Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், சிறிலங்கா படையினரைப் பாதுகாப்போம் – பசில் ராஜபக்ச.

Featured Replies

அனைத்துலக ரீதியாக எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த படையினரைப் பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பகா மாவட்டத்தில் உள்ள திவுலப்பிட்டியவில், சிறிலங்காப் படையினருக்காக அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முப்படைத் தளபதிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பசில் ராஜபக்ச,

சிறிலங்கா அதிபர் போருக்குத் தலைமை தாங்கினாலும், நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தியைக் கட்டியெழுப்பு வதில் முப்படையினருமே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ஆட்சிஅதிகாரத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற போது நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே , அரசின் கையில் இருந்தது.

அதேபோன்று கடற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியே சிறிலங்கா அரச நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

ரணில் – பிரபாகரன் உடன்பாடு மூலம், ஏனைய பிரதேசங்கள், புலிகளின் நிர்வாகப் பிரதேசம் என்று அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சிறிலங்காவின் முப்படையினர் தமது சீருடையுடன் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவர்களின் அனுமதி பெற்றே செல்ல வேண்டியிருந்தது.

அதுமட்டுமின்றி சாதாரண குடிமக்கள் கூட ஓமந்தைக்கு அப்பால் செல்ல வேண்டுமானால் புலிகளின் அனுமதிபெற வேண்டியிருந்தது.

அந்தநிலையில் இருந்த நாட்டையே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றிருந்தார்.

அவரது வழிகாட்டலில் பாதுகாப்புச் செயலர் தலைமையில் முப்படையினரின் தியாகத்தின் மூலம் குறுகிய காலத்தில் முழு நாட்டையும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்தது.

முப்படையினரினதும் உயிர்த்தியாகத்தால் தான், சிறிலங்கா அதிபரால், இதனைச் சாதிக்க முடிந்தது.

இதில் பாதுகாப்புச் செயலரின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஆயுதங்களைவிட அதன் பின்னணியிலுள்ள படையினரே வெற்றிக்குக் காரணம் என்று அவர் அடிக்கடி கூறுவார்.

சிறிலங்காப் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பெறுவது, அதற்காக சிறந்த படையினரை உருவாக்குதல் என இரண்டிலுமே அவர் கவனம் செலுத்தினார்.

அதேபோன்று சிறிலங்காப் படையினரைப் பாதுகாக்கவும் அவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சோடு இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சிறிலங்காவின் இப்போதைய நிலைக்குக் காரணமானவர்கள் சிறிலங்காப் படையினரே.

இதற்காக அவர்கள் உயிரைத் தியாகம் செய்தது மட்டுமன்றி எதிர்க்கட்சியினரின் கேலிக்கும் நகைப்புக்கும் உள்ளாக நேரிட்டது.

கிளிநொச்சி போகிறோம் என்று மதவாச்சி போனதாகக் கேலி செய்தார்கள்.

அத்தகைய சூழ்நிலைகளிலும் சிறிலங்காப் படையினர் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=32429

சிறிலங்காப் படையினரைக் கைவிடப் போகிறார்கள்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்கின்றார்கள் அவர்கள் மாட்டினால் விசாரணையின்போது யார் செய்யச்சொன்னது என்ற உண்மைவரும் வந்தால் தாமும் மாட்டவேண்டிவரும் அதற்காகவே முற்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடு ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.