Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேம்படி அதிபராக வேணுகா பதவியேற்பு அமைச்சர் டக்ளஸ் முகத்தில் கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படி மகளிர் உயர் தரப் பாடசாலையின் அதிபராகத் திருமதி வேணுகாசண்முகரத்தினம் உயர்நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.

இதன்மூலம் கடந்த மூன்று மாத காலமாக நீடித்து வந்த வேம்படி அதிபர் சர்ச்சை முடிவுக்கு வந்தது. ""என்னதான் நடந்தாலும் ராஜினி முத்துக்குமாரனே அதிபராக நீடிப்பார்'' என்று பல்வேறு தரப்புகளிடமும் ஊடகங்களிடமும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்த வாக்குறுதிகள் பொய்த்துப் போனது.

அவரது முகத்தில் கரியைப் பூசும் வகையில் தன்னுடைய பொறுப்புகளை வேணுகா சண்முகரத்தினத்திடம் நேற்று கையளித்தார் வேம்படி மகளிர் கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றி வந்த ராஜினி முத்துக்குமாரன்.

இந்தக் கையளிப்பு நிகழ்வு நேற்று வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் வே.செல்வராஜா மற்றும் வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக, இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் திருமதி வேணுகா சண்முகரத்தினம் நியமிக்கப்பட்டார்.

இதனைப் பதில் அதிபராகக் கடமையாற்றிய ராஜினி முத்துக்குமாரன் ஏற்கமறுத்தமையால் கடந்த 3 மாத காலமாக அதிபர் பதவி பெறும் சர்ச்சையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த மாதம் 5 ஆம் திகதி திருமதி வேணுகா சண்முகரத்தினம் சார்பில் அதிபர் பதவி தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் திருமதி ராஜினி முத்துக்குமாரன் அதிபர் பொறுப்புகளை திருமதி வேணுகா சண்முகரத்தினத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கத் தவறினால் திருமதி ராஜினி முத்துக்குமாரனுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையக் கடந்த 21ஆம் திகதி கல்வி அமைச்சினால், அதிபர் பொறுப்புகளை திருமதி வேணுகா சண்முகரத்தினத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தவறினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல் கடிதம் திருமதி ராஜினி முத்துக்குமாரனுக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து அதிபர் பொறுப்புகளை திருமதி ராஜினி முத்துக்குமாரன் நேற்றையதினம் திருமதி வேணுகா சண்முகரத்தினத்திடம் ஒப்படைத்தார். இதன் மூலம் அரசியல் தலையீடுகள் மூலம் முடக்கப்பட்டிருந்த வேம்படி மகளிர் கல்லூரி நிர்வாகம் மீளவும் முன்னரைப் போல உத்வேகத்துடன் செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வாதிகாரத்தனமான அரசியல் நோக்கங்களோடு கல்வி நடவடிக்கைகளிலும் மூக்கை நுழைத்த அரசியல்வாதிகளுக்கு வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் விவகாரத்தில் ஏற்பட்ட முடிவு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

http://onlineuthayan.com/News_More.php?id=770301470729892358

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.