு மனநிலையை கொண்டிருந்ததனாலேயே சகலமும் படைத்திருந்த விடுதலை புலிகள் துடைத்தெறியப்பட நேர்ந்தது. அவர்கள் மற்றவர்களின் கருத்துகளையும் மதித்திருந்தால் ... இந்நிலைமை இல்லை
ஏன் அப்படி சொல்லி விட்டீர்கள். கருணா, பிள்ளையான் போன்ற புலிகள் தானே மற்றவர்களின் சொல்லை மதித்து, கேட்டு நடந்து, இன்று கிழக்கு மாகாணத்தையே காப்பற்றியிருக்கிறார்கள். இது அவர்கள் மீது பாடும் வசையாகிவிடப்போகிறதே.

நாளை நாங்கள் அவர்கள் கடைசியாக கை நீட்டிய கூட்டமைப்பிட்கே ( இது நான் கேள்விப்படாத கதை-ஆனாலும் அதில் நான் நேரம் செலவிட விரும்பவில்லை) வாக்களிக்கப்போகிறோம்/போகிறேன். கூட்டமைப்பிற்கு மட்டுமே அன்றி அவர்கள் தெரிவு செய்த கையாலாகா கபோதிகளுக்கல்ல
- ஏன் இந்த கபோதிகள் மாவையின் பச்சை மஞ்சள் சிவப்பு தமிழனங்களா? எது இந்த கூட்டமைப்பு? உங்கள் ஊரிலை பச்சை மிளகாய், வெங்காயம் விற்கிற மரக்கறிச்சந்தையோ? அட பாவிகள், இந்த பள்ளி போகாத தோட்டக்காரன்கள், கபோதிகளை தெரிவு செய்து தங்களைப்போன்ற பெரிய பண்டிதர்களை வாக்களிக்க வேண்டிய தேவைகளுக்கு தள்ளிவிட்டார்களே!

ஒருவேளை இதனை படித்துவிட்டு மல்லையூரன் மீண்டும் முருங்கை மரமும் ஏறலாம்
வாக்கு போட மட்டும் படிச்சவனை தேடிக்கொண்டு எழுதுவதைப் பார்தால் சுத்த வேதாளம் கூட எழுதாத கருத்தாயிருக்கே. இங்கே எங்கே ஐயா முருங்கை மரம் இருக்கு நான் ஏறுவதற்கு. தாங்கள் வசிக்கும் கொழும்புவில் கூட நான் அதை காணவே இல்லை. அதற்கு மட்டும் தமிழ் ஈழம் திரும்பி வரும் பொறுங்கள்,அங்கே முருங்கை மரங்கள் இருக்கும்; அப்போது பார்க்கலாம்.

இன்னும் தமிழன் இங்கே பிச்சைஎடுக்கும் நிலைக்கு தாழ்ந்து விடவில்லை அப்பனே
மவனே இது என்ன என்று விளங்கவில்லை! பிழைக்க தெரிந்த மனிதர்களிடம் அது நடக்காது என்கிறீர்களா அல்லது அடிமைத் தொழில் செய்வோர் பிச்சை எடுப்பதில்லை என்கிறீர்களா?

மல்லையூரான் உங்கள் ஆரோக்கியமான கருத்துகளையே எதிர்பார்க்கிறேன் அன்றி (போட்டுகுடுக்கும்/பிச்சைஎடுக்கும்) கருத்துகளை அல்ல

இதை பார்த்தால் நிச்சயம் கொஞசம் படிச்சிட்டீங்கள் போலத்தான் இருக்கு. என்ன வரும் என்று நேரத்திற்கே தெரிஞ்சிருக்கு. தமிழரை பற்றி அவ்வளவு மரியாதை இருந்தால் போதும். நான் சுத்துமாத்தில்லாத கறுப்பு வெள்ளை(குணம் படைத்த) தமிழீழ தமிழண்டா.

மிகுதியை பேச நாளை கூட்டமைப்பை வெல்ல வைத்துவிட்டு வாருங்கள். நீங்கள் வாக்களித்து நாளைக்கு கூட்டமைப்பு வெல்ல போகுது. அதற்கு நன்றி.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லையூரான்

மீண்டும் அதே பல்லவிதானா...கேட்டு கேட்டு புளித்து விட்டது

யார் அந்த ருத்திரமலர் ....... :rolleyes:

அடப்போங்கய்யா உண்மையாகவே நீங்க பெரிய ஆள் தான்

கிழக்கு மாகாணத்தான் எனக்கே தெரியாத ஆள்

உண்மையில் அரசியலில்(எவன் எவள வச்சிருக்கான்) அறிவில் நீங்க புலிதான்

இதை பற்றி ஆய்வு செய்ய அங்கே உண்டியல் குலுக்கி (அப்போ போராட்டம் இப்போ புலத்துக்கு உதவி செய்கிறோம்

இதெல்லாம் ஒரு பொழப்பு...!)

(எங்களுக்கும் பெரிய பெரிய தொழிலதிபர்களிடம் கூட இல்லாத BMW 7 Series கார்கள் உங்களைபோன்றவர்களிடம் எப்படி வந்தது என்று தெரியும் சார்)

ஒரு கழகம் உங்கள் தலைமையில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

ஒரு வேளை வெள்ளையர்களுடன் கிடந்தது உங்களுக்கு (சுத்துமாத்தில்லாத) வெள்ளை குணம் வந்திட்டோ :D :D

மவனே இது என்ன என்று விளங்கவில்லை! பிழைக்க தெரிந்த மனிதர்களிடம் அது நடக்காது என்கிறீர்களா அல்லது அடிமைத் தொழில் செய்வோர் பிச்சை எடுப்பதில்லை என்கிறீர்களா?

என்ன இது உங்களுக்கு விளங்கவில்லையோ ....உங்கள் நினைப்பே அதானே

அப்படி நினைத்து தானே இங்கே இருப்பவர்கள் மீது தலையில் புளி அரைக்கிரீர்கள்

தாங்கள் வசிக்கும் கொழும்புவில் கூட நான் அதை காணவே இல்லை. அதற்கு மட்டும் தமிழ் ஈழம் திரும்பி வரும் பொறுங்கள்,அங்கே முருங்கை மரங்கள் இருக்கும்; அப்போது பார்க்கலாம்

அன்ன நாங்க மடையர்கள் இல்ல எங்களுக்கு வெளிநாடு வந்தது பழக்கமில்லை

அதற்காக அங்கே என்ன நடக்குது எண்டு தெரியாது எண்டு நினைத்து விடாதீர்கள்

இலங்கை Fresh Vegetables flightஇலே கொண்டு வந்து வியாபாரம் செய்யுறார்கள்

இலங்கை முருங்கக்காய் கூட அங்கே சாப்பிடுகிறீர்கள்

அன்ன நீங்க நினைத்தா முருங்கை என்ன ஆல மரமே வளர்க்கலாம்...எல்லாத்துக்கும் தேவை ஒரு round உண்டியல் குளுக்ஸ்

இருந்தாலும் உங்களுக்கு இப்படி ஒரு பேராசை இருக்ககூடாது (சிவப்பில் அடையாளப் படுத்தியிருக்கிறேன் )

ஒரு வேலை தமிழ் ஈழம் கிடைத்தாலும் இங்கே நீங்க ஆள தமிழன் கிடைக்க மாட்டான் (உங்களுக்கு அதிஷ்ட்டம் இருந்தால் தமிழ் பேசும் முஸ்லிமும் ,தமிழ் பேசும் சிங்களவரும் கிடைப்பார்கள் )

நீங்கள் இங்கே வந்து தமிங்கிளிஷில் அல்லது டமிலில் ஆட்சி செய்யுங்கோ

ஏன் இந்த கபோதிகள் மாவையின் பச்சை மஞ்சள் சிவப்பு தமிழனங்களா? எது இந்த கூட்டமைப்பு? உங்கள் ஊரிலை பச்சை மிளகாய், வெங்காயம் விற்கிற மரக்கறிச்சந்தையோ? அட பாவிகள், இந்த பள்ளி போகாத தோட்டக்காரன்கள், கபோதிகளை தெரிவு செய்து தங்களைப்போன்ற பெரிய பண்டிதர்களை வாக்களிக்க வேண்டிய தேவைகளுக்கு தள்ளிவிட்டார்களே!

அப்பாடா இப்போதாவது விளங்கிவிட்டதா இதைத்தானே ஆரம்பத்திலிருந்தே கத்துகிறேன் இப்போதாவது உங்கள் மரமண்டையில் ஏறியதே

கடைசியில் உங்களுக்கே எது கூட்டமைப்பு என்று doubt (சந்தேகம்) வந்திட்டு போல....கூடாது அன்ன கூடாது

அவங்க உங்களை நம்பித்தான் இருக்காங்க ...மேலும் சந்தேகம் நீடித்தால் நல்ல வைத்தியர் யாரையும் பாருங்கள் :lol: :lol:

நீங்கள் வாக்களித்து நாளைக்கு கூட்டமைப்பு வெல்ல போகுது. அதற்கு நன்றி

என்ன அன்ன உங்களுக்கே உங்க கூத்தமைப்பின்மீது நம்பிக்கை இல்ல போல ....எல்லாத்தையும் அலசிப்பார்த்தால் கருத்து எழுதனும் என்பதற்காக

எழுதுறீங்க.

அன்ன நான் சமர்பித்த ஆவணங்களுக்கு எதிர் ஆவணம் இருந்தால் தெரிவியுங்கோ .....உண்மை தன்மையை தெரிவியுங்கோ

இப்படி short term memory loss கஜினி மாதிரி சம்பந்தமே இல்லாமல் சப்புக்கட்டு கட்டாதிங்கோ :blink:

எனக்கு தேவை நீங்கள் உண்மையை அறியவேண்டும் என்பதல்ல புலம் பெயர் தமிழர் அதை அறியவேண்டும் என்பதே

தேர்தல் முடிவுடன் சந்திப்போம்

நிச்சயமாக நாங்கள் வெல்வோம் ....கூட்டமைப்பு வெல்லும்(விடுதலை புலிகளுக்காக மட்டும் )

வணக்கம் மல்லையூரான்

யார் அந்த ருத்திரமலர் ....... :rolleyes:

அடப்போங்கய்யா உண்மையாகவே நீங்க பெரிய ஆள் தான்

கிழக்கு மாகாணத்தான் எனக்கே தெரியாத ஆள்

உண்மையில் அரசியலில்(எவன் எவள வச்சிருக்கான்) அறிவில் நீங்க புலிதான்

[size=4]இதை பற்றி ஆய்வு செய்ய அங்கே உண்டியல் குலுக்கி (அப்போ போராட்டம் இப்போ புலத்துக்கு உதவி செய்கிறோம்[/size]

[size=4]இதெல்லாம் ஒரு பொழப்பு...!)[/size]

[size=4](எங்களுக்கும் பெரிய பெரிய தொழிலதிபர்களிடம் கூட இல்லாத BMW 7 Series கார்கள் உங்களைபோன்றவர்களிடம் எப்படி வந்தது என்று தெரியும் சார்)[/size]

[size=4]ஒரு கழகம் உங்கள் தலைமையில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை[/size]

....

.....

.....

தேர்தல் முடிவுடன் சந்திப்போம்

நிச்சயமாக நாங்கள் வெல்வோம் ....கூட்டமைப்பு வெல்லும்(விடுதலை புலிகளுக்காக மட்டும் )

இது அரசியல்.

BMW 7 Series காரிலை எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் வைசிருக்கிறவன்தானே ஒழிக்காமல் மறைக்காமல் பப்பிளிக்காய் வைச்சிருக்கிறன். இது யாழிலை மர்மமாகா இருக்கலாம். ஆனால் ஊரிலை மர்மமாக இருக்க வழி இல்லை. ஆவணங்களையும் பார்த்தேன். நன்றி.

அடுத்தமுறை கொழும்பு போகும் வரை ஆவணங்களை சேகரித்து வைக்கும் போது உடுப்பு பெட்டிக்குள் வைக்காதீர்கள். ஸ்கான் மிசின் தேடி ஸ்கான் பண்ண முதல் கசங்கிப்போகுது.

கூட்டமைப்புக்கு எதிரான ஆவணங்களையும் யாழிலில் பதியலாம். வேறும் ஒரு வழி இருக்கு. கூட்டமைப்பு வெளிவிடும் ஆவணங்களில் பிழை கண்டு பிழைகளை கை-லயிட் செய்தும் பதிந்து விடலாம்.

சிங்களத்தில் இருக்கும் ஆவணத்தை பற்றி என்னால் ஒன்றும் கூறமுடியாது. யாழில் சிங்களம் வாசிக்கத்தேரிந்தவர்கள் இருந்து விடை கூற வேண்டுமாயின் கூறட்டும். மற்றயவை மூன்றையும் ஒரு அம்பாறை ஆர்வலர் வெளியிட்டிருக்கிறார். அதே கதிரைக் கதையை இதே திரியிலும் படித்திருக்கிறேன். இதில் தனியா நான் அந்த ஆவணகளுக்கு பதில் அளிப்பதிலும் பார்க்க,அதன் பல கருத்துக்கள் நீங்கள் இல்லாதது போதுயாழில் விவாதிக்கப்படிருக்கு. யாழில்காணப்படும் ஜெயானந்தமூர்த்தியின் அறிவிப்பையும் பார்க்கலாம்.

அம்பாறையை பற்றிய தற்கால நிலைமை, காலம் கடந்தது. நான் சிறுவனாக இருக்கும் போதே, தழரசுக்கட்சி, அம்பாறை சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது பற்றி விவாதிப்பார்கள். இதில் தமக்கென்று ஒரு அரசியலை வைத்திருக்காத கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் தமிழரசுக்கட்சிக்கு தன்னும் ஆதரவை கொடுத்து தடுக்க முயன்றிருக்கலாம். கூட்டமைப்பின் தந்திரம் பியசேனாக்கள் கிடைக்கும் சில இடங்களில் பியசேனாக்களை போட்டு குழப்புவதால், அரசுக்கு தான் விரும்பி களத்தில் போடும் பிள்ளையான்கள்ங்கிடைக்காமல் போகிறது. அரசுக்கு கிடைப்பது கூட்டமைப்பின் கோமாளிகளான பியசேனாக்கள் மட்டுமே.

[size=4]"தாங்கள் வசிக்கும் கொழும்புவில் கூட நான் அதை காணவே இல்லை. [/size][size=4]அதற்கு மட்டும் தமிழ் ஈழம் திரும்பி வரும் பொறுங்கள்[/size][size=4],அங்கே முருங்கை மரங்கள் இருக்கும்; அப்போது பார்க்கலாம்"[/size]

[size=4]இருந்தாலும் உங்களுக்கு இப்படி ஒரு பேராசை இருக்ககூடாது (சிவப்பில் அடையாளப் படுத்தியிருக்கிறேன் )[/size]

[size=4]ஒரு வேலை தமிழ் ஈழம் கிடைத்தாலும் இங்கே நீங்க ஆள தமிழன் கிடைக்க மாட்டான் (உங்களுக்கு அதிஷ்ட்டம் இருந்தால் தமிழ் பேசும் முஸ்லிமும் ,தமிழ் பேசும் சிங்களவரும் கிடைப்பார்கள் )[/size]

[size=4]நீங்கள் இங்கே வந்து தமிங்கிளிஷில் அல்லது டமிலில் ஆட்சி செய்யுங்கோ[/size]

மனிசற்றை வேதனைதான் பெரிது. பிறந்தவனோ, பிறந்தவளோ சாகும் வரை சீவிக்கத்தான் வேணும். அங்கு ஏன் பிறந்தான், எங்கை பிறந்தான், எப்படி பிறந்தான் என்பதிலை.

இந்த பகுதி மட்டும் இலங்கை போகாத எனக்கில்லை. இலங்கை போய்விட்டு வந்து புலம் பெயர் நாடுகளின் இணைய பத்திரிகைகளில் பயணக்கட்டுரைகள் என்று "ரோசி பிக்க்சர்" வரையும் வெளிநாட்டு "வக்கேசன்" பயணிகளுக்கே.

முருக்கமிலை பற்றிய குறிப்புகளுக்கும் நன்றி. இனிமேல் முருங்கில்லாத அவசரங்களுக்கு முருக்கம் இலையில் தன்னும் ஏறலாம்.

Edited by மல்லையூரான்

கருத்துகளால் மோதினாலும் தமிழனாய் இணைந்திரும்போம்.

தாயகத் தமிழன், புலம்பெயர் தமிழன் என ஒரு குறியீடாக அழைப்போம். ஆனால் அதுவே பிரிவினையாக மாறாது பார்த்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலம் தாழ்த்தி இத்துண்டு பிரசுரங்களை வெளியிட்டு யாரும் எதுவும் செய்து விட முடியாது. மிகவும் காலம் தாழ்த்தி இவற்றை இணையத்தில் பரவ விடுவதற்கு ஏதாவது காரணம் இருக்குமா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே

ஆஹா ஆஹா இப்போதல்லவா ஆரோக்கியமாக உள்ளது

மல்லையூரான் உங்களுக்கு மிக மிக நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் ஆக்கம்

(உண்மையாகவே பாராட்டுகிறேன் ) இதைத்தான் எதிர்பார்த்தேன் அன்றி வீண் விதண்டாவாதங்களை அல்ல

அடுத்தமுறை கொழும்பு போகும் வரை ஆவணங்களை சேகரித்து வைக்கும் போது உடுப்பு பெட்டிக்குள் வைக்காதீர்கள். ஸ்கான் மிசின் தேடி ஸ்கான் பண்ண முதல் கசங்கிப்போகுது.

மிகவும் மகிழ்ச்சி கடைசியாக இதை நான் அட்ச்சிடவில்லை என்றாவது புரிந்து கொண்டீர்களே நன்றி

நிச்சயமாக இது கூட்டமைப்பிற்கு எதிரான ஆவணம் தான் ஆனால் இது கூட்டமைப்பின் தவறை சுட்டிக்காட்டும் ஆவணம் அதுதவிர கூட்டமைப்பை

பிரிக்கும் ஆவணமல்ல அதை நான் செய்தால் என்ன மனச்சாட்சி உட்பட இறந்ததும் எங்கள் மனதில் வாழும் மாவீரர்களும் மன்னிக்கமாட்டார்கள்

இதில் தமக்கென்று ஒரு அரசியலை வைத்திருக்காத கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் தமிழரசுக்கட்சிக்கு தன்னும் ஆதரவை கொடுத்து தடுக்க முயன்றிருக்கலாம்.

இது நிச்சயமாக உங்கள் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது (தவறாக நினைக்க வேண்டாம் ) இங்கே தேசிய காங்கிரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் நடக்கும் யுத்தம் அதற்க்கு சாட்சி. நிச்சயமாய் அவர்களுக்கு என்று ஒரு அரசியல் இல்லாதிருந்தால் இன்று கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினர் அவர்களில்லை

அரசுக்கு கிடைப்பது கூட்டமைப்பின் கோமாளிகளான பியசேனாக்கள் மட்டுமே.

நிச்சயமாக அரசுக்கு கிடைப்பது கோமாளி பியசேனா மட்டும் அனால் ஒன்றை மறந்தது விட்டீர்கள் அத்துடன் ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும்

பிள்ளயான்கள் இவ்விடத்தில் அவசியமற்றவர்கள் அவர்களை நாங்கள் கவனத்தில் எடுப்பதேயில்லை

Gajaen

நல்ல கருத்து உண்மையாகவே எனக்கும் மல்லையூரானுக்கும் எந்த தனிப்பட்ட வேறுபாடும் இல்லை புலத்தில் அவர் இல்லாததால் சில விடயங்கள் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை அதை தெரிவிக்க நான் முற்படும்போது அவர் சில கருத்து வேறுபாடுகளை இட்டது தான் இதற்க்கு காரணம் ஆனால் பிறப்பால் நாங்கள் சகோதரர்கள் எங்களினுள்ளே ஓடுவது தமிழ் ரத்தம்

nunavilan

இவ்வளவு காலம் தாழ்த்தி இத்துண்டு பிரசுரங்களை வெளியிட்டு யாரும் எதுவும் செய்து விட முடியாது. மிகவும் காலம் தாழ்த்தி இவற்றை இணையத்தில் பரவ விடுவதற்கு ஏதாவது காரணம் இருக்குமா??

நிச்சயமாக இல்லை இன்று இந்த தேர்தல் முடிந்தது விடலாம் ஆனால் மீண்டும் பல தேர்தல்கள் வரலாம் அப்போதும் எங்களிடம் இருக்கும் அடையாளம்

தமிழன், அதனை தெரிவிக்கும் வழி கூட்டமைப்பு .இப்போது புலமிருக்கும் நிலையில் ஒரு சிறிய தவறைக்கூட அறியாமல் செய்யும் நிலையில் காலம் எமக்கு துணையில்லை (உண்மையில் எனக்கு நேரம் பிந்தியே இந்த ஆவணங்கள் கிடைத்தன) இந்த தவறுகள் இன்னுமொருமுறை நடக்காமல்

இருந்தால் அதுவே எனது எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக சந்தோஷப்படுவேன்.

இன்னும் நம்பிக்கை இருக்கிறது இண்டைக்கு இரவு Election Result முழித்திருந்து தொலைக்காட்ச்யில் பார்க்கிறேன்

என்னுடன் சேர்ந்து நீங்களும் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

(புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் )

வணக்கம் சகோதரர்களே

Edited by Atonk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.