Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் ஆட்சியமைக்க ஆளும்கட்சிக்கு ஆதரவு வழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்

Featured Replies

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கலாம் என்று ஒரு பகுதியினரிடையே கருத்து நிலவியபோதும், நேற்றிரவு நடந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவார்.

தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாணசபையில் அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும்கட்சிக்கு ஆதரவளிப்பதற்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், கிழக்கு முதல்வர் பதவி, மாகாணசபையின் வெகுமதி ஆசனங்களில் ஒன்று, 17வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை சிறிலங்கா அரசிடம் கோரியதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன், துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சு, இரண்டு பிரதி அமைச்சர் பதவிகள், அரச கூட்டுத்தாபனங்களின் இரண்டு தலைவர் பதவிகள் ஆகியவற்றுக்கும் சிறிலங்கா அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

http://www.paristamil.com/tamilnews/view-news-MjE5MDIwMDUy.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரியான முடிவு தான் கிடைக்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும் கூட்டமைப்பினர் தங்கள் சகோதரத்துவத்தைக் காட்டிய முறை

பல முஸ்லிம் மக்களை நாளடைவில் சிந்திக்க வைக்கும் என நம்பலாம்.

முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களுடன் கூட்டாக வாழ நினைக்கவில்லை.

சந்தர்ப்பவாதிகளான முஸ்லிம் காங்கிரஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பினர் தமிழர்களை ஒன்றுபடுத்துவதில் ஆர்வம் காட்டி

மொத்த ஈழத் தமிழர்களையும் தங்கள்மீது பார்வையைத் திருப்ப முயற்சித்தாலே அவர்களுக்கு

அடுத்த தேர்தலிலாவது உண்மையான வெற்றி கிட்டும்.

வீழ்ச்சியைக் காணும்போது மறுசீரமைப்பு என்பது முக்கியமானது

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தமிழர் தரப்பும் முஸ்லிம் தரப்பும் தீடிர் என சந்தித்து பேசி இருப்பதாக செய்திகள் சில தெரிவிகின்றன....

[size=3]சம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை[/size]

[size=3][size=1][size=4]120708175333_tna_muslim_congress_304x171_bbc_nocredit.jpg[/size]

[size=4][size=2]முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுக்கும்வரை கால அவகாசம் கொடுப்பதுதான் பொருத்தம்'[/size][/size]

[size=4][size=3]கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா [/size][/size]

[size=3]ஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று தமக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size]

[size=3]முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தாங்கள் காத்திருந்தும் தமக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தனர்.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.[/size]

[size=3]இந்தப் பின்னணியிலேயே இரண்டு தரப்பினருக்கும் இடையில் இன்று இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது.[/size]

[size=3]நேற்று சனிக்கிழமையும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பினர், தாம் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=3]கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக அழைப்பு விடுத்தால் அதுபற்றி ஆராய்ந்து பார்க்கலாம் என்றும் கூட்டமைப்பு கூறியது.[/size]

[size=3]கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை கருத்தில்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தாங்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு இன்றைய சந்திப்பின்போது சுட்டிக்காட்டியதாக சம்பந்தன் பிபிசியிடம் கூறினார்.[/size]

[size=3]தமது கருத்துக்களை மிக அவதானமாக ஆராய்ந்துவருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.[/size]

[size=3]இன்னும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ் முடிவொன்றை எடுக்கும்வரை கால அவகாசம் வழங்குவதே பொருத்தமானது என்று தான் கருதுவதாகவும் சம்பந்தன் மேலும் கூறினார்.[/size]

[size=3]http://www.bbc.co.uk...6_slmctna.shtml[/size][/size][/size]

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.