Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடுப்புத் துணியையும் கழற்றிக் கொடுக்கும் சரணடைவு அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தன் மேலாடைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு இடுப்பில் ஒரு சிறுதுணியை மட்டும் கட்டிக் கொண்டு நிற்கையில், அருகில் நிற்கும் ஒருவனிடம் அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டு அப்படிக் கொடுப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப் போவதில்லை எனக் கூறினால் எப்படி இருக்கும்.

அடுத்த கட்டமாக மானத்தை மறைக்கும் கடைசி உள்ளாடையையும் கழற்றிக் கொடுத்துவிட்டு நிர்வாணம் பற்றிக் கவலைப்படாமல் அதற்காகப் பெருமைப்படும் நிலையும்கூட ஏற்படலாம்.

தற்சமயம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலை இப்படித்தான் தோன்றுகின்றது. ஆனால் இங்கு ஒரு படிமேலே போய் தனது இடுப்புத் துணியை மட்டுமன்றித் தனது சகோதரனின் இடுப்புத் துணியையும் கழற்றிக் கொடுக்கும் கைங்கரியத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 13 ஆவது அரசமைப்புச் சட்டத்தின் மூலம் ஒரே மாகாண சபையாக அமைக்கப்பட்டது.

ஆனால் அது ஓர் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வடக்கு, கிழக்கு என இரு மாகாண சபைகளாகப் பிரிக்கப்பட்டது. அது மாகாண சபைக்கு விழுந்த முதலாவது அடி.

அடுத்த 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைக்கான நிர்வாக சேவை அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன பறிக்கப்பட்டன. அடுத்து மாகாண சபைகளுக்கு உள்ளூராட்சி சபைகளின் மீதான அதிகாரத்தைப் பறித்தெடுக்க நாடாளுமன்றத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்படும்போது அரசமைப்பின் 154 ஏ 3 பிரிவின் படி சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். தென்னிலங்கையிலுள்ள ஒரு மாகாண சபை அதிகாரத்தை மறுத்ததால் அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

கிழக்கு மாகாண சபை முதலில் அதை எதிர்த்த போதும் தமிழ் முதலமைச்சர் சந்திரகாந்தனைத் தலைமையாகக் கொண்டிருந்தும் அதை அது கடைசியில் ஏற்றுக் கொண்டது.

தனக்குள்ள அதிகாரத்தைப் பறிகொடுக்கத்தானே அங்கீகாரம் வழங்கித் தன் அடிவருடித்தனத்தை வெளிப்படுத்தினார் பிள்ளையான். இப்போது மாகாண சபைகளின் கீழ் இயங்கி வரும் சமுர்த்தி நிறுவனங்களை திவிநெகும திட்டத்தின் கீழ் மத்திய அரசு பறித்தெடுக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அரசமைப்பின்படி குறைந்தது ஆறு மாகாண சபைகளால் அங்கீக ரிக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணம் தவிர்ந்த அவற்றில் எட்டு மாகாண சபைகளும் அதற்கு அங்கீகாரம் வழங்கிவிட்டன. அவற்றில் ஏழு மாகாணங்களும் சிங்கள மக்களைப் பெரும் பான்மையாகக் கொண்டவை. எப்போதும் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளே மத்தியில் ஆட்சியில் இருக்குமாதலால் அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் மத்தியிலோ அல்லது மாகாணங்களிலோ இருப்பதில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்கப் போவதில்லை.

ஆனால் கிழக்கு மாகாணம் அப்படியல்ல. தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் பாரம்பரிய பூமி. மாகாண சபைகள் இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைக் கொண்டிராத போதிலும்கூட இருக்கும் சில குறைந்த பட்ச அதிகாரங்களையும் படிப்படியாகப் பறிகொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் பேசும் மக்கள் தங்கள் பாரம்பரிய பூமியில் அடிமைகளாக வாழும் ஒரு நிலைமையே ஏற்படும். கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் தென்னிலங்கைச் சிங்கள ஆட் சிப்பீடத்தின் கைகளிலேயே முழுமையாகப் போய்விடும்.

15அங்கத்தவர்களை மட்டுமே கிழக்கு மாகாண சபையில் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியால் நிச்சயமாக "திவிநெகும' திட்டத்தை அங்கிகரித்து இருக்க முடியாது. எனவே அது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் அதை நிறைவேற்றிவிட்டது.

அதாவது கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களில் ஒரு பகுதியைப் பறிப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான ஆதவை வழங்கியுள்ளது. இனி கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சமுர்த்தி வேலைத் திட்டங்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாகக் கொழும்பு அதிகாரபீடத்திடம் ஒப்படைத்ததன் மூலம் மாகாண சபையை மேலும் பலவீனப்படுத்திவிட்டது.

அதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட அன்று மதியம்வரை அதை எதிர்த்தவர்களே மதியத்தின் பின்பு ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். அங்குதான் இவர்கள் மிரட்டப்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. சில மிரட்டல்களுக்கு அஞ்சி ஓர் அமைப்புதான் தலைமை தாங்கும் மக்களின் உரிமைகளைப் பறிகொடுக்கிறார்கள் என்றால் இவர்களால் தொடர்ந்து அந்தச் சமூகத்துக்குத் தலைமை கொடுக்க முடியுமா? பெரும்பான்மை இனக் கட்சிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த முஸ்லிம்களை மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி தனித்துவமான சக்தியாக வெளிப்படுத்தினார்.

அவர் ஆட்சியில் பங்கு வகித்தபோதும் அமைச்சர் பதவி வகித்தபோதும், முஸ்லிம் மக்களினதும் தமிழ் மக்களினதும் நலன்களின் அடிப்படையிலேயே அவரின் ஒவ்வொரு செயல்களும் அமைந்திருந்தன. அவர் அதிகாரப்பீடங்களுக்கு அடி பணிந்து போனதில்லை; முஸ்லிம் மக்களின் தனித்துவத்தைப் பேணத் தவறியதில்லை.

முஸ்லிம் மக்களின் தனித்துவமான தலைமை சக்தியாக விளங்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயநலவாதிகளாலும் பதவிவெறியர்களாலும் பல துண்டுகளாக உடைக்கப்பட்டது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன் பலத்தை இழந்துவிட்ட போதிலும் முஸ்லிம் மக்கள் தங்கள் தலைமை சக்தியாக அதையே நம்பி வந்தனர்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் அண்மைக்கால நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் வகையில் அமைந்திருப்பது கவலைக்குரியதாகும்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில தேவைகள், நெருக்கடிகள் காரணமாக அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்கலாம். ஆட்சியில் பங்கும் அமைச்சர் பதவியும் ஆட்சியாளர்களின் நோக்கத்தை முஸ்லிம் மக்கள் மேல் திணிக்கவா அல்லது முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவா என்ற கேள்வி எழும் நிலை உருவாகியுள்ளது.

ஏனெனில் கிழக்கு மாகாண ஆட்சியதிகாரத்தைத் தமிழ் முஸ்லிம் மக்களின் கைகளிலிருந்து பறித்தெடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கைகளில் கொடுத்தற்கும் பொறுப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியையும் வேறு இரு அமைச்சுப் பதவிகளையும் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க முன் வந்தபோதும் அதை நிராகரித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைக் கிழக்கின் ஆட்சிப்பீடத்தில் ஏற்றி வெறும் இரு மாகாண அமைச்சுப் பதவிகளையே அது பெற்றுக்கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸால் ஏற்கப்பட்டிருந்தால் இன்று கிழக்கு மாகாண சபையில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆட்சியதிகாரம் நிலவியிருக்கும். ஆனால் இன்று கிழக்கு மாகாண சபை மத்திய அரசின் ஒரு கிளையமைப்பாக மாறிவிட்டது.

இந்த வரலாற்றுத் தவறு மூலம் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையாகாது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் மக்கள், வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால் அரசுக்கு எதிரான முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிர ஸுக்கே வாக்களித்தனர்.

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரம் அரசுக்கு எதிராகவே அமைந்திருந்தது. அதேபோல் அரசுடன் இணைந்த கட்சிகளும் முஸ்லிம் காங்கிர ஸூக்கு எதிரான பிரசாரங்களையே மேற்கொண்டன.

முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாமல் இருந்தி ருந்தால் அல்லது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் அரசுக்கு எதிரான முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு வாக்களித்திருப்பார்கள் மறு பகுதி யினர். எவருக்குமே வாக்களித்திருக்கமாட்டார்கள்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் சாதனை அரசுக்கெதிரான முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கிடைத்த வெற்றியைக் கிழக்கு மாகாண சபையில் அரச தரப்பு ஆட்சியமைக்கக் கையளித்து விட்டது. இது ஒரு மிகப்பெரும் ஏமாற்று என்றே சொல்ல வேண்டும். அதைவிட கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகபூமி என்பதை விட் டுக் கொடுத்தமை ஒரு பெரும் சரணடைவுமாகும்.

கிழக்கு மாகாண சபை ஆட்சியை தென்னிலங்கைப் பெரும்பான்மை சமூகத் திடம் கையளித்த முஸ்லிம் காங்கிரஸ் தற் சமயம் திவிநெகும சட்டத்தை ஆதரித்ததன் மூலம் கிழக்கு மாகாண சபையின் அதிகாரங் களின் ஒரு பகுதிகளையும் கொழும்பு அதிகாரப் பீடத்திடம் கையளித்துவிட்டது.

இப்போது முஸ்லிம் காங்கிரஸ் இடும்புத்துண்டை கழற்றிக் கொடுத்துவிட்டது. இனி இருக்கும் கடைசி உள்ளாடையையும் பறி கொடுப்பதற்கு முன்பு அது விழிப்படைந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் நல்லது.

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2774038107656158

[size=4]முஸ்லீம் மக்கள் விழிப்படைவார்கள், ஆனால் அப்பொழுது அவர்கள் என்ன நிலையில் இருப்பார்கள் என தெரியவில்லை :( [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.