Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம் காட்டவில்லை - ரவூப் ஹக்கீம்

Featured Replies

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம் காட்டாததால் தான் தாம், ஆளும்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்ததாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற ரவூப் ஹக்கீம், அங்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போதே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைத்ததற்கு நியாயம் கற்பித்துள்ளார்.

“மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வின் அவசியத்தையும், இனப்பிரச்சினைத் தீர்வின் முக்கியத்துவத்தையும் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடன் நாம் சிறிலங்கா அரச தரப்பினருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நடத்திய பேச்சுக்களின் போது , தேசிய அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்திய போதிலும், இருதரப்பினரும் அதில் அக்கறை காட்டவில்லை.

இந்தநிலையிலேயே தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்தோம்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்வாங்கினால், இதுவரை தீர்வு காணப்படாத பல்வேறு பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்த முடியும்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எத்தகைய பேச்சுக்களிலும் முஸ்லிம்களும் தனித்தரப்பாக பங்கேற்ற வேண்டும்.

விடுதலைப் புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சுக்களில் முஸ்லிம்களைத் தனித்தரப்பாக ஏற்க மறுக்கின்றது.

சிறிலங்கா அரசுடன் தாம் பேச்சுக்களில் ஈடுபடுவதாகவும், முஸ்லிம்கள் தம்மோடு பிரச்சினைகள் குறித்து பேசலாம் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.“ என்றும் ரவூப் ஹக்கீம், அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்கிடம் கூறியுள்ளார்.

கிழக்கில் தமிழர் ஒருவரை முதல்வராக்கும் அமெரிக்காவின் முயற்சியை தாம் சிறிலங்கா அரசுடன் இணைந்து முறியடித்திருந்ததாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் கடந்தவாரம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

இதற்காகவே தேர்தல் முடிந்ததும், பிளேக் கொழும்பு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.paristami...jIyNDM3MTQ4.htm

Edited by இணையவன்
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது

[size=4]தமிழர்களின் நியாயமான அரசியல்போராட்டத்தில் குளிர் காயும் ஹக்கீமை ஏதாவது ஒரு வழிக்கு தமிழர் தரப்பு கொண்டுவர வேண்டியகட்டாயம் உள்ளது.[/size]

கக்கீமுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைகளை கக்கீம் பிளேக் முன்னால் சரியாகத்தான் வாசிக்கிறாரா என்பதற்கு இந்த முறை அரசு சாட்சிகளை வைத்து அவதானித்திருந்தது. கக்கீம் அமெரிக்காவில் செய்த சில திருதாளங்களை பீரிஸ் ராசபக்சாவுக்கு கூற வெளிக்கிட்டு அநாவசியமான சலசலப்பை ஏற்படுத்தியதால்த்தான் ராசபக்சா கோபப்ட்டராரா என்பது எல்லோரும் நாடு திரும்பிய பின் தெரிய வரும். இந்த சலபலப்புகளால் மகிந்தா தான் நீதி துறையில் தலை இடுவதில்லை என்று அறிக்கைகள் விட நேர்ந்தது. பார்த்தால் கக்கீம் வெளியில் இருக்கும் போது அவருக்கெதிராக ராசபக்சா சில முன்னெடுப்புகளை முயற்சித்திருந்தார். கக்கீம் வெளியே போனவுடன் ஐ.நாவில் மகிந்தா நீதி துறையில் விடும் சேஸ்டைகளை புட்டுவைக்க முயன்றிருக்கிறார். ஆக இருவரும் எத்தனுக்கு எத்தன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தநிலையிலேயே தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்தோம்."

தமது இனத்தை மட்டும் முன்னிலைப்படுத்தும் இந்த மனோநிலை காலாதி காலமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் விட்ட பிழை இன்னும் தொடர்கிறது.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை."

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமல்ல வேறு எந்த தரப்பையும் முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது தான் ஹக்கீமின் வார்த்தையில் பொதிந்திருக்கும் அர்த்தம். அதே வார்த்தையை தமிழ் தரப்பும் திருப்பிச் சொன்னால் இன்று கிழக்கில் முஸ்லிம்கள் அமைந்திருக்கும் மாகாணசபை அரசை கிழக்குமாகாண தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை ஹக்கீம் புரிந்துகொள்வாரா?

[size=5]தமிழர்களின் நியாயமான அரசியல்போராட்டத்தில் குளிர் காயும் ஹக்கீம் [/size]

நாங்கள் அரசாங்கத்தில் ஒட்டி உறவாடுவோம் மந்திரியாக இருப்போம். முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை இருக்காது. தமிழமக்களுக்கான ஒரு தீர்வுத் திட்டம் சம்பந்தமாக பேச முற்பட்டால் முஸ்லீம் மக்களுக்கு தனி அலகு வேண்டும்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எத்தகைய பேச்சுக்களிலும் முஸ்லிம்களும் தனித்தரப்பாக பங்கேற்ற வேண்டும்.[size=5]குளிர் காயும் ஹக்கீம்[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.