Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்அரசியல் தலைமைகள் வாய்க்கவில்லை!

Featured Replies

[size=1]

[size=4]தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டின் சிறுபான்மை இனங்கள் என்பது மட்டுமே அவர் களின் உரிமை இழப்புகளுக்கும் சுதந்திரமற்ற வாழ்வுக்கும் காரணமல்ல. மாறாக சமகாலத்து தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளின் ஆரோக்கியமற்ற தன்மைகளும் விலைபோகும் பண்பாடுகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடம் ஒன்றும் அரசிடம் இன்னொன்றுமாக பேசும் கபடத்தனம் என்பன காரணமாகவும் சிறுபான்மை இனங்கள் தங் கள் உரிமைகளை வென்றெடுக்க முடியவில்லை. கிழக்கு மாகாணத் தேர்தல் நிலைமைகள் இதற்கு நல்ல உதாரணம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தேர்தல் பிரசா ரம் செய்யும்போது கூறியவை, தேர்தல் முடிந்த பின் அவர் காவிக்கொண்ட தந்திரங்கள் முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு அரசியல் தலைமை கிடைக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டு கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப்பேசும் போதெல்லாம் முஸ்லிம் தரப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசிக்க வேண்டும். பேச வேண் டும் எனக் கூறும் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபை ஆட்சியில் அரசுடன் இணைந்து கொண்டு தமிழ் மக்களை ஓரங்கட்டி யமை, ஒரு சிறுபான்மை இனம் இன்னொரு சிறுபான்மை இனத்தின் முதுகில் பலமாகக் குத்தி விட்டது என்றே கூறவேண்டும்.

இதுஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தன் கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசிற்கு ஆதரவு என்றுகூறி, விழுந்தெழும்பியதைப் பார்க்கும்போது ஒருகுறிப்பிட்ட வயதிற்குப் பின் னர் அரசியலில் இருந்து ஓய்வுஎடுப்பது நல்லது என்று எண்ணத் தோன்றுகின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தனைத் தவிர வேறு எவரும் வாய்திறக்க வில்லை. ஏன்தான் அப்படி? கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்திறக்க வேண்டாம் என சம்பந்தன் ஐயா கண்டிப்பான கட்டளை பிறப்பித்தாரா? தப்பித் தவறி வாய்திறந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் சீட்டுக் கிழிக்கப்பட்டு விடும் என்று கூட்டமைப்பு எம்.பிகள் பயந்தனரா? எதுவுமே புரியவில்லை. ஆனாலும் சம்பந்தன் ஐயாவின் அரசியல் நகர்வு கிறுக்கல் சித்திரம் போன்றது என்பது மட்டும் இப்போதைக்கு உண்மை. [/size][/size]

[size=1]

[size=4]http://www.valampurii.com/online/viewnews.php?ID=31021[/size][/size]

206391_3153070484850_1217155838_n.jpg







  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்க்கு எல்லாம் அரசியல் thalamai நல்லா தான் இருக்கு தமிழனுக்கு தான் சரி இல்லை

  • தொடங்கியவர்

[size=4]கிழக்கு மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தலை, தமிழ்நாட்டில் தேர்தலுடன் ஒப்பிட்டுக் கூறலாம்.[/size]

[size=4]தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் தனித்துப் போட்டியிட்டால், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியாது. அதனால் தான் காலத்துக்குக் காலம் திமுக அல்லது அதிமுகவின் முதுகில் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டு சவாரி செய்வது வழக்கம்.[/size]

[size=4]காலத்துக்கு ஏற்றவாறு, யாருக்கு கூடுதல் பலம், செல்வாக்கு உள்ளதோ அந்தப் பக்கம் ஏறி அமர்ந்து கொள்ளும் காங்கிரஸ். இப்படித்தான், காங்கிரஸ் இந்தியத் தேசியத்தை தமிழ்நாட்டில் கட்டிக்காக்கிறது.[/size]

[size=4]அதுபோலத் தான், கிழக்கில் நடந்த தேர்தலிலும், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு.[/size]

http://www.yarl.com/...howtopic=108441

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் அரசியல் அதுக்கு தானே அவன் அரசியல் கட்சி நடத்திறான்.....கூடல்கள் கழித்தல்கள் பெருக்கல் பிரித்தல் எல்லாம் சேர்த்தது தானே அரசியல் அவன்கிட்ட கெட்டி தனம் இருக்கு புத்திசாலி தனம் இருக்கு கணக்கு போடுறான் ஜெயக்கிறான்....எங்க கிட்ட என்ன இருக்கு? வெறும் வேற்று கூச்சல்களும் சுயநலங்களும்....

  • தொடங்கியவர்

[size=4]தமது கட்சிக்கு முதல்வர் பதவியைப் பெற வேண்டும் என்பதில் ஹக்கீம், உறுதியாக இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்த கையை பற்றியிருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் செவிமடுக்கவில்லை என்பதே உண்மை.[/size]

[size=4]கடந்த காலங்களில் பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதெல்லாம், அரசதரப்பில் இருந்து கொண்டே, தமக்கும் பேச்சில் பங்கு கேட்டு தமிழர் தரப்பிடம் அடம்பிடித்த முஸ்லிம் தலைமைகள், இப்போது தமிழ் மக்களுடன் இணைந்து அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை என்பதை உறுதி செய்துள்ளன.[/size]

[size=4]இன்னொரு புறத்தில், என்னதான் அரசாங்கம் உள்ளகத் தீர்வு ஒன்று பற்றி உபதேசம் செய்தாலும், அது ஒன்றும் தானாகக் கனியும் பழமாக இல்லை என்பதே உண்மை. சர்வதேச தலையீடுகளின் மூலம்- அழுத்தங்களின் மூலம் ஒரு தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தலாம் என்று தமிழர்தரப்பு உறுதியாக நம்புகிறது[/size]

[size=4]http://www.yarl.com/...howtopic=108441[/size]

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் பதவிய பெறுவது லாபமா இல்லை கைவசம் மத்திய அமைச்சு பதவிகளோடு இதர pala சலுகைகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவது லாபமா? :D

  • தொடங்கியவர்

முதலமைச்சர் பதவிய பெறுவது லாபமா இல்லை கைவசம் மத்திய அமைச்சு பதவிகளோடு இதர pala சலுகைகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவது லாபமா? :D

[size=4]தலைவர்களுக்கு நிச்சயம் இலாபம் :) [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமா நீதி அமைச்சு கைவசம் இருப்பதால் அரச வக்கீல்களாக பல முஸ்லீம்ஸ் க்கு vaaippu கிடைக்கும் பல நீதிபதிகளாக முஸ்லீம்ஸ் நியமிக்க படுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா.. இதெல்லாம் ஒரு தேர்தல்..

மகிந்தர் ஏதோ வித்தை காட்டுறார்.. அது அதை அதற்குரிய இடத்தில வைப்பம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி :D

  • தொடங்கியவர்

உதாரணமா நீதி அமைச்சு கைவசம் இருப்பதால் அரச வக்கீல்களாக பல முஸ்லீம்ஸ் க்கு vaaippu கிடைக்கும் பல நீதிபதிகளாக முஸ்லீம்ஸ் நியமிக்க படுவார்கள்

[size=4]இதை சொல்லித்தானே தரப்படுத்தல், சிங்களம் மட்டும்.. என கொண்டுவந்தனர்.[/size]

[size=4]பின்னர் 1956, 1958, 1977, 1983 என அது வேறை :( [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா ஒன்றை மட்டும் கூறி விடைபெறுகின்றேன் நாங்க இப்ப இருப்பது எதுவும் அற்ற ஒரு பலம் இல்லாத நிலையில நாப்பது வருஷ வரலாற்றை பேசி இருக்கிறதையும் இழக்க போகின்றோமா...இல்லை ஒரு இணக்கத்தின் மூலம் எமது இருப்பை தக்க வைக்க போகின்றோமா தற்காலிகமாக..... முடிவு உங்கள் கையில் தமிழர்களே....

  • தொடங்கியவர்

[size=5][size=4]எமது மக்கள் எதை இன்றுவரை கேட்கிறார்கள்?[/size][/size]

[size=5] [/size]

[size=5][size=4]தமது சொந்த பூமியில் சுதந்திரமாக வாழ உரிமையை கேட்கிறார்கள்.[/size][/size]

[size=5] [/size]

[size=5][size=4]புலத்தில் அந்த உரிமைகளுடன் வாழும் நாங்கள் அதை அவர்களுக்களுக்கு பெற்றுத்தர மனம் தளராமல் உதவுவோம்.[/size][/size]

[size=5]' the only way forward is to adopt the recommendation of the UN Panel of Experts for an independent international mechanism to investigate violations of international human rights and humanitarian law"[/size]

[size=5]http://www.hrw.org/news/2012/09/17/un-human-rights-council-statement-human-rights-situation-sri-lanka[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நாங்க இங்க இருந்திட்டு அந்த மக்களுக்காக எப்பிடி அண்ணா போராட போரம் எங்கட வாழ்கையே இங்க போராட்டமா இருக்கு..... வீட்டுக்கடன் கார் கடன் மாச கடசில கிரெடிட் கார்டு பில் இப்பிடி தலைக்கு மேல பிரச்னை எல்லாம் எழுத நல்லா தான் இருக்கும் ..... புலம்பெயர்ந்து வந்திட்டு அங்க உள்ள மக்களுக்காக எல்லாம் போராடி ஒரு தீர்வ பெற்றுக்கொடுக்கவே முடியாது...... நடைமுறையில சாத்தியமே இல்லை நீங்களும் நாங்களும் இங்க வந்து எழுதிட்டு அடுத்த இன்வெஸ்ட்மென்ட் ஹவுஸ் எங்க வாங்கலாம் எண்டு யோசிக்க தொடங்கிடுவம்.......

அடிச்சு பிடிக்க இயக்கமும் இல்லை.....சோ அங்க இருக்கிற மக்கள் தான் முழு முடிவும் எடுக்கணும்

கக்கீமுக்கு கிடைக்க போவது பின்னலை மட்டும்தான் என்று பல அறுகுறிகள் சுட்டுது.

1. தேர்தலுக்கு முதல் கூட்டு கிடைக்கவில்லை.

2.தேர்தலில் மகிந்த பல இடங்களில் கக்கீமை நேரடியாக பிரிவினைவாதி என்று தாக்கியிருந்தார்.

3.தேரதலின் பின் கக்கீமுக்கு கூட்டு கிடைக்கவில்லை.

4.கக்கீம் கூட்டமைப்புடன் பேச ஒழுங்கு படுதிய நேரத்தில், கக்கீம் அலரிமாளிகையில் தடுப்பு காவலில் இருந்தார் என்ற குசுகுசுப்பு.

5.பேச்சு வார்த்தையின் போது ஒன்றும் இல்லாத கூட்டமைப்பு கொடுக்க தயாரனதை விட அரசு மிகச்சிறிய அளவே கொடுத்தது.(அல்லது இதுவரையில் நாங்கள் கேள்விப்பட்டது "சீரோ").

6.மு.கா.வின் எதிரிகளுக்கு முதல் அமைச்சர் பதவியை கக்கீம் கெடுத்ததால் அவர்களுக்கு இன்று அரசில் ராஜ மரியாதை வழங்கப்படுகிறது.

7.தேசிய அரசு கதையை தொடக்கி கக்கீமை காலடியில் விழுத்தியது.

இவை எல்லாம் மகிந்தாவிற்க்கு கக்கீம் மிது அதீத வெறுப்பைத்தான் காட்டுகிறது. இந்தியாவால் வந்து கக்கீமுக்கு பின்வழத்தில்தான் கொடுக்க இருக்கு. பிள்ளையான் தப்பிவிட்டன். கெட்டிக்காறன்.

  • தொடங்கியவர்

[size=4]அங்குள்ள மக்கள், அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் (ஆயர்கள், மக்கள் உறுப்பினர்கள், கட்சிகள்...) இன்று என்ன கூறுகின்றன அங்கு வந்த ஐ.நா. பிரதிநிதிகளிடம்? [/size]

[size=4]நாங்கள் செய்யும் முதலீடுகளுடன் அவர்களின் செய்திகளை எமது நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளிடமும் மனித உரிமை ஆர்வலர்களைடமும் ஊடகவியலாளர்களிடமும் கூறுவதை செய்வது எமது கடமை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே இழுபட்டுக்கொண்டு போகுதே அண்ணா அவனும் வர மாட்டேன் எண்டு அடம் பிடிக்கிறான் நாங்களும் அடம் பிடிச்சிட்டு நிண்டா என்ன மாதிரி

விடுங்கப்பா.. இதெல்லாம் ஒரு தேர்தல்..

மகிந்தர் ஏதோ வித்தை காட்டுறார்.. அது அதை அதற்குரிய இடத்தில வைப்பம்.. :D

உப்படித் தான் எல்லாத்தையும் விட்டு பிடிப்பம் விட்டு பிடிப்பம் என்று ஒன்றும் இல்லாமல் போனது...........

  • தொடங்கியவர்

இப்பிடியே இழுபட்டுக்கொண்டு போகுதே அண்ணா அவனும் வர மாட்டேன் எண்டு அடம் பிடிக்கிறான் நாங்களும் அடம் பிடிச்சிட்டு நிண்டா என்ன மாதிரி

[size=4]உண்மை.நடப்பது ஒரு கயிறு இழுத்தல் வகையான நிலை.[/size]

[size=1]

[size=4]அவன் விட்டாலும், சிங்கள நாடும் மக்களும் வாழ்வார்கள்.[/size][/size][size=1]

[size=4]நாங்கள் விட்டால், அடையாளமும் இல்லாமல் போய் விடுவோம். [/size][/size]

[size=1]

[size=4]நாம் இழுத்தே ஆக வேண்டும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.