Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனிப்போர்!

Featured Replies

[size=6]இலங்கையை மையப்படுத்தி பனிப் போர் மோகம் சூழ்கிறது[/size]

[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்குமுறையில் இந்தியாவும் சீனாவும் பயங்கரமான விதத்தில் இலங்கையில் பலப்பரீட்சையில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.[/size]

[size=2]

[size=4]எங்களில் எவருக்கும் வெளிப்படையாகத் தெரியாதபோதிலும் நாங்கள் எவரும் அறியாத விதத்தில் இலங்கையை மையப்படுத்தித் தற்போது பனிப்போரொன்று உருவாகி வருகிறது. இந்தப் பனிப்போரில் சீனாவும் இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளன.[/size][/size]

[size=2]

[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்கு முறையில் இந்தியாவும் சீனாவும் பயங்கரமான விதத்தில் இலங்கையில் பலப்பரீட்சையில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. வேறொரு விதத்தில் கூறுவதானால் இலங்கையை மையப்படுத்தி இவ்விரு நாடுகளும் அரசியற்போர் ஒன்றில் இறங்கியுள்ளன என்பதே மிகப் பொருத்தமானதாகும்.[/size][/size]

[size=2]

[size=4]ஆசிய வட்டகையின் இரு பலமிக்க தரப்புகளின் பலப்பரீட்சையின் மத்தியில் இலங்கை சிக்கிக் கொண்டிருப்பது பயங்கரமானது. இன்றைய இலங்கை அரசின் கொள்கை நிலைப்பாடே இத்தகைய பயங்கர நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது. இந்தியாவைத் தனது மூத்த சகோதரன் எனக் குறிப்பிட்டு எத்தனை தூரம்தான் இலங்கை உயர்த்திப் பேசுகின்றபோதிலும் இலங்கை அரசு சீனாவுடன் தான் மிக நெருக்கமான உறவைப் பேணிவருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியைச் சீனா பொறுப்பேற்றதையடுத்தே இலங்கை அரசு சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேண முயல்வதாக இந்தியா உணரத் தலைப்பட்டது. இலங்கை அரசு இரு கை நீட்டி மேற்கொண்ட வலிந்த அழைப்பின் பேரிலேயே சீனா, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகளில் கைபோட்டது.[/size][/size]

[size=2]

[size=4]ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியில் சீனா ஈடுபடாது புறமொதுங்க வைக்க பல தரப்பட்ட வழிகளில் இந்தியா முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகளில் இந்தியாவால் வெற்றியீட்ட இயலவில்லை. அந்தக் கௌரவப் போரில் வெற்றியீட்டிய சீனா இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை முற்றுமுழுதாகச் செயற்பட வைக்கும் நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியை சீனா கையேற்று எதிர்பார்த்த பலன் அதன் மூலம் கிட்டாது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருங்கிய நட்பு விரிசலடையக் கூடுமென்ற இந்தியாவின் கணக்கு தப்புக் கணக்காக ஆன நிலையே தற்போதைய களநிலையாகக் கொள்ளத்தக்கது.[/size][/size]

[size=2]

[size=4]அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை முழு அளவில் செயற்படச் செய்ய சீன அரசு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் திரைக்குப் பின்னால் அரசியல் ரீதியில் ராஜதந்திர காய்நகர்த்தல் ஒரு புறம் பயங்கர நிலையொன்றை உருவாக்கி வருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]சீன இராணுவத்தினரின் உதவியுடன் இலங்கை அரசு, வடபகுதியில் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கான குடியிருப்புத் தொகுதியொன்றைக் கட்டியெழுப்ப திட்டமிட்டு வருகிறது. இதனை இந்தியா நன்கு கண்காணிக்கிறது. [/size][/size]

[size=2]

[size=4]அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி சீனாவிடம் வழங்கப்படுவதைத் தவிர்த்து விட இந்தியா முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது இயலாமற்போய் கடைசியில் தான் ஒதுங்கிக் கொள்ள நேர்ந்ததுபோல ஆகிவிடாமல், இந்த விடயத்தில் தான் தோல்வியுறக் கூடாதென இந்தியா தீர்க்கமாக முடிவு செய்து கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது. [/size][/size]

[size=2]

[size=4]வட பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கென குடியிருப்புத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பணி சீனாவுக்கு வழங்கப்படுவதற்கு இந்தியா காட்டும் தீவிர எதிர்ப்பு நிலையினின்றும் இது தெளிவாகப் புலப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பது குறித்து இந்தியா காட்டிய எதிர்ப்பை விட, தற்போதைய ராணுவ குடியிருப்பு நிர்மாணப் பணி குறித்து இந்தியா காட்டும் எதிர்ப்பு மூன்று நான்கு மடங்கு அதிகமானது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியா வெறுமனே இவ்விடயத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளத் தயாராயில்லை என்பது அண்மைய நாள்களில் இந்தியா முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மூலம் உறுதியாகிறது. இந்தியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள அந்தமான் தீவில் தனது இராணுவ நடவடிக்கைகளைப் பல மடங்கால் அதிகரித்திருப்பதன் மூலம் இந்தியா, இலங்கையின் பக்கம் சிவப்பு விளக்கு சமிக்ஞையைக் காட்ட முயல்வதாகக் கருத முடிகிறது. [/size][/size]

[size=2]

[size=4]அந்தமான் தீவைப் பயன்படுத்தி காட்டப்படும் சிவப்பு விளக்கு சமிக்ஞையை இலங்கைக்கான அபாய அறிவிப்பு மட்டுமல்ல. இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்தும், புதிதாக விமானப்படை முகாமொன்றை நிறுவியும், மேன்மேலும் உளவுப் பிரிவுகளைப் பயன்படுத்தியும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பயணிக்கும் சீன நாட்டுக் கப்பல்களை வேவு பார்க்கும் நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் கப்பல்களை வேவு பார்ப்பதற்கு இந்தியாவுக்குக் கிட்டியுள்ள சிறந்ததொரு வாய்ப்பு அந்தமான் தீவே.[/size][/size]

[size=2]

[size=4]அந்தமான்தீவு இத்தகைய உளவுபார்க்கும் வேலைகளுக்கெனவே அமைந்ததுபோன்ற பொருத்தமான தொரு இடமாகும். அதனை இன்று இந்தியா நன்கு பயன்படுத்திக்கொள்வது புதுமையானதொன்றல்ல.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியா, இலங்கைப் பிரச்சினை விடயத்தில் அமெரிக்காவுடன் இணைங்கிச் செயற்பட விழைவது அண்மைக்காலமாக இந்தியாவின் நிலைப்பாட்டில் அவதானிக்கக் கூடியதாகவுள்ள மற்றொரு தெளிவான மாற்றமாகும். அமெரிக்காவும் கூட சீன விரோதப் போக்கைக் கொண்டுள்ளமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உருவாகியுள்ள இப் புதிய நெருக்கம் மற்றொரு விடயத்தைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைப்பதாகக் கொள்ளத்தக்கது. அது அந்தமான் தீவில் இந்தியப் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கப் படைகள் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகும்.[/size][/size]

[size=2]

[size=5]மற்றொருபுறம் அமெரிக்கா அண்மைக்காலமாக முன்வைத்து வரும் கருத்தையும் புறம் தள்ளிவிட இயலாது. அல்கெய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தென்னாசிய நாடுகளில் ஊடுருவி அந்த நாடுகளில் மறைந்திருந்தவாறே புகலிடம் பெற்று வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இலங்கையிலும்கூட அவ்விதம் அல்கெய்தா தீவிரவாதிகள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று அமெரிக்கா நம்புகிறது.[/size][/size]

[size=2]

[size=4]அமெரிக்கா இவ்விதம் அல்கெய்தா தீவிரவாதிகள் குறித்து கருத்து வெளியிட்டு வருகையில், இந்தியாவோ, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி, இங்கிருந்தவாறே தமது திட்டங்களைத் தீட்டி வருகின்றனர் எனத் தெரிவித்துவருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியாவும் அமெரிக்காவும் வெளியிட்டு வரும் இத்தகைய கருத்துக்கள் மூலமும், மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலமும் இவ்விரு நாடுகளும் சூட்சுமமான விதத்தில் ஏதோ காரணங்களை முன்வைத்து இலங்கையில் கால் பதிக்கத் திட்டமிட்டு வருவதை உணரமுடிகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இவ்விரு நாடுகளுக்கும் இலங்கையில் கால்பதிக்க வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது இன்றைய அரசே. சீனா தொடர்பாக எமது அரசு கடைக்கொள்ளும் கொள்கை நிலைப்பாடே அதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]சீனாவின் உதவியுடன் இலங்கை அரசு வடபகுதியில் நிர்மாணிக்கவுள்ள பாதுகாப்புப் படையினருக்கான தொடர் குடியிருப்புத் திட்ட வேலைகளை ஆரம்பித்து வைக்கவே சீன நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்திருக்கிறார். இதுவும் அமெரிக்காவையும் இந்தியாவையும் மேலும் விழிப்பு நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]சீன நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக இந்தியா வெளிப்படுத்தவுள்ள பதில் நடவடிக்கை எதுவென கணிப்பதற்கு காலம் இன்னமும் கனியவில்லை. அதேவேளை இவ்விடயத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள ஆதரவு குறித்தும் குறைத்து மதிப்பிட இயலாது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தற்போது போரொன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகின்றனவா என்பது குறித்து எதுவும் தற்போது கூற இயலாதுள்ளது. ஆனால் மற்றொன்று குறித்து உறுதிப்படுத்த இயலும்.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையை மையப்படுத்தி சீனாவுடன் மோதத் தயாராகும் இந்நிலை, மேன்மேலும் தீவிரமடையுமா அல்லது அடங்கிவிடுமா என்பதை, இலங்கை அரசு இவ்விடயத்தில் மேற்கொள்ளவுள்ள முடிவு மற்றும் கடைக்கொள்ளவுள்ள கொள்கை நிலைப்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கையை மையப்படுத்தி உருவாகிவரும் இப்பனிப் போர் இலங்கையின் வாசற்கதவைத் தட்ட நேர்ந்துள்ள இன்றைய நிலையில், இலங்கை அரசு ஒன்றை மட்டும் மனதில் இருத்திச் செயற்பட வேண்டியுள்ளது. அது இந்தியா, அந்தமான் தீவில் இராணுவ முகாம் நிறுவுவதும், அதற்கு அமெரிக்காவின் உதவி ஒத்தாசை கிட்டுவதும், வெறுமனே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பயணிக்கும் சீன நாட்டுக் கப்பல்களை வேவுபார்ப்பதற்காக மட்டுமல்ல என்பதாகும்.[/size][/size]

[size=2]

வி.எஸ்.[size=1]ரீ[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3624735606669713[/size]

  • தொடங்கியவர்

[size=6]தீவிரமடைந்துள்ள தமிழக - இலங்கை பனிப்போர்[/size]

[size=4]புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சுமுகமான நிலையில் இல்லாத கட்டத்தில், தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் வெளிப்படையானதொரு பனிப்போர் வெடித்துள்ளது.

இந்தப் பனிப்போர் ஒரு மோதல் போலவே உருவெடுத்து விட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டுக்குச் சென்ற கால்பந்தாட்ட அணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

jeyalalitha1.jpg[/size]

கலைச் சுற்றுலா சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தல யாத்திரை சென்றவர்களையும் சிறப்பு விமானத்தில் திருப்பி அழைக்க நேர்ந்தது.

[size=4]அதேவேளை, கொழும்பும் இதற்குப் பதிலடியாக, தமிழ்நாட்டுக்குச் செல்வது கறித்து பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் தோன்றியுள்ள இந்த மோதலை புதுடெல்லி கண்டும் காணாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

புதுடெல்லி இந்த விவகாரத்தைச் சரிவரக் கையாளத் தவறியதே, இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகள் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தே வந்தன. முன்னர், ஒரு சில புலிகள் ஆதரவு அமைப்புகள், கட்சிகளால் நடத்தப்பட்டு வந்த இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள், தற்போது தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளாலும் நடத்தப்படுகின்ற நிலைக்கு மாறியுள்ளது.

இதற்கு இரண்டு தரப்புகள்கள் மீது காரணம் கூறப்படுகிறது. ஒன்று இந்திய மத்திய அரசு. இரண்டாவது இலங்கை அரசு. போரில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க இந்திய மத்திய அரசு தவறிவிட்டதுஇ தமிழர்களின் படுகொலைகளுக்கு அது துணை நின்றது என்ற கருத்து தமிழ்நாட்டில் வலுப் பெற்றுள்ளது.

போர் முடிந்த பின்னரும் இந்திய அரசு தமிழர்களைப் பாதுகாக்க, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதும்இ தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறையற்று இருக்கிறது, இலங்கையுடன் நட்புறவு கொண்டிருக்கிறது என்றும் இந்திய அரசு மீது தமிழக மக்களுக்கு விசனங்கள் உள்ளன.

அதேவேளை, இலங்கை அரசு போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களுக்கு நிரந்தரமான நியாயமான தீர்வு ஒன்றை வழங்கத் தவறியது தமிழ்நாட்டில் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகள் தீவிரம் பெறுவதற்கு முக்கிய காரணமாகியது.

போர்க்குற்றங்கள் போன்ற விடயங்கள் தமிழக மக்களின் உணர்வுகளில் காயங்களை ஏற்படுத்தியிருந்தாலும், போருக்குப் பின்னர் தமிழர்கள் நன்றாக நடத்தப்பட்டிருந்தால், நிம்மதியான வாழக் கூடிய சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டில் இந்தளவுக்கு இலங்கை எதிர்ப்புணர்வு வலுப் பெற்றிருக்காது.

இந்திய மத்திய அரசும், இலங்கை அரசும் போருக்குப் பிந்திய சூழ்நிலையைக் கையாள்வதில் காட்டிய அலட்சியம், தமிழ்நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரமுகர்களுக்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே அச்சுறுத்தல்கள் இருந்தபோதும், அது அவ்வளவாகத் தீவிரம் பெறாமல் அடங்கிப் போனது.

ஆனால் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவரை, வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சினை தான் இப்போதைய பனிப்போரின் அடிப்படை.

இலங்கைப் படையினரை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்பதே, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே, தாம்பரம் விமான தளத்திலும், குன்னூரிலும் பயிற்சிக்காக வந்த இலங்கைப் படை அதிகாரிகளுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது. இந்திய மத்திய அரசு அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது.

ஆனால் இம்முறை மத்திய அரசு மசிந்து கொடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியும் அதற்குப் பதில் இல்லை.

தமிழக கட்சிகள் அனைத்தும் வலியுறுத்திய போதும், மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக இல்லை.

கடந்த மே மாதம் தொடக்கம் வெலிங்டனில் பயிற்சி பெற்று வரும் இரு இலங்கை படை அதிகாரிகளையும், கொழும்புக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே தமிழக கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

amarla1.jpg[/size]

[size=4]கொழும்புக்கே திருப்பி அனுப்புவது சிக்கலானது என்ற நிலையில்இ குறைந்தபட்சம் வேறு மாநிலத்துக்கு அவர்களை அனுப்பி இந்தப் பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருந்திருக்கலாம். ஆனால் அந்த முடிவைக் கூட எடுப்பதற்கு இந்திய மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாவது கடிதம் அனுப்பப்பட்ட பின்னர், 'யார் நிர்ப்பந்தம் கொடுத்தாலும் இலங்கைப் படையினருக்கான [/size]பயிற்சிகள் நிறுத்தப்படாது' என்று கூறி எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தார் இந்திய பாதுகாப்பு இணையமைச்சர் பல்லம் ராஜு.

[size=4]அதையடுத்து சினம் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாஇ இன்னொரு காட்டமான கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பினார். அப்போது அவர் ஈரான் சென்று விட்டார்.

இந்தநிலையில், மன்மோகன்சிங் ஈரானில் இருந்து திரும்பியதும் இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதியளித்தார்.

மன்மோகன்சிங் நாடு திரும்பி பல நாட்களாகியும் – இந்தப் பத்தி எழுதப்படும் வரை- வெலிங்டனில் பயிற்சி பெறும் இலங்கைப் படையினரை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

தனது இரண்டு கடிதங்களையும் மத்திய அரசு அலட்சியம் செய்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியிருக்கும். தனது பலத்தையும் கோபத்தையும் மத்திய அரசுக்கு வெளிப்படுத்துவதற்காக சந்தர்ப்பம் பார்த்திருந்த அவருக்கு ஒரு சில நாட்களிலேயே வாய்ப்புக் கிட்டியது ஆச்சரியம் தான்.

றோயல் கல்லூரி மற்றும் இரத்தினபுரி சர்வதேசப் பாடசாலை ஆகியவற்றின் கால்பந்தாட்ட அணிகள் தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணமே அது.

இரு கால்பந்தாட்ட அணிகளையும் உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது நியாயமற்றதொரு நடவடிக்கை என்பதை அவரால் உணராமல் இருந்திருக்க முடியாது. ஆனால், சந்தர்ப்பம் அவரை அத்தகையதொரு முடிவை எடுக்கத் தூண்டியது.

அதாவது, தன்னையும் தமிழ்நாட்டின் உணர்வுகளையும் அலட்சிப்படுத்தும் மத்திய அரசுக்கு கடுமையானதொரு செய்தியை சொல்ல அவர் முற்பட்டார்.

இந்திய சமஸ்டி அரசியலமைப்பின்படி, ஒரு மாநில முதல்வரான அவரால் அதைத் தான் செய்ய முடிந்தது.அதாவது இலங்கைப் படையினருக்குப் பதிலாக விளையாட்டு வீரர்களை வெளியேற்றினார்.

இலங்கைப் படையினரை வெலிங்டனில் இருந்து வேறு இடத்துக்கு அனுப்பியிருந்தால், இத்தகைய முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு போதும் எடுத்திருக்கமாட்டார்.

இந்தக் கட்டத்தில், ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தவர்களுக்கு, இன்னும் வசதியாகிப் போனது.

ஜெயலலிதா கொடுத்த ஊக்கம், வேளாங்கண்ணிக்கு தல யாத்திரை சென்ற சுற்றுலாப் பயணிகள் மீதான கோபமாகத் திரும்பியது. இந்த நிலையில் தான், இலங்கை அரசு பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

இதன் விளைவாக, மிகின் லங்கா விமானத்தை இரவோடு இரவாக அனுப்பி அத்தனை பேரையும் அழைத்து வரவேண்டிய நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.

இதன் பின்னர், இலங்கை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு கூறிய போதிலும்இ அது நிரந்தரப் பாதுகாப்புக்கான நடவடிக்கையாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்தப் பனிப்போரை தணிக்காமல், கொதி நிலையில் வைத்திருக்க மத்திய அரசு ஏன் விரும்புகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஏற்கனவே கொழும்புடன் சுமுக உறவு இல்லாத நிலையில், கொழும்பை மடக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்த புதுடெல்லி முனைகிறதா என்ற சந்தேகமும் சிலரிடம் உள்ளது.

இந்தப் பனிப்போர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார உறவுகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இலங்கைக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதனால் எப்படியாவது தமிழ்நாட்டுடனான உறவுகள் மேலும் சீரழியாமல் பாதுகாக்கவே, அரசாங்கம் முனையும். ஆனால் இந்தக் கட்டத்தில், பிரச்சினையை தணிக்க இலங்கையால் ஆகக் கூடிய காரியம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், அதற்கான கடிவாளம் இப்போது இருப்பது இந்திய மத்திய அரசிடம்.[/size]

http://www.tamil.dai...5-16-32-02.html

[size=4]- சஞ்சயன் [/size]

பனிப்போர் என்ற வார்த்தைப்பிரயோகம் சரியானதுதானா? பனிப்போர் காலத்தில் இரு அணிகளும் தனித்து நின்றன. இப்போது நிலைமை வேறு.இந்த சிறு கட்டுரை அருமையாக இந்த நூற்றாண்டில் நடைபெறும் மாற்றத்தை விளக்குகிறது.

http://www.nytimes.com/2012/09/05/opinion/its-mitts-world.html?_r=1&ref=opinion

இலங்கை இந்த மாற்றத்தை சரியாக பாவிக்கிறான்.

  • தொடங்கியவர்

பனிப்போர் என்ற வார்த்தைப்பிரயோகம் சரியானதுதானா? பனிப்போர் காலத்தில் இரு அணிகளும் தனித்து நின்றன. இப்போது நிலைமை வேறு.இந்த சிறு கட்டுரை அருமையாக இந்த நூற்றாண்டில் நடைபெறும் மாற்றத்தை விளக்குகிறது.

http://www.nytimes.c...r=1&ref=opinion

இலங்கை இந்த மாற்றத்தை சரியாக பாவிக்கிறான்.

[size=4]இந்த கட்டுரைகளில் 'பனிப்போர்' என்ற பதம் பாவிக்கபப்ட்டது இலகுவாக விளங்கவைக்க என எண்ணுகிறேன். [/size]

[size=1]

[size=4]முன்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பலத்த நீண்ட பனிப்போர் நிகழ்ந்தது. இரண்டு நாடுகளுக்கும் பின்னால் உலகம் பிளவுபட்டு முதலாளித்துவம் - சமத்துவம் என பிளவு பட்டு நின்றது. [/size][/size]

[size=1]

[size=4]கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அணு ஆயுத இல்லை மூன்றாம் உலக மகா யுத்தம் இல்லாமல் வென்றன. [/size][/size]

[size=1]

[size=4]இலங்கைத்தீவிலும் ஒரு வித பனிப்போர் ஆரம்பித்துள்ளதை இந்த கட்டுரைகள் கூறுகின்றன. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கும் ஆசியாவின் வல்லரசான சீனாவுக்கும் இடையில் நடக்கும் போட்டியில் இலங்கையும் சிக்கி விட்டது. [/size][/size]

[size=1]

[size=4]நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் பிரபல எழுத்தாளர் தாமஸ் ப்ரைட்மேன் கூறுவது இன்றுள்ள உலகம் எதிரிகளை கொண்டிருந்தாலும் பொருளாதார ரீதியாக ஒன்றோடு தங்கியுள்ளன என்று. அதேவேளை அமெரிக்கா கூட வட கொரியாவுடன், ஈரானுடன், க்யூபாவுடன், வெநிசூவேலாவுடன் ஒருவித குளிர் யுத்தத்தையே செய்து வருகின்றது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போர் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எதிரிகள் நேரடியாக மோதிக்கொள்ளாமல்

ஒருவர் மற்றவரின் நடவடிக்கைகளை இரகசியமாக அறிந்து கொண்டு அதற்கெதிரான

நடவடிக்கையில் அவர்களும் இரகசியமாக இறங்குவது என்று நினைக்கின்றேன்.

அல்லது நேரடியற்ற, போர் இல்லாத, சில போருக்கான எச்சரிக்கைகள் அல்லது முயற்சி

செய்வது எனவும் கொள்ளலாம். அதைத்தான் இப்போது சீனாவும் இந்தியாவும் இலங்கையை

முன்னிறுத்திச் செய்து கொண்டிருக்கின்றார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.