Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிகளை அழித்துவிட்டதாக கூறும் அரசு எதற்கு பாதுகாப்பு வலயங்களை நிறுவுகிறது?: சுரேஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

S01(71).jpg

[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்)

விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான நடைமுறைகள் எதற்காக கையாளப்படுகின்றன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால் பலாலி பகுதியில் 500 மீற்றர் வரையான பகுதியே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கு அப்பால் பொதுமக்களே வசித்து வந்தனர்.

அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு வலையங்களை பெருப்பிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டது என்று யாழ். ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநரால் மேற்கண்டவாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே, சுரேஸ் பிரேமசந்திரன் எம்.பி, மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

'கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பலமாக இருந்தது உண்மைதான் அப்போது ஆட்லறி அடிப்பதற்கும் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். இப்போது ஆட்லறிகளும் இல்லை அடிப்பதற்கு ஆட்களும் இல்லாத நிலையில் தேசிய பாதுகாப்பு என்பது எதற்காக? என்று சுரேஸ் எம்.பி தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

மக்கள் இல்லாத வலிகாமம் வடக்குப் பகுதியில் தேசிய பாதுகாப்பு வலயம் என்று அடையாளப்படுத்தி அரசாங்கம் பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. அதனால் எமது மக்கள் வீதிகளில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலை காரணமாக மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இன்னுமொரு பிரச்சினை உருவாகும்' என்றும் சுரேஸ் எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...8-11-39-54.html[/size][/size]

[size=5]புலிகள் என்ற பெயரில் அன்று தமிழர்களையே சிங்களம் அழித்தது என்பதற்கு இதுவே சான்று. [/size]

இலங்கை எந்த எதிரி நாட்டுடன் போர் செய்தது ? , எந்த எதிரி நாடு இவர்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது ? சொந்த நாட்டு எல்லைக்கு உள்ளே வசிக்கும் தனக்கு வாக்களித்த மக்களை , தனது வாக்காளர் பட்டியலில் உள்ள , தனது தேர்தல் தொகுதிகளில் வசித்த மக்களை , அவர்கள் வேறு ஒரு இனம் , வேறு ஒரு மொழி, வேறு ஒரு கலாச்சாரம் என்பதற்றகாக இனப்படுகொலை செய்துவிட்டு , அந்த மக்கள் குடியிருந்த நிலங்களை அபகரித்து விட்டு, அதற்காக இராணுவப் பதக்கங்களையும் அணிந்து போரில் வென்று விட்டதாக கொண்டாடும் ஒரு வெட்கம் கேட்ட அரசும் அதன் இராணுவமும் தாங்கள் ஒரு இறைமையுள்ள நாடு என்று சொல்லவும், தமக்கு தேசியம் உள்ளது , தேசிய பாதுகாப்பு தேவை என்று சொல்லவும் வெட்கப்படவேண்டும் . சொந்த மக்களே தமக்கு அச்சுறுத்தல் என்று கருதும் ஒரு அரசு தாம் ஒரு இறமையுள்ள அரசு என்ற தகுதியை இழந்து விட்டது.

[size=6]'Death toll in LTTE war HIGHER than Bosnia, Syria'[/size]

[size=5]The annihilating battle against the Liberation Tigers of Tamil Eelam, waged by the Mahinda Rajapakse government, may have ultimately restored peace in Sri Lanka. But thousands of Tamils have paid the price for this so-called victory with their lives, journalist Frances Harrison reports in her new book Still Counting the Dead.[/size]

[size=6][size=5]'Caught in the crossfire were hundreds of thousands of schoolchildren, doctors, farmers, fishermen, nuns and other civilians. And the government ensured through a strict media blackout that the world was unaware of their suffering,' Harrison states in her book.[/size][/size]

[size=5] [/size]

[size=5]http://www.rediff.com/news/slide-show/slide-show-1-death-toll-in-ltte-war-higher-than-bosnia-syria/20121009.htm[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 10 ஆண்டுகளில் கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை செய்தது போல் வடக்கிலும் செய்வதற்கே இராணுவ பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களின் குடியிருப்புகளை பறிப்பதோடு முதலில் இராணுவத்தின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு புத்தர் கோவில்கள் கொண்டு வரப்பட்டு பின்னர் படிப்படியாக விஸ்தரிப்பதே அரசின் மறைமுகமான பாரிய திட்டமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.