Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

Featured Replies

சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

படையினருக்கான தொழிற்சார் பயிற்சிகள், மற்றும் இலங்கையின் கோரிக்கையின் பேரில் இராணுவ உதவிகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்களில் அவர் பங்குபற்றுவார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலார் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரை அவர் சந்தித்து கலந்துரையாடுவார்.

இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த வருடம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார். அவருடன் சீன மக்கள் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் விஜயம் செய்யவுள்ளனர்.

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் விஜயம் செய்யும்போது, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும் அவர் வழங்கவுள்ளார். சப்புகஸ்கந்த பாதுகாப்பு கல்லூரி, பனாகொட இராணுவ முகாம் ஆகியவற்றுக்கும் அவர் செல்லவுள்ளார்..

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47458-2012-08-27-11-06-28.html?utm_source=twitterfeed&utm_medium=twitter&utm_campaign=Feed%3A+TamilmirrorBreakingNews+%28TamilMirror.lk+%3A%3A%3A+Breaking+News%29

[size=4]அமைச்சர் அப்படியே வடக்கிலும் கிழக்கிலும் சீன செய்யும் உதவிகள் என்ற வெளிப்படையான செய்தியில் உள்ளே மறைந்திருக்கும் 'இராணுவ இரகசியங்களையும்' கவனித்து செல்வார் என்பதும் பரகசியம்.[/size]

[size=4]அமைச்சரின் வரவு நல்வரவாகட்டும்.[/size]

கொழும்பில் இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் நடந்து வருகின்ற சூழலில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று கொழும்பு வரவுள்ளது.

ஐந்து நாள் பயணமாக சிறிலங்கா வரும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி தலைமையிலான இந்தக் குழுவினர் அடுத்தமாதம் 2ம் நாள் வரை இங்கு தங்கியிருப்பர்.

இதன்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, கூட்டுப்படைகளின் தளபதி எயர்சீவ் மார்சல் ஹர்ச குணதிலக, முப்படைகளினதும் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை சார் அதிகாரிகள் பலரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன், சபுகஸ்கந்தயில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரி, பனாகொட இராணுவ முகாம் ஆகியவற்றுக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் நாளை செல்லவுள்ளார்.

சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் புதிய நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டத்தினால் பேச்சுக்கள் கொழும்பில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியாவுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=30433

ஒரு அணுகுண்டை சிறிலங்காவிடம் கொடுத்து வெடிக்க வைத்துப் பயிற்சி செய்யச் சொல்லலாம்.

[size=4]இந்தியாவின் முக்கிய நகரங்கள் நோக்கி அணு ஆயுதங்கள் சீனாவால் இலங்கையில் வைக்கப்படும் :wub: [/size]

1chi.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.