Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியடைந்த அரசு ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயக மீறல்: த.தே.கூ.

Featured Replies

[size=4] [/size]

[size=4]நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோல்வியயைத் தழுவிக்கொண்ட அரசாங்கம் தான் தற்போது அங்கு ஆட்சியையும் அமைத்திருக்கின்றது. இத்தகைய செயற்பாடானது ஒரு ஜனநாயக மீறலாகவே அமைந்துள்ளது ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் தெரிவித்தது.

பாராளுமன்றத்தின் நேற்று வியாழக்கிழமை அமர்வின்போது நடைபெற்ற 2012ஆம் ஆண்டின் அரசிறை நிலைமை தொடர்பாக அரையாண்டு அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ௭ம்.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஜனநாயக ரீதியிலான தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். கடந்த நான்கு வருட காலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கிழக்கினை ஆட்சி செய்து வந்தது. இருப்பினும் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் 12 ஆசனங்களையே பெற்றுக் கொண்டுள்ளது. 35 ஆசனங்களில் 12 ஆசனங்களையே பெற்றுக்கொண்ட ஐ.மு.சு.மு.அங்கு தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது. இது தெளிவானதாகும்.

இவ்வாறு மக்களிடத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்ட அரசாங்கம் அதனை மாற்றியமைத்து அங்கு ஆட்சியையும் நிறுவியிருப்பது ஜனநாயக மீறலாகவே காணப்படுகின்றது. கிழக்கைப் பொறுத்தவரையில் அங்கு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படவில்லை.

இதன் விளைவுகளை பின்னர் உணரக்கூடியதாகயிருக்கும். தற்போது சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதான மேற்படி அறிக்கையின் பிரகாரம் நோக்குகையில், வடக்கு – கிழக்கில் வரி வருமானம் அதிகரித்திருக்கின்றது. மதுபானம், சிகரட் போன்ற பொருட்களின் ஊடாகவே இங்கு வருமானம் அதிகரித்துள்ளது. இது இவ்வாறிருக்க மோட்டார் வாகன விற்பனைகளும் அதிகரித்திருக்கின்றன.

சிகரட் மற்றும் மதுபானம் ஆகியவற்றுக்காவே அங்கு புதிய சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கில் மேற்படி பொருட்களின் நுகர்வு மிகக்குறைவாகவே காணப்பட்ட போதிலும் தற்போது அவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளது. பாடசாாலைகள் அமையப்பெற்றுள்ள இடங்களில் கூட இவ்வாறான சந்தைகள் ஏற்படுத்தப்படுவதால் பல்வேறு சமூகபிரச்சினைகளும் தோற்றுவிக்கி்ன்றன.

இதேவேளை, சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் நான்கு முகாம்களில் தங்கவைக்கப்படிருக்கும் மக்களுக்கு கடந்த ஜனவரியிலிருந்து உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான பிரதேசம் தவிர்ந்த ஏனைய இடங்களில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் ௭ன ஜனாதிபதியும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் தான் அந்த மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றனர். இந்த வற்புறுத்தல் மக்களால் மறுக்கப்பட்டமையால்தான் உலக உணவுத் திட்டத்திலிருந்து வழங்கபடுவதான உணவுப் பொருட்கள் கடந்த ஜனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது ௭ன்றார்.[/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=749[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்ட கிழக்கு மாகாண தேர்த்தலில் யாரும் அறுதி பெரும்பான்மையை பெறவில்லை.ஆனால் கட்சிகள் சேர்ந்து கூட்டாட்சி அமைக்க முடியும்.அதனை தானே முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் செய்துள்ளன.

  • தொடங்கியவர்

[size=4]எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத இடத்தில்,[/size]

[size=4]உலக சனநாயக பண்பின் படி அதி கூடிய ஆசனங்களை பெற்ற கட்சியை முதலில் ஆட்சி அமைக்க கேட்கவேண்டும். [/size]

இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்ட கிழக்கு மாகாண தேர்த்தலில் யாரும் அறுதி பெரும்பான்மையை பெறவில்லை.ஆனால் கட்சிகள் சேர்ந்து கூட்டாட்சி அமைக்க முடியும்.அதனை தானே முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் செய்துள்ளன.

மு.கா பத்திரிகைளில் வெளிவிட்ட அறிக்கைகளின் பிரகாரம் அரசு அமைப்பு ஒப்பந்தம் அமையவில்லை. மு.கா மிரட்டப்பட்டு, பணிய வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசை இலங்கை கோடுகளில் எதிர்க்க வேண்டும். கூட்டமைப்பு -11 பிரதிநிகள். மு.கா. 7 பிரதிநிதிகள். சுதந்திரக்கட்சி -5 பிரதிநிதிகள். கூட்டு அரசில் இருக்கும் 7 பிரதிநிதிகளை கொண்ட மு.கா வுக்குத்தான் முதல் அமைச்சரை நியமிக்க அதிகாரம் இருக்க வேண்டும். அந்த அதிகாரம் மறுக்கப்பட்டு 5 பிரதிநிதிகள் கட்சி ஆட்சியை தீர்மானிக்கிறது. இதை மக்கள் தெரிந்ததாக கூற முடியாது. பொலிஸ், ராணுவ அடக்குமுறைகளால் ஆட்சி கூட்டமைப்பிடமிருந்தும், மு.கா விடமிருந்தும் பறிக்கப்பட்டுவிட்டது. மு.கா கூட்டமைப்புடம் பேச ஒழுந்து படுத்த பட்டிருந்த நேரம் கக்கீம் வேண்டுமென்றே அலரிமாளிகையில் தடுக்கப்படிருந்தார்.

அவர் அறிவித்த படி முதலமைச்சர் பதவி பங்கிடப்படவில்லை.

நல்ல கணக்கு .

  • தொடங்கியவர்

[size=4]நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள், மக்கள் அவை உறுப்பினர்கள், சாதாரண புலம்பெயர் மக்கள் ....[/size]

[size=4]இந்த ஜனநாயக மீறலை சர்வதேசத்தின் கண்களில் தூவவேண்டும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.