Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவதூறு கூட்டணி தொடங்கலாமா?

Featured Replies

[size=1]jaya-1021.jpg[/size]

[size=1][size=4]அரசியல் வட்டாரத்தில் இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை அவதூறு!

பொது வாழ்க்கையில் இருக்கும் நபர்கள் குறித்தோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்கள் குறித்தோ டீக்கடைகளில் உட்கார்ந்து கொண்டு ’வல்கர்’ வார்த்தைகளில் பேசினால், அது காற்றோடு கலந்து கலைந்துவிடும்! ஆனால், அதையே பொதுக்கூட்டத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளிப்படுத்தினால் அதற்கு உமக்குப் பரிசு அவதூறு வழக்கு!

அவர் இவர் மேல் அவதூறு சொல்வதும், இவர் அவர் மேல் அவதூறு சொல்வதும்.... இருவர் மேலும் எதுவுமே சொல்லமுடியாமல் இருப்பதும்தான் இன்றைய அரசியல்.

செய்தித் தாளைத் திறந்தால் இன்று யார் மேல் அவதூறு வழக்கு என்று கண்கள் துருதுருவென தேடுகின்றன.

விஜயகாந்த், ஸ்டாலின், கருணாநிதி, ராமதாஸ், மீண்டும் ஸ்டாலின் என்று அவதூறு வழக்குகளின் பட்டியல் நீள்கிறது!

இதில், ஸ்டாலின் சென்னை மாநகராட்சியில் காலரா பற்றியும், கொடநாடு பற்றியும் பேசியிருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் கொடநாடு பற்றி பேசியிருக்கிறார்கள். அதனால் அவதூறு வழக்கு!

இதில் இன்னொரு சுவாரஸ்யம்.... தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திப்பேன் என்று அதற்கு விளக்கம் கொடுத்ததற்காக ஸ்டாலின் மீது இரண்டாவது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது!

மேலோட்டமாகப் பார்த்தால் இது இரண்டொரு நாள் செய்தித்தாள்களில் வரும், பிறகு என்றைக்காவது ஒரு நாள் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர் என்று செய்திவரும்!

அதன்பிறகு இந்த அவதூறு வழக்குகளின் கதி என்னாகும் என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஏன் அவதூறு வழக்கு போட்டவரே [/size][size=4]கவனித்திருக்கிறாரா?[/size][/size][size=4] [/size]

[size=1] karunanidhi_20080619_copy.jpg[/size]

[size=4]அவதூறு வழக்கின் சாராம்சம்தான் என்ன?

ஒரு நபரைப் பற்றி இன்னொரு நபர் சொல்லும் வார்த்தைகளால்... அந்த நபரின் புகழ் சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். ‘அவர் செய்த விமர்சனத்தால் எனக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது’ என்று வழக்கு தொடுத்தவர் கோர்ட்டில் தெரிவிக்கவேண்டும். சும்மா தெரிவிக்க முடியாது! அதற்கு இரண்டு பேர் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லவேண்டும்!

அதாவது, இப்போது முதல்வர் ஜெயலலிதா மீது கருணாநிதி விமர்சனம் செய்திருக்கிறார். அதற்காக கருணாநிதி மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்றால்... நீதிமன்றத்தில் ஆஜராகும் இருவர், ‘நான் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஆனால் கருணாநிதியின் அறிக்கையைப் பார்த்தபிறகு ஜெயலலிதா மீதான மரியாதை போய்விட்டது’ என்று கோர்ட்டில் தெரிவிக்கவேண்டும்.

இதுபோல் இரண்டுபேர் கோர்ட்டில் வந்து சொல்லவேண்டும்!

அதாவவது இப்போதைய முதல்வர் ஜெயலிதா மீது வைத்திருந்த மதிப்பு குறைந்துவிட்டது என்று யாராவது கோர்ட்டுக்கு வந்து சொல்வார்களா?

அப்படிச் சொன்னால்தான் அந்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் தன் பயணத்தை ஆரம்பிக்கும்!

ஆனால், அப்போதும் சரி இப்போதும் சரி... அரசியல் ரீதியாக தொடுக்கப்படும் அவதூறு வழக்குகளில் விசாரணை நடந்து முடிந்தவை, தீர்ப்பு சொல்லப்பட்டவை என்று பார்த்தால் ஒன்று அல்லது இரண்டைத்தான் சொல்லமுடியும். 99 சதவிகித அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதுதான் நடந்திருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! [/size]

[size=1]ramadas.dr_copy_copy_copy.jpg[/size]

[size=4]ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்ட 180 அவதூறு வழக்குகள் கோர்ட் குட்டுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டன என்று அவதூறு வழக்கு பற்றிய தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த புதிதில்... ஜெயலலிதா மீது கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அரசால் வாபஸ் பெறப்பட்டன. அதாவது தி.மு.க. அரசால் போடப்பட்ட வழக்குகள், அ.தி.மு.க. அரசால் வாபஸ் பெறப்பட்டன. [/size]

[size=1][size=4]இதுவரை அவதூறு வழக்கில் ஜெயித்தவர் என்று வரலாறு குறித்து வைத்திருப்பது எம்.ஜி.ஆரைத்தான்.

எம்.ஜி.ஆர். தனக்கு எதிராக ‘சிகப்பு நாடா’ என்கிற பத்திரிகையில் வெளியான தகவலைக் கடுமையாக எதிர்த்து, அப்பத்திரிகையின் ஆசிரியர் கயிலைமன்னன் மீது அவதூறு வழக்கு தொடுத்தார்.[/size]

mgr93_copy_copy.jpg[/size]

[size=4]அந்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார் எம்.ஜி.ஆர். கடைசியில் வழக்கு எம்.ஜி.ஆருக்கு சாதகமாக தீர்ப்பு ஆனது, ஆனால்... ஒரு லட்சம் ரூபாய் வாங்காமல் ஒரு ரூபாய் மட்டும் அடையாளத் தொகையாக பெற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதுதான் தமிழகத்தில் அவதூறு வழக்குகளின் சரித்திரம்!

இப்போது போடப்பட்டிருக்கிற அவதூறு வழக்குகள் எப்போது விசாரணைக்கு வரும், எப்போது விசாரணை முடியும்.. எப்போது தீர்ப்பு வரும் என்ற தொலை நோக்குப் பார்வை இருப்பதால்தான்... வழக்கை சந்திக்கத் தயார் என்று தலைவர்களும் சவால் விடுகிறார்கள்!

கோர்ட்டின் நேரம் செலவாவதைத் தவிர வேறொன்றுக்கும் பயன் இல்லாதவையாகத்தான் இந்த அவதூறு வழக்குகள் கருதப்படுகின்றன.

வேண்டுமென்றால்... கருணாநிதி, விஜயகாந்த் தேவைப்பட்டால் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஓர் அவதூறு கூட்டணி ஆரம்பிக்கலாம்![/size]

நன்றி - தமிழ்லீடர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.