Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ மாநாடு: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்- ஈழம் வார்த்தையை பயன்படுத்த கூடாது என்பதா?

Featured Replies

[size=4]ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- [/size]

[size=4]

[size=1]

[size=1]

[size=4]சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை.

கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத் தமிழரை ஆதரித்து பேசிய நாஞ்சில் சம்பத், சீமான், உள்ளிட்டோர் தேசிய பாதுகாப்புப்படி சிறையில் பூட்டப்பட்டனர். என் மீதும் வழக்குகள் போடப்பட்டன. எனவே பேச்சு உரிமை பற்றி குரல் கொடுக்கும் தகுதி அவருக்கு இல்லை.

மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து விட்டு போன மறு நாள் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு என தலைப்பையே மாற்றிவிட்டார். மாநாட்டில் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்து தனது துரோக முகத்தை காட்டி விட்டது.

மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி மறுத்து இருப்பது ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதாகும். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச உரிமை உண்டு என்று கோர்ட்டில் தீர்ப்பை பெற்று இருக்கிறோம். தமிழ் ஈழம் என்று உச்சரிப்பதை தடுக்க உலகில் எந்த சக்தியாலும் முடியாது.[/size][/size][size=1]

[size=1]ww.maalaimalar.com/2012/08/11132917/teso-conference-vaiko-condemn.html[/size][/size][/size][/size]

சென்னை: திமுக நடத்தவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டின் பெயரில் ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது என மத்திய அரசு கூறியுள்ளது. அதையே பின்பற்றி, ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்ற காரணம் உட்பட வேறு பல காரணங்களையும் கூறி மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடந்த காலத்தில் நாங்கள் நடத்திய ஈழ ஆதரவாளர் மாநாடுகளுக்கு தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட போது உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று நடத்தியிருக்கிறோம். ஈழத் தமிழர் என்ற சொல்லை உயர்நீதிமன்றமே அனுமதித்திருக்கும் போது அதற்கு தடை விதித்திருப்பது நீதிமன்றத் தீர்ப்பை மத்திய-மாநில அரசுகள் அவமதிப்பதாகும்.

இலங்கையிலும் உலக நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் கருணாநிதியின் மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள். யாருடைய வாழ்வுரிமைக்காக இந்த மாநாட்டை நடத்த கருணாநிதி முன் வந்தாரோ அவர்களே அவரை புறக்கணித்தப் பிறகு தமிழக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை வெறும் வாயை மெல்லுகிறவருக்கு வாயில் அவல் போடுவதாகும், என்று அதில் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=-_wBf_RhFUw

www.Thatstamil.com

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.