Jump to content

மீல் மேக்கர் (சோயா மீட்) கோப்தா!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

[size=4]விடுமுறை நாட்களில் வீட்டில் எபோதும் ஒரே மாதிரி சமைத்துக் கொடுக்காமல், அப்போது சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் வகையில், ஒரு ரெசிபி செய்து கொடுத்து வீட்டில் இருப்போரை அசத்த நினைப்பவர்கள், மீல் மேக்கரை வைத்து, ஒரு கோப்தா கறி செய்து கொடுக்கலாம். இந்த மீல் மேக்கர் கோப்தாவை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது இதை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size]

[size=4]11-meal-maker-kofta-600.jpg[/size]

[size=4]தேவையான பொருட்கள்:[/size]

[size=4]கோப்தாவிற்கு:[/size]

[size=4]மீல் மேக்கர் (சோயா மீட்) - 100 கிராம்[/size]

[size=4]உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து பிசைந்தது)[/size]

[size=4]இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்[/size]

[size=4]பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்[/size]

[size=4]உப்பு - தேவையான அளவு[/size]

[size=4]எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]கிரேவிக்கு:[/size]

[size=4]வெங்காயம் - 2 (நறுக்கியது)[/size]

[size=4]இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்[/size]

[size=4]தக்காளி - 1/2 கப் (அரைத்தது)[/size]

[size=4]சோம்பு - 1/2 டீஸ்பூன்[/size]

[size=4]சீரகம் - 1 டீஸ்பூன்[/size]

[size=4]பால் - 1/2 கப்[/size]

[size=4]மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்[/size]

[size=4]மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்[/size]

[size=4]கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்[/size]

[size=4]தண்ணீர் - 1/2 கப்[/size]

[size=4]புதினா - சிறிது[/size]

[size=4]உப்பு - தேவையான அளவு[/size]

[size=4]எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]செய்முறை:[/size]

[size=4]முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு, 8-10 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]பின் ஒரு பாத்திரத்தில் வேக வைத்து பிசைந்துள்ள உருளைக்கிழங்கு, இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு மற்றும் மீல் மேக்கரை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.[/size]

[size=4]பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அந்த கலவையை சிறு உருண்டைகளாக செய்து, பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, சீரகம் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.[/size]

[size=4]நன்கு கிளறியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த தக்காளி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின் தீயை குறைவில் வைத்து, அதில் மீல் மேக்கரை போட்டு, ஒரு முறை கிளறி, அந்த மீல் மேக்கரில் மசாலா சேரும் படியும், எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரையும் நன்கு கிளறவும்.[/size]

[size=4]பின்னர் அதில் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின் அந்த மசாலா சற்று கெட்டியாக வந்ததும், அதனை இறக்கி அதில் புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம்.[/size]

[size=4]இப்போது சுவையான மீல் மேக்கர் கோப்தா ரெடி!!![/size]

[size=4]http://tamil.boldsky...ipe-001744.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீல்மேக்கர் என்பது சோயா மீட் என்று நினைக்கின்றேன் இல்லையானால் என்னை திட்டாதீர்கள் :D

DSC07104.png

முடிந்தால் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட சோயா மிற்றை தவிர்க்கவும் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உணவுக்கு, கோப்தா என்று ஏன் பெயர் வைத்தீர்கள்?

எனக்கு, கோத்தாவின் ஞாபகம் தான் வருகின்றது.

நல்ல தமிழ் பெயர் வைத்திருக்கலாமே... தமிழரசு :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உணவுக்கு, கோப்தா என்று ஏன் பெயர் வைத்தீர்கள்?

எனக்கு, கோத்தாவின் ஞாபகம் தான் வருகின்றது.

நல்ல தமிழ் பெயர் வைத்திருக்கலாமே... தமிழரசு :D

:D

Posted

[size=5]கறியில் எவ்வளவு எண்ணை மிதக்குது :rolleyes:[/size][size=5] [/size][size=5]உடலுக்கு ஆரோக்கியமான செய்முறைகளை எழுதுங்கள் :)[/size][size=5] [/size][size=5]இணைப்புக்களைப் போடுவதை இயன்றளவு தவிருங்கள்![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.