Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோக நாடகம் ( டெசோ மாநாடு )

Featured Replies

Untitled.jpg

[size=4]உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.

வீழ்வது நாமாக இருந்தாலும்

வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

இருப்பது ஓருயிர்.

போவது ஒருமுறை.

அது தமிழுக்காக போகட்டுமென்று

வாயால் வடை சுடுவார்.

ஊழலின் ஊற்றுக் கண்ணென

அவரை உண்மைச் சுடுமானால்,

மீண்டுமோர்

ஆரிய, திராவிடப் போர் மூளும்.

இது

அடிமைச் சாதியை ஒடுக்கும்

ஆதிக்க சாதியின் கொடும்சதி என்பார்.

இன விடுதலைக்கு ஈகம் செய்த

சித்தாந்தப் புலியின் சிகிச்சைக்கு மறுத்து

மனிதத்தைக் குழி தோண்டிப் புதைப்பார்.

எம் சமாதான முகத்தை

பேரினவாதி சிதறடிக்கையில்

கவியெழுதி முதலைக் கண்ணீர் விடுவார்.

அச் செயலை இனப்பற்றாளர் செய்தால்

பயங்கரவாதமென்று பதறித் துடிப்பார்.

தம் வீட்டிற்குள் நிகழும்

ரத்த உறவுகளின் அதிகாரச் சமரை

தீர்க்கும் திராணியற்றவர்

விடுதலைப் போராளிகளை

சகோதரச் சமரால் வீழ்ந்தவர் என்பார்.

பகுத்தறிவுப் பாசறையெனப் பறைசாற்றுபவர்

எப்போதும் மஞ்சள் தூண்டிற்குள்

முகம் புதைத்திருப்பார்.

வயிற்றுப் பிழைப்புக்கு

வல்லம் வலிப்போரை

பேராசை நடுக்கடலுக்குள்

மூழ்கடிக்கிறது என்பார்.

வர்த்தக ஒப்பந்தமெனக் கூறி

அந்நியத் தேயிலையை இறக்கி

தம் சனங்களின் வயிற்றிலடிப்பார்.

நாடகமேடையில் வாழ்வைத் துவக்கியவர்

உலகின் கவனம் ஈர்த்த உண்ணாநிலையையும்

நாடக மேடையேற்றி நாறடிப்பார்.

உலோகப் பறவைகள் உமிழ்ந்த எச்சத்தில்

தம்மினம் கருகி சிதைகையில்

தம்மினத்தை தானே

விழுங்கும் அரவம் போலிருந்து

மழைவிட்டும் தூவானம் விடவில்லையென

இலக்கிய நயம் பாராட்டுவார்.

கருவறை சிசுவும்

முள்வேலிக்குள் முடங்குகையில்

இன்பச் சுற்றுலா சென்று பார்த்து

கிளிகள் தங்கக் கூண்டிலிருப்பதாக அறைகூவுவார்.

முள்ளிவாய்க்கால் குருதிப்புனலில் நனைகையில்

இரத்த உறவுகளுக்கு அமைச்சுப் பதவி பெற

அதிகாரத்தின் காலடியில் ஒற்றைக்கால் தவமிருப்பார்.

தம் இனத்தைக் காவு கொடுத்து

தவப்புதல்வி செய்த இமாலய ஊழலை

சனங்கள் காறி உமிழ்ந்த எச்சிலில் நின்று

"உங்களுக்கு ஒரு மகளிருந்து..."

எனக் கண்ணீர் உகுப்பார்.

தமிழர் தாயகம் கிடைத்தால் மகிழ்ச்சி என்பார்.

அந்த இலட்சியத்திற்காக

செயலாற்றுவோரை வேரறுப்பார்.

மந்திரம் ஓதி மாங்காய் பழுக்க வைப்பாரோ?

கேட்ட இலாகா கிடைக்காதபோது

ஆதரவை திரும்பப் பெறுவதாக மிரட்டுபவர்,

தம் இனக்கொலையை நிறுத்தக் கோரினால்

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு

என்ன செய்ய முடியுமென தழு தழுப்பார்.

கைக்கெட்டும் தொலைவில் நிகழும்

இரத்த வெறியாட்டைத் தடுக்காது

கடவுளைப் போல வேடிக்கைப் பார்த்தவர்

மலைபோலக் கடிதமெழுதி

சனங்களை மாயச் செய்வார்.

உறவுக் கண்ணிகளை அறுத்தெறிந்தவர்

மனிதச் சங்கிலி போராட்டம் என்பார்.

ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கடி முற்றும்போது

அனைத்துக் கட்சி கூட்டம் என்பார்.

போரை நிறுத்த வலியுறுத்தாது

காயத்திற்கு மருந்தனுப்பினால் போதும் என்பார்.

தேச பக்தர்களின் இரட்டை நாவை

வெளிச்சம் போட்டுக் காண்பிக்க

தன்னையே திரியாக்கியவனின்

இறுதி ஊர்வலத்தில்

தடியடி நிகழ்த்தி கலைப்பார்.

தம் இனத்தை அழித்தொழிக்க

அனைத்தையும் செய்து விட்டு

"அய்யகோ! தமிழினம் அழிகிறதே!..."

என்று அழுதரற்றுவார்.

இன அழிப்பில் பலியானவன்

கத்திக் கதறியது

உயர்தனிச் செம்மொழியிலென

இழவு வீட்டின் ஒப்பாரிப் பாடலுக்கு

விருது கொடுத்துச் சிறப்பித்து

செம்மொழிக் கொண்டானென

தனக்குத் தானே பட்டம் சூடுவார்.

தன் குட்டிகளிருக்கும் திசைநடப்போரை

மலம் தின்று செரிக்கும் பன்றிகளும்,

போக்கிடமற்ற தெருநாய்களும்,

கொப்பொடிக்க மரமேறுவோரை

மந்திகளும், காகங்களும்

ஒன்று சேர்ந்து விரட்டியடிக்கும்.

எட்டாவது அதிசயமாய்

தம் இன அழிப்புக்கு எதிராக

ஒன்று சேர்ந்த தமிழனை

அடக்குமுறைச் சட்டமேவி

சிறைக்கொட்டடியிலடைத்து மகிழ்வார்.

அரிதாரம் கலைந்த வெட்கமற்று

அதிகாரம் முழுதும் தொலைத்த பின்

அங்கத நாடகத்தின்

அடுத்த காட்சியாய்

குருதி படிந்த நிலத்தில்

சாம்பல் பூத்த தெருவில்

சனங்களை திரளச் செய்ய

டெசோ மாநாட்டை அறிவிப்பார்.

சில முகங்களை சாகும்போதும்

பார்க்கத் தோன்றும்.

சில முகங்களை பார்க்கும்போதெல்லாம்

சாகத் தோன்றும்.

வரலாற்றின் வழித் தடத்தில்

எதிரிகள் மன்னிக்கப்படுகிறார்கள்.

ஆனால்,

துரோகிகள் மன்னிக்கப்படுவதில்லை. [/size]

http://agarathan.blogspot.fr/

உண்ணாவிரதம்- ஏமாற்றிய இலங்கை

ஈழத்தில் இறுதிப் போரின்போது ரத்தம் சிந்துவதை எதிர்த்தும், இந்தியா தலையிட கோரியும், அண்ணா நினைவிடத்தில் 27.4.2009 அன்று சாகும்வரை தொடங்கினேன். இலங்கை அரசு மற்றும் இந்திய வெளியுறவு துறை உத்தரவாதம் அளித்து, அதன் நகல் எனக்கு அனுப்பப் பட்டது. போர் முடிவுக்கு வந்ததாக நினைத்து உண்ணாவிரதத்தை நான் முடித்துக் கொண்டேன். ஆனால் இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

டெசோ அமைப்பபென்பது...

டெ(ல்லி) சோனியா அமைப்பாகும்.

:D

விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்குப் பின் 'தமிழ் ஈழம்' என்ற சொல்லே உலகளவில் எங்கும் எப்போதும் எழுந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறது இலங்கை அரசு. கூடவே இந்திய அரசும், இந்திய அரசின் ப்ரோக்கர்களான சு.சாமி, இந்து ராம், சோ போன்றவர்களும், பரம்பரை ஈழ எதிரியான ஜெவும்! ஆக விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு மின் ஒரு மிகப்பெரும் இயக்கம்/கட்சி 'Tamil Ealam Supporters Organisation

' என்ற மாநாட்டை முன்னெடுப்பது இவர்கள் அனைவருக்குமே கண்ணில் குத்திய முள்ளாய் வலிப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதே நேரம் நாலாபுறமும் எழும்பியிருக்கும் எதிர்ப்பும், இலங்கை பேரினவாத அரசின் தொடர் கண்டனங்களும் உலக அளவில் அறியப்படப்போகும் 'டெசோ'வில் உள்ள 'தமிழ் ஈழம்' என்ற சொற்களின் சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. ஆக டெசோவை முன்னெப்போதும் விட இப்போது ஆதரிக்கும் கடமை வெட்டிப்பேச்சில் அல்லாமல் செயல்திட்டத்தில் ஆர்வம் உள்ள ஈழ-ஆதரவாளர்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டியது மிகவும் அத்தியாவசியம். இந்த மாநாடு நடக்கிறதோ இல்லையோ, ஆனால் 'தமிழ் ஈழம்' குறித்த உலக அளவிலான கவன ஈர்ப்பில் மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

(ஓ.. சீமான், நெடுமாறன் போன்ற லோக்கல் ஈழ வியாபாரிகளை விட்டுவிட்டேனே! அவர்கள்தான் சிங்கள கட்சிகளின் நிலைப்பாட்டை அப்படியே இங்கே ஒப்பிக்கிறார்களே! ராஜபக்சேக்கு கூட்டணி போட அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டியதுதான்!)

முக நூல் நண்பர் DON ASHOK

[size=4]காலம்காலமாக தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட தடுத்து நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கதில் உள்ள ஒரு பழமொழிதான் என் நினனவுக்கு வருகிறது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" - டெசோ குறித்து ஈழ எழுத்தாளர் சமயந்தன்.[/size]

[size=4] டெசோ மாநாட்டில் கருணாநிதி :[/size]

[size=3]ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுக செயல்படுவது என்பது வரலாற்று உண்மை. ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.[/size]

6 மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச:

[size=4]தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்துள்ளோம். தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.