Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்! தீக்குளித்த விஜயராஜ் பேட்டி!

Featured Replies

vijayaraj-salam-233-300x169.jpgராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் (26) எனவும் தெரியவந்துள்ளது. இன்று (17.09.2012) அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தியுள்ளார். அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ், பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

vijayaraj-salam-1.jpgவிஜயராஜ் தினம் டைரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ, சீமான், கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும்போது, அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டைரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டைரியில் எழுதியிருப்பதாக ,

இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும் என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே…

மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார்.

விஜயராஜ் குறித்து நாம் மருத்துவர்களிடம் கேட்டபோது, 80 சதவீதத்திற்கு மேலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார். காப்பாற்ற முயற்சி செய்கிறோம் என்றனர்.

அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள டைரியில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய தகவல்களை எழுதியிருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரின் ஆடோவிலிருந்த “டைரி”யை போலீசார் விசாரணைக்காக கைப்பற்றியுள்ளார்கள்.

இந்த தகவல் கிடைத்ததும், சேலம் நகரம் மட்டுமில்லாது மாவட்டத்தின் பல பகுதிகளிளுமிருந்து தமிழின உணர்வா ளர்கள் சேலம் மருத்துவமனைக்கு வந்தனர். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-சிவசுப்பிரமணியம், இளங்கோ

http://thaaitamil.com/?p=32457

தீக்குளிப்பது தீர்வில்லை என்றாலும்,

ஒரு தமிழனின் உளப்பூர்வமான உணர்வை இந்த ஒளிப்பதிவு வெளிபடுத்துகிறது!

Edited by Aasaan

இலங்கை விஜயத்தின் பின் தான் தமிழர்களுடன் இருப்பதாக நடித்து ஏமாற்றிய சுஸ்மா சுவராஜுக்கு இந்த ஒளிப்பதிவை அனுப்பி வைக்க வேண்டும்.

[size=5]To: cm@mp.nic.in

Cc: pstocmbpl@gmail.com, janwadeashok@yahoo.co.in[/size]

[size=3][size=5]September 16, 2012[/size][/size]

[size=3][size=5]Shri Shivraj Singh Chouhan[/size][/size]

[size=3][size=5]Chief Minister, Government of Madhya Pradesh,

Vallabh Bhawan,

Bhopal[/size][/size]

[size=3][size=5]Dear Hon'ble Chief Minister;[/size][/size]

[size=3][size=5]I am a Tamil refugee from Canada who once fled his Motherland thanks to oppression and discrimination. [/size][/size]

[size=3][size=5]As I hear that Sri Lanka's President set to visit India and namely Your great state, I would like to remind that he is responsible for continued genocide of Tamils in Sri Lanka as documented by UN. [/size][/size]

[size=3][size=5]The visit by the Sri Lankan President to Madhya Pradesh may be described as a non-political event, but Tamils around the world see otherwise. Just today a Tamil from TamilNadu did self immolate himself protesting this visit.[/size][/size]

[size=5]I urge Your Government to cancel the visit and uphold values of Human Rights.[/size]

[size="4"]Truly,[/size]

[size=3][size=5]cc: Sh. Ashok Janwade, Dy Secretary to CM[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.