Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வன்னியில் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் போது அமைதியாக இருந்த முஸ்லிம்கள் இன்று தம் நபிகள் பற்றி நேர்மையாக படம் எடுத்ததை எதிர்த்து இலங்கையில் ஆடும் ஆட்டங்களின் தொகுப்பு:

-------------------------

கல்குடாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு face.jpg By General

2012-09-21 20:23:15

sc2dgum0.jpg

படங்கள் எம்.ரீ.எம்.பாரிஸ்

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கல்குடாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

z2yl20rh.jpg

கல்குடா தொகுதியிலுள்ள அனைத்து ஜூம் ஆ பள்ளிவாயல்களிலிந்தும் பேரனியாகச் சென்று ஓட்டமாவடி பிரதான வீதியினூடாகச் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானதில் ஓராணியாக திரண்டு அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டதோடு அமெரிக்கா ஜனாதிபதியின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

if0f48ai.jpg

9axqlmq7.jpg

5wito5af.jpg

2zcpdp1y.jpg

[size=4]ஹட்டன் நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்[/size] face.jpg By Ranjan

2012-09-21 18:59:30

444444000.jpg

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கெதிராகவும் அமெரிக்க அரசாங்கத்துக்கெதிராகவும் ஆர்ப்பாட்டமும் கண்டனப் பேரணியும் இன்று புனித ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ஹட்டன் நகரில் நடைபெற்றது.

3333300.jpg

இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதுடன் கொடும்பாவிகளை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாயலிலிருந்து ஆரம்பித்த எதிர்ப்புப் பேரணி 2ஆவது பிரதான வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளிவாயலை அடைந்தது.

222200002.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3...

நபிகளாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக மருதமுனையில் ஆர்ப்பாட்டம்

face.jpg By AM. Rizath

2012-09-21 17:28:05

இஸ்லாம் மார்க்கத்தினையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை மருதமுனையில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் குறித்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் மருதமுனையிலும் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்க கொடிகளை எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Pix By : CI. Sanjith Ahamed

Maru-1.jpg

Maru-2.jpg

Maru-3.jpg

Maru-4.jpg

Maru-5.jpg

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4. மடவளையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு face.jpg By Hafeez

2012-09-21 17:32:56

DSC03050.JPG

இஸ்லாத்துக்கும், இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை உடன் தடைசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து இன்று மடவளையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

DSC03074.JPG

மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்ஆ பள்ளியில் இடம்பெற்ற தொழுகையை அடுத்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினூடாக அனுப்பிவைக்கவுள்ள மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

DSC03078.JPG

அதன்பின் சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு சதித்திட்டங்களில் இருந்து முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தாய் நாட்டுக்கு நல்லாசி வேண்டியும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உபதலைவரும் கண்டி மாவட்டத் தலைவருமான மௌவி எம்.எச்எம்.புர்ஹான் (பஹ்ஜி) துஆ பிரார்த்தனை ஒன்றை மேற்கொண்டார்.

DSC03086.JPG

இறுதியாக சுமார் 5000 பேர் அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அமைதியாக மேற்கொண்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5. கொழும்பில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் face.jpg By MFM.Fazeer

2012-09-21 17:12:11

Kolp-4.jpg

Kolp-3.jpg

Kolp-1.jpg

இஸ்லாம் மதத்தையும் இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமும் பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கூடிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் அமெரிக்க தூதரகத்தை நோக்கிப் பேரணியாக சென்றனர்.

எனினும் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டு தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டது.

இதேவேளை, தெமட்டகொடை பகுதியிலும் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(படங்கள்: எஸ்.எம்.சுரேந்திரன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு face.jpg By Jwaferkhan

2012-09-21 15:30:49

DSC09263.jpg

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் திரைப்படத்துக்கெதிராகவும் அமெரிக்க அரசாங்கத்துக்கெதிராகவும் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பாரிய ஆர்ப்பாட்டமும் கண்டனப் பேரணியும் இன்று புனித ஜூம்ஆ தொழுகையைத்தொடர்ந்து காத்தான்குடியில் இடம்பெற்றது.

DSC09219.jpg

DSC09261.jpg

நகரசபை பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட பல அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்தில் பராக் ஒபாமாவின் நூற்றுக்கணக்கான கொடும்பாவிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன.

DSC09226.jpg

DSC09254.jpg

DSC09234.jpg

அந்தப் படத்தின் சாரத்தினை இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது. அவதூறு விளைவிக்கவேண்டும் என்றே எடுத்த படமாக இருந்தாலும் இப்போது இந்த மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் நடந்த மற்றும் கடக்கின்ற ஆர்ப்பாட்டங்களின் படங்களைப் பார்க்கும்போது இவர்கள் அந்த திரைப்படத்தில் சித்தரிகப்பட்டவர்களாக இவர்களே தோற்றமளிக்கிறார்கள்.

இருபதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வாழ்வளித்த 'முகமது ஷள்ளல்லாகு அலைக சல்லம்' அவர்களின் வாழ்க்கையை படம் எடுத்த கயவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.