Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்றதமிழர்கள் இலங்கைக்கு விரட்டியடிப்பு

Featured Replies

[size=4]பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்ற, தமிழர்கள் 50 பேர், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, வீடுகளை இழந்த ஏராளமான தமிழர்கள், மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். போதுமான வசதி இல்லாததால், பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே, இலங்கையிலிருந்து சமீபத்தில், 50 பேர் பிரிட்டனில் தஞ்சம் அடையச் சென்றனர். [/size]

[size=4]ஆனால், அவர்களை, பிரிட்டன் எல்லையோர காவல் படையினர், அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து, இந்த 50 பேரும், தனி விமானத்தில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று இவர்கள், கொழும்பு வந்தடைகின்றனர்.[/size]

[size=4]மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு பயந்து, தஞ்சம் அடைந்தவர்களை, பிரிட்டன் எல்லையோர காவல் படையினர், கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. மீண்டும் இலங்கை திரும்பும் இந்த தமிழ் மக்கள், அந்நாட்டு அரசால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.[/size]

http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F-181300061.html;_ylt=Ak3wFMcJ9djjdYwNFDvlTZL.zNIF;_ylu=X3oDMTRndmFzZmg2BG1pdANUb3BTdG9yeSBOZXdzU0YgV29ybGQgTUQEcGtnA2Y5OWJkYmI1LTQ4NmUtM2ZmNC04OWNkLWFkYmE1ZTZkNjNiMwRwb3MDMwRzZWMDTWVkaWFCTGlzdE1peGVkTFBDQVRlbXAEdmVyA2IyYjM0OTIwLTAyOGItMTFlMi1iZmZhLWFmMDJiMDFlYjA2YQ--;_ylg=X3oDMTJwajk4N3JsBGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr4184K6J4K6y4K6V4K6u4K.NBHB0A3NlY3Rpb25z;_ylv=3

  • தொடங்கியவர்

[size=6]Sri Lankan asylum seekers removed from deportation flight at last minute after judge accepts there is risk of torture[/size]

[size=5]மேலே உள்ள செய்தியின் படி எமது உறவுகள் ஏற்றப்பட்ட விமானத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளனர் ![/size]

[size=5]Dozens of failed Sri Lankan asylum seekers were removed at the last minute from a controversial deportation flight today after a senior judge accepted there was a risk that they could be tortured on their return.[/size]

[size=3][size=5]The government has insisted on continuing with its policy of chartered deportation flights to Sri Lanka even though the judiciary have now twice issued last minute injunctions because of concerns over torture.[/size]

[size=5]The latest injunction, which was granted after a frantic scramble by lawyers in the High Court, is a major challenge to the Home Office's assurances that none of those it deports to Colombo are at risk of torture. A similar ruling was made by the High Court in May - the last time the Government tried to put on a chartered deportation flight to Sri Lanka.[/size][/size]

http://www.independe...re-8157192.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

694225357british-flag-L.jpg

பிரித்தானியாவில் இலங்கை அகதிகள் 60 பேருக்கு புகலிடம் நிராகரிப்பு

September 20, 2012 07:05 am

இலங்கை அகதிகள் 60 பேருக்கு பிரித்தானியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்கு திரும்ப அனுப்பப்படும் நிலையில் லண்டனில் உள்ள தடுப்புக்காவல் மையம் ஒன்றிலிருந்து பேட்டியளித்த ஒரு இலங்கைத் தமிழர், தான் விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு உதவி செய்ததால், இலங்கை பாதுகாப்புப் பிரிவினராலும், கருணா குழுவினராலும், சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும், பின்னர் தப்பியோடி பிரிட்டன் வந்ததாகவும் குறிப்பிட்டார். இப்போது தனது தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தன்னை இலங்கைக்கு திரும்ப அனுப்பினால், மீண்டும் தான் சித்ரவதைக்குள்ளாவது நிச்சயம், தான் கொலைசெய்யப்படவும் கூடும் என்றார், பெயர் வெளியிடவிரும்பாத அந்த இலங்கைத் தமிழர்.

இலங்கையில் நடந்து முடிந்த போரில், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் அல்லது அவர்களுக்கு உதவியதாகக் கருதப்படுவர்கள், இலங்கைக்கு திரும்ப அனுப்பப் பட்டால் அவர்கள் அங்கு சித்ரவதைக்கு உள்ளாக்க் கூடும் என்று "ப்ரீடம் ப்ரம் டார்ச்சர்" (சித்ரவதையிலிருந்து விடுதலை) என்ற தன்னார்வ அமைப்பு கூறுகிறது.

இந்த அமைப்பைச் சேர்ந்த மார்க் பெனிக் இது பற்றிக் கூறுகையில்,ஐக்கிய ராஜ்யத்தின் எல்லைகள் நிறுவனம் என்ற துறை, இன்று ஒரு சிறப்பு விமானத்தில் , இலங்கையர்கள் பலரை ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு வெளியேற்ற ஏற்பாடுகளை செய்து வருகிறது. சுமார் 60 பேர்வரை இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30க்கு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இதில் பலர் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள்.

எங்கள் அமைப்பான “ப்ரீடம் ப்ரம் டொர்ச்சர்” என்ன சொல்கிறது அல்லது இந்த விஷயத்தில் எங்கள் ஆராய்ச்சி எதைக்காட்டுகிறது என்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்த அல்லது தொடர்பு வைத்திருந்ததாகக் கருதப்படும் எந்த ஒரு தமிழரும், இலங்கைக்கு திரும்ப அனுப்ப்ப்பட்டால் அவர் சித்ரவதை செய்யப்படும் அபாயம் இருக்கிறது என்பதுதான்.

அவர்கள் இங்கே பிரிட்டனில் அவர்களை திரும்ப அனுப்பாதிருக்க,அவர்களுக்கிருக்கும் சட்டபூர்வமான மேல்முறையீடு போன்ற வழிகளை எல்லாம் பயன்படுத்தி முடித்திருப்பார்கள்தான். ஆனால் கடந்த 48 மணிநேரத்தில், அவர்களில் குறைந்தது மூவராவது, அவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக கடைசி நிமிடத் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள். அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் பின்போடப்பட்டிருக்கின்றன என்றார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=29295

  • கருத்துக்கள உறவுகள்

25 பேர் மாத்திரமே இலங்கை வருகை: குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு face.jpg By Irshad

2012-09-20 13:31:35

பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விசேட விமானம் மூலம் இலங்கைக்கு இவர்கள் அனுப்பபடவுள்ளதாகவும், அதில் 50 வரை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிருந்த போதும், 25பேர் மாத்திரமே வருகைத் தந்திருந்தனர்.

யாழ்ப்பாணம்,மற்றும் கிளிநொச்சி,மட்டக்களப்பு பகுதிகளைச் சேரந்த 13 தமிழர்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்கள் ,சிங்களவர்கள் என 12 பேரும் காணப்படுகின்றனர்.

தற்போது இவர்கள் விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=738

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Charles Haviland@cfhaviland (BBC reporter)

#IOM: 23 of the 25 #srilanka deportees fr #UK now out. Of the 25: 13 #Tamil, 8 #Muslim, #4 Sinhala. Emotional family reunions here at airprt

  • தொடங்கியவர்

B03(30).jpg

B01(86).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.