Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த போதும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை: புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன்.

Featured Replies

[size=4]'இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார்.

'யாழ். மாவட்ட மக்கள் கவலைக்கு மத்தியில் வாழ்கின்றனர். யாழ். மாவட்ட மக்களுக்கு அதிகளவிலான தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவான விதத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய அளவிலான உதவிகளைச் செய்வதற்கு உதவுவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர், யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, 'அரசியல் தீர்வை நோக்கி நகர அரசாங்கத்திற்கு கூடிய அழுத்தங்கள் கொடுக்குமாறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வலியுறுத்துமாறும் அமெரிக்க தூதரிடம் யாழ். ஆயர் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மிச்செல் ஜே.சிசன், 'இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்றும் கூறினார்.

Mi02(1).jpg[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/48954-2012-09-19-14-42-27.html

[size=4]இதற்கு பதிலளித்த மிச்செல் ஜே.சிசன், 'இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்றும் கூறினார்.[/size]

http://tamil.dailymi...9-14-42-27.html

[size=4]"அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை" [/size]- இதை ஒத்துகொண்டால், நாங்களும் ஒப்பந்தங்கள் எழுதி அவர்கள் அவற்றை கிழித்தவர்கள் என்ற சரித்திரத்தை தெரிந்து வைத்திருந்தால் நாம் எல்லோரும் ஒரே பாதையில் பயணிக்கலாம்.

நீங்கள் இதுவரை கொடுக்கும் அழுத்தங்கள் அவர்களுக்கு அழுத்தங்களாக இல்லை.சிறிலங்காவின் ஏற்றுமதிகளுக்கு தடை விதித்தால் அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.அதை ஏன் இன்னும் அமெரிக்கா செய்யவில்லை?

அலரி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கான தீர்வு பொதி எனது ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தோடு செயல்படும் சில நாசகாரர்களால் திருட்டு போய் விட்டது என்று மகிந்த கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நீங்கள் இதுவரை கொடுக்கும் அழுத்தங்கள் அவர்களுக்கு அழுத்தங்களாக இல்லை.சிறிலங்காவின் ஏற்றுமதிகளுக்கு தடை விதித்தால் அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.அதை ஏன் இன்னும் அமெரிக்கா செய்யவில்லை?

அமெரிக்கா சீனாவுக்கு றில்லியன் டொலர் இறக்குமதி கணக்கு. அதை அவன் திருப்பி வாங்கி இலங்கைக்கு 400 வருடங்களுக்கு 3 பில்லியன் கடன் கொடுப்பான். (கருத்தென்னவென்றால் இனிமேலைய காலங்களில் சீனாவுடன் உறவு இருக்கும் நாடுகளை பொருளாதாரத்தடையால் தண்டிக்க முடியாது.)

அமெரிக்கா சீனாவுக்கு றில்லியன் டொலர் இறக்குமதி கணக்கு. அதை அவன் திருப்பி வாங்கி இலங்கைக்கு 400 வருடங்களுக்கு 3 பில்லியன் கடன் கொடுப்பான். (கருத்தென்னவென்றால் இனிமேலைய காலங்களில் சீனாவுடன் உறவு இருக்கும் நாடுகளை பொருளாதாரத்தடையால் தண்டிக்க முடியாது.)

சிறிலங்காவின் ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி கணிசமானது.சீனாவிற்க்கு சிறிலங்காவால் ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியாது அதனை சீனா விடாது.ஆகவே அமெரிக்க பொருளாதாரத் தடை கணிசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது.இதனை அமெரிக்கா இப்போது செய்யாது விட்டால் பின்னர் செய்ய முடியாது.

சீனா பொருளாதார ரீதியாக சிறிலங்காவின் பொருளாதார அடிப்படைகளை மாற்ற முன்னர் செய்ய வேண்டும்.

சீனாவிடம் சிறிலங்காவை முற்று முழுதாக காப்பாற்றுவதற்கான பலம் இன்னும் இல்லை.ஆகவே அமெரிக்காவிற்க்கு இது கடைசித் தருணம்.இதனை அமெரிக்காவோ இந்தியாவோ பயன் படுத்த வில்லை என்றால் ,அவர்கள் சிறிலங்காவி நிரந்தரமாக சீனவின் ஆளுககிக்குள் விட்டு விட வேண்டி இருக்கும்.இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியா. அமெரிக்கா வெறும் அறிக்கைகளை விட்டு நேரத்தை விரயம் செய்கிறது, இந்திய ஆட்ச்சியாளர்கள் நீண்ட உறக்கத்தில், சீனா வெகு விரைவாக செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது.

  • தொடங்கியவர்

[size=4]ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நிற்பாட்டியது. மொத்த இழப்பு அறுநூறு மில்லியன்கள் இழப்பு. [/size][size=1]

[size=4]குறைந்த ரூபாவால் கொஞ்சம் ஏற்றமதி தப்பி இருந்தாலும், அமெரிக்க ஏற்றமதி கைகொடுத்து உள்ளது. அவர்களும் தமது ஜி,எஸ். பி. சலுகையை நிறுத்தினால் ... சிங்களம் செவி மடுக்கலாம். பிளேக் தனது பயணத்தில் இது பற்றி, அதாவது இருநாடுகளுக்கும் இடையிலான சமமற்ற வர்த்தகத்தை பற்றி கூறி இருந்தார். [/size][/size]

[size=1]

[size=4]அடுத்த மார்ச் மாதம் அளவில் இந்த சலுகை இரத்து செய்யப்படலாம். [/size][/size]

[size=1]

[size=4]சீனன் உள்ளதை அள்ளுவான். அவனுக்கு எதை சிங்களம் விற்பது?? [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.