Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகள் தாண்டி தலை நிமிர்வோம்

Featured Replies

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவுத்தளமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அரச துறை துணை உதவிச் செயலாளரான டொனால்ட் கேம்ப் இந்தச் செய்தியை கொழும்பில் விட்டிருக்கின்றார்.

இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்தது. இந்தியா தடை செய்த போது கொழும்பு அரசியல் விமர்சகர்கள் இனி விடுதலைப்புலிகளால் தலைநிமிர முடியாது எனக் கூறி வந்தனர். ஆனால் இந்தியாவின் தடையையும் தாண்டி வளர்ந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை அமெரிக்கா தமது பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக் கொண்ட போதும் இதே கருத்தைத் தான் பலர் முன்வைத்தனர். உலக வல்லரசான அமெரிக்கா விடுதலைப்புலிகளைத் தடை செய்திருப்பதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்படும் எனக் கருதினர். ஆனால், விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியை அமெரிக்காவால் அடக்கி ஒடுக்க முடியவில்லை. இதே போன்று தான் பிரிட்டனும் விடுதலைப்புலிகள் மீதான தமது தடையை விதித்தது.

இவ்வாறு உலகில் செல்வாக்குள்ள நாடுகள் விடுதலைப்புலிகள் மீது தடை விதித்த போதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எந்த ஒரு ஏகாதிபத்திய சக்தியாலும் அடக்கி ஒடுக்கமுடியவில்லை என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு காட்டும் உண்மைச் செய்தி. சந்திரிகா அம்மையார் ஆட்சிக்காலத்தில் தங்களது தமிழின அழிப்பை நியாயப்படுத்துவதற்கு சிங்கள அரசின் முகவராக தமிழினத்துக்கு எதிரான துரோகத்தனங்களை சர்வதேச அளவில் பரப்பியவர் லக்ஷ்மன் கதிர்காமர்.

அவர் வரிசையில் இன்னும் பல துரோகக் கும்பல்களும், உலகின் பல பாகங்களிலும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்ட போதும் விடுதலைப் போராட்டத்தினை ஒடுக்கிவிட முடியவில்லை. பல்வேறு நெளிவு சுழிவுகளுக்கு உள்ளாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சமவலு கொண்ட ஒரு படைக் கட்டமைப்புக்களுடன் நிறுவிக் காட்டினார் தேசியத் தலைவர் அவர்கள்.

அவரது தூர நோக்குடனான சிந்தனையும் அனுபவமும் தமிழ் மக்களின் பலரும் போராட்டத்தினை எந்த ஒரு தீய சக்தியாலும் நெருக்கி விட முடியவில்லை. இன்று தமிழினத்துக்கான ஒரு நிழல் அரசு இயங்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் தான் புலிகள்! புலிகள் தான் மக்கள!; என தமிழ் மக்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இதில் புலிகள் வேறு மக்கள் வேறு எனப் பிரித்துப் பார்க்க முடியாதளவிற்கு போராட்டம் வளர்ந்துள்ள நிலையில் இன்னும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமிழ் மக்களின் விடுதலை உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது இருப்பது கவலைக்குரியது.

இன்று சமாதானப் பேச்சுக்கான வாயில் கதவை தாழ்ப்பாள் போட்டு பூட்டியுள்ள சிங்கள இனவாத அரசு திட்டமிட்டதொரு தமிழின அழிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மட்டக்களப்பு, திருமலை, யாழ் என தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள இனவெறிப் படைகளாலும் இனவெறிப் படைகளுக்குத் துணை போகும் துரோகக் கும்பல்களாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.

எதுவித நீதி விசாரணையுமின்றி மிகப் பெரியதொரு மனிதப் படுகொலையை மகிந்தர் அரசு செய்கின்ற போது அதனை சர்வதேச சமூகம் தட்டிக்கேட்காமல் விடுதலைப்புலிகளைத் தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது இன்னும் சிங்கள இனவெறியை தமிழின அழிப்பைத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.

அது மாத்திரமன்றி தமது இன அழிப்பை நியாயப்படுத்துவதற்கும் உலக நாடுகளில் ஆயுதத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கும் இவை வழிவகுக்கும். தமிழ் மக்கள் தமது இன விடுதலையை அடைவதற்காகவே போராடுகின்றனர். ஆனால், இதனை அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகள் புரிந்து கொள்ளாது பயங்கரவாத நோக்குடன் பார்ப்பது அல்லது சிறிலங்கா அரசுக்கு ஆயுத ரீதியிலான உதவிகளை அளிப்பது என்பது தமிழர் தாயகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் செய்யும் படுபாதகத்தனமாகவே கருத வேண்டிவரும்.

எனவே, சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதம் என்ற பதத்தினூடாக முடக்கலாம் என நினைப்பின் அது ஒரு போதும் வெற்றியளிக்க மாட்டாது. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் பலத்துடன் தமிழின விடுதலை தலைநிமிர்வு பெறும் என்பதை எதிர்காலத்தில் வரலாறு உணர்த்தப் போகும் உண்மை.

நன்றி

மட்டு ஈழநாதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

EU to list Tamil Tigers as terror group-diplomats

17 May 2006 20:05:15 GMT

Source: Reuters

Printable view | Email this article | RSS [-] Text [+]

BRUSSELS, May 17 (Reuters) - The European Union is set to list Sri Lankan rebel group the Liberation Tigers of Tamil Eelam as a terrorist organisation, EU diplomats said on Wednesday.

The move will further isolate the group as Sri Lanka is sliding back into a low-intensity conflict some fear could spiral into resumption of a two-decade war.

The United States, Canada and Britain have already listed the Tamil Tigers as a terrorist group, and the EU imposed a travel ban on the group's cadres last September and said then it was considering banning it for "use of violence and terrorism".

"A decision in principle is due within the next couple of days," a diplomat speaking on condition of anonymity said.

A second EU diplomat said a decision was due by Friday. The move would then have to be rubber-stamped by the 25 member states of the bloc at a later date.

A ban on the Tamil Tigers in the EU would outlaw the group and its followers by shutting down premises and freezing assets belonging to it.

The Tigers are fighting for a separate state for ethnic Tamils in the north and east of the Indian Ocean island, and have pioneered the use of suicide bombing.

There has been an escalation of violence recently and April was one of the bloodiest months since a 2002 cease-fire halted a war that killed over 64,000 people since 1983.

Washington last week accused the group of violating the truce with an attack on a Sri Lankan navy transport ship carrying hundreds of servicemen.

The military said 17 sailors and 50 Tigers died in the attack that prompted air strikes on rebel territory.

AlertNet news is provided by

http://www.alertnet.org/thenews/newsdesk/L1719212.htm

தடைகள் தாண்டி தலை நிமிர்வோம்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவுத்தளமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அரச துறை துணை உதவிச் செயலாளரான டொனால்ட் கேம்ப் இந்தச் செய்தியை கொழும்பில் விட்டிருக்கின்றார்.

இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்தது. இந்தியா தடை செய்த போது கொழும்பு அரசியல் விமர்சகர்கள் இனி விடுதலைப்புலிகளால் தலைநிமிர முடியாது எனக் கூறி வந்தனர். ஆனால் இந்தியாவின் தடையையும் தாண்டி வளர்ந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை அமெரிக்கா தமது பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக் கொண்ட போதும் இதே கருத்தைத் தான் பலர் முன்வைத்தனர். உலக வல்லரசான அமெரிக்கா விடுதலைப்புலிகளைத் தடை செய்திருப்பதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்படும் எனக் கருதினர். ஆனால், விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியை அமெரிக்காவால் அடக்கி ஒடுக்க முடியவில்லை. இதே போன்று தான் பிரிட்டனும் விடுதலைப்புலிகள் மீதான தமது தடையை விதித்தது.

இவ்வாறு உலகில் செல்வாக்குள்ள நாடுகள் விடுதலைப்புலிகள் மீது தடை விதித்த போதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எந்த ஒரு ஏகாதிபத்திய சக்தியாலும் அடக்கி ஒடுக்கமுடியவில்லை என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு காட்டும் உண்மைச் செய்தி. சந்திரிகா அம்மையார் ஆட்சிக்காலத்தில் தங்களது தமிழின அழிப்பை நியாயப்படுத்துவதற்கு சிங்கள அரசின் முகவராக தமிழினத்துக்கு எதிரான துரோகத்தனங்களை சர்வதேச அளவில் பரப்பியவர் லக்ஷ்மன் கதிர்காமர்.

அவர் வரிசையில் இன்னும் பல துரோகக் கும்பல்களும், உலகின் பல பாகங்களிலும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்ட போதும் விடுதலைப் போராட்டத்தினை ஒடுக்கிவிட முடியவில்லை. பல்வேறு நெளிவு சுழிவுகளுக்கு உள்ளாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சமவலு கொண்ட ஒரு படைக் கட்டமைப்புக்களுடன் நிறுவிக் காட்டினார் தேசியத் தலைவர் அவர்கள்.

அவரது தூர நோக்குடனான சிந்தனையும் அனுபவமும் தமிழ் மக்களின் பலரும் போராட்டத்தினை எந்த ஒரு தீய சக்தியாலும் நெருக்கி விட முடியவில்லை. இன்று தமிழினத்துக்கான ஒரு நிழல் அரசு இயங்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் தான் புலிகள்! புலிகள் தான் மக்கள்! என தமிழ் மக்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இதில் புலிகள் வேறு மக்கள் வேறு எனப் பிரித்துப் பார்க்க முடியாதளவிற்கு போராட்டம் வளர்ந்துள்ள நிலையில் இன்னும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமிழ் மக்களின் விடுதலை உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது இருப்பது கவலைக்குரியது.

இன்று சமாதானப் பேச்சுக்கான வாயில் கதவை தாழ்ப்பாள் போட்டு பூட்டியுள்ள சிங்கள இனவாத அரசு திட்டமிட்டதொரு தமிழின அழிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மட்டக்களப்பு, திருமலை, யாழ் என தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள இனவெறிப் படைகளாலும் இனவெறிப் படைகளுக்குத் துணை போகும் துரோகக் கும்பல்களாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.

எதுவித நீதி விசாரணையுமின்றி மிகப் பெரியதொரு மனிதப் படுகொலையை மகிந்தர் அரசு செய்கின்ற போது அதனை சர்வதேச சமூகம் தட்டிக்கேட்காமல் விடுதலைப்புலிகளைத் தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது இன்னும் சிங்கள இனவெறியை தமிழின அழிப்பைத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.

அது மாத்திரமன்றி தமது இன அழிப்பை நியாயப்படுத்துவதற்கும் உலக நாடுகளில் ஆயுதத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கும் இவை வழிவகுக்கும். தமிழ் மக்கள் தமது இன விடுதலையை அடைவதற்காகவே போராடுகின்றனர். ஆனால், இதனை அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகள் புரிந்து கொள்ளாது பயங்கரவாத நோக்குடன் பார்ப்பது அல்லது சிறிலங்கா அரசுக்கு ஆயுத ரீதியிலான உதவிகளை அளிப்பது என்பது தமிழர் தாயகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் செய்யும் படுபாதகத்தனமாகவே கருத வேண்டிவரும்.

எனவே, சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதம் என்ற பதத்தினூடாக முடக்கலாம் என நினைப்பின் அது ஒரு போதும் வெற்றியளிக்க மாட்டாது. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் பலத்துடன் தமிழின விடுதலை தலைநிமிர்வு பெறும் என்பதை எதிர்காலத்தில் வரலாறு உணர்த்தப் போகும் உண்மை.

மட்டக்களப்பு ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்

இது முன்னர் நான் எழுதிய கருத்தில இருந்து http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ghlight=#185955

இன்று எமக்கு முன் ஒரு கடமை இருக்கு. எமக்கான மண்மீட்புப் போராட்டத்தில் அங்கு போராளிகளும் பொதுமக்களும் போராடிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் நாமும் இங்கு சிலவற்றை செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக நிதிப்பங்களிப்பு. இதைப்பற்றி அதிகம் விவாதித்து பிரச்சனையாக்கத்தேவையில்லை. என்ன நடைபெறுகின்றது என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆதலால் ஒவ்வொருவரும் அதில் இணைந்து தாய்நாட்டை மீட்க எம்மால் ஆனதைச் செய்வோம். அதுத்ததாக பிரச்சாரம். இது மிகவும் முக்கியமானது. வருங்காலத்தில் புலிகள் மீது அழுத்தங்களைப்போட ஐரோப்பாவிலும் புலிகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தல்கள் வரலாம். கனடா தமிழ் மக்கள் போல் மெளனம் காக்காது இப்போதே எம்மாலான சில வேலைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். இங்கு பாலகுமார் அண்ணை என்ன மாதிரி விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

http://www.tamilnaatham.com/audio/2006/may...la20060507.smil

வருங்காலத்தில் புலிகள் மீது அழுத்தங்களைப்போட ஐரோப்பாவிலும் புலிகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தல்கள் வரலாம்.

துரதிஷ்டமாக இதற்கான காய்நகர்த்தல்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. புலிகள் / தமிழர் வெற்றி கொள்ளக்கூடாது என்பதில் பிராந்திய, சர்வதேச சக்திகள் இணைந்து முடிவெடுத்துவிட்டதாகவும், இதற்கான அறிவிப்பு வர இன்னும் மணித்தியலங்களே இருப்பதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

புலிகளின் வெற்றி என்பது உலக அளவில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அதாவது புலிகளின் வெற்றி ஏனைய அடக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உத்வேகத்தினைக் கொடுத்து பல விடுதலைப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம். இது இவர்களின் உலகளாவிய சுரண்டல் பொருளாதாரத்தினைப் பாதிக்கும் என்றும் இவர்கள் அஞ்சுவதாகவும் அதனாலேயே எம்போராட்டத்தை நசுக்க இவர்கள் கைகோர்க்கின்றார்கள் என நான் கருதுகின்றேன்.

மீண்டும் இதைக் கேளுங்கள். இதில் எமக்கான பணிகளில் ஒருபகுதி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது http://www.tamilnaatham.com/audio/2006/may...la20060507.smil

புலத்தில் இருந்து எம்தேசம் உயிர்பெற எம்மை வருத்தி கடுமையாக உழைப்போம். எம்தேசத்தினை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற ஓர்மத்துடன் அனைவரும் வாருங்கள். தடைகள் தாண்டி தலை நிமிர்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.