Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழிழம் கிடைத்திருந்தால் மக்கள் துன்பப்பட்டிருப்பார்களாம்: தாயகக் கனவுக்குக் களங்கம் விளைவிக்கமுயலும் வளவாளர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Run_run_escap_seithy150.jpg

[size=4]மக்களின் மனங்களைநோகடிக்கும் விதமாக கருத்தமர்வுகளின்போது ஒருசில வளவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருவதாகப் பட்டதாரிகளில் பலர் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பயிலுனரப்பட்டதாரிகளுகென நடத்தப்படும் கருத்தமர்வுகளின்போதே மக்களின் மனங்களை நோகடிக்கும் விதமாக கருத்துத்தெரிவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.[/size]

[size=4]அரச துறைகளில் நியமனம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயிலுனர்களாக நாட்டிலுள்ள சுமார் 42ஆயிரம் பட்டதாரிகள் இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்டு மாவட்டசெயலகங்கள் பிரதேசசெயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் தற்போது இணைக்கப்பட்டுள்ளனர். பயிலுனர்களின் திறன்விருத்திக்காகப் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் வாரந்தோறும் நடத்தப்பட்டுவருகிறது. துறைசார்ந்த அரச அரசசார்பற்ற மற்றும் ஒய்வுநிலை அதிகாரிகள் வளவாளர்களாக அழைக்கப்பட்டே பயிலுனர்களுக்கான திறன்விருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.[/size]

[size=4]இவ்வாறான வளவாளர்களில் ஒருசிலர் கருத்தமர்வுகளின்போது வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் மற்றும் உதாரணங்கள் தமிழ் மக்களின் மனங்களைநோகடிப்பதாக யாழ்ப்பாணப் பயிலுனர்ப்பட்டதாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.[/size]

[size=4]"கருத்தமர்வை நடத்துவதன் மூலம் எனக்கு ஒருமணித்தியாலயத்துக்குப் பல ஆயிரம் ரூபா உழைக்கமுடிகிறது. தமிழிழம் கிடைத்திருந்தால் இப்படி உழைக்கமுடியாதிருந்திருக்கும். தமிழிழம் கிடைப்பதை நான் விரும்பியதில்லை. தமிழிழம் கிடைத்திருந்தால் நாங்கள் துன்பப்பட்டிருப்போம்." என வளவாளர் ஒருவர் சிலதினங்களுக்கு முன்னர் பயிலுனர்ப்பட்டதாரிகள் மத்தியில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.[/size]

[size=4]யுhழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக் கூறப்படும் கருத்தமர்வில் வளவாளராகக் கலந்துகொண்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரே இவ்வாறு தமிழ் மக்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.[/size]

[size=4]பசுமைப்புரட்சிக்கான சமூக ஆர்வலராகக் காட்டிக்கொள்ளும் அந்த அதிகாரி யாரைத் திருப்திப்படுத்துவதுக்காகத் தமிழ் மக்களின் 30 வருடங்களுக்கு மேலான அபிலாசைகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்த முயல்கிறார் எனப் பட்டதாரிகளில் பலர் கேட்கின்றனர்.[/size]

[size=4]தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுக்கும் நிலையிலுள்ள அந்த அதிகாரி தான் சார்ந்த நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு எப்படி சுயநலமற்ற புனிதமான பணியை முன்னெடுக்கமுடியும்? இவ்வாறு பட்டதாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.[/size]

[size=4]இந்த விடயம் குறித்துப் பயிலுனர்நிலைப்பட்டதாரி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது "வளவாளரின் கருத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது முன்னாலிருந்த கதிரையைத் துக்கி அவர்மீது எறியவேண்டும்போலிருந்தது. எங்களில் பலருக்கு இதே உணர்வுதான் ஏற்ப்பட்டது. பலர் தமக்குள் முனுமுனுத்தவாறு திட்டித்தீர்த்துக் கொண்டதுடன் செய்வதறியாது தர்மசங்கடநிலைக்கு உள்ளானார்கள். அந்த அதிகாரியை வெளியே போகுமாறு ஏசவேண்டும் போலிருந்தது. எனினும் எம்மை நாமே சாந்தப்படுத்திக்கொண்டோம்" என்றார்.[/size]

[size=4]-யாழ்-குகன்-[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

யாழ் குகனண்ணை,

இப்படி சும்மா மொடடையாக எழுதாதேயுங்கோ. எந்த மாங்காய் இப்படிச் சொன்னது என்று சொல்லாட்டில் நீரும் ஒரு மாங்காய்தான். பிழையாகச் சொல்பவனை ஏன் ஒழிச்சி வைக்கிறியள்.

யார் அந்த சொறிநாய் எலும்புத்துண்டு நக்கி அவன்ட பெயர் , இடம் என்ன .

கட்டாயம் போடுங்கோ .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.