Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜதந்திர வரப்பிரசாதம் - ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷ மீதான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-Mahinda007.jpg

[size=4]ரொபேர்ட் ஒ - பிளேக் கொழும்பு வரவுள்ள நிலையில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியினால் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.[/size]

[size=4]ஜனாதிபதிக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகவும் இதனால் வழக்குத் தொடர முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அமரிக்க நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.[/size]

[size=4]இராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதனால் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும் இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதவான் நயோமி புச்வால்ட் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]அமெரிக்காவில் தொடரப்படும் சிவில் வழக்குகளின் போது நாடுகளின் தலைவர்களுக்கு இராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கப்கப்பட்டு வருவதாகவும், இது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒர் நடைமுறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size]

[size=4]கடந்த பெப்ரவரி மாதமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

பாதிக்கப்பட்ட இன்னொருவர் இன்னொரு வழத்தில் வழக்கை திரும்ப போடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் குசேயின் போன்றவர்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தால் இராசதந்திர வரப்பிரசாதம் வழங்கப்படுமா?

அப்படி பல கோமாளிகள் தமது தேவைகளுக்கு அமெரிக்கா வந்தும் போனார்கள். இதில் நா.க. அரசு உபயோகப் படுத்த முயன்றது ஒபாமாவால் சென்றவருடம் கையெழுத்திடப்பட்ட புதிய சர்வதேச சர்வாதிகளுக்கெதிரான சட்டத்தையே.

தமிழ் பத்திரிகைகள் விபரம் விளங்காமல் ஆங்கில பதத்தை குழப்பி அடிக்கின்றன. என்னிடம் இது சம்பந்தமாக செய்திகள் மொழிபெயர்ப்புக்கு வந்த போது நான் "நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பு கவசம்" என்றே குறிப்பிடிருந்தேன். இது ஜெனிவா மகாநாட்டிலிருந்து வரும் "ராஜாதந்திர சிறப்புரிமை" யால் வருவதல்ல. இது அமெரிக்கா மட்டும் தன் நிலத்திற்கு வரும் தலைவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு. இவர்களை அமெரிக்காவால் "இராஜதந்திரி"யாக கருத்தி பாதுகாக்க முடியாத நிலையிலும், இன்றை வரை அமெரிக்க அரசு போர்வலுவில் மற்றைய நாடுகளை எதுவும் செய்ய முடியும் என்ற நிலையிலும் அமெரிக்க சட்டங்களுக்கு சமமான சட்டங்களை இயற்ற முடியாத நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவிற்கு வரும் போது அமெரிக்காவின் சுதந்திரமான சட்டங்களையும், கோடுகளையும் பயன்படுத்தி தனிமனிதர்கள் அவர்களை கிள்ளுக்கிரையாக மாற்றிவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பு இருந்து வந்தது. இது ஒரு கண்மூடித்தனமான பதுகாப்பாகவே கோடுகளால் பாவிக்க படுகிறது. தலைவரின் தனிப்பட்ட நடத்தைகளை கோடுகள் ஆராய விட்டுக்கொடுக்க மட்டா. இதைத்தான் புதிய சட்டங்களின் கீழ் நாடு கடந்த அரசு உடைக்க முயல்கிறது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.